அடுத்தது மஹாலக்ஷ்மி தாயார்.அதான் நீயே சொல்லிட்டே மஹா விஷ்ணுவின் மார்பெனும் மணிப்பீடமதில் அமர்ந்து மன்மதனை ஈன்ற தயார்.விஷ்ணுவதஸ்தல்ஸ்திதாம் விஷ்ணுபத்னீம்ன்னு ஆதி சங்கரரே பாடி இருக்கார். கண்ணாலே பாத்தாலே விஷ்ணு அம்சமும் மஹாலக்ஷ்மி தயாரும் தெரியும் வேறே நிருபணம்தேவையில்லை
பரமசிவன் அம்சம் வைஷ்ணவ ஸ்வாமிகிட்டேயான்னு சந்தேகம் வரலாம். பெருமாளுக்கு எந்த பத்ரத்தாலே பூஜை செய்யனும்
துளசி.
சிவனுக்கு பிரீதியாண புஷ்பம் எது
வில்வதளம்
விஷ்ணுவுக்கு வில்வதளத்தாலே பூஜை பண்ணுவாளா
மாட்டார்கள்
அப்போ வில்வதளத்தாலே பூஜை பண்ணா அந்த ஸ்வாமி சிவாம்சம் உள்ளவர்தானே
ஆமாம்
திருபதிலே மார்கழி மாசத்திலே 30 நாளும் காத்தாலே வெங்கடரமணருக்கு வில்வதளத்தாலே பூஜை பண்ணுவா அப்போ சிவாம்சமமும் இருக்குன்னு நிரூபணம் ஆகிறது
துளசி.
சிவனுக்கு பிரீதியாண புஷ்பம் எது
வில்வதளம்
விஷ்ணுவுக்கு வில்வதளத்தாலே பூஜை பண்ணுவாளா
மாட்டார்கள்
அப்போ வில்வதளத்தாலே பூஜை பண்ணா அந்த ஸ்வாமி சிவாம்சம் உள்ளவர்தானே
ஆமாம்
திருபதிலே மார்கழி மாசத்திலே 30 நாளும் காத்தாலே வெங்கடரமணருக்கு வில்வதளத்தாலே பூஜை பண்ணுவா அப்போ சிவாம்சமமும் இருக்குன்னு நிரூபணம் ஆகிறது
சிவ வைஷ்ணவ பேதமே இருக்கக்கூடாதுன்னுதான் நம்ப பெரியவா செஞ்ச முறை இது.அதுனாலதான் பரமேஸ்வர் பிரீத்தயத்ரம்ன்னு ஆரம்பிச்சு நாராணாயேதி சமர்ப்பயாமின்னு சந்தி பண்ணும்போது முடிக்கிறோம்.
சரி பார்வதிதேவி அமசம் எங்கே இருக்குன்னு பார்த்தா.சிவனை விட்டு அம்பாள் எபோதும் பிரியவே மாட்டா அது ஒன்னே போதும். ச்ரி வித்யாம் சிவவாமபாக நிலயாம்ன்னு அம்பாளை ஆதி சங்கரர் மீனாக்ஷி பஞ்சரத்னதிலே சொல்லாராறே சிவனோட உடம்புலே வலது பக்கம் இருப்பவள்.அது மாத்திரம் போறாது நீ நம்பறதுக்கு. திருப்பதி வெங்கடசலபதி கோயில்லே உண்டியல், ஸ்வாமி இருக்கிற மண்டப பிரகாரத்துலே பாத்தேன்னா மேலே நாலு மூலையிலும் சுவத்துமேலே சிம்ஹத்தோட சிலை இருக்கும் அம்பாள் கோவில்லேதான் சிம்ம வாஹனம் இருக்கும் அவள்தான் ச்ரிமத்சிம்ஹாசனேஸ்வரி.அது மாத்ரம் இல்லை அபிஷேகம் முடிஞ்ச அப்பறம் அலங்காரம் செய்யும் போது பெருமாளுக்கு வஸ்த்ரம் சாத்துவாளே பாத்தியா?
பாத்தேன்
அது என்ன வஸ்த்ரம்
பட்டு வஸ்த்ரம்
அது பட்டு மட்டுமில்லை சரியாபாத்தா தெரியும். அது மஞ்சள் நிற பட்டு புடவை. இங்கேதான் காஞ்சிபுரத்துலே தனியா தறி போட்டு நல்லி செட்டியார்தான் அனுப்பிவெக்கிறா பெருமாளுக்க்காக. அம்பாளுக்குத்தானே புடவை அலங்காரம். அதை நிரூபணம் செய்யறா மாதிரி அந்த வஸ்த்ரம்
இன்னும் ஒன்ணே ஒன்ணுதான் பாக்கி. அதான் உன்னோட(எனக்கு குல தெய்வம் திருத்தணி முருகன்) சுப்ரமண்ய ஸ்வாமி. அவரோட அம்சம் எங்கே இருக்குன்னு பாக்கலாமா. பொதுவா மலை மேலே எந்த ஸ்வாமி இருக்கும்
முருகன்
திருப்பதி மலை மேலே இருக்கிற பெருமாளும் அவர்தான் அதான் அவரோட அம்சம் இருக்கு. அருணகிரிநாதர் பாடல்கள் எல்லாம் சுப்ரமணியஸ்வாமிமேலேதான் ஆனா அதுலே அவரோட மாமாவானே விஷ்ணுவோட புராணம் நிறையா வரும் அதோட மட்டும் இல்லாம திருப்புகழை முடிக்கும்போது ஆதி அருணாசலம் அமர்ந்த "பெருமாளே"ன்னுதான் முடிப்பார்.
சுப்ரமணியஸ்வாமிக்கு திருமலையில் வெங்கடேஸ்வரன்னு பேரு. இது போதாது வேறே நிரூபணம்வேணுமா.உனக்குத்தான் சங்கீதம் ஞானம் உண்டே. பரம முருகபக்தரான முத்துஸ்வாமி தீக்ஷதர் சுத்த தன்யாசிலே ஒரு கீர்த்தனை பண்ணியிருக்காரே தெரியுமா?
தெரியும்" "சுப்ரமண்யேன ரக்ஷிதோஹம்"
அதான் அதுலே சரணத்துலே ஒரு இடம் வருமே அதைச் சொல்லு
"வெங்கடெஸ்வரேனே நாம ரூபேண"
நிறுத்து. போதுமா தீக்ஷதரே சொல்லிட்டார் சுப்ரமண்யருக்கு திருமலையிலே "வெங்கடேஸ்வர்ன்னு பேரு.
இந்த ஐந்து அம்சங்களும்தான் காரணம் கூட்டம் வருவதற்கு ஒருத்தர்சிதரிசனம் பண்ணா ஐந்துபேரை தரிசனம் பண்ண புண்ணியம் வரும்.
கதை இதோட முடியலை இனிமேதான் கிளைமேக்ஸ்.
நான் வியழக்கிழமை கிளம்பும்போது சென்னையில் என்னுடைய பேங்கிலே சீனியர் மேனேஜர் பதவிக்கு (1987) இன்டெர்வியு முடித்துவிட்டு திருப்பதி சென்று விட்டேன்சரி அவா இரண்டு பேரையும் பிரசாதம் எடுத்துண்டு கிளம்பச்சொல்லு. போகும்போதுஉங்க பாங்க் கிளைக்கு போயிட்டு போ என்று ஆர்டர்
நான் வியழக்கிழமை கிளம்பும்போது சென்னையில் என்னுடைய பேங்கிலே சீனியர் மேனேஜர் பதவிக்கு (1987) இன்டெர்வியு முடித்துவிட்டு திருப்பதி சென்று விட்டேன்சரி அவா இரண்டு பேரையும் பிரசாதம் எடுத்துண்டு கிளம்பச்சொல்லு. போகும்போதுஉங்க பாங்க் கிளைக்கு போயிட்டு போ என்று ஆர்டர்
எப்பவும் நான் மடத்துக்கு போனாலும் மடத்துலேயே ஒரு கிளை உண்டு அங்கே போய் கை கால் அலம்பிவிட்டு வஸ்த்ரம் மாத்திக்கொண்டுதான் செல்வேன் இது மஹா பெரியவாளுக்கும் தெரியும். அதன் பெயர் அப்போது "சாலைத் தெரு" என்று பெயர். இப்போது சங்கர மடம் கிளை என்று மாற்றியாகிவிட்டது.
அங்கே போனவுடன் பிராஞ்ச் மேனேஜர் விஸ்வானாதன் சார் உங்களுக்கு சென்னை ஹெட் ஆபீஸ்லேந்து போன் வந்தது உடனே உங்களை பேசச் சொன்னா போன் போட்டு எம் டி பீஏ கிட்டெ பேசினேன்.டி ஆர் சி கன்கிரஜுலேஷன்ஸ் உனக்கு சீனியர் மேனேஜர் பிரமோஷன் கிடைத்தாகிவிட்டது இப்போதான் லிச்ட் போட்டா. மறுபடியும் பெரியாவாள் கிட்டே ஓடி நமஸ்காரம் பண்னி வாயடைத்து நின்றேன். பெரியவா கேட்டா என்ன பாலாஜி அபிஷெக தர்சன பலம் கிடைச்சுடுத்தா
எனக்கு இன்றுவரை சந்தேகம் பாலஜி அபிஷேக தர்சன பலனா ?இல்லை பெரியவா தர்சன பலனா? இல்லை ஐந்து அம்ச உபன்யாச பலனா?
2 comments:
பரமேஸ்வர் பிரீத்தயத்ரம்ன்னு ஆரம்பிச்சு நாராணாயேதி சமர்ப்பயாமின்னு சந்தி பண்ணும்போது முடிக்கிறோம்.
பாலஜி அபிஷேக தர்சன பலனா ? பெரியவா தர்சன பலனா? ஐந்து அம்ச உபன்யாச பலனா?
அனைத்துபலன்களையும் பெற்ற திருப்தி பதிவை வாசித்ததும் !
ன்ன பாலாஜி அபிஷெக தர்சன பலம் கிடைச்சுடுத்தா
எனக்கு இன்றுவரை சந்தேகம் பாலஜி அபிஷேக தர்சன பலனா ?இல்லை பெரியவா தர்சன பலனா? இல்லை ஐந்து அம்ச உபன்யாச பலனா?//
எல்லாம் தான். வாழ்த்துகள். முன்னாலே கிடைச்சதுக்குத் தான். பெரியவா ஆசீர்வாதம் எல்லாம் நல்லபடியாக் கிடைச்சது.
Post a Comment