சிந்தூ அருண விக்ரஹாம்
அவள்தான் பெரிய தெய்வம் என்று எப்படிச் சொல்லமுடியும். மீசைகவி சொல்லுகிறான் ஒரு இடத்தில்"பெண் விடுதலை வேண்டும் பெரிய தெய்வம் காக்க வேண்டும்"அவனுக்கு பராசக்திதானே பெரிய தெய்வம் நல்ல சிகப்பு இல்லாமல் சிந்துர வண்ணம் போல உள்ள இளம் சிகப்பு நிறத்தில் தோன்றினாள்.அபிராமி பட்டரும் '" சிந்தூர வர்ணத்தினாள்
என்று கூறுகிறார். லலிதா ஸ்கஸ்ர நாமம் முழுவதிலும் அவளச் சிகப்புவர்ணத்தில்தான்வர்ணிக்கப்படுகிறாள்."ரக்தவர்ணா,சிதக்னிகுண்டத்திலிருந்து உருவானவள்"" தோற்றதிற்கான நிறம் கொண்டாள்.ஆதி சங்கரரும் சௌந்தர்யலகிரியில்"" ஜகத்தாத்ரிம் கருணாசித் அருணா".இந்த உலகத்தின் மீது கொண்ட கருணையினால் சிகப்புவடிவம்கொண்டாள். அபிராமபட்டர் நீலி என்று கூறி விட்டு கடைசியில் சிந்தூர வர்ணத்தினாள் என்று முடிக்கிறார். இதன் அர்த்தம் என்ன. நிறங்களை வரிசைப் படுத்தும் போது ஊதாவில் V(நீலீ) ஆரம்பித்து சிகப்பில் R முடிக்கிறோம் பட்டரும் எல்லா நிறங்களும் முடிவது சிகப்பில்தான் அதுதான் நீ என்கிற சிந்து அருண விக்ரஹம்
நாளை இன்னுமொரு நாமத்தைப் பார்க்கலாமா?
இன்றைய பாடலைப் பார்ப்போம் , இந்தப்பாடல்தான் முதல் நவாவர்ணப் பாடல் தீக்ஷதர் அவர்கள் மிகச்சிறந்த ச்ரி வித்யா உபாசகர் அதனால் அந்த வித்யாவின் கிரமங்களை அவர் அடிக்கடி உபயோகிப்பார் சில விஷயங்கள் நமக்கு புரியாமலும் இருக்கலாம் இருந்தாலும் கேட்டுவைத்தால் பின்னர் எப்போதாவது புரியலாம்
இன்றைய பாடலைப் பார்ப்போம் , இந்தப்பாடல்தான் முதல் நவாவர்ணப் பாடல் தீக்ஷதர் அவர்கள் மிகச்சிறந்த ச்ரி வித்யா உபாசகர் அதனால் அந்த வித்யாவின் கிரமங்களை அவர் அடிக்கடி உபயோகிப்பார் சில விஷயங்கள் நமக்கு புரியாமலும் இருக்கலாம் இருந்தாலும் கேட்டுவைத்தால் பின்னர் எப்போதாவது புரியலாம்
ராகம் : ஆனந்தபைரவி தாளம்: த்ரிபுட
பல்லவி
கமலாம்பா ஸம்ரக்ஷது மாம்
ஹ்ருத்கமலாநகர நிவாஸினி.... (கமலாமப)
அநுபல்லவி
ஸுமநஸாராதிதாப்ஜமுகீ
ஸுந்தர மநாப்ரியகர ஸகீ
கமல்ஜாநந்தபோதஸுகீ
காந்தா தார பஞ்ஜார ஸுகீ..... (கமலாம்பா)
சரணம்
த்ரிபுராதி சக்ரேஸ்வரீ அணிமாதி
ஸித்தேஸ்வரி நித்யகாமேஸ்வரி
க்ஷிதிபுர த்ரைலோக்யமோஹந
சக்ரவர்த்திநீ ப்ரகடயோகினீ ஸுர
ரிபு மஹிஷாஸுராதி மர்த்தனீ
நிகமபுராணாதி ஸம்வேதினீ
த்ரிபுரேஸி குருகுஹஜனனீ
த்ரிபுர பஞ்ஜந ரஞ்ஜனீ மது
ரிபு ஸஹோதரீ தலோதரீ
திரிபுர ஸுந்தரீ மஹேஸ்வரீ 11
கமலாம்பிகை என்னைக் காத்தருளட்டும். என் மனத்துள்ளும் கமலாபுரம் என்று அழைக்கப்படும் திருவாரூரில் கோவில் கொண்டிருப்பவள், நல்ல மனதுடையவர்களால் ஆராதிக்கப்படுபவள்,தாமரை போன்ற முகமுடையவள்,சுந்தரேச்வரரின் மனதுக்குகந்த பிரியமான் ஸ்நேகிதியாக இருப்பவள்,தாமரைப்பூவினில் அமர்ந்து இருக்கும் லக்ஷிமி தேவியின் ஆநந்தமான ஸ்துதிகளால் சந்தோஷப்படுபவள்,தரகம் எனப்படும் பிரணவாகரத்தின் மணடப்த்தில் இருக்கும் கிளிபோன்றவள் அந்த மஹிமை பொருந்திய கமலாம்பாள் என்னை ரக்ஷிக்கட்டும்.
மனித உடம்பில் இருக்கும் ஒன்பது சக்ரநிலைகளான திரிபுரா சக்க்ரம் முதல் ஸர்வாநந்தமயசக்ரம் வரை ஈச்வரியாக இருப்பவள்,அணிமாதிபோன்ற அஷ்டமாசக்திகளை அருளுபவள்,பதினைந்து நித்யா சக்த்திகளான காமேஸ்வரி நித்யா சக்தி தொடங்கி சித்ரா நித்யா சக்திவரையுள்ள அத்தனைக்கும் ஈஸ்வரியாக விளங்குபவள்,த்ரைலோக்ய மோஹந சக்ரத்தில் உள்ள பூபுரம் என்ற சக்ரமாக நிற்பவள்.யோகினிகளில் பிரகட யோகினியாக இருப்பவள்,தேவர்களுக்கு துன்பம் விளைவிக்கும் தீய சக்திகளான மகிஷாசுரன் முதலான அஸுரர்களை வதம் செய்தவள்,வேதங்களாலும் புராணங்களால் மட்டும் அறியப்படுபவள், மனம்- புத்தி- ஸித்தி போன்ற மூன்றுவகை சக்த்திகளுக்கு தலைவியாக உள்ளவள்,குருகுஹனான கார்த்திகேயனின் தாய்,திரிபுர ஸம்ஹாரத்தால் மனம் மகிழ்ந்தவள்,மது என்ற அரக்கனை அழித்த விஷ்ணுவின் ஸகோதரி,இளைத்து ஒட்டிய வயிற்றினைக் கொண்ட ஸாதோதரி( நூற்றுக்கணக்கான வயிறுகளைஉடைய சதோதரனான இமயவானின் புதல்வி என்றும் கொள்ளலாம்), திரிபுரமெரித்த விரிந்த சடைகாளையுடைய சஸிசேகரனின் மனமகிழ் சுந்தரி, மஹேச்வரி இத்தகைய பெருமைகளையுடைய கமலாம்பிகையே என்னைக் காப்பாற்று
ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷதரின் கிருதிகள் எல்லாமே ஸ்ரீ வித்யா உபாசனை மந்திரங்கள்தான் . அவருடைய கிருதிகளை பாடம் செய்வது பாடுவதும் மிகக்கடினம். முதலாவது கிருதியான இது மிகவும் விசேஷம் வாய்ந்தது.நம்மவர்களையே ஒரு கை பார்த்துவிடும். கீழே காணும் இந்த அயல்நாட்டு கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் எவ்வளவு அருமையாகப் பாடியுள்ளனர்.எடுத்த எடுப்பில் இரண்டு நிமிட ராக ஆலாபனையில் ஆநந்த பைரவிராகத்தை லக்ஷ்ணத்தை பிழிந்து கொடுத்து விடுகிறாள் அந்த அமெரிக்கப் பெண்.என்ன கம்பீரமான குரல், சுருதி சுத்தம். அதேபோல் எல்லோரும் சேர்ந்து பாடும்போது ஒரேகுரலில் ஒலிப்பது, தாளக்கட்டுப்பாடு, ..அக்ஷரசுத்தம். அட! இங்குள்ள சங்கீத வித்வான்கள் குறித்துக்கொண்டு கவனம் செய்யவேண்டும். நீங்களும் கேட்டு விட்டு என்னுடன் அனுசரித்துப் போவீர்கள் இது
சிறந்தது என்பதில்.
3 comments:
பெரிய தெய்வம் நம்மையும் காக்கட்டும். பாடலும் அதன் பொருளும் மிக அருமை. மிக்க நன்றி.
அற்புதமான விளக்கம். பாடல் பாடுவது மட்டும் சிரமம் இல்லை; பொருள் புரிந்து பாடுவதும் வேண்டும். என்னால் இந்த செட்டப்பில் ஒலியைக் கேட்க முடியாது. ஆகவே பாடலைக் கேட்கவில்லை.
மாமி கொலு!!னு கதைதட்டும் பொடியனாய் நம்பாத்துக்கு வந்து கிண்ணத்துல இருக்கும் சுண்டலை ஸ்வீகரிச்சுண்டேன்.
Post a Comment