Tuesday, February 23, 2010

ஸ்ரீ சனீஸ்வரர்--4


ஒருசமயம் தேவேந்திரன் தன்னை சனி பிடிக்கப் போகிறார் என்பதை அறிந்து, சனியைக் கூப்பிட்டு, ""நான் தேவர்களுக்கெல்லாம் தலைவன்; என்னை எப்படி நீ பிடிக்கலாம்?'' என்று கேட்க, ""என் பார்வையிலிருந்து எவருமே தப்ப முடியாது'' எனப் பதிலளித்தார் சனி பகவான். ""அப்படியானால் நீ என்னைப் பிடிக்கும் நேரத்தைச் சொல்லிவிடு'' என்று தேவேந்திரன் வேண்ட, சனி பகவான் அதைக் கூறினார். அந்நேரம் வந்ததும் இந்திரன் பெருச் சாளி உருக்கொண்டு சாக்கடையில் ஒளிந்து கொண்டான். சனி அந்த இடத்தில் தேட மாட்டார் என்ற நினைப்பு அவனுக்கு! அந் நேரம் கழிந்ததும் இந்திரன் வெளியே வந்து சனி பகவானைக் கூப்பிட்டு, தான் தப்பித்து விட்ட பெருமையை அளக்க, சனீஸ்வரன் சிரித்துக் கொண்டே, ""நீங்கள் சிம்மாசனத்தை விட்டு சாக்கடையில் சில நாழிகை இருந்ததே என் பீடிப்பினால்தான்!'' என்றார்
இப்படிப்பட்ட சனீஸ்வரர் ஒருவரை பிடித்து பட்ட பாடு இருக்கிறதே அதை அடுத்த பதிவில் பார்க்கலாம்
சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா

4 comments:

Geetha Sambasivam said...

நல்லா இருக்கு கதை, அடுத்த பாகத்துக்கு வெயிட்டிங். தெரிஞ்சதுதான் இருந்தாலும் மத்தவங்க சொல்லிக் கேட்கும்போது கொஞ்சமாவது மாறுதல் தெரியுதே!

திவாண்ணா said...

:-))
கேள்விப்படலை. அப்புறம் தசரதர் சம்பந்தமா ஒரு கதை இருக்கோ? ஏதோ ஸ்லோகம் கூட.

ambi said...

இப்ப தான் இந்த கதை கேள்விப்படறேன். பகிர்வுக்கு நன்றி. :)

திவாண்ணா, உங்க கேள்விக்கு கீதா பாட்டி பதில் சொல்வாங்க. TRC சார், நீங்க கொஞ்சம் கப்சிப்னு இருங்க. நீங்க பதில் போட்டவுடனே, தெரிஞ்ச கதை தான், நீங்க சரியா சொல்றீங்களா?னு வெயிட் பண்னேன்னு பின்னூட்டம் விழும். :))

Geetha Sambasivam said...

//நீங்க பதில் போட்டவுடனே, தெரிஞ்ச கதை தான், நீங்க சரியா சொல்றீங்களா?னு வெயிட் பண்னேன்னு பின்னூட்டம் விழும். :))//

நறநறநறநறநறநற