Monday, October 30, 2006

இங்கே... போயிருக்கிறீர்களா... (2).

"ஏம்பா கணேஷ் வீட்டுக்கு எந்தப்பக்கம் போனோம்" என்று திரும்பிப் பார்த்தால் நம்ப ஆளுக்கு பயங்கர வரவேற்பு." ஹாய் கணேஷ் எப்போ வந்தே" என்று பஸ் ஸ்டாப்பில் ஒரு பெண் கணேஸனை கலக்கிக்கொண்டு இருந்தாள். நான் ஓரமாக முன் கை நீண்டால்தான் முழங்கை நீளமுடியும் என்று நின்றேன். கணேஷும் சீக்கிரமே கணக்கை முடித்துக்கொண்டு ஒரு ஆட்டோ பார்த்து ஊருக்குள் போனோம் நானும் அவனும். போகும் வழியெல்லாம் கான்கிரீட் ரோடு போட்டு இரண்டு பக்கமும் ஒரே மாதிரி வீடுகள்.நேராக வீட்டிற்கு சென்றோம்.
வீட்டில் அம்பியின் அப்பாவும் அம்மாவும் நல்ல வரவேற்பு,என்னை அறிமுகபடுத்திக்கொள்ளலாம் என்று நினைத்தால் ஏற்கனவே அம்பி என்னைப்பற்றிய எல்லாவிவரங்களையும் சொல்லியிருந்தான்.குளித்துவிட்டு,டிபன் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு கிளம்பினோம்.கல்லிடைகுரிச்சிக்கு வந்தேன் என்று சொன்னேனே ஒழிய எதற்கு என்று சொல்லவே இல்லயே. புராட்டாசி மாதம் வரும் எல்லா சனிக்கிழமைகளிலும் அங்குள்ள ஆதி வராக ஸ்வாமிக்கு கருடோத்ஸ்வம் மிக விசேஷமாக நடக்கும். நாங்கள் சென்ற அன்று திருநெல்வேலியில் உள்ள ஒரு பிரபல சிமிட் கம்பெனியின் மண்டகப்படி.
கோவிலுக்குப் போகும் வழியெல்லாம் கணேஷுக்கு ஒவ்வெரு வீட்டு வாசல் படியிலும் மண்டகப்படி.தேங்கா உடைத்து கற்பூரம் காட்டாத குறைதான்.கணேசனும் ஒவ்வொரு வீட்டு வாசல் படியுலும் பஞ்சாயித்து போர்ட் குப்பைவண்டி மாடு தானாகவே நின்னு போவது மாதிரி குசலம் விசரித்துக்கொண்டு வந்தான்,"எலே கணேஷு எப்படா வந்தே,பங்களுர்லே படிக்கிறயா?இல்லே வேலைக்கு போறயா? இப்படியெல்லாம் விசரித்தது யார் என்று நினைக்கிறீர்கள்,பத்துவயது பையன்,வயசுப்பொண்கள்,மாமக்கள்,80 வயது பாட்டிகள்,கணேசனுக்கும் பெருமை வேலைக்குச் சேர்ந்தபின் முதல்தடைவையாக ஊருக்கு வந்திருக்கிறான்.சயங்காலம் நடக்கப்போகும் கருடசேவைக்கு இது ஒரு 'கர்டன் ரெய்சர்' மாதிரி இருந்தது.
ஒரு வழியாகக் கோவிலுக்குள் சென்றோம். அங்கு நுழைந்தவுடனே ஒரு 10/15 பெருசுகள் கணேசனை கட்டி அணைத்துகொண்ட காட்சி கண்கொள்ளா காட்சி. ஸ்வாமிக்கு அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்து கற்பூரம் காண்பித்தார்கள்.நல்ல தரிசனம்.வெளியே வந்து பிரசாதம் வாங்கிக்கொண்டு திரும்பிப் பார்த்தால் நம்ம ஆளை மறுபடியும் காணவில்லை. பார்த்தால் அங்கே ஒரு பெண் ஆஞ்சநேயரை சுற்றிக்கொண்டு இருந்தாள். நம்ம ஆள் அவளைச் சுற்றிக்கொண்டு இருந்தான் ."சார் என்னோட காலேஜிலே படித்தவள்" என்றான்."சரி.... சரி".... என்றேன். முன்பு சொன்னதை வாபஸ் வாங்கிக்கிறேன் "அம்பியோட தம்பியேதான் இவன் சந்தேகமே இல்லை".
திரும்பிப் போகும்போதும் கிட்டதட்டே அதே மண்டகப்படிதான் வீடு போய் சேரும்வரை. என்ன இந்தத் தடவை எல்லாம் அவன் வயசுப் பசங்கள்."எலே மாப்ளே எங்கேடா வேலை...என்னா சம்பளம் ..இத்யாதி இத்யாதி .....தொடரும்

15 comments:

குமரன் (Kumaran) said...

எங்க ஊருக்கு உங்களை கூப்பிடலாமா வேணாமான்னு யோசிச்சுகிட்டு இருக்கேன் இந்தப் பதிவைப் படிச்ச பிறகு. :-)

இலவசக்கொத்தனார் said...

யப்பா சாமி, எங்க ஊரு பேரை இப்படி போட்டு வதைக்கறீங்களே. அது குரிச்சியும் இல்லை குச்சியும் இல்லை.

கல்லிடைக்குறிச்சி.

கல்லால் ஆன மலைகளால் சூழப்பட்ட கிராமம் என்று பொருள். வந்துட்டாங்கப்பா. இதுக்கெல்லாம் தாமிரபரணி தண்ணி உள்ள போயிருந்தாத்தானே...

துளசி கோபால் said...

'தரிசனம்' நல்லா ஆச்சா?:-)

ambi said...

//ஒவ்வொரு வீட்டு வாசல் படியுலும் பஞ்சாயித்து போர்ட் குப்பைவண்டி மாடு தானாகவே நின்னு போவது மாதிரி //
ஹஹா! செமயா வாரி இருக்கீங்க!

//நம்ம ஆள் அவளைச் சுற்றிக்கொண்டு இருந்தான் //

அப்படியா? இன்னிக்கி என்ன? ஏது?னு விசாரிக்கிறேன். :D

//"அம்பியோட தம்பியேதான் இவன் சந்தேகமே இல்லை//
டோட்டல் டேமேஜ் பண்ணியாச்சு. :)

நகைச்சுவை ததும்ப எழுதி இருக்கீங்க சார்! :)

தி. ரா. ச.(T.R.C.) said...

ice hae left the following comment

Wonderful lively description of ur trip..Azhaga eludi irukingale..Romba
nala
new post e kanam..Romba busy a??

thank you very much

Geetha Sambasivam said...

"ஸேம்சைட் கோல்" போட்டுப் போட்டுப் பழக்கம் போல் இருக்கு. குமரன் சொல்ற மாதிரி எங்க ஊருக்குக் கூப்பிட யோசிக்க வேண்டியது தான். எல்லாம் தாமிரபருணித் தண்ணீரை ஒரு 2 நாள் குடிச்சதின் விளைவுன்னு நினைக்கிறேன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@கீதா மேடம் சுறுசுறுப்புக்கு மொத்த குத்தகையும் நீங்கதான்.எவ்வளவு பெரிய பதிவு போடுகிறீர்கள் இதில் நீங்கள் வடக்கு என்றால் நான் தெற்கு. தப்பாக நினைக்காதீர்கள் நீங்கள் வடக்கில் இருக்கும் கைலாச மலையைப் பற்றி எழுதுகிறீர்கள் நான் தெற்கில் இருக்கும் பொதிகை மலையைப் பற்றி எழுதுகிறேன்

தி. ரா. ச.(T.R.C.) said...

@கொத்ஸ் ஊரின் மீது அவ்வளவு பக்தியா?திருத்திக்கிறேன்.அண்ணே இந்த கட்டை காஷ்மீரிலிருந்து கன்யாகுமரிவரை,சூரத்திலிருந்து கௌஹத்திவரை எல்லா தண்ணியையும் குடித்த உடம்பு இது.நீங்க பிறப்பதற்கு முன்பே (1969)தாமிர பரணி தண்ணியை குடித்தவன்

தி. ரா. ச.(T.R.C.) said...

@துளசி கோபால் . டீச்சர் தரிசனம் நல்ல கிடைத்தது.கொஞ்சம் பொறுங்க நீங்களும் கண்குளிர பார்க்கலாம் நாளைக்கும் வந்து பாருங்க.

தி. ரா. ச.(T.R.C.) said...

Thank you very much for your comment. happy to note that you are also reading my blog.visit when ever you get time

தி. ரா. ச.(T.R.C.) said...

@கீதா மேடம் பயப்படாதீங்க. அப்படியெல்லாம் கூப்பிட்டாலும் வரமாட்டேன்.ஐந்து வருஷம் பையன் யு.ஸ் லிருந்தபோது கூப்பிட்டபோது போகாதவன் இந்த திராசா,இப்போகூட சிட்னிக்கு அழைப்பு இருக்கிறது பேரனுடன் போவதற்கு. அம்பியின் அன்புக்கு கட்டுப்பட்டுத்தான் போனேன்..

குமரன் (Kumaran) said...

தி.ரா.ச. நான் எங்க ஊருன்னு சொன்னது மதுரையம்பதியை. கீதாக்காவும் (கீதாம்மா?) மதுரையைத் தான் சொன்னாங்கன்னு நினைக்கிறேன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@குமரன் நான் சொல்லுவதும் மதுரைதான்.அங்கேயே ஏற்கனவே ஒரு மூன்று வருஷம்1971.- 74 இருந்தவன் தான்.எனக்கு பிடித்த ஊர்.தலவியை விளிக்கும் போது மட்டும் ஏன் கையில் தடுமாற்றம்.

Geetha Sambasivam said...

@குமரன், என்னை அம்மான்னே கூப்பிடலாம், நான் சொன்னதும் மதுரையைத் தான். நீங்க புரிஞ்சுக்கிட்டீங்க, சார் புரிஞ்சுக்கலை. மத்தபடி, நானும் ஓரளவு ஆன்மீகம் பத்தி எழுதறேன், குமரன், முடிஞ்சப்போ வந்து பாருங்க. உங்க அளவு என்னாலே முடியாது.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

திராச ஐயா

குமரன், கீதாம்மா சொல்றாங்கன்னு நீங்க எங்க ஊர் பக்கம் வராம இருந்துடாதீங்க! உங்கள் வரவு நல்வரவே! அப்ப தானே அடியேன் பால லீலாப் பிரதாபங்களை எல்லாம் நீங்க உங்க நடையில் அருமையா வெளிக் கொணர்வீங்க?
அதை இன்னொரு காதல் காவியாமாப் போட இதை விட ஒரு சான்ஸ் கிடைக்குமா?
:-)))

சென்னைக்கே நான் எப்படி வர்றதுன்னு கேட்காதீங்க; அடியேன் பூர்விக ஊர், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகில் உள்ள வாழைப்பந்தல் எனும் அழகிய சிற்றூர். பச்சையம்மன் கோவில் மிகப் பிரபலம்; ஆர்க்காடு, ஆரணி வழியாகவும் வரலாம்!