மூன்றெழுத்தில் மற்றுமொரு அழகான கவிதை. உணர்வுகளை மறைத்துவைக்க தெரிந்த ஒரே காரணத்தால் மாதா..பிதா.என்ற பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட பாவப்பட்ட ஜீவன். மனைவி கரு சுமக்க துவங்கிய நாள் முதல், தன் குழந்தை பற்றிய கனவுகளை சேமிக்க தொடங்கிய பொறுப்புள்ள தந்தை. குழந்தைகளின் வரவிற்கு பிறகு அவர்களின் நலனுக்காக எப்படிபட்ட அவமானங்களையும் சகித்துக்கொள்ள பழகும் புனித ஆத்மா. மகளின் பிரிவிலும்,மகனின் உயர்விலும் ஆனந்த கண்ணீரில் மனதுக்குள்ளேயே கூத்தாடும் பாசமிக்க உயிர். தன் பிள்ளைகளின் சுகத்துக்காகவும் உயர் கல்விக்காகவும் குடும்பத்தை விட்டு தொலைதூரத்துக்கு பிரிந்து சென்று பணி புரிந்து சம்பாதித்து பண்ம் அனுப்பி கஷ்டங்களை சகித்துக் கொள்ளும் தன்னலமற்றவர். மகனுக்கும் மகளுக்கும் அவர்கள் சம்பாதிக்கும்வரை ATM ஆக இருப்பவர்.இந்த உறவுக்கு நன்றி சொல்ல ஒரு வாய்ப்பு தந்தையர் தினம் ஜூன் 19. தந்தையின் தாய்மையை உணர வாய்ப்பளிக்கும் தினம்.இழப்புக்குபின் வருந்துவதைவிட, இருக்கும்போதே ஒரு சிறிய வாழ்த்தின் மூலம் நன்றி சொல்லாம். இறைவா அடுத்த பிறவியிலாவது தந்தையுடன் வாழும் வாழ்க்கையைக் கொடு..
மூலக் கருத்துக்கு தினமலருக்கு நன்றி
4 comments:
இழப்புக்குபின் வருந்துவதைவிட, இருக்கும்போதே ஒரு சிறிய வாழ்த்தின் மூலம் நன்றி சொல்லாம். ..
அருமையான கருத்து. தந்தையர் தின வாழ்த்துக்கள்.
appakkaLukku koti pitikkum TRC sir vaazhga!
- one who has bhagyam to live with a 90 yr old father.
kotuthuvecha mahanupavar sir neenka
en appavin 60 vathavathu siraartham 24 thethi pannineen
thank you rajarajewshwari
Post a Comment