Tuesday, December 15, 2009

சனி வழி தனி வழி 2

சங்கடம் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா

மஹான் முத்துஸுவாமி தீக்ஷதரின் சிஷ்யர்களின் ஒருவரான தஞசை பொன்னைய்யாபிள்ளைக்கு ஒரு சமயம் கடும் வயிற்றுவலி வந்து துன்பப்பட்டார். அவரது துன்பத்தைப் பார்த்து தாளமுடியாமல் அதற்கு காரணம் என்ன என்பதை தீக்ஷதர் அறியமுற்பட்டபோது அது நவகிரகங்களின் கோசாரத்தினால் அவரது ராசிக்கு ஏற்பட்ட துன்பம் என்பதையும் அறிந்துகொண்டார்.அதுவரை அம்பாளையும் மற்ற தெய்வங்களையும் மட்டுமே பாடி வந்த தீக்ஷதர் பரிகாரதேவதைகள் ஆகிய நவகிரங்களயும் துதித்து சிஷயனின் மேல் ஏற்பட்ட கருணையினால் ஒன்பது கிரகதேவதைகளின் மீது கீர்தனைகளை இயற்றினார்.மதுரைமணிஐய்யர் அவர்கள் தன் ஒவ்வொரு கச்சேரியிலும் தவறாமல் அந்த அந்த நாட்களுக்குகுரிய நவகிரகக் கீர்தனையைப் பாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதிலும் குறிப்பாக திவாகரதனுஜம் சனைஸ்வரம் என்று சனீஸ்வர பகவான் மீது யதுகுல காம்போதி ராகத்தில் அமைந்த கீர்த்தனையைப் பாடுவார்.

சத்யாவின் கீபோர்ட் இசையில் முதலில் பாட்டைக்கேளுங்கள். அர்த்தத்துடன் பாடலை விரிவாகப் பிறகு பார்த்து கேட்டு ரசிக்கலாம்.



சரி யார் இந்த சனி பகவான்.சனி சூரியபகவானுக்கும் சாயதேவிக்கும் பிறந்தவர்.சூரியன் மனைவியான சம்ஞா கணவனின் உக்கிரத்தைப் பொறுக்க மாட்டாமல், நிழலான சாயா என்பவளைப் படைத்து, அவளை தன் கணவனிடம் விட்டுத் தான் தந்தை வீடு சென்று விட்டாள். இந்த சாயாதேவியிடம் சூரியனுக்கு சனி பகவான் பிறந்தார். சம்ஞாவின் புத்திரனான யமன் சனியை உதைக்க, அவன் கால் ஊனமாகியது. மெது வாகத்தான் நடக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டதால் "சனைச்சரன்' (மெதுவாகச் சஞ் சரிப்பவன்) என்ற பெயர் ஏற்பட்டது.
கோணஸ்தன்,பிங்கலன்,பப்ரு,கிருஷ்ணன்,ரௌத்ரன்,

அந்தகன்,யமன்,சௌரி,சனைஸ்வரன்,மந்தன்,பிப்பலன் என்னும் பெயர்களை உடையவன். யமதர்மராஜனுக்கு சகோதரன்.சத்யம் நேர்மை இவற்றிற்கு உறைவிடம். யாருக்கும் பயப்படாமல் தன் கடமையைச் செய்வார். மெதுவாக விந்தி விந்தி காலை சாய்த்து நடப்பவர் என்பதால் சனீ என்றும் சிவனிடம் சண்டைபோட்டு ஈஸ்வரபட்டம் வாங்கியதால் சனீஸ்வரன் என்றும் அழைப்பார்கள்.

இவர் நவகிரக பீடத்தில் சூரியனுக்குத் தென்மேற்குத் திக்கிலிருப்பார். குள்ளமான உருவம், காகத்தை வாகனமாக உடையவர்,பத்மாசனத்தில் அமர்ந்திருப்பவர். வில்வடிவ பீடத்தில் நீளா தேவி, மந்தா தேவி என்ற தம் இரு மனைவியருடன் காட்சிதருபவர். மகர கும்ப ராசிகளுக்கு அதிபதி. இவருடைய தந்தையான சூரியனுக்கும் இவருக்கும் பகை.அதனால் சனிதசை வந்தால் அப்பனுக்கும் மகனுக்கும் சண்டை வரும்.மனைவியை விட்டும் குடும்பத்தை விட்டும் பிரிய வேண்டி வரும்.அதிகுரூர பலன்களைக் கொடுப்பவர்.எலும்பு முறிவு குறிப்பாக காலில் வரும்படி செய்பவர்.
ஆனால் இப்படிப்பட்ட சனிபகவானை தீக்ஷதர் தயாள குனத்தில் அமுதகடல் என்றும், கோரிய வரங்களை அளிப்பதில் காமதேனு போன்றவர் என்று புகழ்கிறார்.எப்படி என்று அடுத்த பகுதியில் பார்க்கலாம்

5 comments:

குமரன் (Kumaran) said...

சௌராஷ்ட்ரர்களின் வரலாற்றைப் புராண வடிவில் 'ரத சப்தமி விரத் மஹாத்மியம்' என்ற நூலில் பார்க்கலாம். அதில் தந்துவர்த்தனன் (தந்து - நூல்) என்ற பிரம்ம குமாரனுக்கு சூரிய குமாரியை மணம் முடிக்கும் வைபவம் சொல்லப்பட்டிருக்கும். அந்த கதையின் படி தந்துவர்த்தனனே சௌராஷ்ட்ரர்களின் மூதாதை. அந்த திருமணத்தின் போது சூரிய குமாரனான சனீஸ்வரன் தனக்குச் சொந்தமான சௌராஷ்ட்ர தேசத்தைத் தன் சகோதரிக்கு சீதனமாகக் கொடுப்பார். அந்தத் திருமணத்தின் போது ஒரு நாள் மட்டும், அதாவது ரத சப்தமி நாளில் மட்டும் சூரியன் தன் மகள் கல்யாணத்தைக் கவனித்துக் கொள்ள, அருணன் சூரியனுடைய ரதத்தில் ஏறிக் கொண்டு சூரியனுடைய கடமையைச் செய்ததாக இந்த நூல் கூறும். இங்கே சனீஸ்வரரின் தாய் தந்தையர்களைப் பற்றி படித்தவுடன் சிறு வயதில் படித்த இந்த நூல் நினைவுக்கு வந்தது.

சனைச்சராய சாந்தாய சர்வாபீஷ்ட ப்ரதாயினே
சரண்யாய வரேண்யாய சர்வேஷாய நமோ நம:

ambi said...

//தயாள குனத்தில் அமுதகடல் என்றும், கோரிய வரங்களை அளிப்பதில் காமதேனு போன்றவர் என்று புகழ்கிறார்.//

அந்த நம்பிக்கைல தான் வண்டி ஒடிட்டு இருக்கு. :))

நல்ல கீர்த்தனைக்கு நன்றி.

ambi said...

For Follow up. ;)

திவாண்ணா said...

கொஞ்சம் exhaustive ஆ எழுதப்போறீங்களோ? நல்லதே!

Geetha Sambasivam said...

இந்தப் பதிவெல்லாம் எனக்கு அப்டேட்டே ஆகலை, குமரன் சொல்லி இருக்கும் விஷயம் புதுசா இருக்கு, நன்றி பதிவுக்கும் தகவலுக்கும்