Friday, April 20, 2007

கிறுக்குத்தனம்

ஐம்பதாவது பதிவு
ஒன்றா இரண்டா கிறுக்குத்தனம் எடுத்தச் சொல்ல இருந்தாலும் வல்லியம்மாவின் விருப்பத்துக்கிணங்க இதோ ஆறு விஷயங்கள்
1) விளையாட்டுத்தனம்
எல்லா விஷயத்திலும்தான். அலுவலகம் ஆகட்டும் வீடு ஆகட்டும் எல்லாமே தமாஷ்தான்.2002வில் ஒருநாள் இரவு மணி ஒரு மணிக்கு ஆபீஸ்லிருந்து ஸ்கூட்டரில் வீடு திரும்பும்போது பீச் ரோடில் ஒரு லாரி மோதி தலை கை கால் எல்லாம் அடிபட்டு ரோடிலேயே மயங்கிக் கிடந்தேன். ஒரு போலீஸ்காரர் பார்த்து ஆஸ்பிடலில் சேர்த்தார். நடுவில் ஒரு ஐந்து நிமிடம் நினைவு வந்த்தது. மருத்துவர் கேட்டார் யாருக்காவது சொல்லவேண்டுமா என்று. அந்த நிலையிலும் நான் சொன்னேன்."கொஞ்சம் நேரம் பாருங்கள் பிழைக்கும் என்றால் என்னுடைய வைத்தியருக்குச் சொல்லுங்கள் இல்லயென்றால் வாத்தியாருக்கு(சாஸ்திரிகளுக்கு)ச் சொல்லுங்கள் என்றேன்.
2) தள்ளிப்போடுதல்
எல்லா விஷயங்களையும் தள்ளிப்போடுதல்.( ஆமாம் நான் எழுதச்சொன்னதையே தள்ளிப்போட்டு இப்பொதுதானே போடுகிறீர்கள் என்று வல்லியம்மா சொல்வது காதில் விழுகிறது)வங்கியிலிருந்து விடுதலை பெற்று கிட்ட தட்ட ஒரு வருடம் ஆகி விட்டது. இன்னும் அங்கேயிருந்து கொண்டு வந்த பெட்டிகளை காலி செய்யாமல் ஹாலிலேயே கிடக்கிறது என்று தங்கமணிகிட்டே இருந்து தினமும் பூஜை.ஆனால் அப்படி கடைசி நிமிடத்தில் செய்யும் காரியங்கள் எல்லாம் மிகவும் சரியகஇருக்கும். திட்டமிட்டு செய்யும் காரியங்கள்சிலசமயம்தப்பாகப் போய்விடும் என் விஷயத்தில்
3) சங்கீதம்
சிறுவயது முதலே இந்தக் கிறுக்குத்தனம்தான் அதிகம். பி.காம் அகௌண்ட்ஸ் பரிக்ஷையின் போது முதல் நாள் மதுரை மணி ஐய்யரின் கச்சேரியைக் கேட்டுவிட்டுப் போய் எழுதினதில் 100 மார்க். வீட்டில் திட்டியதால் பலமாகப் படித்து எழுதிய ஆடிட்ங்கிங்ல் 58 மார்க். ஒருதரம் டி'நகரிலிருந்து நடந்தே போய் பெரம்பூரில் கச்சேரிகேட்ட கிறுக்குத்தனமும் உண்டு.ஆனால் அதுதான் இப்போது கவலைகளை மறக்க உதவுகிறது.
4) நடை பயிற்சி
2003 இதயத்தில் பிரச்சினை வந்து மருத்துவர் ஆலோசனையின் படி தினமும் 1 மணி நேரமாவது நடக்க வேண்டும் என்று சொன்னார். ஆனால் இது வரை ஒரு 30 நாட்கள்தான் நடந்து இருப்பேன் அவ்வளவு சோம்பேறி.. ,இரவு 12 மணிவரை முழித்து பிளாக் போடமுடியும் ஆனால் காத்தாலே எழுந்து வாக் போகமுடியாதா என்ற தங்கமணியின் புலம்பல் ஞாயமானதுதான்.
5)சக்திக்கு மீறி உதவுவது.
யாராவது உதவி என்று கேட்டு வந்து விட்டால் நம்மால் முடியுமா என்று பார்க்காமல் கண்ணைமூடிக்கொண்டு வாக்குக் கொடுத்துவிட்டு கஷ்டப்படும் கிறுக்குத்தனமும் உண்டு.இதனால் பண நஷ்டமும் உண்டு. நண்பர் ஒருவருக்கு சீட்டு எடுக்க கையெழுத்துப் போட்டுவிட்டு அவர் ஏமாற்றிவிட்டு ஊரைவிட்டு ஓடிப் போக கையைவிட்டு பணம் கட்டிய வேளையும் உண்டு.
6) மறதி
மறதி அதிகம். அதுவும் கண்ணாடியைத் தேடுவது தினசரி வேலை. அதில் என்னகிறுக்குத்தனம்என்கிறீர்களா. பாதி நாட்கள் கண்ணில் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு தேடுவதுதான்.அதைவிடுங்கள் ஒருதடைவை தங்கமணியுடன் ஆபீஸிலிருந்து ஸ்கூட்டரில் திரும்பும்போது சிக்னலில் தங்கமணி சரியாக உட்கார்வதற்காக இறங்கிவிட,அதைக் கவனிக்காமல் நான் ஸ்கூட்டரை கிளப்பி வழியெல்லாம் அவள் இருப்பதாக நினைத்துக்கொண்டு பேசிக்கொண்டே வீடுவரை வந்து திரும்பிப் பார்த்து த்ங்கமணியைக் காணாமல் அதிர்ச்சியடைந்ததும் உண்டு.அப்பறம் தங்கமணி ஆட்டோவில் வந்து இறங்கின பிறகு லக்ஷார்ச்சனை தான்
வல்லியம்மா உங்கள் விருப்பத்தை நிறைவேற்றிவிட்டேன்






34 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

ஆகா, நாமிருவருக்கும் பல ஒற்றுமைகள் இருக்கும் போலிருக்கே?...

Geetha Sambasivam said...

hihihi,நெருப்பு நரியிலே ஒதுங்கி இருக்கேன் ஒண்ணுமே தெரியலை! அப்புறம் நிதானமா வரேன்.
@மதுரையம்பதி, நீங்க யாருனு தெரியலை, புதுசா இருக்கே? :D

Geetha Sambasivam said...

aha, romba nalla kirukkuthanama irukke?
mmmmm, so mathuraiyampathiyum ungga katchiyaa? athan varathillaiyaa? grrrrrrrrrrrrr

Porkodi (பொற்கொடி) said...

adeyappa bayangra pseeda padhivugal podringle?? :-) enna ambi kilambittara?? ;-)

Porkodi (பொற்கொடி) said...

rotfl :-) nalla kirukkuthanam ellam!

vaidhiyar vaadhiyaar sooper :-)

perambur varai nadandhingla?! apo ipovum nadakka vendiyadhu thaane?? walkmanla paattu ketunde oru walk poitu vanga dhinamum ;-)

தி. ரா. ச.(T.R.C.) said...

@பொற்கொடி.நடையா? அதை ஏன் கேக்கிற. இப்போகூட பையன் ஒரு ஐபாட் வாங்கி அனுப்பி வாக் போகச் சொல்லரான்.எதிரே ரேஸ் கோர்ஸ் உள்ளே ஒரு ரவுண்டு வந்தால் 2 கி மி.ஆனாலும் கிறுக்குத்தனம். சரி ஏதோ நீ சொன்னயேன்னு நடந்து பார்க்கிறேன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

மதுரையமபதி. ஒற்றுமைன்னு சொல்லி ஸஸ்பென்ஸ்லே நிற்த்திடீங்களே.கீதாமேடத்துக்கு கிர்ர்ர் ஜாஸ்தியாயிடும். சீக்கிரம் சொல்லிடுங்க

தி. ரா. ச.(T.R.C.) said...

@கீதமேடம் நீங்க நரியோட இருப்பீங்க,புலியைச் சீண்டி விடுவீங்க,அம்பி எலிக்கு ஆப்பு வைப்பீங்க.இதெல்லாம் செய்யும்போது கணிப்பொறி நல்லா வேலை செய்யும் நம்ப பதிவுக்கு வரும்போதுதா நரி வரும். அப்படியே நம்பறோம்.பொற்கொடி,அம்பியும் நீங்களும் நம்பிடுங்கோ

தி. ரா. ச.(T.R.C.) said...

@கீதமேடம்.நல்ல கிறுக்குத்தனமா? நான் படும் கஷ்டம் எனக்குத்தான் தெரியும்.வருகைக்கு நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) said...

@பொற்கொடி இன்னும் ஸ்பீடாக்கூட பாடமுடியும். அம்பிகூட இருந்தால்.ஆனால்ல் அம்பி பிஸி இப்போ

தி. ரா. ச.(T.R.C.) said...

வேதாவா? எந்த வேதா? ஓ பிளாக் மீட்டிங்குக்கு வந்த வேதாவா. உங்கள் வருகைக்கு ந்ன்றி.எப்படி இந்த பக்கம் காத்து அடிக்குது.மேடம் பர்மிஷன் கொடுத்தாங்களா?

Geetha Sambasivam said...

grrrrrrrrr nan anikithalulayo thamingilishileyo illai puli kudavum, nari kudavum pesaren. ungalukku enna theriyumm en kashtam? sorkathile illai irukkinga? padikka explorerrukku, pathivu ezutha neruppu narikkum, athai sari parkka thirumba explorerukku, alaiya alainju appavum thiruththa mudiyama thappu thappa ezuthu vantha appo theriyum en kashtam ellam. ellaam HEAD LETTER :D

Geetha Sambasivam said...

hihihi, puliyai nan sindalai. athan thana valiya vanthu matikichu. enakkum vethavukkum sindu mudiya parthuchu. ellam ambiyai parthu ketupochonu ninaikiren. athan athukku aappu vachen. nalla illai? :D

தி. ரா. ச.(T.R.C.) said...

@கீதா மேடம். சில பேருக்கு காசிக்குபோனாலும் பாவம் போகாதாம்.அதுபோல அமெரிக்கா போயும் பிளாக்குத் தடா தான் போல இருக்கு.இத்தனை சிரமத்தோட பதில் போட்டதே ஜாஸ்தி. பேத்தி பொற்கொடி உதவி பண்ணுவங்களே. பாக்கி பதிவெல்லாம் தமிழ்லே தானே வருது. அது எப்படி.

தி. ரா. ச.(T.R.C.) said...

@கிதா மேடம். புலியை நீங்க சீண்டிப் பாத்தேங்களோ இல்லை அவரா வந்து மாட்டிக்கிட்டாரோ. இப்போ நீங்கதான் புலிவாலைபிடிச்ச நாயர் மாதிரி மாட்டிகிட்டேங்கோ,அதுவும் வேதாளத்தை நம்பி.....

Geetha Sambasivam said...

athellaam vethalam en pakkam than. innikku kalaiyile kuda pesinen vethalathoda. athaiyum ennaiyum pirikka mudiyathu. he he he. appuram pathivu thamizile type seyaren. neruppu nariyile poy. anal thappa varathe? parkalai? thirutha mudiyathu. athan appadiye podaren. ipo namma editing office-la puthusa oruthar join panni irukkaar. avar konjsm help seyarar vere oru pathivukku. ithukku ippadiye irukatumnu vittuten. ellaam HEAD LETTER, ungalukku sirippa irukku. grrrrrrrrrrrrrrr ellam typing fluence irukirathale mudiyuthu. etho opetharen.

தி. ரா. ச.(T.R.C.) said...

@சரி சரி மேடம்.உங்கமேலே த்ப்பே இல்லை.சே இந்த சமயம் பாத்து இந்த அம்பியும்,பொற்கொடியும் நமக்கு சப்போர்ட் வராம சதி பண்ணராங்களே

வல்லிசிம்ஹன் said...

கண்ணில கண்ணாடி போட்டுத் தேடுவீங்களா?:-)
நம்ம கேஸ்தான்.
நன்றி தி.ரா.ச.

லேட்டானாலும் லேட்டஸ்ட்.
பாவம் உங்க தங்கமணி.
இப்படியெல்லாம் பட வேண்டி இருக்கே.
procrastination
எல்லார்கிட்டேயும் இருக்கு.
அதைப் பார்த்தாச்சு.
ப்ளாக் போடற விஷயத்தில மட்டும் நாம சுப்பர் ஃபாஸ்ட் தான்:-0).

ரொம்ப நன்றி.

SKM said...

50th post "kirukkuthanama"? Nalla Nalla postgalaga pottu vandhu , correct aa 50th podum bodum bodhu ippdi aagi pocha?

SKM said...

//"கொஞ்சம் நேரம் பாருங்கள் பிழைக்கும் என்றால் என்னுடைய வைத்தியருக்குச் சொல்லுங்கள் இல்லயென்றால் வாத்தியாருக்கு(சாஸ்திரிகளுக்கு)ச் சொல்லுங்கள் என்றேன்.//

LOL!yabba! yenna solla!!

//எல்லா விஷயங்களையும் தள்ளிப்போடுதல்.//
yenga veetula avarum unga katchidhaan.

SKM said...

Romba suru suruppa irukeenga post podradhula.romba azhaga arumaiya ezhudhureenga.

தி. ரா. ச.(T.R.C.) said...

@வல்லியம்மா கோபம் குறைஞ்சுதா.
தங்கமணி படும் பாடா ஏன் சொல்லாமாட்டீங்க.ஒரு மாசம் ஆஸ்திரேலேயா,அப்புறம் சிங்கப்பூர் எல்லாம் ஜாலியா சுத்திட்டு வா நான் வீட்டையும் பாத்துகிட்டு சமையலையும் கவனிச்சுக்கறேனே.அது தெரியுமா?கண் ஆபிரேஷன் செய்தவுடனே ஒரு மூனுமாசம் சமயல் பக்கமே உடாமே பாத்தோமே அது என்ன படுத்தலா.

மலர் ஆஸ்பத்திரியில் ICCU வில்Heart attack ஆகி அட்மிட் ஆகி. இங்கே வா உனக்கு ஒரு சந்தோஷ சமாசாரம் நீ சொன்னா மாதிரியே ரெஸ்ட் எடுக்கறேன்னு சொன்னது வேணா படுத்தல்ன்னு சொல்லலாம்

தி. ரா. ச.(T.R.C.) said...

@ஸ்கேம் ஓ உங்களவரும் மறதி விஷயத்தில் நம்ப கட்சியா/

தி. ரா. ச.(T.R.C.) said...

50 தாவது பதிவு கிறுக்குத்தனம் ஆகப்போட்டதில் வருத்தம் இல்லை.
அம்பிக்காக இந்தப் பதிவு

தி. ரா. ச.(T.R.C.) said...

@நான் தப்பா புரிஞ்சிக்கலை. எனக்குத்தெரியும் வேதா என்பது வேதனைகளை தாங்கும் இதயம் என்பது.
அம்பி இங்கு வருவதற்கும் நான் மேடம் பதிவுக்கு போகாமல் இருப்பதாக மேடம் சொல்வதற்கும் என்ன சம்பந்தமோ அதே சம்பந்தம்தான் இதுவும்

Geetha Sambasivam said...

enna achu? rendu perukkum? cool cool, rendu perum konjam siringa parkkalam. ellaarume oru samayam thapavum oru samayam sariyavum purinjuppaanga. ithukku enna ippo?

Raji said...

50 dhavadhu pathivukku vazhththukkaL...

Raji said...

//விளையாட்டுத்தனம்//
Naanum vilayaatu thaanama irupaen..Aana neenga rombavae vilayaatu thaanama irukeenga TRc...
//தள்ளிப்போடுதல்//
Same blud...
//சங்கீதம்//
Good...good...Golden memories laam remeber pannureenga...

//நடை பயிற்சி//
Nammakkum Dr oru varshathukku munnai thinam walkin poaga sonnaru..Naanum ungala maadhiriyae thaan oru 3 4 thadava poi iruppaen..Apuram vazhi jasthi aayiduchuna povaen...
//சக்திக்கு மீறி உதவுவது.//
The same happened to my appa also...

//மறதி//
Neenga kannadi thaan marapeenga..Naan paesikittu irukkum boadhu vera yaaravadhu kurukka paesina naan enna solla vandhaenuradhayae marundhuduvaen..Avalavu gyabagam jasthi enakku;)

Porkodi (பொற்கொடி) said...

enna vedha uncle kooda sandai podringa?! apram samosa thara mattaru, samadhanam agidunga :-)

supportku vandhuttom! indha geetha paatti naan nalla samaikren nu poramaila enakku samaikkave theriyadhu nu vadhandhi parappi paathanga. ana pappu vegalai :-) adhe pola thaan indha neruppu nari kadhaiyum! neenga kandukaadheenga uncle :-)

thalaiv(al)i neengalum kandukadheenga :D

தி. ரா. ச.(T.R.C.) said...

@பொற்கொடி ஒரு சண்டையும் கிடையாது.இதெல்லாம் சும்மா!
நீங்க ரெண்டு பேரும் உறவுக்காராங்க பாட்டி பேத்தி. அப்பறம் சேர்ந்து ரெண்டு பேருன் என்னைத்தாக்குவீங்க
நாண் வரலை இந்த போட்டு தாக்கு விளையாட்டுக்கு.

தி. ரா. ச.(T.R.C.) said...

@பொற்கொடி ஒரு சண்டையும் கிடையாது.இதெல்லாம் சும்மா!
நீங்க ரெண்டு பேரும் உறவுக்காராங்க பாட்டி பேத்தி. அப்பறம் சேர்ந்து ரெண்டு பேருன் என்னைத்தாக்குவீங்க
நாண் வரலை இந்த போட்டு தாக்கு விளையாட்டுக்கு.

தி. ரா. ச.(T.R.C.) said...

@ராஜி அடடே நீங்க கிட்டதட்ட ந்ம்ப கட்சி. தனி சங்கமே ஆராம்பிக்கலாம் போல இருக்கு.

Unknown said...

50 vathu pathivukku valthukkal.

correctna postku than vanthu irukken..

தி. ரா. ச.(T.R.C.) said...

வாங்க மணி ரொம்ப கஷ்டப்பட்டு தேடி வந்தீங்களோ.