Sunday, October 29, 2006

இங்கே... போயிருக்கிறீர்களா....

எனது அத்யந்த சிஷ்யனும், எனது அன்புக்கும் ஆசிக்கும் உரிய,பால்வடியும் முகம் கொண்ட அம்பியின் அழைப்பை ஏற்று கல்லிடகுறிச்சிக்கு விரைந்தேன் இந்த மாத தொடக்கத்தில்.மேலே படியுங்கள்........

திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷ்னலில் ஒருவர் ஸெல்போனில் பேசிக்கொண்டு இருக்கிறார்"டி.ஆர்.சி. சார் எங்கேஇருக்கீங்க? பின்னால் ஒருவர் அவர் தோளைத்தட்டி "கணேஷ் இப்படித் திரும்பி பார் இங்கேதான் இருக்கேன்" "சார் நீங்க இங்கேயா இருக்கீங்க,என் பஸ் கொஞ்சம் லேட் வாங்க போவோம் கல்லிடைகுறிச்சிக்கி"

கணேசனைப் பற்றி சில வார்த்தை. களைததும்பும் கள்ளம் கபடு இல்லாத முகம்,அபரிமிகுந்தபக்தி,அதனால் விளைந்த பணிவு,எம்பத்திஐந்து வயது பெரியவர் முதல் எட்டுமாத குழந்தை வரை எல்லோராலும் விரும்பப்படும் பெற்றோரிடத்தில் மரியதையும் அன்பும் உள்ள நல்ல பையன்.இத்தனை நல்ல குணங்கள் இருந்தாலும் குறை ஒன்றுமில்லை. அம்பியின் தம்பி மாதிரியே இல்லை
ஊருக்கு வெளியே இருந்த புதுப் பஸ்டாண்டுக்கு வந்து பாபநாசம் செல்லும் பஸ்சில் ஏறி உட்கார்ந்து கொண்டோம். வழிநெடுகிலும் பச்சைப்பசேலென்று நெல் வயல்களும்,வாழைத்தோட்டங்களும்,மலையும் மலைச்சார்ந்த இடமும் கண்ணுக்கு ரம்யமாக இருந்தது.சிமிட்டுச்சிறையில் இருந்த என்போன்றவர்களுக்கு ஏதோ பட்டிக்காட்டான் மிட்டாய்க்கடையைப் பார்த்தால் போலிருந்தது.

"சார் ஊர் வந்தாச்சு இறங்குங்கோ" கணேசன் என்னை மீட்டுக்கொண்டு வந்தான்.கல்லிடையில் முதல் முதலாக கால் வைத்தேன்.அந்த ஊரைப்பற்றி ஒன்றுமே தெரியாது ஏதோ அப்பளாத்துக்கு பேர்போனது என்றுதான் நினைத்தேன்.நான் நினைத்தெல்லாம் தவறு என்று தெரிய ரெண்டுநாள் ஆயிற்று.மெதுவாக ஊருக்குள் செல்ல ஆரம்பித்தோம்......தொடரும்

19 comments:

Prasanna Parameswaran said...

aaga ingeyum oru kadhaiyalla nijam start ayiduchu pola irukku! svarasyama pogudhu thodarungal! :)

வல்லிசிம்ஹன் said...

அம்பிக்குத் தம்பி மாதிரியே தெரியலையா:-)
எல்லாம் எங்க திருநெல்வேலி அம்பாசமுத்திரம் ,தாமிரபரணி மகிமை.
அந்தக் குழந்தைக்கு(கணேசன்) வாழ்த்துகள்.
அடுத்த பதிவை எதிர்பார்க்கிறோம்.

Cogito said...

I feel like reading a devan style prose.Great subtle humor. Looking fwd to the next post !

ambi said...

//எனது அத்யந்த சிஷ்யனும், எனது அன்புக்கும் ஆசிக்கும் உரிய,பால்வடியும் முகம் கொண்ட அம்பியின்//

அடடா! உண்மையை உரக்க சொன்னதுக்கு ரொம்ப நன்றி ஹை! :)


//கணேசனைப் பற்றி சில வார்த்தை..........//
ஏற்கனவே ரூம்ல அவன் ஆட்டம் ஜாஸ்தியா இருக்கு, நீங்க வேற ஏத்தி விட்டாச்சா? :D

//அம்பியின் தம்பி மாதிரியே இல்லை
//
அதானே! அவன் கொஞ்சம் என்ன விட சாது. :)

இலவசக்கொத்தனார் said...

அட உங்க பதிவு தமிழ்மணத்தில தெரியுதே. எங்க ஊர் பத்தி எழுத ஆரம்பிச்ச நேரம். உங்களுக்கு இன்னும் என்னென்ன நன்மையெல்லாம் விளையப் போகுதோ! :)

துளசி கோபால் said...

அட! நானும் கல்லிடைக்குறிச்சின்னாலெ 'அப்பளம்'ன்னுதான் நினைச்சேன்.
இங்கே ஒரு தோழி வீட்டுக்கு வந்த சொந்தம் கல்லிடைக்குறிச்சிக்காரர்தான்.
அவர்தான் ஊர்ப்பெருமையை எங்கிட்டே அப்ப சொன்னார்.

ம்.. சொல்லுங்க, அப்புறம்?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஆகா... திராச ஐயா
கல்லிடைக்குறிச்சியில் அரட்டை அரங்கமா? களை கட்டப் போகிறது என்று சொல்லுங்கள்!

Geetha Sambasivam said...

சிஷ்யனைப் பத்தி எழுத ஆரம்பிச்சதும் சுறுசுறுப்பா எழுதறீங்க போல் இருக்கு, அடுத்ததைப் பார்க்கிறேன். அப்புறம் விமரிசனம்.

தி. ரா. ச.(T.R.C.) said...

வணக்கம் இந்தியன் ஏஞ்சல். உள்ளது உள்ளபடியே எழுதுகிறேன் எனக்குத்தெரிந்த அளவு

தி. ரா. ச.(T.R.C.) said...

வல்லி அம்மா வருக.தாஅமிரபரணி தண்ணீர் அல்ல அது அதுக்கும் மேலே தாமிர அமிருத பரணி அது.கணேசன் நல்ல அண்ணனின் நல்ல தம்பி.

தி. ரா. ச.(T.R.C.) said...

@காகிடோ தங்களுக்கும் பிடித்ததற்கு நன்றி.தங்கள் வலைப்பதிவில் நால்வகைச்சுவையும் இருக்கும் அதான் இதில் நகைச்சுவையைச் சேர்த்தேன்

தி. ரா. ச.(T.R.C.) said...

@வேதா எல்லாம் நீங்கள் பார்த்ததுதானே உங்களிடம் பொய் சொல்ல முடியுமா.இது அம்பிக்கு ஆப்பு இல்லை காப்பு

தி. ரா. ச.(T.R.C.) said...

@ அம்பி சந்தோஷப்படாதே இனிமேதான் வரப்போகுது உனக்கு ஆப்பு.கணேஸனிடம் உன் பாச்சா பலிக்காது. அவன் விவரமானவன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@கொத்ஸ் அவசரப்படாதே என்னவோல்லாம் நடக்கப்போகிறதோன்னு சொல்லு சரி.இத்தனை நாளா என் பதிவில் தமிழ்மணம் வீசியது இப்போதான் தெரிய ஆரம்பித்து இருக்கிறது

தி. ரா. ச.(T.R.C.) said...

@அட டீச்சரே நம்ப பதிவுக்கு வந்தாச்சா.நல்ல ஊர்தான் கல்லிடைக்குறுச்சி நீங்க ஊம் கொட்டிக்கேக்கிறது எனக்கு பெருமை

தி. ரா. ச.(T.R.C.) said...

@கண்ணபிரான் நீங்கள் பெரிய கருட சேவையைப் பற்றி எழுதினால் நான் சின்ன சேவையைப் பற்றி எழுதுகிறேன்,ஏதோ எழைக்குத் தகுந்த எள்ளுருண்டை.

தி. ரா. ச.(T.R.C.) said...

@கீதா மேடம் சுறுசுறுப்புக்கு மொத்த குத்தகையும் நீங்கதான்.எவ்வளவு பெரிய பதிவு போடுகிறீர்கள் இதில் நீங்கள் வடக்கு என்றால் நான் தெற்கு. தப்பாக நினைக்காதீர்கள் நீங்கள் வடக்கில் இருக்கும் கைலாச மலையைப் பற்றி எழுதுகிறீர்கள் நான் தெற்கில் இருக்கும் பொதிகை மலையைப் பற்றி எழுதுகிறேன்

Geetha Sambasivam said...

இரண்டுமே சிவன் சம்மந்தப்பட்டது தான் சார், பொதிகையில் (தூரதர்ஷன் இல்லை) :D சிவன் தன் கல்யாணக்கோலத்தைக் காட்டினார் அகத்தியருக்கு என்பதாக ஐதீகம். அப்புறம் "ஓம் நமச்சிவாயா" பக்கம் திரும்பிப் பார்க்கக் கூட பயப்படறீங்க போல் இருக்கே! :D

தி. ரா. ச.(T.R.C.) said...

@கீதா மேடம் நீங்கள் கூறுவது 100% உண்மை.இரண்டுமே சாம்பசிவத்தைப்பற்றியதுதான்.அதெப்படி நமச்சிவாயத்தை மறக்க முடியும் இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காததாயிற்றே அது. வருகிறேண்.