Saturday, March 12, 2011

அதிகார நந்தி சேவை

கயிலைக்கு சமானமான மயிலையில் பங்குனித் திருவிழா ஆரம்பித்து இன்று(12/03/11) அதிகார நந்தி சேவை.காலையில் ஆறு மணிக்கு சரியாக கபலீஸ்வரர் கோபுரவாசலில் தரிசனம் அருளுவார்.அதைக் காண்பதற்கு கண் கோடி வேண்டும். வாருங்கள் நாமும் தரிசனம் செய்யலாம்.இதோ காலை மணி 5.50 ஆகிவிட்டது. இந்த சிறிது குளிர்ந்த காலை வேளையிலும் பக்தர்கூட்டம் சந்நிதி தெருவெல்லாம் நிரம்பி வழிகிறதுஇதோ மெதுவாக ஆடி அசைந்து கொண்டு முதலில் வருவது யார் தெரியுமா. வேறுயார் வானவருக்கும் நம்மவருக்கும் முன்னவரான முந்தி முந்தி வினாயகர்தான் மூஷிகவாகனத்தில் வருகிறார்.
வினாயகருக்கு விசையின் மூலமாக பூச்சொரியும் காட்சி எல்லோரையும் கவர்ந்தது.நீங்களும் பாருங்கள் விடியோவில்அவருக்கு பின்னால் கபலீஸ்வரரை தூக்கிக்கொண்டு கம்பீரத்துடனும் அதிகாரத்துடனும் எழுந்தருளுவார் நந்திகேஸ்வரர் . பிறகு முருகப்பெருமான் கந்தர்வ பெண் வீணைமீட்டிக்கொண்டு இருக்கும் வாகன உருவத்தில் உலாவருவார். அதன் பின்னால் கற்பகநாயகி அதே மாதிரி வாகனத்தில் திருவீதி உலாவுக்கு வந்தருளுவாள்.கடைசியாக சண்டிகேஸ்வரரும் இவர்களைத் தொடர்ந்து உலா வருவார். மலர் அலங்காரமும்,மற்றும் மாணிக்கம்,வைரம் முதல் நவரத்தின அல்ங்காரமும் வார்த்தைகளால் வர்ணிப்பதைவிட நேரில் பார்த்தால்தான் அனுபவிக்கமுடியும்.
இதை ஏன் அதிகார நந்தி என்கிறார்கள் அவர் எல்லோரையும் அதிகாரம் செய்வாரா? இல்லை சிவபெருமானின் சிறந்த பக்தரான அவர் ஏன் அதிகாரம் செய்யப்போகிறார்.இங்கு அதிகாரம் என்பது பரமேஸ்வரனை துக்குவதற்கு அவர்மட்டும்தான் அதிகாரம் பெற்றவர் என்பதைக் குறிக்கிறது.
அதையாருக்கும் விட்டுக்கொடுக்கமாட்டார். அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்கப் படும் ஒரு அதிகாரம் போல.அவர் முகத்தைப் பாருங்கள் என்ன ஒருபெருமிதம்.வலதுகாலை மடித்துஇடது காலை ஊன்றிஇருகைகளாலும் புவனங்களை ஆட்டிப்படைக்கும் காலசம்ஹாரமுர்த்தியை துக்கிக் கொண்டு ஒரு கர்வம் அவர் முகத்தில் காணலாம்.அந்த செந்நிற நாக்கைச் சுழற்றி பற்கள் வெளியே தெரிய, கண்களில் கோபக்கனல் பொங்க, இருகைகளிலும் மானும், கதையும் ஏந்தி இடுப்பில் அதிகாரபட்டைச் சிகப்புத் துணியுடன் போருக்குச் செல்லும் வீரன்போல்காட்சியளிக்கிறார்.


அவரே ஈஸ்வரன்போல்தான் இருக்கிறார்.அவர் பெயரும் நந்திகேஸ்வரன்தானே. கபாலீஸ்வரரைப் பாருங்கள் அவரும் கையில் அம்பு வைத்துக்கொண்டு இருக்கிறார்.இடது கையை இடது துடை மேல் வைத்து கம்பீரமாக காட்சித்தருவதைக் காண கண் கோடி வேண்டும்


இந்தக்காட்சியை மயிலையில் வாழ்ந்த பாபநாசம் சிவன் எப்படி அனுபவித்தார் என்று பார்க்கலாமா

ராகம்:- காம்போதி தாளம்:- ஆதி.

பல்லவி

காணக் கண் கோடி வேண்டும்--கபாலியின் பவனி

காணக் கண் கோடி வேண்டும்........(காணக்கண்)

அனுபல்லவி

மாணிக்கம் வைரம் முதல் நவரத்னாபரணமும்

மணமார் பற்பல மலர்மாலைகளும் முகமும்

மதியோடு தாராகணம் நிறையும் அந்தி

வானமோ கமலவனமோ என மன்ம்

மயங்க அகளங்க அங்கம் யாவும் இலங்க

அபாங்க அருள்மழை பொழி பவனி .......(காணக் கண் கோடி..)

சரணம்

மாலோடு ஐயன் பணியும் மண்ணும் விண்ணும் பரவும்

மறை ஆகமன் துதிக்கும் இறைவன் அருள் பெறவே

நமது காலம் செல்லுமுன் கனதனமும் தந்தார்க்கு நன்றி

கருதி கண்ணாரக்கண்டு உள்ளுருகிப் பணியப் பலர்

காண அறுமுகனும் கணபதியும் சண்டேச்வரனும்

சிவகணமும் தொடர கலைவாணி

திருவும் பணி கற்பகநாயகி வாமன்

அதிகார நந்தி சேவைதனைக் (காணக் கண் கோடி வேணும்)

இந்தப் பாடல் அதிகாரநந்தி சேவையன்று திரு பாபநாசம் சிவனால் பாடப்பெற்ற சிறப்புப் பாடல்.

இந்தப்பாடலை பிரபலப்படுத்தியவர் கானகலாதர மதுரை மணிஐய்யர் அவர்கள் . அவரின் குரலில் "காணகண்கோடி வேண்டும்"  கேளுங்கள்

14 comments:

திவா said...

ரொம்ப நாளாச்சு!
நல்ல பதிவு!

தி. ரா. ச.(T.R.C.) said...

நன்றி திவா அண்ணா . கடந்த 10 வருடங்களாக தவறாமல் காணும் வாய்ப்பை கடவுள் அளித்து வருகிறார்

கீதா சாம்பசிவம் said...

திறக்கமுடியாமல் இருந்தது. எரர் மெசேஜை உங்களுக்குத் தனி மெயிலில் அனுப்பி இருந்தேன். வழக்கம்போல் பார்க்கலை போல! :(((( இன்னிக்கு என்னமோ திறந்தது. வந்து பார்த்தா கமெண்டும் பதிவாய் இருக்கு. படிச்சுட்டு வரேன். :)))))

கீதா சாம்பசிவம் said...

அது சரி, கபாலீஸ்வரர் அம்பு வைத்துக்கொண்டிருப்பதற்கும் காரணம் இருக்கணுமே?? அதைச் சொல்லக் கூடாதோ??

திவா அண்ணா??? ஹிஹிஹிஹி, எஞ்சாயிங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்

தி. ரா. ச.(T.R.C.) said...

திவா அண்ணா யாரும் "மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சுன்னு" பாடிடக் கூடாது அதான் போட்டேன்.பொறுப்புக்கள் கூடும்போது காலம் பகிர்ந்தளிப்பு குறைகிறது அதுவும் காரணம்.

தி. ரா. ச.(T.R.C.) said...

வாங்க கீதா மேடம். கையிலே அம்பு எதற்கு தெரியுமா? அம்பத்துர் பக்கம் நெறையா சிங்கங்கள் கிர்ர்ர்ர்ர்ர்ர் கிர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு உறுமிண்டு உலாவருதாம் வேட்டையாட வேண்டாமா அதான்.:P

தி. ரா. ச.(T.R.C.) said...

@கீதா மேடம் காபாலீஸ்வரர் விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், மற்றும் அதிகார நந்திக்கும் போர்க்கோலம் கொள்ளவைத்து ஆயுதபாணியாய் தேவியான கற்பாகாம்பாளுடன் அசுர சக்திகளை வேட்டையாடச் செல்லுகிறார். சிவனும் இதைத்தான்
பலர் காண அறுமுகனும் கணபதியும் சண்டேச்வரனும்

சிவகணமும் தொடர கலைவாணி

திருவும் பணி கற்பகநாயகி என்று பாடுகிறர்

குமரன் (Kumaran) said...

காணக் கண் கோடி தான் வேண்டும்!

நன்றி ஐயா!

தி. ரா. ச.(T.R.C.) said...

@kumaran thank you verymuch

அறிவன்#11802717200764379909 said...

மயிலையில் இல்லாத குறையைப் பதிவு தீர்த்தது...

நன்றி. திராச அண்ணா !

கீதா, ஏதாவது ஃபர்தர் கமெண்ட் ?!

:))

தி. ரா. ச.(T.R.C.) said...

@அறிவன் நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும். இந்ததடவை அதிகார நந்தி சேவைக்கு மட்டும்தான் போகமுடிந்தது

வந்தோமா கமெண்ட் போட்டோமா போனோமான்னு இருக்கனும். அதை விடுட்டு எதுக்கு துங்கும் சிங்கத்தை எழுப்பி அதை கிர்ர்ர்ர்ர்ன்னு சவுண்ட் விடச் செய்யனும்.;P

கீதா சாம்பசிவம் said...

வாங்க அறிவன், பார்த்தே ரொம்ப நாட்கள் ஆகிறது. அப்புறம் சார் சொன்னதைக் கவனிச்சேன். பாவம்னு விட்டுட்டேன்!

இது எப்புடி இருக்கூ????????(எ.பி. இல்லை) :))))))))

இராஜராஜேஸ்வரி said...

வானவருக்கும் நம்மவருக்கும் முன்னவரான முந்தி முந்தி வினாயகர்தான் மூஷிகவாகனத்தில் வருகிறார்.//
முந்திவந்து வணங்கித் துதிக்கிறோம்.
பகிர்வுக்கு நன்றி ஐயா.

தி. ரா. ச.(T.R.C.) said...

வாங்க ராஜேஸ்வரி அவர்களே. சிறப்பான ஆன்மீகப் பதிவாளர் என் பதிவுக்கு வந்ததற்கு நன்றி.நன்னை பாலிம்ப நடசி உச்சிதிவோ