Saturday, August 25, 2007

வரலக்ஷ்மி வந்தாள் நம் இல்லத்துக்கு(2)


வரலக்ஷ்மி நோன்பு அன்று எல்லார் வீட்டிலேயும் பாடும் ஒரு பாட்டு" பாக்யாத லக்ஷ்மி பாரம்மா'" என்ற புரந்தர தாசரின் கன்னட மொழியில் வரும் பாட்டு. என் அம்மாவும் இந்த பாட்டைப் பாடுவார்கள் இதை தமிழில் போட வேண்டும் என்று நினத்து தேடிப் பார்த்தேன் கிடைக்க வில்லை. பிறகு பாட்டைகேட்டுஎனக்குத்தெரிந்தவரை பாட்டையும் விளக்கத்தையும் எழுதுகிறேன் விவரம் தெரிந்தவர்கள் தவ்றுகளைச் சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்ள முடியும்

ராகம்:- மத்யமாவதி(ஸ்ரீ) தாளம்;-ஆதி
பல்லவி
பாக்யாத லக்ஷ்மி பாரம்மா
நம்மம்மா நீ சௌபாக்யாத லக்ஷ்மி பாரம்மா

சரணம்
ஹெஜ்ஜேமேலே ஹெஜ்ஜேயனிகுட
கெஜ்ஜகாலனி த்வனியன டோருட
சஜ்ஸன சாது பூஜய வேளகே
மஜ்ஜிக வொளகின பெண்ணையன்டே.................(பாக்யாத)

கனகவிருஷ்டியா கரயுதபாரே
மனகே மானவ சித்திய டோரே
தினகர கோடி தேஜடி ஹெளயுவா
ஜனகராயன குமாரி வேத...............................................(பாக்யாத)


அட்டிதகலத பக்தர மனயளி
நித்ய மஹோத்ஸ்வ சுமங்கல
சத்யவடோருவ சாது சஜ்ஜன
சிட்டடி ஹோளுவ புட்டலி மொம்பே.....................(பாக்யாத)

சங்கே இல்லத பாக்யவ கொட்டு
கங்கண கைய திருவுடபாரே
குங்குமாங்கித பங்கஜ லோசன
வெங்கட ரமணன பெங்கட ராணீ ..................................(பாக்யாத)

சக்ரே துப்பர காலுவே ஹரிசுத
சுக்ரவாரதா பூஜய் வேளகே
அக்கரயுள்ள அளகிரி ரங்கன
சொக்க புரந்தர விட்டலன ராணீ.................................(பாக்யாத)

பாக்கியங்களைத் தரும் லக்ஷ்மியே வருவாய்,எங்களுடைய தாயே நீ சகல சௌபாக்கியங்களை அள்ளித்தர வருவாய் அம்மா.

இரண்டுகால்களிலும் சலங்கையும் கொலுசுவும் கலீர் கலீர் என்று ஒலிக்கும் சப்தத்துடன் நல்ல சாது ஜனங்கள் பூஜை செய்யும் வேளையில் தயிர் கடையும்போது வரும் வெண்ணயைப்போல் வருவாய் அம்மா
உன் கைகளில் தங்கமழை பொழிந்து எங்களின் விருப்பத்தைத் தீர்ப்பாய்
கோடி கோடி சூர்யனுக்கு ஒப்பான காந்தியுடன் கூடிய ஜனகமஹாராஜனின் மகளாக மண்ணில் அவதரித்த லக்ஷ்மிதாயே வாருவாய் அம்மா. எங்கள் வீட்டுக்கு வந்த நீ வேறு எங்கும்போகமல் இங்கேயே இருந்து தினசரி நடக்கும் மகோன்னத பூஜையில்கலந்து சாது ஜனங்ளை காத்தருள்வாய் அம்மா.கைகளில் தங்க கங்கணங்களை அணிந்து சப்தத்துடன் குங்குமத்தினால் சிவந்த முகத்தில் சிவந்த தாமரை புஷ்பங்கள் பூத்திருப்பதுபோல் அழகிய கண்களுடனுடைய அந்த திருப்பதி மலை மேல் இருக்கும்வெங்கட்ரமணனுடைய ராணீயாகிய எங்கள் அம்மாவே வருவாய்.வெள்ளிக்கிழமையன்று உனக்கு சக்கரையுடன் பாலும் அரிசியும் கலந்து சக்ரபொங்கல் செய்து உனக்கு படைத்து பூஜைகள் செய்யும் வேளயில் இந்த புரந்தர தாசனால் பாடப்படும் அளகிரி மலை மேல் இருக்கும் ரங்கன்னனின் மனதிற்குகந்த ராணீயே வருவாய் எங்கள் வீட்டிற்கு.

இப்பொழுதுஇந்தப்பாடலைமூன்றுபேர்களுடைய குரலில் கேட்க்கலாம்.

முதலில் திரு. பீம்சிங்ஜோஷி அவர்கள் தன்னிடைய கம்பீரமான குரலில் ஹிந்துஸ்தானி இசையையும் கர்னாடக சங்கீத்த்தையும் கலந்து கலக்கியிருப்பதை இங்கே கேட்கவும்

http://www.kannadaaudio.com/Songs/Devotional/BhimsenJoshi/Bhagyada.ram


இதேபாட்டை எம். எல். வசந்தகுமரியின் குரலில் கேட்க இங்கே கிளிக் செய்யவும் http://www.kannadaaudio.com/Songs/Classical/MLV/BhagyadaLakshmi.ram

ஆயிரம் பாடினாலும் நம்முடைய எம் ஸ் அம்மா பாடிய மாதிரி வருமா. அவரின் குரலில் இந்தப்பாட்டை<"இங்கே கேட்டுப் பாருங்களேன்


இவ்வளவு பேர் லக்ஷ்மியை அழைத்த பிறகு நம் தமிழ்த்தியாகைய்யா
பாபநாசம் சும்மா இருப்பாரா. அவர் எப்படி லக்ஷ்மியை அழைக்கிறார் என்று ம்று பதிவில் நாளை பார்க்கலாம்

16 comments:

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

வரலக்ஷ்மி விரத நன்னாள் வாழ்த்துக்கள் திராச

பாக்யத லட்சுமி பாரம்மா - எத்தனை அழகான புரந்தரதாசர் பாடல். Group Songக்கு கூட சூப்பரா இருக்கும்.
பாடலுக்கும் சுட்டிகளுக்கும் நன்றி.
எம்.எஸ் அம்மாவின் பாட்டை விரும்பி ரசித்தேன்

//குங்குமாங்கித பங்கஜ லோசன//=
குங்குமார்ச்சித?

Madhusoodhanan said...

Chinna vayasula pakkathu veetla poi varalakshmi viradam spl sapadu saptadhu gnabagam vandadhu...

I have enjoyed MLV and MS song in my home umpteen times, Bhimsen joshi was spl different and felt a smell of bhoopalam in it .

தி. ரா. ச.(T.R.C.) said...

வணக்கம் கேஆர்ஸ்.ஆமாம நீங்க சொன்ன மாதிரி நாட்டியத்துக்கும் கூட எடுப்பாக இருக்கும் இந்த பாட்டு.

மறுபடி சோதனை செய்து பார்த்தேன். குங்குமாங்கித வார்த்தைதான் பொருந்தி வருகிறது.குங்குமத்தால் அலங்கரித்தக் கொண்டு அதனால் சிவந்த தாமரை போன்ற கண்களை உடையவள்

தி. ரா. ச.(T.R.C.) said...

வாங்க மது. முதல் தட்வையா வரீங்க. ந்ன்றி.பாக்யாத பாட்டை மத்யமாவதி,ஸ்ரீ,ரதிபதிப்ரியா என்றும் சொல்லுகிறார்கள் ஆனால் மத்தியமாவதி தான் பொருந்துகிறது.

தி. ரா. ச.(T.R.C.) said...
This comment has been removed by the author.
இராமநாதன் said...

பல்லவி பாடும்போதே லக்ஷ்மி வந்தேவிடுவாள் என்பதுபோல அருமையான பாடல்...

பீம் சென் கொஞ்சம் குளறிண்டேதான் பாடுவார்..

எம்.எஸ் தான் நம்ம சாய்ஸ்...

தி. ரா. ச.(T.R.C.) said...

நன்றி இராமநாதன். சரிதான் நீங்கள் சொல்வது ஜோஷி கொஞ்சம் ஹிந்துஸ்தானி இசையை சேர்ப்பதால் வரும் தாக்கம் இது.
இதையே ஓ ஸ் அருண் வேறுமாதிரி பாடி இருக்கிறார்

ambi said...

அருமையான விளக்கங்கள். :)))
thanks for the links.

அருணா சாய்ராம் இதே பாட்டை பாடி கேட்டு இருக்கீங்களா? :)

தி. ரா. ச.(T.R.C.) said...

@அம்பி ஓ.ஸ். அருண் பாடியும் அருணா சாயிராம் படியும் கேட்டு இருக்கேன்.

Cogito said...

I like the Bhimsen Joshi version a lot. In fact, the first time I heard it it sounded very different from the traditional version that I am used to.

தி. ரா. ச.(T.R.C.) said...

@Cogkito. Thanks. Joshi has sungdifferently.But i remember in 1970's Flute Mali has played this song for more than half an hour in a spell bound audience of Krishna Gana Sabha.

மதுரையம்பதி said...

கொஞச நாள் இந்தப்பக்கம் வராம இருந்திட்டேன்....அதனாலென்ன பதிவினை இப்போவாவது படிக்க முந்ததே.....பாடல்கள் அருமை....

என்வீட்டில் நாந்தான் பாடினேன் :-)

தி. ரா. ச.(T.R.C.) said...

வணக்கம் மௌளி சார். யார் படினாலும் லக்ஷ்மி வராமலா இருப்பாள். எங்கள் வீட்டில் நான்தான் பாட்டுகேட்பேன் தங்கமணியிடம் இருந்து அடிக்கடி.

வல்லிசிம்ஹன் said...

T.R.C. Sir.
mahaLakshmi varaamal irunthu viduvaaLA,
inthap paattaik ketta piRaku.
M.S.ammaavai naan theyvamaakaththaan paarkkiREn.
avanggaLE oru LAKSHMI thaan.
and Sri. Maharajapuram.
enna oru kural.
avarudaiya ambaaL paadalkaL anaiththum veku arumaiyaaka nekizhcciyodu irukkum.
Sri Chakra raaja simhaasanesvari,
Sri Lalitham Ambike....
mikavum pidikkum.
Neenga pinnoottaththil kuRippittu illaavittaal enakkuth therinthirukkaathu.

Many Many thanks.

வல்லிசிம்ஹன் said...

PonMakaL vanthaaLA.
arumaiyaana pathivu thi.raa.sa.

வல்லிசிம்ஹன் said...

கங்கணங்களை அணிந்து சப்தத்துடன் குங்குமத்தினால் சிவந்த முகத்தில் சிவந்த தாமரை புஷ்பங்கள் பூத்திருப்பதுபோல் அழகிய கண்களுடனுடைய அந்த திருப்பதி மலை மேல் இருக்கும்வெங்கட்ரமணனுடைய ராணீயாகிய எங்கள் அம்மாவே வருவாய்.//
avaLallavo AMMA.
SARAJITHA NAYANE
SAROJA HASTHE
THAVALA THAMAAM SUGA KANTHA MAALYA SOBHE//