நவாராத்ரி தொடங்குகிறது. இந்ததடவை முத்துஸ்வாமி தீக்ஷதரின் நவாவர்ண தேவி கமலாம்பாளின் கீர்த்தனைகளை போட்டு தமிழிலில் விளக்கமும் போட்டு முடிந்தவரை பாடலையும் போட விநாயகனை வணங்கி ஆரம்பிக்கிறேன். முதலில் மஹகவி காளிதாஸனின் ஸ்யாமளாதண்டகத்தின் நிறைவு துதியிலிருந்து ஆரம்பம்
ஸர்வாதீர்த்தாத்மிகே
,ஸர்வ மந்த்ராத்மிகே,
ஸர்வ தந்த்ராத்மிகே,
ஸர்வ யந்த்ராத்மிகே,
ஸர்வ பீடாத்மிகே,
ஸர்வ தத்வாத்மிகே,
ஸர்வ சக்த்யாத்மிகே,
ஸர்வ வித்யாத்மிகே,
ஸர்வயோகாத்மிகே,
ஸர்வநாதாத்மிகே,
ஸர்வ சப்த்தாத்மிகே,
ஸர்வ வர்ணாத்மிகே,
ஸர்வ விஸ்வாத்மிகே,
ஸர்வதீக்ஷாத்மிகே
,ஸர்வ ஸர்வாத்மிகே,
ஸர்வகே
ஹே ஜகந் மாத்ருகே,
பாஹிமாம் பாஹிமாம் பாஹிமாம்,
தேவீ துப்யம் நமோ
தேவி துப்யம் நமோ
தேவிதுப்யம் நம:
எல்லா நீர்நிலைகளிலும் நிறைந்து இருப்பவளே,எல்லா மந்திரங்களிலும் உறைந்து இருப்பவளே,எல்லாவற்றிலும் தந்திரரூபமாக இருப்பவளே,எல்லாவற்றிலும் யந்திர ரூபமாக இருப்பவளே,எல்லா பீடங்களிலும் பூர்ணமாக இருப்பவளே, எல்லாவற்றிலும் உட்பொருளாக இருப்பவளே,எல்லா சக்திகளையையும் உள்ளடக்கியவளே ,எல்லா கலைகளையும் உணர்ந்தவளே,எல்லா யோகங்களையும் கற்றவளே,எல்லா நாதங்களிலும் இருப்பவளே,எல்லா சப்தங்களிலும் ஒலிப்பவளே,எல்லா பிரிவுகளுமாக இருப்பவளேஎல்லா, உலகத்திலும் இருப்பவளே, எல்லா உபதேசங்களிலும் பூரணமாய் இருப்பவளே,எல்லாவாற்றிலும் எல்லாமாய் இருப்பவளே,அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பவளே, அகிலமெல்லாவற்றுக்கும் தாயே,என்னைக் காப்பாற்று ! என்னைக் காப்பாற்று ! என்னைக் காப்பாற்று தேவி நீயே துணை! தேவி நீயே துணை! தேவி நீயே துணை!
நவாவர்ண கிருதிகளை வரிசையாக இசைக்கும்போது ஆரம்பத்தில் மூன்று த்யான கிருதிகளை இசைப்பது ஒரு மரபு.முதலாவது கணபதி தியானம்
..
ராகம்:கௌள தாளம்: திரிபுட
பல்லவி
ஸிரீ மஹா கணபதி- ரவதுமாம்
ஸித்தி விநாயகோ மாதங்க முக.....
ஸித்தி விநாயகோ மாதங்க முக.....
அனுபல்லவி
காமஜனக விதிந்த்ர ஸநுத
கமலாலய தட நிவாஸோ
கோமளத்ர பல்லவபதயுக
குருகுஹாக்ரஜ சிவாத்மஜ..........
சுவர்ணாகர்ஷ்ண விக்னராஜோ
பாதாம்புஜோ கௌர
வர்ண வஸநாதரோ பாலசந்த்ரோ
நராதி விநுத லம்போதரோ
குவலயஸ்வவிஷாண பாஸாங்குஸோ
மோதக ப்ரகாஸ்கரோ
பவஜலதிநாவோ மூலப்ப்ருக்ருதி
ஸ்வபாவஸ் சுகதரோ
ரவிஸஹஸ்ர ஸந்நிப தேஹோ
கவிஜநனுத மூஷிகவாஹோ
அவநத தேவதா ஸமூஹோ
அவிநாஸ கைவல்ய கேஹோ .........ச்றீ
ஸ்ரீ மஹாகணபதி என்னை என்னை ரக்ஷிக்கட்டும்.சகல சித்திகளையும் அருளச்செய்யும் ஆனைமுகத்தைஉடையவர்.மன்மதனின் தந்தையாகிய விஷ்ணு மற்றும் பிரும்மா, இந்திரன் போன்ற தேவர்களால் வணங்கப்படுபவர்.திருவாரூரில் இருக்கும் கமலாலயக் குளக்கரையில் அமர்ந்திருப்பவர்.அழகுமிக்க தாமரைஇதழ் போன்ற மென்மையான பாதங்களையுடையவர்.குருகுஹனான அழகு முருகனின் சகோதரன் சிவகுமாரன்.
தங்கத்துக்குமாத்துரைத்தஉரைக்கல்லாக வடிவெடுத்த கணேசர்,தாமரைபூக்களின்மீது நடனமாடுபவர்,வெண்பட்டாடை அணிந்தவர்,தன்நெற்றியில் பிறைச்சந்திரனை தரித்து பாலசந்த்ரன் எனப் பெயர்பெற்றவர், மனிதர்களால் பெரிதும் பிரியத்துடன் வணங்கப் படுபவர்,தன்வயிற்றினில் உலகனைத்தும் அடக்கிஅதனால் பெருவயிறு படைத்தவர்,கைகளில் கருநெய்தல் மலர்,தந்தம்,பாசக்கயிறு,அங்குசாயுதம்,மோதகம்,ஆகியவற்றை வைத்திருப்பவர்,எப்பொழுதும் ஒளிப்பிழம்பாக பிரகாசிப்பவர்,பிறவிப் பெரும்கடலை கடக்க மனிதர்களுக்கு ஓடமாகி கரைசேர்ப்பவர், எல்லாவற்றிர்க்கும் முழுமுதற்கடவுளாக இருப்பவர்,வணங்கியவர்களுக்கு மங்களத்தை அளிப்பவர்,கோடி சூர்யப் பிரகாசம் போன்று ஒளிமயமாகத் திகழ்பவர்,கவிகளால் புகழப்படும் மூஞ்சூற்றினைதன் வாகனமாகக் கொண்டவர்,தேவர்களால் சூழப்பட்டு பணிந்து வணங்கப்படுபவர்,ஜீவாத்மா- பரமாத்மா உறவின் கடைசி நிலையானஐக்கியத்தை
அருள்பவர்,இப்படியெல்லாம், புகழ் பெற்ற கணபதி என்னை காப்பாற்றட்டடும்
இனி இந்த அழகான பாடலை திருமதி எம் ஸ் சுப்பலக்ஷிமி பாடக் கேளுங்கள்
அடுத்தபாடல் அம்பிகை த்யானம் பாடல்.வழிவழியாக முதலில் பாடப்படும் பாடல்.
ராகம்; தோடி தாளம்; ரூபகம்
பல்லவி
கமலாம்பிகே ஆஸ்ரித கல்பலதிகே சண்டிகே
கமாநீயாருணாம் ஸுகே
கரவித்ருத ஸுகே மாமவ ஜகதம்பிகே......கமலாம்பிகே
அனுபல்லவி
கமலாஸநாதி பூஜித கமல்பதே பஹுவரதே
கமலாலய தீர்த வைபவே ஸிவே கருணார்ணவே....கமலாம்பிகே
சரணம்
ஸகல லோக நாயிகே சங்கீத ரசிகே
ஸுகவித்வ ப்ரதயிகே ஸுந்தரி கதமாயிகே
விகளேபர முக்த்திதாந நிபுனே அக்ஹரணே
வியதாதி பூதகிரணே விநோதசரணே அருணே
ஸ்களே குருகுஹகரணே ஸதாஸிவாந்த; கரணே
அ க ச ட த ப ஆதி வர்ணே....கமாலம்பிகே
போன்றவளே,சண்டிகாதேவியே, கையினில் கிளியை வைத்துக் கொண்டு சிகப்பு பட்டு வஸ்த்ரம் அணிந்து அழகாக விளங்குபவளே,அகில உலக்த்துக்கும் அன்னையே என்னை காத்து ரக்ஷிப்பாய்.
தாமரையில் தோன்றியபிரும்மா முதலியவர்களால் பூஜிக்கும் தாமரை போன்ற பாதங்களை உடையவளே,பக்தர்களுக்கு விரும்பிய வரங்களை அருளுபவளே,கமலாலயம் என்ற குளத்துக்கு சிறப்புச் சேர்ப்பவளே,சிவனுக்கு இனியவளே,கருணைகடலான கமலாம்பிகையே என்னை காத்து ரக்ஷிப்பாய்.
புவனங்களைக் காப்பவளே, இசையை விரும்பி ரஸிப்பவளே,கவிபுனையும் வரத்தை அளிப்பவளே,அழகியவளே,மாயையிலிருந்து விடுபட்டு இருப்பவளே மனிதர்களை மாயையிலிருந்து விடுபடவைப்பவளே
,முப்பிறப்பிலும் செய்த பாவங்களை போக்குபவளே, பஞ்சபூதங்களுக்கும் சக்தியை அளிப்பவளே,ஒளிபொருந்தியவளே, விதவிதாமாக ஆசனங்களை போட்டு கொலுவீற்றிருக்கும்போது விநோதமான திருவடிகளின் நிலைகளினாலழகிய தோற்றம் தரும் பாதார விந்தங்களை உடையவளெ, இளம் சிவப்பு வர்ணமுடையவளே எல்லாக் கலைகளுக்கும் உறைவிடமானவளே,முருகனான குருகுஹனின் பிறப்புக்கு காரணமானவளே, என்றும் சதாசிவனின் உள்ளத்துள் உறைபவளே,அகார சகார முதலிய 51 அக்ஷரங்கள் வடிவாய் இருப்பவளே,ஒப்பற்ற ஆனந்தத்தின் பூரண வடிவாய் விளங்குபவளே,திருவாருரில் ஒளிர்பவளான கமலாம்பிகையே என்னைக் காத்து அருள்வாய்
இனி இந்தப் பாடலை திருமதி எம் ஸ் சுப்பலக்ஷிமி அவர்களின் குரலில் கேட்கலாம்
இன்றைக்கு லலிதா ஸ்கஸ்ரநாமத்திலிருந்து ஒரு நாமத்தின்
அர்த்தத்தைப் பார்க்கலாமா
ரதிப்பிரியா
ரதிதேவியின் பிரியத்துக்கு உரியவள். அப்படி என்ன ரதிதேவிக்கு பிரியம் லலிதா தேவியின் மீது?.சிவனால் ஸ்ம்கரிகப்பட்டு ரதியின் கணவரான மன்மதன் சாம்பலாகிவிட்டான். ரதிதேவி அம்பாளை வேண்டி அவனை மறுபடியும் உயிர்ப்பித்து தருமாறு வேண்டினாள். அம்பாள் மன்மதனை எங்கு எந்த உருவத்தில் ஆவாஹானம் செய்யலாம் என்று தேடி சரியான இடம் கிடைக்காமல் தன்னுடைய முகத்திலேயே அவனுக்கு இடம் கொடுத்து ரதிதேவியை திருப்த்திப் படுத்தி அவளின் பிரியத்துக்கு பாத்திரமானாள். இதை ஆதிசங்கரர் சௌந்தர்யலஹிரியில் "தவமுகமிதம் மன்மத ரதம் "என்று புகழ்கிறார்
அபிராமபட்டரும் "அதிசயமான வடிவுடையாள் அரவிந்தமெல்லாம் துதிசயமான சுந்தரவல்லி துணை இரதிபதி சயமானது" என்று அதிசயப் படுகிறார்.
நாளை மீண்டும் பார்க்கலாம்
13 comments:
என்னைக் காப்பாற்று ! என்னைக் காப்பாற்று தேவி நீயே துணை! தேவி நீயே துணை! தேவி நீயே துணை!//
அவள் கால்களைப் பிடித்துக்கொண்டு கதறவேண்டும் போலத் தான் இருக்கு. நன்றி அருமையான விளக்கங்களுடன் கூடிய அருமையான பதிவுக்கு.
வாங்க மேடம். முதல் ஆள் நீங்கதான்! காளிதாஸனின் ஸ்யமளாதண்டகம் மிகச் சிறப்பு வாய்ந்த ஸோஸ்த்ரம். முடிந்தால் அதற்கும் விளக்கம் எழுதவேண்டும்.இவற்றை எல்லாம் சிறுவயதிலேயே எனக்கு கற்பித்த என் அம்மாவுக்கு நன்றி.வந்து கருத்துரை சொன்ன உங்களுக்கும் நன்றி. சுண்டல் நாளைக்குத்தான்
கபேஷ் பேஷ்...கெளசிகத்தில்...நவராத்ரி களைகட்டிவிட்டது.
மிகச் சிறப்பான ஆரம்பம்...
சத்காரியம் ஆரம்பிச்சு இருக்கேள் மாமா. நல்ல ஆரோக்யத்தையும் எல்லா ஐஸ்வர்யத்தையும் அம்பாள் அனுக்ரஹிக்கட்டும்!!
நாளைலேந்து ஒழுங்கா சுண்டல் போட்டோவையும் போடுங்கோ!
ஸர்வ ஸர்வாத்மிகே,
ஸர்வகே
ஹே ஜகந் மாத்ருகே,
பாஹிமாம் பாஹிமாம் பாஹிமாம்,
தேவீ துப்யம் நமோ
தேவி துப்யம் நமோ
தேவிதுப்யம் நம:/
ஸர்வ லோகங்களிலும் நிறைந்த அம்பிகையை ஆவாஹனம் செய்த பகிர்வுக்கு நன்றி.
ஆதிசங்கரர் சௌந்தர்யலஹிரியில் "தவமுகமிதம் மன்மத ரதம் "என்று புகழ்கிறார்
ரதிப்ரியையான அம்பிகை அழகு பகிர்வுக்கும் கொலுவுக்கும் பாராட்டுக்கள்.
ஆமாம் மௌலி களை கட்டிவிட்டது. அம்பாலை ஆவாஹனம் செய்தாகி விட்டது. முடிந்தால் நீங்களும் உங்களது கருத்தையும் சேர்த்தால் அழகுபடும். மிகவும் கஷ்டமான விஷயம் இது எடுத்துக்கொண்டு விட்டேன் காமாஷிதேவிதான் அருளவேண்டும்
ஆமாம் தக்குடு நீ சின்ன வயசிலேயே சத்க்கார்யம் செய்ய ஆரம்பிச்சுட்டே உண்மையாகவே நான் இப்போதான் ஆரம்பம்.அந்திமகாலத்தில் அஸ்வத்தாமனுக்கு பட்டம் கட்டினா மாதிரி
வாங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆன்மீகம் நீங்கள் வந்தாதான் முழுப்பெறும்.நீங்கள் செய்யாததா நான் செய்கிறேன்.
Hello Uncle, WOnderfully written...It was excellent to read the meanings...Songs from MS are the best part! I will listen to them during Navarathri!! Thanks a lot!! Ungalaal ingu US-il Navarathri-yil "Deiveega Manam Thazuvapogiradhu" :)
Thanks Ramya music has no boundry.show this to Ria and navya how M S is singing in the video
தேவி நீயே துணை. அதிசயமான வடிவுடையாளைப் பற்றி வாசிப்பது ஆனந்தமான விஷயம். மிக்க நன்றி. நவராத்திரி வாழ்த்துகள்.
காளிதாஸனின் ஸ்யமளாதண்டகம், அதற்கு விளக்கம் மிக அழகு.
எம்.எஸ். பாட்டுகளுக்கு நன்றி .2/3 முறை திருப்பி திருப்பி போட்டு கேட்டுவிட்டேன். அருமையான் பதிவு.
Post a Comment