Wednesday, December 20, 2006

அனுமனைத் துதி மனமே...தினமே..

ஸ்ரீ ராம ஜெயம்
மாதவம் செய்த...
மாதவம் செய்த மாதவள் அஞ்சனை மடிதனில் மலர்ந்தவனாம்
மாதவன் ராமன் தூதுவன் என்றே மாகடல் கடந்தவனாம் ---(மாதவம்)

ராமனைப் போற்றிப் பாடிடும் நேரம் ரகசியமாய் வருவான்
கைத் தாளங்கள் போட்டு ஆனந்தமாக மனங்குளிர்ந்தே மகிழ்வான்
கண் மடல் மூடிமெய் மலர் சூடி செவி மடல் திறந்திடுவான்
நாதனின் காதை யாவும் கேட்டு விழி மழை சொரிந்திடுவான் ---(மாதவம்)

ராமனை நெஞ்சில் மாமலை கையில் சுமந்திடும் ஜெய ஹனுமான்
பீமனை அள்ளி மார்புடன் சேர்த்து அணைத்திடும் ஜெய ஹனுமான்
சந்தன வாசம் வீசிட எங்கும் வலம் வருவான் ஹனுமான்
நித்திலம் தன்னில் நித்தியம் வாழ்ந்து ஜெயம் தரும் ஜெய ஹனுமான் ---(மாதவம்)

கோமகனாக வாழ்ந்திடும் சீலன் கோயில் நாம் அடைவோம்
கோசலை ராமன் நாமத்தைப்பாடி அவனருள் வேண்டிடுவோம்
வீழ்ச்சியை மாற்றி மீட்சிகள் சேர்க்கும் பாடிடு அவன் மகிமை
வான் மழை போல பூமழை வார்க்கும் மாருதி அவன் கருணை ---(மாதவம்)

நன்றி.. ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்திப்பாமாலை இரட்டைப்பாதை சேகர்

இன்று ஹனுமத் ஜயந்தி

17 comments:

Chinnakutti said...

ஹய்யா, நான் தான் first.
அப்பாடா நீண்ட நாள் ஆசை நிறைவேறிடுசு.

காலைலயே கொஞ்சம் பக்தி பரவசதோட அவருக்கு வாழ்த்து சொல்லிட்டு தான் ஆபீஸ் வந்தேன்.

Cogito said...

My Favorite Hanuman number is " Anumanai Anu thinam ninai maname" composed by Guru Surajananda and set in Ragamalika.

The song starts majestically in Madhuvanthi Raga and the charanams are in Revathi and Sindhubhairavi.
Fantastic song .

Ms Congeniality said...

aahaa!!Wonderful :-)

First para padichitu enaku anjaneyar oda oru slokam thaan nyaabagam vandhudhu

Anjile onru petraan
Anjile onrai thaavi
Anjile onru aaraaga aariyar kaaga egi
Anjile onru petra anangaiyai kandu ayalaarooril
Anjile onrai vaithaan
Avan emmai alithu kaapaan

Enaku indha slogam romba pudikum :-)

குமரன் (Kumaran) said...

மிக நல்ல பாடல் தி.ரா.ச. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) said...

@ சின்னகுட்டி முதல் பிரைஸ் உன்க்குத்தான்.பொங்கலன்னிக்கு வா சூடா சக்கரைப் பொங்கல் தரேன்.Leash out the Hanuman in you victory will come and serve you

தி. ரா. ச.(T.R.C.) said...

@cogito வணக்கம். எனக்கும் இந்த பாடல் மிகவும் பிடிக்கும். பவனாத்மஜ என்ற பாடலும் ஹனுமான் பேரில்தான் இதை மறைந்த மஹாராஜபுரம் சந்தானம் மிக அழகாகப் பாடியுள்ளார்

தி. ரா. ச.(T.R.C.) said...

@ Ms. congeniality ஆஹா கம்பரின் பாடல் அல்லவா அது.பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆண்ட ஹனுமானின் சிறப்பைச் சொல்லும் பாடல்.வாயுவின் மகனான ஆஞ்சநேயன்,ஆகாயத்தில் தாவி,நீர் மார்கமாக இலங்கைக்குச் சென்று.பூமாதேவி பெற்றெடுத்த மண்ணின் மகளாம் சீதாதேவியைக்கண்டு,இலங்கையை நெருப்புக்கு இரையாக்கினான் இந்தப் பாடலுக்கு மற்றொரு சிறப்பு சுந்தரகாண்டத்தையே சுருக்கி நாலே வரிகளில் அளித்துள்ளார். தங்களுக்கு ஆஞ்சநேயரை மிகவும் பிடிக்கும் போல, அப்படியென்றால் ஹனுமனுக்குப் பிடித்த ராமானையும் பிடிக்க வேண்டுமே!
பாடலை நினைவு கூர்ந்ததற்கு நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) said...

@ குமரன் வருகைக்கு நன்றி.என் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் அதற்கு காரணமும் நீங்கள்தான். என்னை எழுதத்தூண்டியதே நீங்களும் உங்கள் எழுத்தின் தாக்கமும்தான்

Geetha Sambasivam said...

சுருக்கமான அதே சமயம் விவரமான பதிவு. நல்லா இருந்தது.

Geetha Sambasivam said...

@சின்னக்குட்டி, ரொம்ப நாள் கழிச்சு வரீங்கன்னு நினைக்கிறேன். உங்க பதிவு இப்போ எல்லாம் திறக்கிறதே இல்லையே? என்னை நினைவு வச்சிருக்கீங்களா இல்லையா? எல்லாம் தலை எழுத்து, ஒருத்தர் ஒருத்தராப் போய்க் கேட்க வேண்டி இருக்கு, :D
தலைவியான எனக்கு இந்த நிலைமை.
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்? :D

தி. ரா. ச.(T.R.C.) said...

@கீத மேடம் வணக்கம்.உடம்பு நல்லா ஆயிடுத்தா? நீங்க கவலையை விடுங்கள்.உங்கள் பதிவு எல்லாத்தையும் நான் படித்துக்கொண்டுதான் உள்ளேன். ஆஞ்சநேயர் ஜயந்திக்கு வந்ததுக்கு நன்றி. படமும் போட்டேன் வரவில்லை.

Chinnakutti said...

@தி.ரா.ச சார், சக்கரை பொங்கலா, உள்ளேன் ஐயா.

Chinnakutti said...

@கீதா மேடம், yes miss. இப்போ முயற்சி பண்ணுங்கஇ என் பதிவு திறக்கும்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கண் மடல் மூடிமெய் மலர் சூடி செவி மடல் திறந்திடுவான்
நாதனின் காதை யாவும் கேட்டு விழி மழை சொரிந்திடுவான்//

அருமையான வரிகள் திராச ஐயா! கண் மடல்-செவி மடல் சொல் ஆளுமை மிக அருமை!

இதை எப்படி ஹனுமத் ஜெயந்தி அன்று மிஸ் பண்ணினேன்? ஹூம்! தமிழ்த் தியாகய்யா அடுத்த பாகம் வந்து விட்டதா என்று சில நாள் பார்த்தேன்! அப்பறம் அப்படியே விட்டுப் போனது!

தனி மடலில் ஒரு அலர்ட் கொடுங்க திராச, பதிப்பித்தவுடன்! நன்றி!!

தி. ரா. ச.(T.R.C.) said...

வணக்கம் இரவி. வலிப்பதிவாளர் மாநாடு முடிந்து விட்டதா?
யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர கிருதம் ஹஸ்த காஞ்சலீம்
பாஷ்பவாரி பரி பூர்ணலோசனம்
இந்த வரிகளின் தமிழாக்கம்தான் இது

இனிமேல் தங்களுக்கு தனி மடல் அனுப்புகிறேன்

இலவசக்கொத்தனார் said...

பாருங்க நமக்கும் இந்த பதிவு வந்தது தெரியாமப் போயிடிச்சி, இனி ஒரு மடல் குடுங்க சாமி.

தி. ரா. ச.(T.R.C.) said...

@இலவசம் வருகைக்கு நன்றி இனி மடல் தருகிறேன்