Tuesday, July 08, 2008

விளையும் பயிர் முளையிலே

கிட்ட தட்ட 48 வருடங்களாக கர்நாடக சங்கீதம் கேட்டு வந்தாலும் எனக்கு சில சமயங்களில் ராகம் என்ன வென்று தெரியாமல் அல்லது மாற்றிச் சொல்லும் நிலை வந்து விடுகிறது.ஆனால் இந்தக் குழந்தை ச்ரீ நிதியைப் பாருங்கள். வயது இதனைக்கும் நான்குதான் ஆகிறது. அடேயப்பா என்ன ஒரு சங்கீத ஞானம். எல்லா ராகத்தையும் கோடி காட்டியவுடனே சொல்லிவிடுகிறது.அதுவும் கேள்வி கேட்பது சங்கீத உலகின் முதன்மை பாடகி திருமதி. மும்பை. ஜெயச்ரீ அவர்கள் அதுமட்டுமா பாடிய ஸ்வரத்தையும் கூட பட்டென்று கூறுகிறது.அதுவும் எந்த சிரமும் இல்லாமல்.

அம்மா போட்ட இரண்டு செயின்களையும் மாற்றி மாற்றி விளையாடிக்கொண்டே சரியாகச் சொல்லுகிறது. வயலின் வித்துவான் ஒரு ராகத்தின் ஒரு ஸ்வரத்தை ஆரம்பிக்கும் முன்னமேயே "" அடாணா"" என்று தெறிக்கிறது வார்த்தை. இன்னும் மழலைகூட மாறவில்லை.வாழையடி வாழையென வளரும் சங்கீதம் என்பது இதுதானோ. குழந்தைக்கு ஆசிகள் வளமான சங்கீத எதிர்காலத்திற்கும் தீர்காய்சுக்கும். நீங்களும் கேட்டுத்தான் பாருங்களேன்

அது சரி, அம்பிக்கு ஒரு போட்டி. முதல் வீடியோவில் பார்வையாளர்கள் கூட்டத்தில் முதல் வரிசையில் ஒரு பெண்மணி கைதட்டுகிறாரே அது யாரென்று கண்டுபிடித்தால் உனக்கு தங்கமணி கையால் பரிசு கொடுக்கப்படும்.

-

21 comments:

Sumathi. said...

ஹலோ சார்,

பாத்தேன் ப்ரமாதம் போங்க.
நான் என்ன நினைக்கிறேன்னா எம்.எஸ் அம்மா தான் மறுபிறவி எடுத்து வந்து இருக்காங்களோ? னு.
இவ்வளவு ஞானம் இந்த வயசுலயா?
அதிசயம் ஆனால் உண்மை.

தி. ரா. ச.(T.R.C.) said...

.இது ச்ரீநிதி குழந்தையா இருந்தபோது போது எடுத்தது. இப்போ ஐதராபத்லே பி.டிக் படிக்கின்றாள். கச்சேரியும் செய்கின்றாள். வந்ததும் வந்தே அம்பிக்கு ஒரு க்ளு கொடுத்து தங்கமணி கையால் பரிசு வாங்க ஏற்பாடு செய்யலாம் இல்லை.நன்றி

இலவசக்கொத்தனார் said...

நானும் இந்த நகர்படத்தைப் பார்த்தேன். பிரமித்தேன். வேற என்ன சொல்ல! :))

தி. ரா. ச.(T.R.C.) said...

வாங்க இலவசம். ராகம் கண்டு பிடிப்பது கூட அதிசயம் இல்லை. அதை எவ்வளவு அனாயசமாகச் செய்கிறது. அஷ்டாவதானத்தில் மூன்று அவதானங்கள் இருக்கு. காது கேக்கிறது கண்திரும்பி அருகில் உள்ளவர்களை பார்க்கிறது, கை செயினை கோத்து பிரிக்கிறது அடேயப்பா!!!!!

Sumathi. said...

ஹலோ சார்,

//வந்ததும் வந்தே அம்பிக்கு ஒரு க்ளு கொடுத்து தங்கமணி கையால் பரிசு வாங்க ஏற்பாடு செய்யலாம் இல்லை.//

அம்பிக்கு க்ளுவா? நான் என்ன க்ளூ கொடுக்கனும்? புரியலையே

தி. ரா. ச.(T.R.C.) said...

@sumathi this is the quesion

அது சரி, அம்பிக்கு ஒரு போட்டி. முதல் வீடியோவில் பார்வையாளர்கள் கூட்டத்தில் முதல் வரிசையில் ஒரு பெண்மணி கைதட்டுகிறாரே அது யாரென்று கண்டுபிடித்தால் உனக்கு தங்கமணி கையால் பரிசு கொடுக்கப்படும்

ambi said...

பிரமாதம். பூர்வ புண்ய ஸ்தானம் ரொம்ப ஸ்ட்ராங்க் போலிருக்கு.


க்ளூ எல்லாம் ஒன்னும் வேணாம், அது கெளதமினு நான் சொன்னா இந்த வாரம் எனக்கு என்ன பரிசு கிடைக்கும்னு எனக்கே தெரியும். :))

Sumathi. said...

ஹலொ சார்,

ஹா ஹா ஹா..... என்னடா நீங்க என்னவோ அம்பிக்கு பரிசு போட்டினு லாம் சொல்றீங்களேன்னு நினைச்சேன், சபாஷ். ம்ம்ம்....

\\என்ன பரிசு கிடைக்கும்னு எனக்கே தெரியும். :))//

அட அம்பி, அங்க கூட பூரிகட்டை வைத்தியம் உண்டா? ஆஹா இது தெரியாம போச்சே.....வாழ்க வாழ்க வளமுடன்.

கபீரன்பன் said...

///இது ச்ரீநிதி குழந்தையா இருந்தபோது போது எடுத்தது. இப்போ ஐதராபத்லே பி.டிக் படிக்கின்றாள்.///

இதைப் படிச்சப்பறம் முதல்ல ஆ..வூ,,,ன்னவங்களெல்லாம் ”அட! ரொம்ப பழைய சங்கதி” அப்படீன்னு காத்து போன பலூன் மாதிரி ஆயிட்டாங்க.
பத்து வருஷத்துக்கு முந்தி ப்ளாகர் ஏது, யூ ட்யூப் ஏது !! :))

ஆனாலும் பிரமிக்க வேண்டிய விஷயம் தான். பகிர்வுக்கு நன்றி.

கீதா சாம்பசிவம் said...

என்ன சார் இது? சத்தம் போடாமல் பதிவும் போட்டு, உங்க அம்பிக்கே பரிசுமா?? கொஞ்சம் கூட நல்லா இல்லையே? நாங்க எல்லாம் இல்லை? போகட்டும், பாட்டைக் கேட்கிறேன் முதல்லே! அப்புறம் அம்பிக்கு பூரிக்கட்டை கிடைப்பதையும் பார்த்துக்கலாம். :P

Cogito said...

The amazing thing is she is so detached while doing this making it look so facile.

தி. ரா. ச.(T.R.C.) said...

கீதா மேடம் நாங்க பதிவு மட்டுதான் போடுவோம். கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்--- மாதிரி சப்தமெல்லாம் போடமாட்டோம்.அ

தி. ரா. ச.(T.R.C.) said...

@cogito thanks for visiting and for u r comment.

தி. ரா. ச.(T.R.C.) said...

சரியாகச் சொன்னீர்கள் கபீரன்பன். காலத்தைச் சொன்னதும் கால் தெரிக்க ஓடி விட்டார்கள்

Priya Venkatakrishnan said...

தி ரா ச அவர்களே
மன்னிக்கவும்..ரொம்ப நாளா என ப்ளாக்/ உங்க ப்ளாக் பக்கமும் போகல..இப்போ ஒரு வழியா வந்தேன். அடேயப்பா..Child Prodigy எல்லாம் உண்மையிலேயே இப்படி அனாயாசமா இருப்பாங்கன்னு பார்த்தா பிரமிப்பா தான் இருக்கு

தி. ரா. ச.(T.R.C.) said...

வாங்க பிரியா. ரொம்ப நாளைக்கப்பறம் வரீங்க? எப்படி இருக்கு வாழ்க்கை இப்போ? சின்ன குழந்தை எவ்வளவு எளிதாக சொல்லுகிறாள்

Sowmya Srikrishnan said...

I thought you were dropping by our house when you came to Banaglore. Apparam naan samaichu podalai-nu complaint vera!

Thanks for your comments about my sister. While I agree that she is a GOOD GIRL, thats not because of me being a BAD one - which is what you have tried to profess...!!!

Balaji S Rajan said...

Amazing talent! I am ashamed that I did not know about this girl's talent. Thanks for the info. I am sure she is going to become a great musician one day.

தி. ரா. ச.(T.R.C.) said...

balaji s rajan welcome. Read second part also you will have answer for your question. How is daughter at US? When you will come to chennai/

Radha Sriram said...

எப்படி இப்படியெல்லாம்??....அனாயாசமா ராகங்கள் கண்டுபிடிக்கிரதே இந்த குழந்தை.....ப்ரில்லியண்ட்.!! அப்புறம் அந்த பொண்ணு நடிகை கவுதமி இல்லையா??

தி. ரா. ச.(T.R.C.) said...

@ராதா ச்ரீராம். சங்கீதமும் படிப்பும் பூர்வஜென்ம புண்ணீயம் இருந்தால்தான் வரும். அந்தப் பெண் கௌதமிதான். வருகைக்கு நன்றி