Tuesday, August 28, 2007

லக்ஷ்மி வந்தாள் நம் இல்லத்துக்கு(3)



மும்பை நகரின் செல்வச் செழிப்புக்கு காரணம் மேலே இருக்கும் மஹாலக்ஷ்மிதான் என்று கூறுவார்கள். ஆனால் மஹாலக்ஷ்மி அவதரித்த இடங்களோ தமிழ்நாடுதான்.வில்லிப்புத்தூரில் ஆண்டாளாகவும்,நச்சியார் கோவிலில் ஸ்ரீதேவியாகவும், ஒப்பு இல்லா அப்பன்(உப்பிலியப்பன்) கோவிலில் பூதேவியாகவும் திருப்பதியில் திருச்சானூரில் பத்மாவதியாகவும் அவதாரம் எடுத்தாள். அதுபோல பசுமாட்டின் பின்புறத்தில் லக்ஷ்மி வாசம் செய்கிறாளம் என்று புராணம் கூறுகிறது


திரு. பாபநாசம் சிவன் அவர்கள் அன்னை மஹாலக்ஷ்மியின் மீது இரண்டு பாடல்கள் பாடியுள்ளார். இரண்டுமே மிகவும் பிரசித்தி பெற்றது.

முதல் பாடல்


ராகம்:- அடாணா தாளம்:- ஆதி


பல்லவி


நீ இரங்காயெனில் புகலேது---அம்பா


நிகில ஜகன் நாதன் மார்பில் உறை--திரு.........(நீ இரங்காயெனில்)


அனுபல்லவி


தாயிரங்காவிடில் சேய் உயிர் வாழுமோ?


சகல உலகிற்கும் தாயல்லவோ----அம்பா.....(நீ இரங்காயெனில்)


சரணம்


பாற்கடலில் உதித்த திருமணியே--சௌ


பாக்யலக்ஷ்மி என்னைக் கடைக்கணியே


நாற்கவியும் பொழியும் புலவோர்க்கும்--மெய்


ஞானியர்க்கும் உயர் வானவர்க்கும்.....அம்பா........(நீ இரங்காயெனில்)


சிவன் அவ்ர்கள் இந்த அடாணா ராகத்தை கையாண்டவிதமே அலாதி.அடாணா ராகம் மிகவும் கம்பீரமான ராகம். அதிகாரம் த்வனிக்கும் பாடல்களுக்கு ஏற்ற ராகம். கோபலகிருஷ்ண பாரதியார் மிகவும் அதிகாரமாக" கனக சபாபதிக்கு நமஸ்காரம் பண்ணடி பெண்ணே"என்று ஆர்டரே போடுவார்(சீர்காழி.சிதம்பரம் அருமையாகப் பாடி இருக்கிறார்). இது ஒரு ராஜ ராகம்.ஆனால் சிவன் அவர்கள் தெலுங்கு தியாகைய்யாவை பின் பற்றி இந்த ராகத்தில் தயாரசத்தையும் காருண்ய ரசத்தையும் கொண்டு வருகிறார். தியகராஜஸ்வாமிகள் தனக்கு ராமரின் தரிசனம் கிடைத்தபின் மறுபடியும் அதேபோல் கிடைக்க வேண்டும் என்று மிகவும் கெஞ்சலுடன் படுகிறார்"ஏலா நீ தயராது பரா குசேலா......' அண்ணல் ராமச்சந்திர மூர்த்தியே என்னிடம் ஏன் தயை காட்ட மாட்டேன் என்கிறாய் நான் ஏழை என்பதாலா.... என்று அதனுடையதாக்கத்தாலோ என்னவோ நம்தமிழ்தியாகைய்யாவானசிவனும் அதே அடாணாவில்"நீ இரங்காயெனில் புகலேது" என்கிறார். அடாணாவின் ஜீவஸ்வரமான 'நீ"யை உயர்த்தி வைத்து அரோஹணமாக மேல்ஸ்தாயியில் ஆரம்பித்து மஹாலக்ஷ்மியை மற்ற தெய்வங்களுக்கும் மேலாக உயர்த்திவிடுகிறார். நீயே இரங்கவிட்டால் வேறு யார் இரங்குவார்கள்?அவள்எங்குஇருக்கிறாள்என்று சந்தேகமறமேல் உலகத்திற்கும்



பூலோகத்திற்கும் நாயகனானதிருமாலினின் மார்பில் சதா வசம் செய்பவள் என்று "ஹரிவத்ஸசலஸ்திதாம்" என்று முன்பு லலிதா ராகப் பாடலில் தீக்ஷ்தர் சொன்னாரே அதே மதிரி சொல்கிறார்சரி இரக்கம் யாரிடம் அதிகம் இருக்கும். சந்தேகமே இல்லாமல் தாயிடம்தான்.அம்மாதான் தன் குழந்தைகளிடம் அதிக இரக்கம் காட்டுவாள். அதனால்தானே சொன்னார் "தடித்த ஒர் மகனைத் தந்தை ஈண்டு அடித்தால் தாய் அணைப்பாள்'என்று.



அதனால்தானோ என்னவோ தாயிரங்காவிடில் குழந்தை உயிர் வாழமுடியுமா என்ற கேள்வியும் கேட்டுவிட்டு சகல உயிர்களுக்கும் நீ தான் தாய் என்று ஐஸும் வைத்துவிடுகிறார். பாற்கடலில் இருந்து பிறந்த தாயே என்னை உன் முழுக்கண்ணாலும் கூட பார்க்கவேண்டாம், கடைக்கண் வைத்தென்னை ஆதரி என்று ஆதி சங்கரர் கனகதாரஸ்தவ்த்தில் சொன்னாரே அதுபோல் இறைஞ்சுகிறார்.சரஸ்வதி காடக்ஷ்த்தால் நான்குவிதமான கவிகளைமழைபோல வர்ஷிக்ககூடிய வல்லமைபடைத்தபுலவர்களுக்கும். ஸ்ரீவித்யாவான பராசக்தியை உபாசனை செய்யும் மெய் ஞானியர்களான முனிவர்களுக்கும்,எல்லா சக்திகளையும் பெற்ற வானவர்களுக்கு கூட அம்மா லக்ஷ்மிதேவியான நீ இரங்கா விட்டால் வேறு புகலிடம் கிடையாது என்று கூறுவது போல் இருக்கிறது இந்தப் பாடல்



சரி இனி பாடலை கேட்கலாமா. யார் பாடியிருக்கிறார்கள். வேறு யார் இந்த பட்டுக்கு உயிர் கொடுத்து சிவனை பட்டி தொட்டிகளில் எல்லாம் புகழ் பெறச்செய்த எம் ஸ் அம்மாவின் குரலில் இங்கேகேட்கவும்



திரு. மஹாராஜபுரம் சந்தானத்தின் குரலில்<"இங்கே கேட்கவும்"> ">



அடுத்த பாடலை அடுத்த பதிவில் பார்க்கலாம்















































10 comments:

Geetha Sambasivam said...

நான் தான் முதல் போணியா? நல்லா இருக்கு படம். எங்கே சுட்டீங்க? இதிலே இருந்து தேவைப் பட்டா நான் சுட்டுக்கறேன். பாட்டு இன்னும் கேட்கலை. கேட்டுட்டுச் சொல்றேன். நீங்க வராட்டிக் கூட நாங்க வரோம். :P கடமை உணர்ச்சி அதிகம். :P

ambi said...

மிக அருமையான விளக்கங்கள், பாடல்கள். நான் தான் பஷ்ட்டா? :)


மேடம் சிங்கப்பூர் போனதுலேந்து வீட்டுல ரொம்ப சுதந்திரமா இருக்கீங்க போல? :)

தி. ரா. ச.(T.R.C.) said...

@கீதா மேட்ம் வாங்க வாங்க நீங்கதான் பஷ்ட்டு. அதுவும் ஆப்பு அம்பியை தோக்கடிச்சு வந்திருக்கீங்க. அதனாலே கொஞ்சம் ரெஸ்டு எடுத்துண்டு மறுபடியும் வாங்க.
நாங்களும் தினம் ஒங்க போச்டுக்கு வரோம் படிக்கிறோம் சில சமய்ம் பின்னுட்டமும் போடுகிறோம்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@அம்பி பாவம் உனக்கு செகண்ட் பிரைஸ்தான்.
ஆமாம் இந்தியாவுக்கு சுதந்திரம் 15 ஆகஸ்ட் எனக்கு 21 ஆகஸ்ட்.

தங்கமணிகிட்டே போட்டு கொடுத்தறாதே

Geetha Sambasivam said...

ஆனாலும் அம்பிக்குக் கூட இப்படியா சார் பயப்படுறது? :P போகட்டும், பாட்டு ரென்டும் இன்னிக்குத் தான் எந்தத் தடங்கலும் இல்லாமல் கேட்க முடிஞ்சது. ரொம்பவே நன்றிகள். அருமையான சங்கீதம் கேட்க வைத்ததுக்கு.

தி. ரா. ச.(T.R.C.) said...

இந்தக் காலதிலே யார் யாருக்கு பயப்பட்கூடதுன்னு ஒரு வியவஸ்த்யே இல்லாம பொயிடுத்துன்னு அங்கே சாம்பு சார் சொல்லறது காதிலே விழறது
நன்றிகள் பல் கீதாமேடம் அடுதது மாஹாலக்ஷ்மி ஜகன்மாதா. வந்து கேளுங்கள்

My days(Gops) said...

அருமையான விளக்கங்கள்...
இது மாதிரி தகவல்கள் எல்லாம் எங்கு கிடைக்கிறது உங்களுக்கு? இல்லை ஏற்கனவே தெரிந்ததா ?

மெளலி (மதுரையம்பதி) said...

இன்னைக்குத்தான் இதனைப் படித்தேன்/கேட்டேன்.....அருமை சார்.

தி. ரா. ச.(T.R.C.) said...

கோப்ஸ் படித்து தெரிந்து கொண்டதுதான். சிறுவயது முதலே இசையின்மீது ஈர்ப்பு உண்டு.

தி. ரா. ச.(T.R.C.) said...

வாங்க மௌளி சார். இன்னுமொரு பாட்டு உண்டு அதையும் வந்து கேளுங்கள்.இதுவும் ஒரு லஹிரிதான்