Friday, September 30, 2011

நவராத்ரி நாயகி 4

Y



லலிதா ஸ்ஹஸ்ரநாமத்தின் முதல் அடி

ஸ்ரீ மாதா ஸ்ரீ மஹாராஜ்ஞீ ஸ்ரீ மத்ஸிம்ஹாஸனேச்வரீ 1 "

சிதக்னி குண்ட ஸ்ம்பூதா தேவகார்ய சமுத்யதா !'

அம்மா! மகாராணி! உயர்ந்த ஸிம்ஹாசனத்தில் அமர்ந்திருப்பவளே !சித்தமான அக்னிகுண்டத்திலிருந்து தோன்றியவளே! தேவர்களின் கார்யசித்திக்காக எழுந்து அருளியவளே. உனக்கு நமஸ்காரம். இதில் ஒரு விசேஷம் பார்த்தீர்களா ! உலகத்தின் ஐந்தறிவு அல்லது ஆறறிவு பெற்ற எந்த உயிராக இருந்தாலும் எந்த மொழியில் பேசினாலும் அதனுடைய முதல் வார்த்தை""அம்மா"தான். ஆங்கிலத்தில்வரும் மதர் என்ற வார்த்தையே வடமொழியில் உள்ள மாதா என்ற வார்த்தையிலிருந்து வந்ததாக கூறுவர்.லலிதா ஸ்கசரநாமத்தில் வரும் முதல் வார்த்தையே மாதா தான்.நம் எல்லோருக்கும் ஆதி மாதா அவள், நாம் எல்லோரும் அவள் குழந்தைகள். அம்மாவுக்கும் குழந்தைக்கும் எப்போதும் ஒரு பிரிக்க முடியாத பிணப்பு உண்டு.பிறந்த சிறு குழந்தை 6 மாதம் வரையில் தனக்கு எல்லாமே அம்மாதான் என்று நினைத்துக்கொள்ளும் மற்ற உறவுகள் தந்தை உள்பட பின்னால்தான்.இன்னும் சொல்லப்போனால் அம்மாவின் குரலை கர்ப்பகாலத்திலேயே கேட்க ஆரம்பித்துவிடுமாம். அதனால்தான் ஸ்ரீமாதா என்ற முதல் வார்த்தையோடு ஆரம்பிக்கிறது
ஸ்ரீ மஹாராஜ்ஞீ ஸ்ரீ மத்ஸிம்ஹாஸனேச்வரீ

எனக்கு தாயாராக இருந்தாலும் அவள் மஹாராணி, அதுமட்டுமல்ல அவள் இருப்பதோ சிம்ஹாசனத்தில். இந்த எளியவனுக்கு தாயாராக இருப்பதால் அவளை எளியவளாக எண்ணி விடாதீர்கள்.அவள் அகில உலகுக்கும் மஹாராணி.முத்து ஸ்வாமி தீக்க்ஷதர் ஸ்ரீ மாதா ஷிவவாமாங்கே என்ற பேகட கீர்த்தனையில் இவ்வாறு பாடுகிறார். " ஸ்ரீ மாதா சிவவாம மாங்கே ஸ்ரீ சக்ரரூப தாடங்கே மாமவ1ஸ்ரீ மஹாராஜ்ஞீ வதநஸ்-ஸசாங்கே சித்ப்ரதி பிம்பே மாமவ"என்று லலிதாஸ்ஹஸ்ரநாமத்தின் முதல் அடியை
 வைத்தே திருச்சி அகிலாண்டேஸ்வரியைப் பாடினார்.
சிதக்கினி குண்ட ஸ்ம்பூதா
சித் என்பது உள் மனதுக்குள் இருப்பது யோகிகளின் கடைசி நிலை சித் என்ற அந்த நிலை வந்து விட்டால் நாம் வேறு கடவுள் வேறு என்ற நிலை போய்விடும்.கடவுளை நம் சித்தத்திலேயே பார்க்கலாம். "சித்தத்துனுள்ளே சிவலிங்கம் காட்டி"என்ற நிலை. மனசு, புத்தி, அஹங்காரம்,அந்தகரணம் அடுத்தநிலை சித்தம்.இவையெல்லாம் சித்தத்தில் ஒடுங்கும். இதைத்தான் பாரதி "அந்த கரணமெல்லாம் சிந்தையிலே ஒடுங்கி"என்கிறார் அப்பேற்பட்ட சித்தமாகிய அக்னி குண்டத்திலிருந்து தோன்றியவள்தான் ஸ்ரீ மாதா.
தேவ கார்ய சமுத்பவா
தேவர்களின் கார்யமான அசுரர்களை வதம் செய்யவேண்டும் என்பதற்காக சித் அக்னி குண்டத்திலிருந்து வேகமாக மிகுந்த ஆற்றலுடன் தோன்றினாள்
தோன்றியவள்.

 இன்றைய தினப் பாடல் 3 வது ஆவரணம்

ராகம்: சங்கராபரணம்             தாளம்: ரூபகம்
பல்லவி


ச்ரி  கமலாம்பிகயா கடக்ஷிதோஹம்
ஸச்சிதாநந்த பரிபூர்ண ப்ரஹமாஸ்மி11.....(ச்ரி கமலாம்பிகயா)


அனுபல்லவி
பாகஸாநாதி ஸ்கல் தேவதா ஸேவிதய
பங்கஜாஸநாதி பஞ்ச க்ருத்யாக்ருத்-பாவிதயா
ஸோக-ஹர சதுர பதயா முக-முக்ய-வாக்-ப்ரதயா
கோகநத விஜய-[அதயா குருகுஹ-த்ரைபதயா......(ச்ரி கமலாம்பிகயா...)
சரணம்
அநங்க-குஸுமாத்-யஷ்ட ஸக்த்யாகாரயா
அருண-வர்ண ஸம்சோக்ஷாபண் சக்ராகாரயா
அநந்த-கோட்யண்டநாயக ஸங்கர -நாயிகயா
அஷ்ட-வர்காத்மக குப்த்-தரயா வரயா
அநங்காத் யுபாஸிதயா அஷ்டதளாப்ஜ-ஸ்திதயா
தநுர் பாணதர கரயா தயா-ஸுதா-ஸகரயா....(ச்ரி கமலம்பிகயா

ச்ரி கமலாம்பிகையால் கடாக்ஷிக்கபட்ட நான் சத்ஸித் ஆனந்த பரிபூரண பிரும்மாக இருக்கிறேன்.இந்திரன் முதலான  எல்லா தேவர்களால் பூஜிக்கப்பட்டவளால், ஸ்ருஷ்டி,ஸ்திதி,ஸம்ஹாரம், திரோதனம்,அநுக்ரஹம் ஆகிய ஐந்து வகை தொழில்களை செய்பவளால்,பிரும்மா, விஷணு, ருத்ரன், மஹேஸ்வரன்,சதாசிவன் ஆகிய பஞ்ச ப்ரும்மாக்களால்கௌரவிக்கப்பட்டவளால்,துன்பங்களை அறவே நீக்கும் சக்தியுள்ள திருவடிகளை உடையவளால், மூககவி போன்றவர்களுக்கு உன்மேல்  கவிமழைபாடும் பேச்சுத்திறன் அளித்தவளால்,செந்தாமரையை வெல்லும் பாதாரவிந்தங்களை தாங்கியவளால்,தந்தையின் தோள்மீதமர்ந்து தகப்பனான சிவனனுக்கே அஹம் ப்ரும்மாஸ்மி என்ற பதங்களின் ஸொரூபியாக இருப்பவளால்,அப்படிப்பட்ட கமலாம்பிகையின் கருணைக்கு ஆட்க்கொள்ளப்பட்டேன்.
அநங்ககுசுமா முதல் அநங்கமாலினி வரையான எட்டி சக்திகளின் அம்ஸமாக இருப்பவளால்,சிந்துர வர்ணமான இளம் சிகப்பு நிற சம்ஷோபண மூன்றாவது ஆவரண சக்ரத்தில் உரைபவளால்,(இது வான வெளியில் கிழக்கு முகமாகச் செல்லும்),கணக்கிலடாங்கா அண்டங்களின் தலைவனாக விளங்கும் சங்கரனின் நாயகியாகவிளங்குபவளால்,க ச ட த ப ய ஸ ள ஆகிய எட்டு வர்கம் எனப்படும் எண்வகை வாக்குகளில் மறைவாக பொதிந்து வரங்களை அருளுபவளால்,மன்மதாதியர் என அழைக்கபடும் மனு, சந்திரன், குபேரன்,லோபாமுத்ரா, மன்மதன்,அகஸ்த்யர் ,அக்னி, சூர்யன்,இந்திரன்,சுப்ரஹ்மண்யன், பரமசிவன், தூர்வாஸர் ஆகிய பன்னிருவரால் உபாசிக்கபபட்டவளால், எட்டு தளமுடைய ஸம்ஷோபண சக்ரத்தில் வஸிப்பவளால்,வில்,அம்பு போன்ற ஆயிதங்களை கையில் தரிப்பவளால்,கருணாசமுத்ரம் போன்றாவளான கமலாம்பிகையால் நான் கடாக்ஷிக்கப்பட்டேன்.

Thursday, September 29, 2011

நவராத்ரி நாயகி 3




சிந்தூ அருண விக்ரஹாம்
இந்த நாமம் லலிதா சஹஸ்ரநாமம் தியானஸ்லோகத்தில் வருகிறது.சிகப்பான ஒளிபொருந்திய உருவம் கொண்டவள் என்ற அர்த்தம்.இந்த உலகம் சூரியனின் ஒரு பகுதியாக வெடித்துச் சிதறியாதால் உண்டானது. அதனால் உலகம் தோன்றியபோது முதலில் உண்டான நிறம் சூரியனின் கிரணமான சிகப்பு நிறம்தான்.அபொழுதே அமபாள் செம்மைத்திருமேனி உடைய உருவமாகத் தோன்றினாள்.ஏன் உருவத்தோடு தோன்றினாள்.அகிலமெங்கும் வியாபித்திருக்கும் அம்பிகைக்கு உருவம் என்ன என்றால் சொல்லுவது அரிதாகும்.அம்பிகை என்ற சொன்னவுடனே அவள் ஒரு பெண்ணாகத்தான் இருக்கக்கூடும் என்று நினைப்பது இயல்பு.ஆனால் முப்பெரும் தெய்வத்தையும் உள்ளடக்கிய அந்த பெரிய தெய்வத்துக்கு எந்த வர்ணம் எந்த உருவும் தர முடியும் ? அவள் எப்படியிருப்பாள் ? ""தாம் அக்னி வர்ணாம் தபஸா ஜ்வலந்தீம் "" என்கிறது துர்கா ஸூக்தம்.அக்னி சிகப்பாகத்தான் இருக்கும்.

அவள்தான் பெரிய தெய்வம் என்று எப்படிச் சொல்லமுடியும். மீசைகவி சொல்லுகிறான் ஒரு இடத்தில்"பெண் விடுதலை வேண்டும் பெரிய தெய்வம் காக்க வேண்டும்"அவனுக்கு பராசக்திதானே பெரிய தெய்வம் நல்ல சிகப்பு இல்லாமல் சிந்துர வண்ணம் போல உள்ள இளம் சிகப்பு நிறத்தில் தோன்றினாள்.அபிராமி பட்டரும் '" சிந்தூர வர்ணத்தினாள்

என்று கூறுகிறார். லலிதா ஸ்கஸ்ர நாமம் முழுவதிலும் அவளச் சிகப்பு வர்ணத்தில் வர்ணிக்கப்படுகிறாள்."ரக்தவர்ணா,சிதக்னிகுண்டத்திலிருந்து உருவானவள்"" தோற்றதிற்கான நிறம் கொண்டாள்.ஆதி சங்கரரும் சௌந்தர்யலகிரியில்"" ஜகத்தாத்ரிம் கருணாசித் அருணா".இந்த உலகத்தின் மீது கொண்ட கருணையினால் சிகப்புவடிவம்கொண்டாள். அபிராமபட்டர் நீலி என்று கூறி விட்டு கடைசியில் சிந்தூர வர்ணத்தினாள் என்று முடிக்கிறார். இதன் அர்த்தம் என்ன. நிறங்களை வரிசைப் படுத்தும் போது ஊதாவில் V(நீலீ) ஆரம்பித்து சிகப்பில் R முடிக்கிறோம் பட்டரும் எல்லா நிறங்களும் முடிவது சிகப்பில்தான் அதுதான் நீ என்கிற சிந்து அருண விக்ரஹம்
இன்றைய பாடல் இரண்டாவது ஆவரணமாகிய "கமலாம்பம் பஜரே" என்ற கல்யாணி ராகப் பாடல். அனேகமாக எல்லாருக்கும் தெரிந்து இருக்கும் பாடல்.மதுரை மணி அவர்கள் மிகவும் சிறப்பாக பாடியுள்ளார்.இனி பாடல்

ராகம்: கல்யாணீ             தாளம்: ஆதி

பல்லவி

கமலாம்பாம் பஜரே ரே மாநஸ
கல்பித மாயாகார்யம் த்யஜரே ..... (கமலாம்பாம்)


அனுபல்லவி

கமலா வாணீ ஸேவ்த பார்ஸ்வாம்
கம்பு ஜயக்ரீவாம் நத-தேவாம்
கமலாபுர ஸதநாம் மிருது-கதநாம்
கமநீய- ரதநாம் கமல-வதநாம் .....(கமலாம்பாம்)


சரணம்

ஸர்வாஸாபரிபூரக- சக்ர
ஸ்வாமிநீம் பரமஸிவகாமிநீம்
தூர்வாஸார்ச்சித குப்த- யோகிநீம்
துக்க த்வமஸிநீம் ஹம்சிநீம்
நிர்வாண நிஜஸுக ப்ரதாயிநீம்
நித்யகல்யாணீம் காத்யாயநீம்
ஸர்வாணீம் மதுபவிஜய வேணீம்
ஸத்குருகுஹ ஜநநீம் நிரஞநீம்
கர்வித பண்டாஸுர பஞ்ஜநீம்
காமகர்ஷிண்யாதி ரஞ்ஜநீம்
நிர்விசேஷ சைதந்ய ரூபிணீம்
ஊர்வி தத்வாதி ஸ்வரூபிணீம்.......(கமலாம்பாம்)


இந்தப்பாடலில் விசேஷம் என்ன வென்றால் கல்யாணீ ராகத்துக்கே உரித்தான ஜீவ ஸ்வரமான நீ என்ற ஸ்வரத்தை கிருதி முழுவதும் பின்னி இழைந்தோடச் செய்துள்ளார் நாதயோகி தீக்ஷதர் அவர்கள்.

ஹே மனமே திருவாரூரி குடிகொண்டிருக்கும் கமலாம்பிகையை துதி செய். இந்த மாயமான கற்பனை உலகத்தில் உன்னை துர்விஷயங்களுக்கு அழைத்துச் செல்லும் காரியங்களை விட்டு விடவேண்டுமனால் அலைமகளும் கலைமகளும் இருபக்கங்களிலும் நின்று சேவித்த வண்ணம் இருப்பவளும், வெண்சங்கை வெல்லும்  கழுத்தை உடையவளும்,தேவர்களால் பூஜிக்கப்படுபவளும்,கமலாபுரத்தில்கோயில் கொண்டுள்ளவளும், மிகவும் மெதுவாகவும் இனிமையாகவும் பேசும் தன்மையுடையவளும், மாதுளைமுத்துக்கள் போன்ற  அழகியபற்களை உடையவளும், அன்றலர்ந்த தாமரையின் மலருக்கு நிகரான முகமுடையவளுமான கமலாம்பாளை துதி செய்.
வித்யா உபசனையின் அங்கமான ஸர்வாசாபரிபூரகசக்ரத்தின் ஈஸ்வரியும்,பரமசிவனின் மனதுக்குகந்தவளும்,தூர்வாஸ மகரிஷியினால் பூஜிக்கப்பட்ட குப்த(மறந்து)யோகினியாக இருப்பவளும், துக்கங்களை அடியோடு நாசம் செய்பவளும்,அஜபபா என்ற மந்த்ர ஸ்வரூபியாக இருப்பவளும்,கைவல்யம் என்னும் உண்மையானதும் மேலானதுமான முக்திநிலயை அளிப்பவளும்,எப்பொழுதும் மங்களமாக இருப்பவளும்,காத்யாயினியாக அவதாரம் செய்தவளும்,சர்வேஸ்வரனின் பட்ட மஹ்ஷியாக இருப்பவளும்,கருவண்டுகளின் கர்மையை மிஞ்சச்செய்யும் கருங்கூந்தலைஉடையவளும், ஞானபண்டிதனான குருகுஹனை ஈன்றவளும், ஆசாபாசங்களுக்கு அப்பாற்ப்பட்டவளும், கர்வம் பிடித்த பண்டாஸுரனை வதம் செய்தவளும்,காமகர்ஷணி போன்ற தேவதைகளுக்கு சந்தோஷம் அளிப்பவளும்,விகல்பங்களற்ற சைதன்யாரூபியாக இருப்பவளும், பூ தத்வம் முதலான தத்வங்களின் இருப்பிடமாக இருப்பவளுமான கமலாம்பாவை த்யானம் செய் மனமே.

 

Wednesday, September 28, 2011

நவாராத்ரி நாயகி 2


சிந்தூ அருண விக்ரஹாம்

இந்த நாமம் லலிதா சஹஸ்ரநாமம் தியானஸ்லோகத்தில் வருகிறது.சிகப்பான ஒளிபொருந்திய உருவம் கொண்டவள் என்ற அர்த்தம்.இந்த உலகம் சூரியனின் ஒரு பகுதியாக வெடித்துச் சிதறியாதால் உண்டானது. அதனால் உலகம் தோன்றியபோது முதலில் உண்டான நிறம் சூரியனின் கிரணமான சிகப்பு நிறம்தான்.அப்பொழுதே அம்பாள் செம்மைத்திருமேனி உடைய உருவமாகத் தோன்றினாள்.என்ன  ருவத்தோடு தோன்றினாள்.?அகிலமெங்கும் வியாபித்திருக்கும் அம்பிகைக்கு உருவம் என்ன என்றால் சொல்லுவது அரிதாகும்.அம்பிகை என்ற சொன்னவுடனே அவள் ஒரு பெண்ணாகத்தான் இருக்கக்கூடும் என்று நினைப்பது இயல்பு.ஆனால் முப்பெரும் தெய்வத்தையும் உள்ளடக்கிய அந்த பெரிய தெய்வத்துக்கு எந்த வர்ணம் எந்த உருவும் தர முடியும் ? அவள் எப்படியிருப்பாள் ? ""தாம் அக்னி வர்ணாம் தபஸா ஜ்வலந்தீம் "" என்கிறது துர்கா ஸூக்தம்.அக்னி சிகப்பாகத்தான் இருக்கும்.
அவள்தான் பெரிய தெய்வம் என்று எப்படிச் சொல்லமுடியும். மீசைகவி சொல்லுகிறான் ஒரு இடத்தில்"பெண் விடுதலை வேண்டும் பெரிய தெய்வம் காக்க வேண்டும்"அவனுக்கு பராசக்திதானே பெரிய தெய்வம் நல்ல சிகப்பு இல்லாமல் சிந்துர வண்ணம் போல உள்ள இளம் சிகப்பு நிறத்தில் தோன்றினாள்.அபிராமி பட்டரும் '" சிந்தூர வர்ணத்தினாள்
என்று கூறுகிறார். லலிதா ஸ்கஸ்ர நாமம் முழுவதிலும் அவளச் சிகப்புவர்ணத்தில்தான்வர்ணிக்கப்படுகிறாள்."ரக்தவர்ணா,சிதக்னிகுண்டத்திலிருந்து உருவானவள்"" தோற்றதிற்கான நிறம் கொண்டாள்.ஆதி சங்கரரும் சௌந்தர்யலகிரியில்"" ஜகத்தாத்ரிம் கருணாசித் அருணா".இந்த உலகத்தின் மீது கொண்ட கருணையினால் சிகப்புவடிவம்கொண்டாள். அபிராமபட்டர் நீலி என்று கூறி விட்டு கடைசியில் சிந்தூர வர்ணத்தினாள் என்று முடிக்கிறார். இதன் அர்த்தம் என்ன. நிறங்களை வரிசைப் படுத்தும் போது ஊதாவில் V(நீலீ) ஆரம்பித்து சிகப்பில் R முடிக்கிறோம் பட்டரும் எல்லா நிறங்களும் முடிவது சிகப்பில்தான் அதுதான் நீ என்கிற சிந்து அருண விக்ரஹம்
நாளை இன்னுமொரு நாமத்தைப் பார்க்கலாமா?

இன்றைய பாடலைப் பார்ப்போம் ,  இந்தப்பாடல்தான் முதல் நவாவர்ணப் பாடல்   தீக்ஷதர் அவர்கள் மிகச்சிறந்த ச்ரி வித்யா உபாசகர் அதனால் அந்த வித்யாவின் கிரமங்களை அவர் அடிக்கடி உபயோகிப்பார் சில விஷயங்கள் நமக்கு புரியாமலும் இருக்கலாம் இருந்தாலும் கேட்டுவைத்தால் பின்னர் எப்போதாவது புரியலாம்

ராகம் : ஆனந்தபைரவி              தாளம்: த்ரிபுட

பல்லவி

கமலாம்பா ஸம்ரக்ஷது மாம்
ஹ்ருத்கமலாநகர நிவாஸினி.... (கமலாமப)

அநுபல்லவி

ஸுமநஸாராதிதாப்ஜமுகீ
ஸுந்தர மநாப்ரியகர ஸகீ
கமல்ஜாநந்தபோதஸுகீ
காந்தா தார பஞ்ஜார ஸுகீ..... (கமலாம்பா)

சரணம்

த்ரிபுராதி சக்ரேஸ்வரீ  அணிமாதி
ஸித்தேஸ்வரி நித்யகாமேஸ்வரி
க்ஷிதிபுர த்ரைலோக்யமோஹந
சக்ரவர்த்திநீ ப்ரகடயோகினீ ஸுர
ரிபு மஹிஷாஸுராதி மர்த்தனீ
நிகமபுராணாதி ஸம்வேதினீ
த்ரிபுரேஸி குருகுஹஜனனீ
த்ரிபுர பஞ்ஜந ரஞ்ஜனீ மது
ரிபு ஸஹோதரீ தலோதரீ
திரிபுர ஸுந்தரீ மஹேஸ்வரீ 11

கமலாம்பிகை என்னைக் காத்தருளட்டும். என் மனத்துள்ளும் கமலாபுரம் என்று அழைக்கப்படும் திருவாரூரில் கோவில் கொண்டிருப்பவள், நல்ல மனதுடையவர்களால் ஆராதிக்கப்படுபவள்,தாமரை போன்ற முகமுடையவள்,சுந்தரேச்வரரின் மனதுக்குகந்த பிரியமான் ஸ்நேகிதியாக இருப்பவள்,தாமரைப்பூவினில் அமர்ந்து இருக்கும் லக்ஷிமி தேவியின் ஆநந்தமான ஸ்துதிகளால் சந்தோஷப்படுபவள்,தரகம் எனப்படும் பிரணவாகரத்தின் மணடப்த்தில் இருக்கும் கிளிபோன்றவள் அந்த மஹிமை பொருந்திய கமலாம்பாள் என்னை ரக்ஷிக்கட்டும்.
மனித உடம்பில் இருக்கும் ஒன்பது சக்ரநிலைகளான திரிபுரா சக்க்ரம் முதல் ஸர்வாநந்தமயசக்ரம் வரை ஈச்வரியாக இருப்பவள்,அணிமாதிபோன்ற அஷ்டமாசக்திகளை அருளுபவள்,பதினைந்து நித்யா சக்த்திகளான காமேஸ்வரி நித்யா சக்தி தொடங்கி சித்ரா நித்யா சக்திவரையுள்ள அத்தனைக்கும் ஈஸ்வரியாக விளங்குபவள்,த்ரைலோக்ய மோஹந சக்ரத்தில் உள்ள பூபுரம் என்ற சக்ரமாக நிற்பவள்.யோகினிகளில் பிரகட யோகினியாக இருப்பவள்,தேவர்களுக்கு துன்பம் விளைவிக்கும் தீய சக்திகளான மகிஷாசுரன் முதலான அஸுரர்களை வதம் செய்தவள்,வேதங்களாலும் புராணங்களால் மட்டும் அறியப்படுபவள், மனம்- புத்தி- ஸித்தி போன்ற மூன்றுவகை சக்த்திகளுக்கு தலைவியாக உள்ளவள்,குருகுஹனான கார்த்திகேயனின் தாய்,திரிபுர ஸம்ஹாரத்தால் மனம் மகிழ்ந்தவள்,மது என்ற அரக்கனை அழித்த விஷ்ணுவின் ஸகோதரி,இளைத்து ஒட்டிய வயிற்றினைக் கொண்ட ஸாதோதரி( நூற்றுக்கணக்கான வயிறுகளைஉடைய சதோதரனான இமயவானின் புதல்வி என்றும் கொள்ளலாம்), திரிபுரமெரித்த விரிந்த சடைகாளையுடைய சஸிசேகரனின் மனமகிழ் சுந்தரி, மஹேச்வரி இத்தகைய பெருமைகளையுடைய கமலாம்பிகையே என்னைக் காப்பாற்று


ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷதரின் கிருதிகள் எல்லாமே ஸ்ரீ வித்யா உபாசனை மந்திரங்கள்தான் . அவருடைய கிருதிகளை பாடம் செய்வது பாடுவதும் மிகக்கடினம். முதலாவது கிருதியான இது மிகவும் விசேஷம் வாய்ந்தது.நம்மவர்களையே ஒரு கை பார்த்துவிடும். கீழே காணும் இந்த அயல்நாட்டு கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் எவ்வளவு அருமையாகப் பாடியுள்ளனர்.எடுத்த எடுப்பில் இரண்டு நிமிட ராக ஆலாபனையில் ஆநந்த பைரவிராகத்தை லக்ஷ்ணத்தை பிழிந்து கொடுத்து விடுகிறாள் அந்த அமெரிக்கப் பெண்.என்ன கம்பீரமான குரல், சுருதி சுத்தம். அதேபோல் எல்லோரும் சேர்ந்து பாடும்போது ஒரேகுரலில் ஒலிப்பது, தாளக்கட்டுப்பாடு, ..அக்ஷரசுத்தம். அட! இங்குள்ள சங்கீத வித்வான்கள் குறித்துக்கொண்டு கவனம் செய்யவேண்டும். நீங்களும் கேட்டு விட்டு என்னுடன் அனுசரித்துப் போவீர்கள் இது
சிறந்தது என்பதில்.



Tuesday, September 27, 2011

நவராத்ரி நாயகி 1


நவாராத்ரி தொடங்குகிறது. இந்ததடவை முத்துஸ்வாமி தீக்ஷதரின் நவாவர்ண தேவி கமலாம்பாளின் கீர்த்தனைகளை போட்டு தமிழிலில் விளக்கமும் போட்டு முடிந்தவரை பாடலையும் போட விநாயகனை வணங்கி ஆரம்பிக்கிறேன். முதலில் மஹகவி காளிதாஸனின் ஸ்யாமளாதண்டகத்தின் நிறைவு துதியிலிருந்து ஆரம்பம்

ஸர்வாதீர்த்தாத்மிகே
,ஸர்வ மந்த்ராத்மிகே,
 ஸர்வ தந்த்ராத்மிகே,
ஸர்வ யந்த்ராத்மிகே,
ஸர்வ பீடாத்மிகே,
 ஸர்வ தத்வாத்மிகே,
ஸர்வ சக்த்யாத்மிகே,
 ஸர்வ வித்யாத்மிகே,
ஸர்வயோகாத்மிகே,
 ஸர்வநாதாத்மிகே,
ஸர்வ சப்த்தாத்மிகே,
ஸர்வ வர்ணாத்மிகே,
ஸர்வ விஸ்வாத்மிகே,
 ஸர்வதீக்ஷாத்மிகே
,ஸர்வ ஸர்வாத்மிகே,
ஸர்வகே
 ஹே ஜகந் மாத்ருகே,
 பாஹிமாம் பாஹிமாம் பாஹிமாம்,
 தேவீ துப்யம் நமோ
தேவி துப்யம் நமோ
தேவிதுப்யம் நம:

எல்லா நீர்நிலைகளிலும் நிறைந்து இருப்பவளே,எல்லா மந்திரங்களிலும் உறைந்து இருப்பவளே,எல்லாவற்றிலும் தந்திரரூபமாக இருப்பவளே,எல்லாவற்றிலும் யந்திர ரூபமாக இருப்பவளே,எல்லா பீடங்களிலும் பூர்ணமாக இருப்பவளே, எல்லாவற்றிலும் உட்பொருளாக இருப்பவளே,எல்லா சக்திகளையையும் உள்ளடக்கியவளே ,எல்லா கலைகளையும் உணர்ந்தவளே,எல்லா யோகங்களையும் கற்றவளே,எல்லா நாதங்களிலும் இருப்பவளே,எல்லா சப்தங்களிலும் ஒலிப்பவளே,எல்லா பிரிவுகளுமாக இருப்பவளேஎல்லா, உலகத்திலும் இருப்பவளே, எல்லா உபதேசங்களிலும் பூரணமாய் இருப்பவளே,எல்லாவாற்றிலும் எல்லாமாய் இருப்பவளே,அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பவளே, அகிலமெல்லாவற்றுக்கும் தாயே,என்னைக் காப்பாற்று ! என்னைக் காப்பாற்று ! என்னைக் காப்பாற்று தேவி நீயே துணை! தேவி நீயே துணை! தேவி நீயே துணை!

 நவாவர்ண கிருதிகளை வரிசையாக இசைக்கும்போது ஆரம்பத்தில் மூன்று த்யான கிருதிகளை இசைப்பது ஒரு மரபு.முதலாவது கணபதி தியானம்

..
ராகம்:கௌள தாளம்: திரிபுட


பல்லவி


ஸிரீ மஹா கணபதி- ரவதுமாம்
ஸித்தி விநாயகோ மாதங்க முக.....
அனுபல்லவி


காமஜனக விதிந்த்ர ஸநுத
கமலாலய தட நிவாஸோ
கோமளத்ர பல்லவபதயுக
குருகுஹாக்ரஜ சிவாத்மஜ..........

சரணம்


சுவர்ணாகர்ஷ்ண விக்னராஜோ
பாதாம்புஜோ  கௌர
வர்ண வஸநாதரோ பாலசந்த்ரோ
நராதி விநுத லம்போதரோ
குவலயஸ்வவிஷாண பாஸாங்குஸோ
மோதக ப்ரகாஸ்கரோ
பவஜலதிநாவோ மூலப்ப்ருக்ருதி
ஸ்வபாவஸ் சுகதரோ
ரவிஸஹஸ்ர ஸந்நிப தேஹோ
கவிஜநனுத மூஷிகவாஹோ
அவநத தேவதா ஸமூஹோ
அவிநாஸ கைவல்ய கேஹோ .........ச்றீ



ஸ்ரீ மஹாகணபதி என்னை என்னை ரக்ஷிக்கட்டும்.சகல சித்திகளையும் அருளச்செய்யும் ஆனைமுகத்தைஉடையவர்.மன்மதனின் தந்தையாகிய விஷ்ணு மற்றும் பிரும்மா, இந்திரன் போன்ற தேவர்களால் வணங்கப்படுபவர்.திருவாரூரில் இருக்கும் கமலாலயக் குளக்கரையில் அமர்ந்திருப்பவர்.அழகுமிக்க தாமரைஇதழ் போன்ற மென்மையான பாதங்களையுடையவர்.குருகுஹனான அழகு முருகனின் சகோதரன் சிவகுமாரன்.
தங்கத்துக்குமாத்துரைத்தஉரைக்கல்லாக வடிவெடுத்த கணேசர்,தாமரைபூக்களின்மீது நடனமாடுபவர்,வெண்பட்டாடை அணிந்தவர்,தன்நெற்றியில் பிறைச்சந்திரனை தரித்து பாலசந்த்ரன் எனப் பெயர்பெற்றவர், மனிதர்களால் பெரிதும் பிரியத்துடன் வணங்கப் படுபவர்,தன்வயிற்றினில் உலகனைத்தும் அடக்கிஅதனால் பெருவயிறு படைத்தவர்,கைகளில் கருநெய்தல் மலர்,தந்தம்,பாசக்கயிறு,அங்குசாயுதம்,மோதகம்,ஆகியவற்றை வைத்திருப்பவர்,எப்பொழுதும் ஒளிப்பிழம்பாக பிரகாசிப்பவர்,பிறவிப் பெரும்கடலை கடக்க மனிதர்களுக்கு ஓடமாகி கரைசேர்ப்பவர், எல்லாவற்றிர்க்கும் முழுமுதற்கடவுளாக இருப்பவர்,வணங்கியவர்களுக்கு மங்களத்தை அளிப்பவர்,கோடி சூர்யப் பிரகாசம் போன்று ஒளிமயமாகத் திகழ்பவர்,கவிகளால் புகழப்படும் மூஞ்சூற்றினைதன் வாகனமாகக் கொண்டவர்,தேவர்களால் சூழப்பட்டு பணிந்து வணங்கப்படுபவர்,ஜீவாத்மா- பரமாத்மா உறவின் கடைசி நிலையானஐக்கியத்தை
அருள்பவர்,இப்படியெல்லாம், புகழ் பெற்ற கணபதி என்னை காப்பாற்றட்டடும்


இனி இந்த அழகான பாடலை திருமதி எம் ஸ் சுப்பலக்ஷிமி பாடக் கேளுங்கள்


அடுத்தபாடல் அம்பிகை த்யானம் பாடல்.வழிவழியாக முதலில் பாடப்படும் பாடல்.

ராகம்; தோடி                தாளம்; ரூபகம்
பல்லவி
கமலாம்பிகே ஆஸ்ரித கல்பலதிகே சண்டிகே
கமாநீயாருணாம் ஸுகே
கரவித்ருத ஸுகே மாமவ ஜகதம்பிகே......கமலாம்பிகே
அனுபல்லவி
கமலாஸநாதி பூஜித கமல்பதே பஹுவரதே
கமலாலய தீர்த வைபவே ஸிவே கருணார்ணவே....கமலாம்பிகே
சரணம்
ஸகல லோக நாயிகே சங்கீத ரசிகே
ஸுகவித்வ ப்ரதயிகே ஸுந்தரி கதமாயிகே
விகளேபர முக்த்திதாந நிபுனே அக்ஹரணே
வியதாதி பூதகிரணே விநோதசரணே அருணே
ஸ்களே குருகுஹகரணே ஸதாஸிவாந்த; கரணே
அ க ச ட த ப ஆதி வர்ணே....கமாலம்பிகே

திருவாரூரில் புகழுடன் விளங்கும் கமலாம்பிகையே உன்னைச் சரணடந்தவர்களுக்கு கற்பகக் கொடி
போன்றவளே,சண்டிகாதேவியே, கையினில் கிளியை வைத்துக் கொண்டு சிகப்பு பட்டு வஸ்த்ரம் அணிந்து அழகாக விளங்குபவளே,அகில உலக்த்துக்கும் அன்னையே என்னை காத்து ரக்ஷிப்பாய்.
 தாமரையில் தோன்றியபிரும்மா முதலியவர்களால் பூஜிக்கும் தாமரை போன்ற பாதங்களை உடையவளே,பக்தர்களுக்கு விரும்பிய வரங்களை அருளுபவளே,கமலாலயம் என்ற குளத்துக்கு சிறப்புச் சேர்ப்பவளே,சிவனுக்கு இனியவளே,கருணைகடலான கமலாம்பிகையே என்னை காத்து ரக்ஷிப்பாய்.
புவனங்களைக் காப்பவளே, இசையை விரும்பி ரஸிப்பவளே,கவிபுனையும் வரத்தை அளிப்பவளே,அழகியவளே,மாயையிலிருந்து விடுபட்டு இருப்பவளே மனிதர்களை மாயையிலிருந்து விடுபடவைப்பவளே
,முப்பிறப்பிலும் செய்த பாவங்களை போக்குபவளே, பஞ்சபூதங்களுக்கும் சக்தியை அளிப்பவளே,ஒளிபொருந்தியவளே, விதவிதாமாக ஆசனங்களை போட்டு கொலுவீற்றிருக்கும்போது விநோதமான திருவடிகளின் நிலைகளினாலழகிய தோற்றம் தரும் பாதார விந்தங்களை  உடையவளெ, இளம் சிவப்பு வர்ணமுடையவளே எல்லாக் கலைகளுக்கும் உறைவிடமானவளே,முருகனான குருகுஹனின் பிறப்புக்கு காரணமானவளே, என்றும் சதாசிவனின் உள்ளத்துள் உறைபவளே,அகார சகார முதலிய 51 அக்ஷரங்கள் வடிவாய் இருப்பவளே,ஒப்பற்ற ஆனந்தத்தின் பூரண வடிவாய் விளங்குபவளே,திருவாருரில் ஒளிர்பவளான கமலாம்பிகையே என்னைக் காத்து அருள்வாய்

இனி இந்தப் பாடலை திருமதி எம் ஸ் சுப்பலக்ஷிமி அவர்களின் குரலில் கேட்கலாம்


இன்றைக்கு லலிதா ஸ்கஸ்ரநாமத்திலிருந்து ஒரு நாமத்தின்
 அர்த்தத்தைப் பார்க்கலாமா


ரதிப்பிரியா

ரதிதேவியின் பிரியத்துக்கு உரியவள். அப்படி என்ன ரதிதேவிக்கு பிரியம் லலிதா தேவியின் மீது?.சிவனால் ஸ்ம்கரிகப்பட்டு ரதியின் கணவரான மன்மதன் சாம்பலாகிவிட்டான். ரதிதேவி அம்பாளை வேண்டி அவனை மறுபடியும் உயிர்ப்பித்து தருமாறு வேண்டினாள். அம்பாள் மன்மதனை எங்கு எந்த உருவத்தில் ஆவாஹானம் செய்யலாம் என்று தேடி சரியான இடம் கிடைக்காமல் தன்னுடைய முகத்திலேயே அவனுக்கு இடம் கொடுத்து ரதிதேவியை திருப்த்திப் படுத்தி அவளின் பிரியத்துக்கு பாத்திரமானாள். இதை ஆதிசங்கரர் சௌந்தர்யலஹிரியில் "தவமுகமிதம் மன்மத ரதம் "என்று புகழ்கிறார்


அபிராமபட்டரும் "அதிசயமான வடிவுடையாள் அரவிந்தமெல்லாம் துதிசயமான சுந்தரவல்லி துணை இரதிபதி சயமானது" என்று அதிசயப் படுகிறார். 
நாளை மீண்டும் பார்க்கலாம்