Saturday, March 28, 2009

பாட்டம்மாள்

காஞ்சிபுரத்திலிருந்து வேலூர் செல்லும் வழியில் ஒரு சிறு கிராமம். தாமல் என்று பெயர். அழகான சிவன் கோவில் டிரங் சாலையிலிருந்து பார்த்தாலே தெரியும்.இந்த ஊரில்தான் 28-03 1919ல் திருமதி D. K பட்டம்மாள் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தார்.பெண்கள் வெளியே சென்று வாரத அந்தக் காலத்திலேயே 5 வயது தம்பி D K ஜெயராமன் துணையோடு காஞ்சிபுரம் சென்று சங்கீதம் கற்று வந்தார்.பின்னர் காஞ்சிக்கே குடிபெயர்ந்து பிரபல வித்வான் காஞ்சிபுரம் நைனா பிள்ளையிடம் சங்கீதம் கற்றுக் கொண்டு பிரபலமானார். சங்கீத உலகத்தின் முடிசூடா விதுஷிகள் எம் எஸ் சுப்பலக்ஷ்மி, எம் எல் வஸந்தகுமாரி,டி.கே பட்டம்மாள் என்று பெயர் பெற்றார்.


பாரதியின் பாட்டுக்களை பாடுவதற்கு பயந்த அந்த பிரிட்டிஷ் காலத்திலேயே துணிந்து பாரதியாரின் பாடல்களை மேடைதோறும் பாடி பிரபலப் படுத்தினார். நல்ல கணீரென்ற குரல், அக்ஷர சுத்தம், சிதைவு படாத கீர்த்தனைகள் ராகபாவம் இதெல்லாம்தான் இவருக்கு சொத்து.அதுவும் தீக்ஷதர்கீர்த்தனைகளை அவரை மாதிரி பாட மற்றுமொருவர் பிறக்கத்தான்வேண்டும். அதே மாதிரி பெண்களூக்கு மிருதங்கம் வாசிப்பதில்லை என்ற வைராக்கியத்தை விட்டு விட்டு பாலக்காடு மணி ஐய்யர் இவருக்கு வாசித்த பெருமையினாலேயே இவரது சங்கீதம் எப்படிப் பட்டது என்று தெரிந்து கொள்ளலாம்.

அதனால்தான் இவரை பட்டம்மாள் என்று சொல்லுவதைவிட பாட்டம்மாள் என்று சொல்லுவதே சாலப் பொருத்தம். பட்டங்களுக்குத்தான் பட்டம்மாளால் பெருமை.

இன்று அவருக்கு வயது 90. அவருக்கும் அவரது கணவர் திரு. ஈஸ்வர்னுக்கும் நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் அருளுமாறு கஞ்சி காமாக்ஷி சமேத ஏகாம்பிரேஸ்வரரை வேண்டிக்கொள்ளும் என்னுடன் நீங்களும் சேருவீர்கள் என்று நம்புகிறேன்.


அவரைப் பற்றிய குறும் படம் . அதற்கு பின்னால் அவருடைய பேத்தி திருமதி. நித்ய ஸ்ரீ அவரை நேர்க்காணல் கண்டு அதில் அவரைப் பற்றிய அரிய செய்திகளையும் பொதிகை டி வி நிகழ்ச்சியின் படத்தையும் பார்க்கலாம்.




-





-




திரு. பாபநாசம் சிவனின் முத்தான ஒரு பாடல்.வசந்தா ராகத்தில் அமைந்தது . வசந்தாவின் ஜீவா-ஸ்வரமான மா தா என்ற ஸ்வரங்களை வைத்து விளையாடி இருக்கிறார் . இதற்குத்தான் ஸ்வராக்ஷரம் என்று பெயர். -ஸ்வரங்களே வார்த்தைகளாக வரும்.

ராகம்;- வஸந்தா தாளம்:- ஆதி 2 களை

பல்லவி

மாதயயை நிதி எனும் நீ தயையை புரிந்தருள் மாதவன் மருகனேமுருகனே குகனே மலைமகள் மகனே........(மாதயயை நிதியெனும்)

அனுபல்லவி

போதயன் பணிமலர்ப்பாதனே மறைமுகன் புகலரும் ப்ரணவ மகிமை மெய்ப்பொருளை புகழ் தாதை காதில் ஓதும் குருநாத...(மாதயயை நிதியெனும்)

சரணம்

கந்தனே கலியுகந்தனில் இருகண்கண்ட

தெய்வமென எண்டிசை புகழும்செந்திலாதிப

சிறந்த வேலணியும்சேவலா

அமரர் காவலா ஷண்முகா...(மாதயை நிதியெனும்

எனக்கு மிகவும் பிடித்த இந்த பாபநாசம் சிவனின் வஸந்தா ராகத்தில் அமைந்த மாதயயை நிதி எனும் நீ தயயை புரிந்தருள் என்னும் முருகன் மீது அமைந்த மிக அற்புதமான பாட்டை அவர் குரலில் இங்கே கேளுங்கள்">

8 comments:

Geetha Sambasivam said...

பட்டம்மாளை வணங்குவதில் உங்களுடன் நாங்களும் சேர்ந்து கொள்கின்றோம்.பேட்டி, பாட்டு கேட்க முடியலை, ஆனால் நான் ஏற்கெனவே பார்த்ததுனு நினைக்கிறேன். நன்றி.

குமரன் (Kumaran) said...

ஐ. திருமதி. பட்டம்மாள் பிறந்த அதே நாளில் தான் எனக்கு தெரிஞ்ச ஒருத்தரும் பொறந்திருக்கார். உங்களுக்கும் அவரைத் தெரியும். பதிவெல்லாம் எழுதுவாரு. கூடல் ஊர்க்காரரு. :-)

அம்மா இன்னுமொரு நூற்றாண்டு இருக்க வேண்டும்.

பாருக்குள்ளே நல்ல நாடு, சாந்தி நிலவவேண்டும், மாதயைநிதி பாடல்களையும் அம்மாவின் நேர்காணலையும் கேட்டு மகிழ்ந்தேன். எனக்கொரு சிறந்த பிறந்த நாள் பரிசாக அமைந்துவிட்டது. மிக்க நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) said...

@குமரன். என் உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். நூறாண்டு காலம் வாழ்க! நோய் நொடியில்லாமல் வாழ்க!கந்தனையும் சேந்தனையும் கண்டு களித்து வாழும் வாழ்வைத்தந்த அந்த கந்தனையும் சேந்தனையும் இமப்பொழுதும் மறாவாமல் வாழ்க! பதிவிற்கு வந்து பதிலமைத்தமைக்கு நனறி.

தி. ரா. ச.(T.R.C.) said...

வாங்க கீதாமேடம். கடவுள் கருணைமிக்கவன் என்பதை காட்டி என்னை மீண்டும் பதிவு போட வைத்துவிட்டான்.மாதயயை பாட்டை நிச்சியம் கேளுங்கள்.பட்டம்மாளுக்காக அவர்தம் பிறந்தநாளில் உங்கள் வேண்டுதலுக்கு நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) said...

வாங்க கீதாமேடம். கடவுள் கருணைமிக்கவன் என்பதை காட்டி என்னை மீண்டும் பதிவு போட வைத்துவிட்டான்.மாதயயை பாட்டை நிச்சியம் கேளுங்கள்.பட்டம்மாளுக்காக அவர்தம் பிறந்தநாளில் உங்கள் வேண்டுதலுக்கு நன்றி.

Cogito said...

Wow. What an energy and love for music at this age!

ambi said...

அருமையான பாடலுக்கு மிகவும் நன்றி.

ரொம்ப அரிதாகவே இப்போ எல்லாம் நீங்க பதிவு எழுதறீங்க போலிருக்கு.

Geetha Sambasivam said...

அட?? இந்தப் பதிவில் பின்னூட்டம் போட்டிருக்கேனே???