என்னுடைய தொழில் முறை பார்ட்னரான திரு சாந்தி அவர்கள் மதியம் கேட்டார் இன்று மாலை திருமதி. சுதா ரகுநாதனின் சங்கீதக்கலவை FUSION கச்சேரிக்கு அவரே இரண்டு டிக்கெட் அனுப்பியிருக்கிறார் வருவீர்களா என்று கேட்டார். அவர் அனுப்பியது இவருடைய LIFE பார்ட்னருடன் வர ஆனால் இவரோ FILEபார்ட்னரைச் சேர்த்துக் கொண்டார்.நானும் சரியென்று
சொல்லிவிட்டு சரியாக 6 45 க்கு சென்னை சின்மயா ஹெரிடேஜ் ஹாலுக்கு சென்றோம்.
அப்போதுதான் கூட்டம் சேரத் தொடங்கியது . கச்சேரி சரியாக 7 மணிக்கு ஆரம்பம் என்று அழைப்பிதழில் போட்டு இருந்தது.கர்நாடக சங்கீதமும் மேற்கத்திய இசையும் சஙகமிக்கும் நிகழ்ச்சியாதலால் சரியாக 7 மணிக்கு ஆரம்பிக்கும் என்று நம்பி காத்திருந்தேன்.ஆனால் கிழக்குக்கும் மேற்குக்கும் நடுவாக 7 25க்குத்தான் ஆரம்பமாகியது.
திரைச்சீலை மெல்ல விலகி மேடை ஒளிவெள்ளமாக காட்சி அளித்தது. ஸ்வேதாம்பரதரேதேவி நாநாலங்கார பூஷிதேயாக சபாநயகி திருமதி .சுதா அவர்கள் காட்சி அளித்தார். நம்ம (கிழக்கு) பக்க வாத்தியமாக எம்பார் கண்ணன் வயலின்,திருவாரூர் வைத்யனாதன் மிருதங்கம் திரு உடுப்பா கடம்.
மேற்குப்பக்கம் ஒரு பேஸ் கிடார் ஒரு லீட் கிடார் மேலும் டிரம் செட்.போதுமா! அந்தக் கால சீர்காழி கோவிந்தராஜனின் கச்சேரியை நினவு படுத்தியது மேடைசில அறிவிப்புக்கு விளக்கத்திற்கு பிறகு கச்சேரி ஆரம்பம். சரி ஈவினிங் ராகமாக என்ன வரும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு வந்தது "மார்னிங் ராகங்கள்"
ஆரம்பமே கணபதி பப்பா மோரியாதான்.அப்படியே நாட்டையில் மேலே போய் "மஹகணபதிம் மனஸா ஸ்மராமி"கீர்த்தனையுடன் முத்துசுவாமி தீக்ஷதர் பேஸ் கிடார் மற்ரும் லீட் கிடார் ஒளிக்க டிரம் அதிர புல்சூட்டோடு கோட்டு டை சகிதம் மேடையில் ஆவீர்பவித்தார். மிருதங்கம் அதிர்ந்தது வியலினும் கடமும் கொஞ்சம் அடக்கமாக ஒலித்தது.பாட்டு ஆரம்பித்து கொஞ்ச நேரம் வரை சுதாவை, சுதாவின் குரலைக் காணவில்லை.FUSION மியுசிக் என்பது லேசு பட்ட விஷ்யமில்லை. கர்னாடக கச்சேரி யார் வேண்டுமானாலும் செய்து விடலாம். இது அப்படியல்ல. பத்து மிருதங்கத்தின் ஒலிக்கு சமம் ஒரு டிரம்ஸ்.கிடாரின் ஒலியோ கேட்கவே வேண்டாம் வியலினை அமுக்கிவிடும். வியலினில் கமகம் கொண்டுவரலாம், ஆனால் கிடாரில் நோட்ஸ் எல்லாம் ஷார்ப். இது ஒரு பக்கம். மறுபக்கம், மேடைத்திறன்,பக்க வாத்தியகாரர்களை அநுசரித்து அதே சமயம் அவர்களை மிக விடாமல் தன்னோடு அரவணைத்துக் கொண்டு கீர்த்தனை சிதறாமல் ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பது மிகக் கடினம். அதிக உழைப்பு வேண்டும்.மேலே சொன்ன அத்தனை விஷயங்களுடன் திருமதி. சுதா அன்று மேடையில் முடி சூடா ராணியாகத் திகழ்ந்தார். பம்பரமாக சுழன்று பக்க வாத்தியக் காரர்களை தன் வயப்படுத்தி,தன்னையும் சங்கீதத்தில் லயித்துக்கொண்டு,ரசிகர்களையும் மறக்காமல் இசையில் ஐக்கியப்படுத்திகச்சேரியை பரிமளிக்கச் செய்தார். இதே கச்சேரி பாரீஸில் நடந்து இருந்தால் எல்லோரும் BRAVO சுதா என்று எல்லோரும் ஏகமனதாக "ஸ்டேண்டிங் ஒவேஷன்" செய்து இருப்பார்கள்.
ஒரு பத்து நிமிஷம் ஆனவுடந்தான் சுதவின் பிசிறு இல்லாத குரல் வெளிப்பட்டது கூடவே வயலின் மிருதங்கம், கடம் கைகோத்துக்கோண்டு கிடாருக்கும் டிரம்சுக்கும் சாவால் விட்டது,
அடுத்த கீர்த்தனை மைசூர் மஹாராஜா மாதிரி ராஜ அலங்காரத்துடன்" மாதே மலயத்துவச பாண்ட்யகுமாரே" என்ற காமாஸ் ராக ஹரிகேசனல்லூர் முத்தைய்யா பாகவதர் கீர்த்தனை.FUSION க்கு நல்ல ராசியான பாடல்.இதில் பக்கவாத்யகாரர்கள் தங்களது திறமையை காட்ட ஏதுவான பல இடங்கள் உண்டு. அவர்களும் தங்கள் திறமையை வெளிப்படுத்தினார்கள். அதுவும் ஸ்வரபிரஸ்தாரத்தில் சுதாவின் தாளகதியோடு வந்த ஸ்வரக்கோர்வைகளை அப்படியே வாங்கி சிதறாமல் வயலினும் கிடாரும், மிருதங்கமும் ,கடமும் டிரம்ஸும் சேர்ந்து ரசிகர்களை"கள்ளால் மயங்குவது போலே" சங்கீதத்தின் உச்ச நிலைக்கு அழைத்துச் சென்று விட்டார்கள் பின்னர் வந்த யமுனா கல்யாணியில் கிருஷ்ண நீ பேகனே பாரோ அமைதியாக சலசலத்து ஓடும் காவேரி ஆறு மாதிரிவழுக்கிக்கொண்டு ஓடியது. அட அந்த சத்தம் போட்ட டிரம்ஸ் கிடார் எல்லாம் சுதாவின் குரல் இனிமையின் பின்னால் அடக்க ஒடுக்கமாக இழைந்தோடியது.எம்பார் கண்ணனும் சுதா கொடுத்த பிடிகளை அப்படியே அதே நகாசுடன் வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுத்தது ரசிகர்களுக்கு விருந்து.
நேயர் விருப்பமாக சுதாவின் பேமஸ் பிரும்மமொகடே மற்றும் குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணாவுடன் கச்சேரி முடிந்தது.
சாதரணமாக சர்வ லகுவாக பாடும் சுதா இப்பொழுதெல்லாம் சில இடங்களில் கொஞ்சம் சிரமத்துடன் பாடவேண்டியதை அவருடைய அங்க அசைவுகள் வெளிப்படுத்தின.ஒரு வேளை இந்த காரணமாக இருக்கலாம். Age is crept in unnoticed.
18 comments:
BRAVO சுதா !ஏகமனதாக "ஸ்டேண்டிங் ஒவேஷன்" !!1
சங்கீத ஜாதிமுல்லையை மணக்கவைத்த பகிர்வுக்கு பாரட்டுக்கள்.
வாங்க ராஜராஜேஸ்வரி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அருமையான பகிர்வு. இந்த நிகழ்ச்சிகளைப் பொதிகைத் தொலைக்காட்சி ஒளிபரப்பிப் பார்த்திருக்கிறேன். என்றாலும் Fusion என்றால் மஹாராஜபுரம் சந்தானம் தான் டாப் என் கருத்துப்படி. மத்தவங்க ஸோ, ஸோ தான் சீர்காழி உட்பட. சீர்காழியின் குரலின் வளைவும், நெளிவும், கம்பீரமும் சுத்தக் கர்நாடக சங்கீதத்தில் தான் எடுபடுகிறது என்பது என் கருத்து. நீண்ட நாட்களுக்குப் பின்னர் கொடுத்த நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.
க்ர்ர்ர்ர்ர்ர்ர் ஐடி, பாஸ்வேர்ட் கேட்குது! என்ன தைரியம்?? :P
மார்னிங்க் ராகா படம் வந்து ரொம்ப நாள் ஆச்சே. இப்போது எதற்கு அந்தப் படத்தில் வந்த பாடல்களுடன் ஒரு கச்சேரி?
உங்கள் விவரிப்பு நேரில் நானும் கச்சேரியைக் கண்டது (கேட்டது) போல் இருந்தது. :-)
வாங்க கீதா மேடம் உங்களுக்கு மாத்திரம்தான் பாஸ்வேர்டு. அடிக்கடி வருபவர்களுக்கு கிடையாது
குமரன் இது 23 ஆம்தேதி Times of India musicalseries க்காக நடந்த நிகழ்ச்சி.ஏற்கனவே மார்னிங் ராகா சினிமாவுக்கு பண்ண அதே கோஷ்டியை வைத்து ஒப்பேத்தி விட்டார்கள்
விமர்சனம் எழுதிய பாணி என் குருநாதர் சுப்புடு பாணி.நன்றாக இருந்தால் அது அவர் திருவடிகளுக்கு சொந்தம்
ம்ம்ம்ம்?? எம்.எஸ்.விஸ்வநாதனோடு சேர்ந்து கொடுத்திருக்கார். காசெட் இருந்தது எங்க கிட்டே. தேடணும், அது ஃப்யூஷன் தான்னு எங்க பையர் சொன்னார்; அப்போ அது ஃப்யூஷன் இல்லையா?? ஆனால் சங்கரா தொலைக்காட்சி, பொதிகையில் ஃப்யூஷன் என்ற பெயரில் அடிக்கடி போடறாங்க. உண்மையில் ஃப்யூஷன் என்றால் என்ன?? குழப்பம்!
கீதா மேடம் அது சரி மஹாரஜபுரம் சந்தானம் எப்போ FUSION நிகழ்ச்சி கொடுத்தார்.இந்த கலக்கல் சங்கீதமே 2005 அப்பறம்தானே நம்மவூருக்கு வந்தது.போ ஷம்போ பாட்டு கூட முழுக்க கர்நாடிக் பேஸ்தான்
grrrrrrrrrrrrrrrr with MSV
மேடம் FUSIONஒன்னா மேற்கித்திய இசையையும் கிழக்கித்திய ( கர்னாடக இசையும் சேர்த்து) மிக்ஸ் பண்ணி பாடல்களப் பாடவேண்டும்.ஆதார ராகமோ தாளமோ மாற்றக்கூடாது. எம்ஸ்வி சாருடன் அவர் சேர்ந்து கொடுத்தது கர்நாடக இசைப் பாடல்களை மெல்லிசையுடன் சேர்ந்து இசைத்தது.இப்போது பழைய சினிமா பாடல்களை புதிய பாடலாக கொஞ்சம் மாத்தி படுகிறார்கள் அதுவும் மிக்ஸ்தான்
சரிதான், உங்க விளக்கம் ஒரு தெளிவைக் கொடுத்தது. எங்க பொண்ணு சொல்லுவா அடிப்படை மாறாமல் தான் இருக்கும்னு. எனக்கு சங்கீதம் கேட்கத் தான் தெரியும்; கற்றுக்கொண்டதில்லை. ஆனால் மஹாராஜபுரம் கர்நாடக இசையைத் தான் மெல்லிசையோடு இணைத்திருக்கிறார் இல்லையா? அதுக்கு என்ன பெயர்??
நீங்க சுப்புடு பாணியில் விமரிசனம் பண்ணலையோனு நினைக்கிறேன். அந்தக் கிண்டல், அந்த நச்! நடுவே ஒரு குட்டு! ம்ஹும் எதுவும் காணோம்! :P
மறுபடி பாஸ்வேர்ட், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உங்க ப்ளாகுக்கு வந்துட்டு இருக்கறச்சேயே இப்படியா? :P
வணக்கம் தி.ரா.ச. சார். என் பதிவிர்க்கு வந்து கருத்து சொன்னதர்க்கு மிக்க நன்றி.
// திரைச்சீலை மெல்ல விலகி மேடை ஒளிவெள்ளமாக காட்சி அளித்தது. ஸ்வேதாம்பரதரேதேவி நாநாலங்கார பூஷிதேயாக சபாநாயகி திருமதி .சுதா அவர்கள் காட்சி அளித்தார்//
இப்ப பாதி கூட்டம் கச்சேரி கேட்கவருதா இல்லா இவா அலங்காரம் பண்ணிக்கரதை பார்க்க வருதான்னு தெரியவில்லை.
உங்க விமர்சனத்தை ரசித்துப்படித்தேன்.பகிர்வுக்கு நன்றி.
இப்ப பாதி கூட்டம் கச்சேரி கேட்கவருதா இல்லா இவா அலங்காரம் பண்ணிக்கரதை பார்க்க வருதான்னு தெரியவில்லை
வாங்க RMVI முதல்வருகைக்கு நன்றி. அதுவும் மேலே சொன்ன உள்குத்தோடு வந்துட்டீங்க. என்பாணி எனது குரு சுப்புடு பாணி அதில் ஆளப் பற்றிய வர்ணனையும் இருக்கும்.தியாகராஜ ஆராதனைக்கு வரும் வித்வாம்சினிகள் என்ன்மோ சினிமா ஷூட்டிங்கிற்கு வருகிற மாதிரி மேக்கப் போடுவது தேவையா என்ற கேள்வி மனதில் எழுகிறது.இதைச் சொன்னதிற்காக ஆணாதிக்கன் என்று திட்டுவீர்கள் பரவாயில்லை
இப்ப பாதி கூட்டம் கச்சேரி கேட்கவருதா இல்லா இவா அலங்காரம் பண்ணிக்கரதை பார்க்க வருதான்னு தெரியவில்லை
வாங்க RMVI முதல்வருகைக்கு நன்றி. அதுவும் மேலே சொன்ன உள்குத்தோடு வந்துட்டீங்க. என்பாணி எனது குரு சுப்புடு பாணி அதில் ஆளப் பற்றிய வர்ணனையும் இருக்கும்.தியாகராஜ ஆராதனைக்கு வரும் வித்வாம்சினிகள் என்ன்மோ சினிமா ஷூட்டிங்கிற்கு வருகிற மாதிரி மேக்கப் போடுவது தேவையா என்ற கேள்வி மனதில் எழுகிறது.இதைச் சொன்னதிற்காக ஆணாதிக்கன் என்று திட்டுவீர்கள் பரவாயில்லை
அப்படியெல்லாம் இல்லை சார்.
உண்மையாக சங்கீதத்தை ரசிக்க வரவா எல்லாம் மேகப் போட்டுண்டு இருந்தாதான் வருவளா என்ன?சங்கீதத்துக்குதான் வருவா..
நான் பெண்ணாயிருந்தாலும் இந்த மேஅப் விஷயத்துல எனக்கு துளிகூட விருப்பம் இல்லை.
அழகு சங்கீதத்துல இருந்த போதும்.
இந்த விஷயத்துல நானும் உங்க கட்சிதான்.
@கீதா மாமி - நமக்கும் சங்கீதத்துக்கும் தான் 100 யோஜனை தூரம் ஆச்சே! அப்புறம் எதுக்கு மெனக்கெட்டாவது ஒரு கமண்ட் போட்டு கிண்டி மாமா வாயால வாங்கி கட்டிக்கனும்!! :PP
Post a Comment