Friday, October 27, 2006

கோபுர தரிசனம்..... கோடி புண்ணியம்...


தமிழ்த் தியாகய்யா திரு.பாபநாசம் சிவனுடைய பாடல்கள் எல்லோருக்கும் பிடிக்கும்.மிக எளிமையான பக்தி பாவம் ததும்பும் பாடலகளைத் தமிழ் உலகுக்கு தந்தவர் அவர்.சினிமாத்துறையிலும் கொடிகட்டிப் பறந்து "மன்மத லீலயை வென்றார் உண்டோ", "ராதே உனக்கு கோபம் ஆகாதடி",போன்ற பாடல்களைத் தந்தவர்.அவர் எழுதிய பாடல்கள் பலவற்றில் எனக்கு பிடித்தபாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று.

ராகம்= ச்ரிரஜ்ஜனி

காணவேண்டாமோ இரு கண்ணிருக்கும் போதே ஐய்யனின் விண்ணுயர் கோபுரம்......(காண)

வீணில் உலகைச் சுற்றிச் சுற்றி வந்தால் மேதினி போற்றும் சிதம்பர தேவனை.....(காண)

வைய்யத்திலே கருப்பையுள்ளே கிடந்து நைய்யப் பிறாவாமல் ஐயன் திரு நடனம்.....(காண)

ஓட்டைச் சடலம் ஒடுங்க வெற்றெலும்புக் கூட்டிலிருந்து உயிர் ஒட்டம் பிடிக்கும் முன்..... (காண)

இந்தப் பாடலின் ஒலி வடிவம் கேட்க கிளிக் செய்யவும் இங்கே">

25 comments:

இலவசக்கொத்தனார் said...

நல்ல பாட்டுங்க. நல்ல ராகம்.

//வைய்யத்திலே கருப்பையுள்ளே கிடந்து நைய்யப் பிறாவாமல்//

இந்த வரி மட்டும் கொஞ்சம் விளக்குங்களேன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@இலவசம் இதோ எனக்கு தெரிந்த் வரை விளக்கம் சொல்லுகிறேன்.பாக்கியை எனது சிஷ்யன் "ஷண்மதச் செம்மல்" கண்ணபிரான் பார்த்துப்பான்.
வைய்யத்திலே கருப்பையுள்ளே கிடந்து நைய்யப் பிறாவாமல் ஐயன் திரு நடனம்.....(காண)

இந்த உலகத்திலே மறுபடியும் மறுபடியும் தாயின் கருப்பையிலே கிடக்க வைத்து பின்பு பிறக்க வைக்காமல் இருக்க ஐயன் திரு நடனம் வாழ்க்கையில் ஒருதரமாவது சிதம்பரத்தில் காணவேண்டும்.இன்னொரு பாட்டில்"மறுபடியும் கருவடையும் குழியில் என்னைத் தள்ள வேண்டாம் தூக்கிய திருவடி சரணம் என்று நான் நம்பி வந்தேன்" என்று பாடுகிறார். "நைய்ய" என்பதின் அர்த்தத்தை அங்கு தருகிறார்

நன்மனம் said...

நல்ல பாடல்.

G.Ragavan said...

மிகவும் நல்ல பாடல் தி.ரா.ச. பாபநாசம் சிவனின் பாடல்கள் ஒவ்வொன்றும் எளிய தமிழில் சிறப்பாக இருக்கும். இதைப் பாடியவரும் சொற்களின் அழகைக் குலைக்காமல் சிறப்பாகப் பாடியிருக்கிறார்.

கொத்ஸ், "யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்" என்கிறார் வள்ளுவர். எதையெல்லாம் நீங்கினோமோ அதெல்லாம் நமக்குத் துன்பம் தராதாம். இப்பொழுதூ நாம் படும் துன்பங்களுக்கெல்லாம் காரணம் நமது பிறப்பு. அதனால்தான் "பிறவாத வரம் வேண்டும்" என்கிறார்கள் பெரியோர்கள். பிறவா இறவாப் பெம்மான்களான சிவனும் அவன் மகனும் அந்தப் பெருமையை நமக்களிக்க வல்லார் எனச் சைவம் சொல்கிறது.

பிறப்பு என்பது வேதனையோடுதான் தொடங்குகிறது. பத்து மாத இருட்டறை அடைப்பு. அங்கேயே கழித்தல். பிறக்கும் பொழுதும் குறுகிய வழியில் நெருக்கிப் பிறத்தல். பிறந்ததும் அழுகைதான். அப்படி அழுவதால் மூச்சு சீராகிறது என்று மருத்துவம் கூறுகிறது. சரி. அழுவதற்கு பதிலாக சிரிப்பதனால் மூச்சு சீராகிறது என்று இருந்திருக்கலாமே! இல்லையே! ஆகையால் முதலிலேயே கோணல். பிறகென்ன முற்றும் கோணல்தான்.

இப்பொழுது புரிகிறதா? பிறவிப் பெருங்கடல் நீந்த வேண்டிய காரணம்?

ambi said...

//ஓட்டைச் சடலம் ஒடுங்க வெற்றெலும்புக் கூட்டிலிருந்து உயிர் ஒட்டம் பிடிக்கும் முன்.//

அருமையான வரிகள்.
"காதறுந்த ஊசியும்....."
பட்டினாத்தார் பாடல் வரிகளை நினைவு படுத்துகிறது.

மிக்க நன்றி... கொஞ்சம் சுறுசுறுப்பாக பதிவுகள் போட்டால் நன்றாக இருக்கும். தினமும் மொக்கை பதிவுகளையே படித்து படித்து போரடிக்கிறது.

Disclaimer: நான் பொதுவாக தான் சொன்னேன். யாரையும் குறிப்பிட வில்லை. :)

தி. ரா. ச.(T.R.C.) said...

@நன்மனம் வருகைக்கு நன்றி.நீங்களும் வீட்டில் உள்ளவர்களும் நலமா.அநன்யா சிந்ததனையாகவே இருக்கிறீர்களா

தி. ரா. ச.(T.R.C.) said...

@ஷண்முகச் செம்மல் ராகவன் வருகைக்கும் மேலான விளக்கத்திற்கும் நன்றி.உண்மைதான் இறப்பைவிட பிறப்புதான் மிகவும் கஷ்டம்.இந்த யாதனின் குறலில் ஒரு அதிசயம் இருக்கிறது.அதை பின்பு கூறுகிறேன்.

கீதா சாம்பசிவம் said...

உங்கள் பாடலும் திரு ராகவனின் விளக்கமும் நன்றாக இருந்தது. "ஓட்டைச் சடலம் ஒடுங்க வெற்றெலும்புக் கூட்டிலிருந்து உயிர் ஓட்டம் பிடிக்கத்தானே" வாழ்வதே? ஆனால் அதிலும் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுவோம். ரொம்பவும் நன்றி, பாடலைக் கொடுத்ததற்கும், மிக நல்ல விளக்கங்களைக் கொடுத்த திரு ராகவனுக்கும்.

கீதா சாம்பசிவம் said...

மற்றபடி நான் தினமும் எல்லாருடைய பதிவையும் ஒரு முறை பார்ப்பேன். ஆகவே புதுப்பதிவு போட்டால் எனக்குத் தெரிந்து விடும். இருந்தாலும் தகவலுக்கு நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) said...

@அம்பி நீ சொல்லரது கரெக்ட்தான். காதற்ற ஊசியும் வாரதுகாண் கடைவழிக்கே அது மாத்திரம் அல்ல "அம்பியின் திருநெல்வேலி அல்வாவும் வாரதுகாண் கடைசிவரை"என்ன பொற்கொடி சரிதானே

தி. ரா. ச.(T.R.C.) said...

@கீதா மேடம் வாங்க.உங்களுக்கு தெரியாதது எதுவுமே கிடையாது எனக்கு தெரியும். இருந்தாலும் எது பண்ணாலும் தலைவிக்கு தெரிவிக்க வெண்டியது தொண்டனின் கடமை அல்லாவா அதான்.
நீங்க சொல்லறதும் கரெக்ட் தான் பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தை நன்றாக வழலாம் என்கிறீங்க.சரிதான் ஆனா அதுலேதாங்க பிரச்சனையே.

ambi said...

//அம்பியின் திருநெல்வேலி அல்வாவும் வாரதுகாண் கடைசிவரை"//
வாங்கி குடுத்து விட்டேனே அல்வா? :)//உங்களுக்கு தெரியாதது எதுவுமே கிடையாது எனக்கு தெரியும். //

ஹஹா! இது தான் வஞ்ச புகழ்ச்சி அணியா? பலே! பலே!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இனிக்கும் தமிழ் இசைப்பதிவு திராச.
பாடுவது சஞ்சய் சுப்ரமணியமா? யாராய் இருந்தாலும் சொற்களை நடுவில் வெட்டாது சுவையாகவே பாடுகிறார்கள்; முகப்பில் கபாலி கோபுரம் படமும் அழகு!

நேற்று, அடியேனுடைய சஷ்டிப் பதிவில், "கண்ணுற்றதே" என்பதற்கு விளக்கம் கொடுத்த தாங்கள், இன்று "இரு கண்ணிருக்கும் போதே ஐய்யனின் விண்ணுயர் கோபுரம், காணவேண்டாமோ" என்று அந்தக் கண்ணை நல்வழிப் பாதையில் இட்டுச் செல்கிறீர்கள்; உம் நடக்கட்டும், நடக்கட்டும்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

கொத்ஸ், தங்கள் வினாவிற்கு, ஜிரா அருமையான விளக்கம் தந்து விட்டார்; "கருப்பை/கருவறை" என்று வந்ததனால் இதோ சற்றே மேலதிகச் சிந்தனை.
"நையப் புடைத்தல்" ன்னு சொல்றோமே, பெரும்பாலும் தலையில் அடித்துக் கவிழ்ப்பதே இந்த "நையப் புடைத்தல்".
"நைய்யப் பிறாவாமல்" - பழ வினைகள் எல்லாம் ஒன்று கூடி நம் தலையில் அடித்து, தலை விதி எழுதி, கருப்பைக்கு உள்ளேயே நம்மைக் கவிழ்த்து விடுகின்றன;
(குழந்தை தலையும் பெரும்பாலும் கவிழ்ந்து, தலை கீழாகத் தான் பிறக்கிறது; கருவறையிலும் தலை கீழ் வாசம் தான்)
வெளி வரும் போது "சடம்" எனும் காற்று சூழ்ந்து அனைத்தையும் மறக்கச் செய்கிறது!

கருப்பையுள்ளே கிடந்து நைய்யப் பிறாவாமல் = இப்போது பொருத்திப் பாருங்கள்; கருப்பையில் இடம் இல்லாமல், மிகவும் ஒடுங்கி இருந்து, வெளியே வரும் போது, தலையிலே நையப் புடைக்கப்பட்டு, கவிழ்க்கப்பட்டு வருகிறோம்! இது தேவையா?
அதனால் தான் இன்னொரு முறை, இந்த மாதிரி அடி வாங்காது, நடனத்தில் ஐயனின் (திரு)அடி வாங்கி, உய்ய கண்களைப் பணிக்கிறார்!
இறைவன் புகழ் கேள் என்று காதைச் சொல்லலாமே; எதற்கு கண்ணைச் சொன்னார்?
கண் தான் கருவில் முதலில் தோன்றி வளர்ச்சி அடையும் உறுப்பு என்கிறார்கள்; ஆக எல்லா distraction உறுப்புகளுக்கும் (புலன்களுக்கும்), கண் தான் அண்ணா! அதனால் தான் அங்கிருந்து ஆரம்பிக்கிறார்.

நம் கோயில் மூலஸ்தானம் கூட கருவறை/கர்ப்ப க்ருஹம் என்று தான் சொல்கிறோம்; குறுகலாய், வெளிச்சமே இல்லாமல், வேர்த்து வழிந்து...ஏன்? இன்னொரு பதிவில் சொல்கிறேன். (இப்போதெல்லாம், ஃபோகஸ் லைட், :பேன், சலவைக்கல் என்று கருவறை போலவே இருப்பதில்லை என்பது வேறு விடயம்) :-))

வேதா said...

ஒரு வழியா அடுத்த பதிவை போட்டு புண்ணியம் கட்டிக்கிட்டீங்க, மிக அருமையான பாடல்.

தி. ரா. ச.(T.R.C.) said...

கூப்பிட்ட குரலுக்கு உடனே வந்த கண்ணா நன்றி.சாதரணமாக இருந்த என் பதிவை தாளித்து மணக்கச் செய்து எல்லோரும் ரசிக்கும்படியாக செய்துவிட்டாய்.சிஷ்யன் உடையான் பதிவுக்கு அஞ்சான் என்று ஆக்கி விட்டாய்.சரி இனிமேல் நையப்பிறவாமல் இரு.
மாதவி பந்தல் தவிர மற்ற மூன்று பதிவுகளும் பதிவைத்தவிர எல்லாம் வருகிறது.ஏதாவது செய்யவேண்டும்.பண்டிதர்கள் கூறட்டும்.

தி. ரா. ச.(T.R.C.) said...

அம்பி இது வஞ்ச புகழ்ச்சி அல்ல லஞ்ச புகழ்ச்சி அணி.இப்போது வரும் பின்னூட்டத்தை பார்த்தாயா?

கடையில் அல்வா வாங்கும்போது கூட இருந்தால் அது நீ வாங்கிக் கொடுத்ததாக ஆகி விடுமா?நல்ல கதையாக இருக்கே.

எங்கே உன் உடன் பிறப்புகளை காணோம்? வேற எங்கேயாவது பொங்கல் வாங்கப் போயிட்டாங்களா?:D

குமரன் (Kumaran) said...

தி.ரா.ச. அருமையான பாடல் வரிகள். பாடியவரும் மிக மென்மையாக நன்கு பாடியிருக்கிறார். பாடலின் அறிமுகத்திற்கு மிக்க நன்றி.

ஷண்மதச் செம்மலும் ஷண்முகச் செம்மலும் நீங்களும் சேர்ந்து நன்கு விளக்கங்கள் தந்துவிட்டீர்கள்.

நாமக்கல் சிபி said...

//இந்த யாதனின் குறலில் ஒரு அதிசயம் இருக்கிறது//
துறவு அதிகாரத்தின் முதல் குறள்...
உதடுகள் ஒட்டாத (அசையாத) குறள்...

கீதா சாம்பசிவம் said...

@கண்ணபிரான், நீங்க என்ன சொல்லி இருக்கீங்கன்னு பார்க்கிறதுக்கே இன்னிக்கு இங்கே வந்தேன். கடவுளே, உங்களோட விளக்கம், அதிலும் கோவில் கருவறையையும், மனிதர்களின் பிறப்பையும் விளக்கி, எனக்குப் பதில் சொல்லத் தெரியலை. ரொம்பவே ஆழ்ந்து சிந்திக்கிறீங்க இந்த வயசிலே. மனமார்ந்த நல்லாசிகள்.

கீதா சாம்பசிவம் said...

அப்புறம் சார், யாதனின் குரலில் உள்ள அதிசயம் வெட்டிப் பயல் அவர்கள் எழுதி உள்ளது தானா? அதைச் சொல்லவே இல்லையே, மறந்துட்டீங்களா?

தி. ரா. ச.(T.R.C.) said...

@வெட்டிப்பயல் @கீதா மேடம் யாதனின் குறள் பற்றி தனிப்பதிவு போடுகிறேன், வெட்டிபயல் நீங்கள் சொல்வது சரி ஆனால் அதோடு இணைந்த மற்றொன்றும் உள்ளது தனிப்பதிவில் தருகிறேன்

கீதா சாம்பசிவம் said...

" குறள்" என்பது கவனிக்காமல் "குரல்" என்று அடித்து விட்டேன். அர்த்தமே மாறி விடுமே. மன்னிக்கவும்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@கீதா மேடம் "ல' கரத்துலேயே புரளுபவர்களுக்கு "ள" கரம் சீக்கரம் வராது.இதுக்கு எதுக்கு மன்னிப்பெல்லாம்.நான் அப்புறம் "கேப்டனிடம்" சொல்லிவிடுவேன்

கீதா சாம்பசிவம் said...

"கேப்டனா?" யாரு அது புதுசா? விஜய்காந்தைச் சொல்றீங்களா என்ன? நான் அதெல்லாம் எந்தக் கேப்டனுக்கு பயப்பட மாட்டேன். அதை முதலில் அவர் கிட்டே சொல்லுங்க. எனக்குத் தமிழிலே எழுத்துப் பிழை, தப்பு வந்தா மனசை உறுத்திட்டே இருக்கும். அதான் நேத்து உடனே வந்து திருத்தினேன்.