Tuesday, January 04, 2011

ஸ்ரீ ஹனுமனை துதி மனமே தினமேஸ்ரீ ராம ஜெயம்

மாதவம் செய்த மாதவள் அஞ்சனை மடிதனில் மலர்ந்தவனாம்
மாதவன் ராமன் தூதுவன் என்றே மாகடல் கடந்தவனாம் ---(மாதவம்)

ராமனைப் போற்றிப் பாடிடும் நேரம் ரகசியமாய் வருவான்
கைத் தாளங்கள் போட்டு ஆனந்தமாக மனங்குளிர்ந்தே மகிழ்வான்
கண் மடல் மூடிமெய் மலர் சூடி செவி மடல் திறந்திடுவான்
நாதனின் காதை யாவும் கேட்டு விழி மழை சொரிந்திடுவான் ---(மாதவம்)
ராமனை நெஞ்சில் மாமலை கையில் சுமந்திடும் ஜெய ஹனுமான்
பீமனை அள்ளி மார்புடன் சேர்த்து அணைத்திடும் ஜெய ஹனுமான்
சந்தன வாசம் வீசிட எங்கும் வலம் வருவான் ஹனுமான்
நித்திலம் தன்னில் நித்தியம் வாழ்ந்து ஜெயம் தரும் ஜெய ஹனுமான்.. மாதவம்)
கோமகனாக வாழ்ந்திடும் சீலன் கோயில் நாம் அடைவோம்
கோசலை ராமன் நாமத்தைப்பாடி அவனருள் வேண்டிடுவோம்
வீழ்ச்சியை மாற்றி மீட்சிகள் சேர்க்கும் பாடிடு அவன் மகிமை
வான் மழை போல பூமழை வார்க்கும் மாருதி அவன் கருணை ---(மாதவம்)
நன்றி.. ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்திப்பாமாலை இரட்டைப்பாதை சேகர்

இன்று ஹனுமத் ஜயந்தி

வீர பராக்கிரமம் இருப்பினும் அரசகுலத்து அந்தஸ்துகள் இருப்பினும், புத்தி விசாலம் இருப்பினும் ,ஒருபடையை நிகர்த்த பலமுள்ள உடன் பிறப்பு கூடவெ இருப்பினும்,விதியின் வலியால் மனைவியை ஸ்ரீ ராமன் பிரிய நேரிட்டது.

மாதர்களை மனதளவிலும் தீண்டாத பிரும்மச்சாரி, கடும் ஒழுக்க சிந்தனை உடையவரும், புலன்களை அடக்கி ஆண்டு அதன் மீது ஆட்சி செலுத்த வல்லவரும்,இணயில்லாத பலம் மிக்கவரும்,அதே நேரம் பணிவும், பக்தியும் மிகுந்தவரும், இனிமையாகபேசுபவரும்,பேச்சில் வல்லமை உடையவரும்,சோர்வே இல்லாதவரும், தர்மத்தின் பக்கம் நிற்பவருமான ஸ்ரீஆஞ்சநேயரின் துணை தேவைப் பட்டது.ஒழுக்கமும், தர்மமும்தான் பொய்மையை வெல்ல மிக உதவி செய்யும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.வெறும் புஜ வலிமை போதாது.
னித மனம் ஒரு வானரம். அதை அடக்கி ஆண்டு ஆட்சி செய்கிற விஷயம் ஹனுமான்.அப்படி அடக்கி ஆண்டதை அலட்டாது மிக வினயமாக எங்கு பார்த்தாலும் கைகூப்பி அமைதியாக புன்சிரிப்போடு ஹனுமான். தன்னை பாராட்டிக் கொள்ளாமல் தன் பலம் எத்தகையது என்றுதானே ஆராய்ச்சி செய்யாமல் பலம் இருக்கிறதா, இருந்து விட்டு போகட்டுமே என்று மிக மிக வினயமாக நின்ற நிறைகுடம் ஸ்ரீஹனுமான். அலட்டலும், அஹம்பாவமும் வாழ்க்கையாகப்போன இந்தக் காலத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயரின் பராக்கிரமத்தை படிக்கிறபொழுது நாம் ஒன்றுமே இல்லை என்ற எண்ணம் மிகுந்து வருகிறது. சுந்தர காண்டம் ஒரு மனிதனுக்கு ஏற்பட்ட துக்கத்தை மட்டும் சொல்லித்தரவில்லை. அதற்கு ஏற்பட்ட விடிவு நேரத்தையும் விவரிக்கிறது. மிகப் பெரிய நம்பிக்கையை ஊட்டுகிறது. நீங்கள் வெற்றி பெற்றாலும் புன்சிரிப்போடு நன்றி என்று சொல்லிவிட்டு அமைதியாக இருக்க உங்களுக்கு உதவும்.

ஜய ஜய ஹனுமான் கோஸாயி
கிருபா கரஹூ குருதேவ கீ நாயீ
-ஹனுமனின் மீது ஒரு பாடல் கிளிக் செய்யுங்கள் < >

16 comments:

Narasimmarin Naalaayiram said...

Thanks:)
Jai Hanumaan
Jai Hanuman Jayanthi vaazhtukkal:)
Hai Hanuman piranthanaal vaazhutukkal:)

ambi said...

அருமை. ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க. எழுத்துல எப்படி பணிவை கொண்டு வரலாம்னு இந்த பதிவு ஒரு சிறந்த உதாரணம்.

திவா said...

exemplary!

தி. ரா. ச.(T.R.C.) said...

திவா அண்ணா நன்றி. மனிதன் எப்படி வாழ்க்கையில் நடக்கவேண்டும் என்பதை ஹார்வேர்ட் யுனிவெர்சிடிக்கே சொல்லிக்கொடுத்த மஹானுபாவர் அனுமந்தான்.கிருஷ்ணர் பின்னர் வந்து கீதையை உபதேசிக்கும் முன்னமேயே கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்று வாழ்ந்து காட்டியவர்

தி. ரா. ச.(T.R.C.) said...

நன்றி அம்பி. திக்கு நிறை புகழ்ளாளன் தீவேள்வி சென்று மிக்க பெறும் சபை நடுவே வில்லறுத்தான் மோதிரம் கண்டு ஒக்கும் அடையாளம் என்று உகந்தனளாம் சீதை போற்றும் அனுமான் திருவடி சரணம்

தி. ரா. ச.(T.R.C.) said...

நன்றி நரசிம்மம் . தங்கள் முதல் வருகைக்கு

Ms.Congeniality said...

Anjaneyar pathi pesardhum kekardhum romba sandhoshamaana vishayam. Adhuvum ippdi oru azhagaana post padikardhu romba sandhosham.

My two cents worth contribution for this Great Lord..

The way Lord Anjaneya respectfully bowed before his fellow soldiers before going in search of Sita Ma and the way he pacified Sita by mentioning that if he, just a messenger, is able to cross the ocean, all others of his clan should be able to cross it easily, showed his humbleness instead of the arrogance that he is far better than others.

The way Lord Anjaneya respectfully avoided the hospitality from Mynaka malai and the fact that the riches,tasty food and beautiful ladies at Lanka meant nothing to Lord Anjaneya showed his perseverance, focus in achieving the goal and the unconditional bhakthi he has towards Lord Rama.

The way Lord Anjaneya assumed small form when travelling through Lanka in search of Sita, the way he sang the biography of Lord Rama before appearing before Sita Ma (not to frighten her) and the way he pacified her and gained her confidence before giving the ring that Lord Rama gave shows his presence of mind and his adaptability to various situations.

No one can equal Lord Hanuman!! Jai Anjaneya :-)

குமரன் (Kumaran) said...

ஜெய் ஹனுமான்!

புத்திர்பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்!

எளிமையான கீர்த்தனை. ஹனுமத் ஜெயந்தி அன்று படிக்கக் கொடுத்ததற்கு நன்றி ஐயா.

தி. ரா. ச.(T.R.C.) said...

@திருமதி அம்பி. ஆஞ்சநேயருக்கு ஒரு பெயர் உண்டு, "அசாத்ய சாதக ஸ்வாமின்னு" அதாவது யாராலும் சாதிக்க முடியாத காரியங்களை செய்யக்கூடியவர்ன்னு. ஆனால் அதை எப்படி நம்புவது இந்தக்காலத்தில். நான் நம்புகிறேன் திடமாக.பதிவுபக்கமோ இல்லை பதிவுகளுக்கு பதிலோ போடாமல் இருந்த உங்களையே பதில் போட வைத்து விட்டாரே அஞ்சனை மைந்தன்

தி. ரா. ச.(T.R.C.) said...

@குமரன் வருகைக்கு நன்றி. ஹனுமனை பணி மனமே அனு தினமே

தக்குடு said...

எத்தனை உயரத்துக்கு போனாலும் வினயத்தோடையும், நிர்மலமான மனசோடையும் இருக்கனும்னு லோகத்துக்கு எடுத்து காட்டின வாயு புத்திரனை அடியேன் தாழ்பணிந்து வணங்குகிறேன்!..:)

தி. ரா. ச.(T.R.C.) said...

@சரியாகசொன்னாய் தக்குடு. இலங்கைக்கு 6 தரம் சமுத்திரத்தை தாண்டி போனார் ஒருதரம்தான் பாலத்தின்மீது போனார் பாக்கி 5 தடவையும் ராம் நாமத்தை சொல்லிக்கொண்டே சுலபமாகத் தாண்டி விட்டார். அஞ்சனை மைந்தன் ஆஞ்சனேயனின் பாதம் பணிவோம்

vgr said...

wonderful. well written sir!

இராஜராஜேஸ்வரி said...

ராமனைப் போற்றிப் பாடிடும் நேரம் ரகசியமாய் வருவான்//
அந்த அனுமனை அஞ்சலி கரத்துடன் வண்ங்குகிறோம்.

தி. ரா. ச.(T.R.C.) said...

வாங்க ராஜராஜேஸ்வரி அவர்களே. ஒருவசனம் சொல்லுவாங்க பிள்ளையார் பிடிக்க குரங்கில் முடிக்கவேண்டும். அதான் அர்த்தம் முழுவதுமாகத் தெரிந்தவர் போலும் நீங்கள். முதலில் விநாயகரை வணங்கி கடைசியில் ஆஞ்சனேயரை வணங்கி வலை பதிவுக்கு வந்துள்ளீர்கள். வருக வருக என்று வரவேற்கிறேன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

welcome to VGR thanks for coming