Thursday, February 25, 2010

ஸ்ரீ சனீஸ்வரர் 6


எல்லோரையும் நடுங்க வைக்கும் சனீஸ்வர பகவானையே, திருவாரூர் தியாகேசப் பெருமானை வணங்கி வென்றவர் தசரத மகாராஜா. அந்தக் கதையை இங்கு பார்ப்போம்.தசரத மகாராஜாவிற்கு சனி தசை ஆரம்பிக்கின்ற வேளை.... அப்போது மன்னரின் குலகுருவான வசிஷ்டர் அவரிடம், "உங்களின் குலதெய்வம் சிவபெருமான் உள்ள திருவாரூர் சென்று சிவபெருமானை வழிபட்டால் உங்களை சனி நெருங்கமாட்டார்' என்றார். அவ்வாறே தசரத மகாராஜாவும், திருவாரூர் வந்து கமலாலயத் திருக்குளத்தில் நீராடினார்; ஆரூர் சிவபெருமானை வழிபட்டார். அப்போது சனிபகவான், தசரத மகாராஜாவைப் பற்ற வந்தார்.சிவபெருமானை வணங்கியதால் ஏற்பட்ட துணிவினால் சனி பகவானை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றார் தசரதர். தன்னுடைய வாழ்வில் முதன்முறையாகத் தோல்வியைக் கண்ட சனி பகவானும் தசரதனிடம், "என்ன வரம் கேட்டாலும் தருகிறேன்... கேள்!' என்றார். உடனே தசரதர், "சனீஸ்வரனே! நீ உனது கடமையைச் செவ்வனே செய்கின்றாய். உலக உயிர்களுக்கு, சுக துக்கங்களின் வேறுபாட்டை உணர்த்தும் வகையிலே நீ செயல்படுகின்றாய். ஆனாலும் நீ அவர்களைப் பற்றுகின்ற காலத்தில் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். அண்ட சராசரங்களையும் படைத்து, காத்து, இறுதியில் சம்ஹாரமும் செய்யும் முழுமுதற் கடவுள் திருவாரூரிலே வீற்றிருக்கும் சிவபெருமான். அவரை "தஞ்சம்' என்று சரணடைந்த பின்னாலே என்னை நீ துன்புறுத்த விரும்பினாய். அதனால்தான் உன்னோடு நான் போரிட்டேன்; சிவனருளால் வென்றேன்.எனவே, திருவாரூர் வந்து, கமலாலயத்தில் நீராடி, தியாகேசப் பெருமானையும் உன்னையும் எவர் ஒருவர் வணங்கினாலும் அவர்களுக்கு நீ நல்லதே செய்ய வேண்டும்; தீங்கு செய்யக்கூடாது' என்று கேட்டார். சனீஸ்வர பகவானும் திருவாரூர் வருவோரை தன்னுடைய கண்ட சனி, பாத சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, மங்கு சனி என்று எந்தக் காலமானாலும் துன்புறுத்தாமல் நன்மையே செய்வதாக வரம் கொடுத்தார். அதனால்தான் திருநள்ளாறில் வழிபாட்டை முடித்த நளச் சக்ரவர்த்தியும் திருவாரூரில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார்; "தன்னை இனியும் நவக்கிரகங்கள் துன்பப்படுத்தக்கூடாது' என வேண்டிக் கொண்டார். இதையொட்டிதான், "திருநள்ளாறு சென்றாலும் திருவாரூரை விடாதே!' என்னும் பழமொழி சொல்லப்பட்டு வருகின்றது





தசரதர் இயற்றிய சனி பகவான் ஸ்தோத்திரம்


க்ருஷ்ணாய நீலாய சிதிகண்ட நிபாய ச
நமோ நீலமயூகாய நீலோத்பவ நிபாயச
நமோ நிர்மாம்ஸ தேஹாய தீர்க்க ச்ருதிஜடாய ச
நமோ விசால நேத்ராய சுஷ்கோதர பயாநக
நம : பெளருஷகாத்ராய ஸ்தூலரோக்ணே ச தே நம :
நமோ நித்யம் க்ஷுதார்த்தாய ஹ்யத்ருப்தாய ச தே நம :
நமோ கோராய ரெளத்ராய பீஷணாய கராளிநே
நமோ தீர்க்காய சுஷ்காய காலதம்க்ஷ்ட்ர நமோஸ்து தே
நமஸ்தே கோரரூபாய துர்நிரீக்ஷ்யாய தே நம :
நமஸ்தே ஸர்வபக்ஸாய வலீமுக நமோஸ்து தே
ஸூர்யபுத்ர நமோஸ்தேஸ்து பாஸ்கர பயதாயிநே
அதோ த்ருஷ்டே நமஸ்தேஸ்து ஸம்வர்த்தக நமோஸ்து தே
நமோ மந்தகதே துப்யம் நிஷ்ப்ராய நமோ நம :
தபநாஜ்ஜாத தேஹாய நித்யயோகதராய ச
ஜ்ஞாநசக்ஷுர் நமஸ்தேஸ்து காஸ்யபாத்மஜ ஸூநவே
துஷ்டோ ததாஸி ராஜ்யம் த்வம் க்ருத்தோ ஹராஸி தத்க்ஷணாத்
தேவாஸுர மநுஷ்யாஸ்ச ஸித்த வித்யாதரோரகா :
த்வயாவலோகிதா : ஸர்வே தைந்யமாசு வ்ரஜந்தி தே
ப்ரஹ்மா சக்ரோ யமஸ்சைவ முநய : ஸப்த தாரகா :
ராஜ்யப்ரஷ்டா : பதந்தீஹ தவ த்ர்ய்ஷ்ட்யாவலோகிதா :
த்வயா வலோகிதாஸ்தேபி நாசம் யாந்தி ஸமூலத :
ப்டஸாதம் குரு மே
ஸெளரே ப்ரணத்யா ஹி த்வமர்த்தித :
***************************************************************
"சனிக் கிழமை அன்று இந்த ஸ்லோகத்தை பக்தியுடன் சொல்லி பூஜை
செய்பவருக்கு எந்த இன்னலும் தர மாட்டேன். அது மட்டுமின்றி கோசாரம் ,
ஜன்ம லக்னம் , தசைகள் , புக்திகள் ஆகியவற்றில் வேறு ஒரு கிரகத்தால்
ஏற்படும் பீடைகளில் இருந்தும் காப்பாற்றுவேன் . அனைத்து உலக
இன்னல்களையும் களைந்து இன்பமுறச் செய்வேன் ! " என்றும் உறுதி அளித்தார்

சனி பகவான் .

16 comments:

Geetha Sambasivam said...

திருவாரூர்ப் பதிவில் எழுத இருந்தேன். இப்போ என்னை இப்படிப் போட்டுக் கொடுத்திட்டீங்களே! இது நியாயமா! தர்மமா! நறநறநறநற

சும்மாவே உங்க சிஷ்யகேடிங்க ரெண்டு பேரும் என்னைப் போட்டு வாங்கறாங்க. நீங்க என்னடான்னா!!!!

இதுக்குத் தான் பந்திக்கு முந்திக்கோனு சொல்வாங்க போல! :P:P:P:P

ambi said...

இவ்ளோ விஷயம் இருக்கா திருவாரூர்ல? இந்த வருடம் திருவாரூருக்கு தங்க்ஸ் சகிதமா போக முயற்சி பண்றேன். :)

//திருவாரூர்ப் பதிவில் எழுத இருந்தேன். //

ஹிஹி, வேற எதாவது புதுசா சொல்ல ட்ரை பண்ணுங்க.

நீங்க பந்திக்கு தான் முந்துவீங்க என்பது சார் வீட்டு கல்யாணத்தில் காலை டிபனுக்கு முதல் பந்தியில் உக்காந்த போதே எங்களுக்கு தெரிந்து விட்டது. :)

மெளலி (மதுரையம்பதி) said...

திருவாரூரின் இந்தச் சிறப்பை இப்போத்தான் தெரிஞ்சுக்க கொண்டேன்...நன்றி ஐயா!.

மெளலி (மதுரையம்பதி) said...

திராச எழுதியிருக்கறது சுருக்கமாக, படிக்க வாகா இருந்தது...இதே இன்னொரு நபர் எழுதியிருந்தா? :)

திவாண்ணா said...

aahaa! இதான் கேட்டேன்! அப்புறம் தசரதர் க்ருத ஸ்லோகம் வேற சந்தர்பத்திலே இயற்றியதுன்னு நினைவு.எங்கேயோ சண்டைக்கு போயிட்டு வரும் வழில.... பாக்கணும்.

தி. ரா. ச.(T.R.C.) said...

திவா சார் இப்பொதும் சண்டைக்கு போய் சனீஸ்வரனை ஜெயித்துதான் தசரதர் இந்த ஸ்லோகத்தைச் செய்தார். வேறு ஏதாவது இருக்கா? சங்கப்பலகையே ஏத்துக்கொண்டுவிட்டதேன்னு நினைச்சேன்

தி. ரா. ச.(T.R.C.) said...

@கீதாமேடம் இப்போகூட நீங்க எழுதலாம். நீங்க எழுதினா இன்னும் விரிவாக மேற்கோள்களுடன் எழுதுவீர்கள். அதைத்தானே மௌலியும் சொல்ல நினைக்கிறார்

தி. ரா. ச.(T.R.C.) said...

@மௌலி திருவாரூர் கோவிலின் அமைப்பே ஸ்ரீ சக்கர அமைப்பாகும். வானத்திலிருந்து பார்த்தால் அப்படித் தெரியும். மறுபடியும் போகவேண்டும்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@அம்பி அவசியம் போய்விட்டு வா. தங்ஸ் மட்டும்தான தம்ஸ் கிடையாதா. அப்படியே பஞ்ச வாத்தியம் வாசிக்கும்போது இருந்து கேட்டு விட்டு வா. சாய ரட்சை பூஜையின் போது மட்டும்தான் ஒலிக்கும்

தி. ரா. ச.(T.R.C.) said...

@மௌலி வேண்டாம் . இப்படி உசுப்பிவிட்டே உடம்பெல்லாம் புண்னாயிடுத்து.

மெளலி (மதுரையம்பதி) said...

//திருவாரூர் கோவிலின் அமைப்பே ஸ்ரீ சக்கர அமைப்பாகும்//

ஆமாம் திராச சார். கேள்விப்பட்டிருக்கிறேன்....எங்க ஊரே சக்ர ரூபத்தில் அமைக்கப்பட்டதாக்கும் :)...அதனால்தான் மதுரையில் நடந்தாலேயே முக்தின்னு சொல்லுவார்கள் :))

தக்குடு said...

அருமையான கருத்துக் கோர்வை.

//திருவாரூர் கோவிலின் அமைப்பே ஸ்ரீ சக்கர அமைப்பாகும்// நிச்சயமா பார்க்க வேண்டிய ஷேத்திரம்தான்

குமரன் (Kumaran) said...

இந்த ஸ்தோத்ரத்தை லிப்கோவின் 'ஸ்தோத்ரமாலா' புத்தகத்தில் சிறு வயதில் படித்திருக்கிறேன் ஐயா. இந்த ஸ்தோத்ரம் அப்போது எளிமையாக வாயில் நுழைந்தது.

லிப்கோ புத்தகத்தில் இந்த ஸ்தோத்ரம் சனீஸ்வரரின் அருளால் நாட்டில் வரப்போகும் பன்னிரு வருட பஞ்சத்தை நீக்க வேண்டி தசரதன் பாடியதுன்னு போட்டிருந்ததுன்னு நினைவு. வீட்டில் அந்த புத்தகம் இருக்கிறது. சரி பார்க்க வேண்டும்.

தி. ரா. ச.(T.R.C.) said...

வாருங்கள் குமரன். அவ்வையார் தெரியாமலா சொன்னார் இளமையிற் கல் என்று.

தி. ரா. ச.(T.R.C.) said...

தக்குடு அப்படியே பஸ்லேயே கும்மிஅடிச்சின்டு இருக்கப்படாது. இப்படி இந்த பக்கமும் வரனும்.

Geetha Sambasivam said...

//தக்குடு அப்படியே பஸ்லேயே கும்மிஅடிச்சின்டு இருக்கப்படாது. இப்படி இந்த பக்கமும் வரனும். //

ithu!!!! intha buzzz vanthalum vanthathu. Indiyavile entha opppichileyum velaiye nadakirathillai, singaiyilum, dohavilum than! :P