Tuesday, March 02, 2010

பிரதோஷ மஹிமை--2

அருகே எழுந்தருளியிருந்த பரமேசுவரி பக்தர்களுக்காக ஐயன் காட்டும் பரிவைக் கண்டு பயமும், பக்தியும் கொண்டார்.
எம்பெருமான், பிரளயகாலத்து அக்னியைப் போல் தீக்ஷண்யமுள்ள கொடிய விஷத்தை உண்ணும் தருணத்தில் விஷம் கண்டத்தருகே வந்ததும் அனைவரும் அலறினர்.
“தேவாதி தேவா! எங்களைக் காத்தருளும் சகலதேவ பூஜிதரான தேவரீர் இவ்விஷத்தைக் கண்டத்திலேயே தாங்கிக் கொள்ள வேண்டும். அகில உலகங்களும் தேவருள் அடக்கம் தானே? அதனால் இவ்விடம் ஐயனின் உடலுள் சென்றாலும் அகில லோகங்களும் அழிந்து போவதென்பது திண்ணம்” என்று பிரார்த்தித்தனர்.

அது சமயம் அருகே அமர்ந்திருந்த அன்னபூரணி - அண்டமெல்லாம் காத்தருளும் கற்பகத் தருவாக விளங்கும் கற்பகவல்லி - திரிபுரசுந்தரி,உமாதேவி தம் திருக்கரத்தால் எம்பெருமா னின் கண்டத்தை மெதுவாகத் தடவி சற்று அழுத்தினார்.
மறுகணம் விஷம் கண்டத்திலேயே தங்கியது. அம்பாளின் திருக்கர ஸ்பரிசத்தினால் நஞ்சும் அமுதமாகி நாயகனின் கண்டத்தில் கருமணி போல் தங்கியது.
எம்பெருமான் ‘திருநீலகண்டர்’ என்னும் திருநாமம் பெற்றார்.

பிரம்மாதி தேவர்கள் தேவராக்ஷஸ பைசாச கணங்கள் முதலியோர் கரங்குவித்து, “ஷட்குண ஐச்வரிய சம்பன்னரும், எங்களுக்கெல்லாம் ஆதிமூலமான பெருமானே! தேவரீருடைய வல்லமையும், வீரியமும், பராக்கிரமமும், மகிமையும் ஈடிணையற்றவை. தாங்களே சராசரங்களுக்குப் பிரபுவும், பிராண கோடி களைப் படைத்தும், காத்தும், அழித்தும், அருளும் முத்தொழில் மூர்த்தி” என்றெல்லாம் பலவாறு தோத்திரம் செய்தனர்.
இவ்வாறு விஷத்தால் அமரர்களுக்கும், அடியார்களுக்கும் தோஷம் எதுவும் ஏற்படாமல் காத்தருளிய சிவனுக்கு உகந்த காலம் தான் பிரதோஷகாலம். அக்காலத்தில் அண்ட சராசரங்களும் பகவானின் நமச்சிவாய மந்திரத் தைச் சிந்தையிலே கொண்டு ஏகாந்தத்தில் அடங்கி ஒடுங்கும்.
பொன்னார் மேனிதனில் புலித்தோலை அணிந்த அண்ணல் மானும், மழுவும், சூலமும் தாங்கப் பெற்ற திருக்கரத்துடன், தண்டை சிலம்பணிந்த சேவடி கிண்கிணி ஓசை எழுப்ப நந்தி தேவரின் கொம்புகளின் நடுவே ஆனந்த நர்த்தனம் புரியும் வேளை!
இச் சுபயோக சுபமுகூர்த்த வேளை தான் பிரதோஷ காலம்!
நம்மை எல்லாம் ஆட்டி வைப்பவன் தானும் ஆடுகின்றான். அவன் ஆடுவதால் உலகமே ஆடி ஒடுங்குகிறது.
இப்பிரதோஷ கால வேளையில் ஐயன் ஆடுகின்ற ஆனந்தத் திருநடனத்தை பிரம்மாதி தேவர்களும், வசிஷ்டாதி முனிவர்களும் கண்டு களிக்கின்றனர்.
எங்கும் தேவகானங்களும் வாத்திய கோஷங்களும், மந்திர ஓசையும் ஒலித்துக் கொண்டே இருக்கும். மண்ணுலகத்தோரும் கண்டு களித்து பேரின்ப வெள்ளத்தில் மூழ்கி மிதப்பர்.

எம்பெருமான் விடமுண்ட நாள் சனிக் கிழமை எனப்படுகிறது. அதனால் சனிக்கிழமை நந்நாளில் வரும் பிரதோஷம் மிக்க சிறப்பும், மகிமையும் பொருந்தியதாகும்.
பிரதோஷ காலங்கள் ஐந்து வகைப்படும்.
1.நித்திய பிரதோஷம்,
2.பக்ஷப் பிரதோஷம்,
3.மாதப் பிரதோஷம்,
4.மஹாப் பிரதோஷம்,
5.பிரளயப் பிரதோஷம்
.
அனுதினமும் சூரியாஸ்தமனத்திற்கு மூன்று நாழிகைகள் முன்னர் நக்ஷத்திரங்கள் உதயமாகும் வரை உள்ள காலகட்டம் நித்திய பிரதோஷம் எனப்படும், சந்தியா காலமாகும்.
சுக்லபக்ஷ சதுர்த்தி மாலைக் காலம் பக்ஷ பிரதோஷம் எனப்படும்.
கிருஷ்ண பக்ஷ திரயோதசி மாதப் பிரதோஷம் என வழங்கப்படும்.
கிருஷ்ண பக்ஷ திரயோதசி-ஸ்திரவாரமாகிய சனிக்கிழமை தினம் வந்தால் அதுவே மிகச் சிறப்புடைய மஹா பிரதோஷம் எனப்படும்.
பிரளய காலத்தில், எல்லாம் சிவனிடம் ஒடுங்கும் அதுவே பிரளய பிரதோஷமாகும்.
இந்த ஐந்து பிரதோஷ காலங்களில் எம்பெருமான் ஆனந்த நடனம் புரிந்து அகில லோகங்களுக்கும் அருள் பாலிக்கிறார்.
பேசப் பேசப் பெருகிக்கொண்டே போகும் சிவனார் திருப்புகழ். தென்னாடுடைய சிவன். எந்நாட்டவர்க்கும் பரமசிவன். சிவபெருமானை சிவப்ரதோஷமான சிவப்பெருநாளில் வழிபடுகின்றவர்கள் சிவனையொத்த வடிவம் பெறுவார்கள்.
சிவத்தலங்களில் சிவப் பெருநாளான பிரதோஷ காலங்களில் சிவனடியார்கள் கூடி 'மன்னே! மாமணியே! மழபாடியுள் மாணிக்கமே!' என்று போற்றுவார்கள். மற்றவர்களால் போற்றப்படுவார்கள்.
'மனத்தகத்தான் தலைமேலான் வாக்கினுள்ளான்.

வாயாரத்தன்னடியே பாடும் தொண்டர் எனத்தகத்தான்' என்று ஏற்றுகின்றவர்கள் மற்றவர்களால் ஏற்றப்படுவார்கள். சிவனைப் பூஜிக்கின்றவர்கள் யோகசாலிகள். அளவற்ற செல்வச் செழிப்பில் வாழ்வார்கள்.
'சிவசிவ' என்று சிவத்தையே செபித்து 'சிவசிவ' என்று −ருப்பவர்கள் சித்தர்கள் ஆவார்கள். சிவனே சித்தன், சித்தனே சிவன், சிவத்துக்குள் சித்தனையும் சித்தனுக்குள் சிவத்தையும் பார்க்கத் தெரிந்தவர்கள் பூத்துப் பொலிந்தவர்கள்.
சிவபெருமானை எப்பொழுதும் நினையுங்கள். அவன் திருவடியை பாடுங்கள். நீங்கள்தான் கைலாயத்தின் நிரந்தரவாசிகள்.
சிவ சிவ சங்கர
ஹர ஹர சங்கர




. இங்கே பாருங்கள் எத்தனை விதமான நந்திகள்
.



சாயங்காலம் ஐந்து மணிக்குகெல்லாம் ஆபீஸ் இருக்குது எங்களாலே பிரதோஷ பூஜைஎல்லாம் பாக்க முடியாதுன்னு சொன்ன இதோ உங்களுக்காக பூஜை வலையிலேயே போட்டாச்சு. பாருங்க.




இந்த பிரதோஷத்துக்கு சிங்கபூரில் எங்கள் வீட்டு அருகில் உள்ள செங்காங் முருகன் கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.பாருங்கள். சிவன் எப்படி அலங்காரத்தில் தகதகவென்று மின்னுகிறான்.தலையில்கங்கையுடன், சந்திரசேகரனாக காக்ஷி தருகிறார். முருகனும்கூட இருந்து அருள்பாலிக்கிறான்.

22 comments:

திவாண்ணா said...

இந்த பிரதோஷத்தை ஒட்டி ஏதோ பிரதக்ஷிண சமாசாரம் இருக்கு இல்லையா? கொஞ்சம் குழப்பற விஷயம் அது. தெளிவா சொல்லிப்போட முடியுமா?

தி. ரா. ச.(T.R.C.) said...

திவா சார் வலையிலிருந்து எடுத்த பிரதக்ஷிண முறை

பிரதோஷ காலத்தில் நந்தி தேவரின் கொம்புகளின் ஊடாக சிவதரிசனம் செய்து பிறகு சோமசூத்திரப் பிரதக்ஷிணம் செய்ய வேண்டும். " சோமசூத்திரப் பிரதக்ஷிணம்" என்னும் வழிபாட்டு முறை என்பது முதலில் நந்தி தேவரை வணங்கி, இடமாகச் சென்று சண்டேஸ்வரரைத் தரிசித்து, பின் திரும்பி வந்து நந்திதேவரை வணங்கி, வலப்பக்கமாகக் கோமுகை (பசுவின் முகம் போன்று செய்யப்பட்ட தீர்த்தம் விழும் பகுதி)வரை சென்று, மீண்டும் திரும்பி வந்து நந்திதேவரை வணங்கி , மறுபடியும் இடமாகச் சென்று, சண்டேஸ்வரரை வணங்கி, நந்திதேவரை இம்முறை தரிசியாது வலமாகக் கோமுகைவரை சென்று திரும்பி, நந்திதேவரைத் தரிசியாமல் இடமாகச் சென்று, சண்டேஸ்வரரை வணங்கிப், பின் திரும்பி வந்து நந்திதேவரைத் தரிசித்து, அவரது இரு கொம்புகளின் ஊடாக சிவலிங்கப் பெருமானை வணங்க வேண்டும் என்னும் விதிக்கமைய வழிபடுதலாகும். கோமுகையைக் கடவாது திருக்கோவில் வலம்வரும் இந்த சோமசூத்திரப் பிரதக்ஷிணம் பிரதோஷகால வழிபாட்டில் மிகச் சிறப்பிடம் பெறுகின்றது

திவாண்ணா said...

//திவா சார் வலையிலிருந்து//
நாராயணா! நான் எழுதியதாவே நினைவில்லையே? :-))

இல்லை ஒரு கமா காணாமப்போச்சா?
:-))

தி. ரா. ச.(T.R.C.) said...

@divaa. Only como is missing after divaa saar.

மெளலி (மதுரையம்பதி) said...

நன்றாக இருக்கிறதய்யா பதிவு, மிக்க நன்றி....தினமும் சோமசூத்திர பிரதக்ஷணம் செய்பவர்களை மதுரையில் கண்டிருக்கிறேன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@மௌலி அப்படிபட்டவர்களை பார்க்கும் பாக்கியம் எனக்கு இல்லை. ஆனால் அந்த ஊர்க்காரர்கள் என் பதிவுக்கு வரும் பாக்கியம் கிடைத்ததே அதுவே போதும்

ambi said...

ஒரு வருடம் அனேகமா எல்லா பிரதோஷமும் காஞ்சி ஏகாம்பர நாதர் மற்றும் ஸ்ரீமடத்து சந்திர மெள்லீஸ்வரர் பூஜை பாக்கற வாய்ப்பு கிடைத்தது.

ஏகாம்பரஸ்வரர் கோவில் இந்த ப்ரதக்ஷ்ணம் ரொம்ப பிரசித்தம். பிரிண்ட் அவுட் எல்லாம் குடுப்பார்கள். :)

நான் ஆத்ம ப்ரதக்ஷ்ணம் செய்து கொள்வேன். :)

தக்குடு said...

//மௌலி அப்படிபட்டவர்களை பார்க்கும் பாக்கியம் எனக்கு இல்லை. ஆனால் அந்த ஊர்க்காரர்கள் என் பதிவுக்கு வரும் பாக்கியம் கிடைத்ததே அதுவே போதும்// இதுக்கு பேருதான் அல்வா போலருக்கு...:)

தி. ரா. ச.(T.R.C.) said...

@அம்பி நீ ஒரு காலத்திலே நல்ல பையானா இருந்தேங்கிறதே நினைச்சுப் பாக்கவே சந்தோஷமா இருக்கு

திவாண்ணா said...

@ அம்பி. ஆதம பிரதர்ஷணம் ப்ரிஸ்க்ரைப் பண்ண இடம் சந்தியாவந்தனம் ஒண்ணுதான். வேற இடங்களீல் குறிப்பா கோவில்களீலே அப்படி செய்யக்கூடாது. செய்தா போன ஜன்மத்திலேந்து கொண்டு வந்த பாபம் போயிடும். இப்படி என் வேத குரு சொல்லிக்கொடுத்தார்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@தக்குடு திருநெல்வேலிகாராதான் அல்வா மதுரைக் காரன்னா மல்லிப்பூதான் காதுலேதான் வெச்சிக்கனும்

தி. ரா. ச.(T.R.C.) said...

நான் ஆத்ம ப்ரதக்ஷ்ணம் செய்து கொள்வேன். :)

@அம்பி சோம்பேறிக்கு தோலோட வழைப்பழம்கிறது சரியாத்தான் இருக்கு

ambi said...

திவாண்ணா, நான் சும்மா சாரை கலாய்க்க அப்படி சொன்னேன். ஒழுங்கா கொடி மரத்துக்கு கிட்ட நமஸ்காரம் பண்ணிட்டு தான் கெளம்புவேன். :)

தி. ரா. ச.(T.R.C.) said...

செய்தா போன ஜன்மத்திலேந்து கொண்டு வந்த பாபம் போயிடும்.
திவா சார் போனா நல்லதுதானே! ஒருவேளை புண்ணியமா இருக்குமோ

திவாண்ணா said...

hihi புண்ணியம்ன்னுதான் எழுதி இருக்கணூம். கவனக்குறைவு.வயசாச்சோன்னோ!

தி. ரா. ச.(T.R.C.) said...

@திவா சார் மத்தவாள போல இல்லாம தப்பை, வயசை ஒத்துக்கிற(என்னை மாதிரி) பெருந்தன்மை நமக்கு மட்டும்தான் வரும்.

மெளலி (மதுரையம்பதி) said...

//@தக்குடு திருநெல்வேலிகாராதான் அல்வா //

பின்னூட்டக்கலாய்ப்புக்களில் இந்த வரி மட்டுமே சிறப்பாக இருக்கு திராச சார்:))

இதுக்கு அடுத்த வரியும் ஓகே தான், மீனாக்ஷி பிரசாதமான மதுரை-மல்லிகையைத்தைப் பணிவுடன் காதிலும் வைத்துக்கொள்ளலாம், தலையிலும் சூடிக்கொள்ளலாம், பிறவிப்பயனன்றோ அது?. :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நீல கண்டம் ஆகும் பகுதியை ரொம்ப அழகாச் சொல்லி இருக்கீங்க திராச!

முதலில் கழுத்தைப் பிடிப்பது போல் தெரிஞ்சாலும்,
அது கண்டத்தில் கண்டம் நீக்கத் தான்!

இந்த நீள கண்டத்தில்
அந்த நீல கண்டத்தான்
கண்டமெல்லாம் நீக்கட்டும்!
கண்டமெல்லாம் நீக்கட்டும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தி. ரா. ச.(T.R.C.) said...
செய்தா போன ஜன்மத்திலேந்து கொண்டு வந்த பாபம் போயிடும்.
திவா சார் போனா நல்லதுதானே! ஒருவேளை புண்ணியமா இருக்குமோ//

//திவா said...
hihi புண்ணியம்ன்னுதான் எழுதி இருக்கணூம். கவனக்குறைவு.வயசாச்சோன்னோ!//

பாபம் போனால் நல்லது தான்!
புண்ணியமும் சேர்ந்தே போக வேண்டும் அல்லவா!
அப்போ தானே மோட்சம்!
இல்லீன்னா வெறும் சொர்க்கம் தானே!

அம்பிக்கு, ரம்பா ஊர்வசி இருக்கும் சொர்க்கம் பிடிக்காது-ன்னே நினைக்கிறேன்! :)
அவரு மோட்சமே போகட்டும்! அதுக்கு புண்ணியம் எல்லாம் தக்குடுவுக்கு டிரான்ஸ்ஃபரும் ஆகட்டும்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இந்த பிரதோஷத்துக்கு சிங்கபூரில் எங்கள் வீட்டு அருகில் உள்ள செங்காங் முருகன் கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.பாருங்கள். சிவன் எப்படி அலங்காரத்தில் தகதகவென்று மின்னுகிறான்.தலையில்கங்கையுடன், சந்திரசேகரனாக காக்ஷி தருகிறார். முருகனும்கூட இருந்து அருள்பாலிக்கிறான்//

ஈசன் பிரதோஷ காலத்தில் அழகு!
எங்க முருகன் என்னிக்குமே அழகு! :)

செங்காங் முருகன் கொள்ளை அழகு! இந்த சிங்கைப் பயணத்தின் போது, அவனைக் கொள்ளையே அடிச்சிக்கிட்டு வந்துறத் தோனிச்சி! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அம்பாளின் திருக்கர ஸ்பரிசத்தினால் நஞ்சும் அமுதமாகி நாயகனின் கண்டத்தில் கருமணி போல் தங்கியது.
எம்பெருமான் ‘திருநீலகண்டர்’ என்னும் திருநாமம் பெற்றார்//

அன்னை உமையவள் இப்படி அகிலத்தையே காத்தாள்!
சக்தியே சிவத்தையும் காத்தது!

இருந்தாலும், அன்னைக்கு ஒரு குறை! அகிலத்துக் குழந்தைகளைக் காப்பது அவளுக்கு முக்கியம் தான் என்றாலும், தன் புருஷனும் மிடுக்குடன் இருப்பதை அல்லவோ விரும்புவாள்!

அதனால், அவன் உடலில் அவளும் சேர்ந்து, அந்த நீல கண்டத்தை, இன்னும் பாதியாய்க் குறைத்தாள்! வாம பாகம் அல்லாத ஒரு பக்கம் மட்டுமே இப்போது நீல கண்டம்!

ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்
காத்தாளை.....

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பிரதோஷ காலங்கள் ஐந்து வகைப்படும்.
1.நித்திய பிரதோஷம்,
2.பக்ஷப் பிரதோஷம்,
3.மாதப் பிரதோஷம்,
4.மஹாப் பிரதோஷம்,
5.பிரளயப் பிரதோஷம்//

தகவலுக்கு நன்றி திராச!
முன்பு திவா சார், ஐந்து பிரளயம் பற்றிச் சொல்லி இருந்தார்!
இப்போ நீங்க ஐந்து பிரதோஷம் பற்றிச் சொல்லி விட்டீர்கள்!