Wednesday, November 07, 2007

தீபமங்கள ஜோதியும் தீபாவளியும்

நல்ல சீலங்கள், நல்ல குணங்கள் வரவேண்டுமென்றால் நல்ல ஆசாரங்கள் இருக்கவேண்டும். மனசு சுத்தமாக இருந்தால்தான்மட்டுமே சீலம் வரும்.
கெட்டது என்பதே மனதில் புகாதபடி
நல்லது முழுவதும் நிரம்பியிருந்தால்தான்
சீலம் வரும்.கண்ணாடியைப் பார்க்கிறோம்.
அழுக்கு இருந்தால் பார்க்கமுடிகிறதா?
சுத்தமாகத் துடைத்து விட்டுப் பார்த்தால்
நன்றாகத் தெரியும். கண்ணாடி சுத்தமாக
இருப்பதுடன் அசையாமல், நிலையாகவும் இருக்க
வேண்டும்.அப்போதுதான் உண்மை பிராகாசிக்கும்
சித்தமென்பது ஒரு கண்ணாடிபோன்றது.
பரம்பொருள்தான் உண்மை! உலகைப் படைத்த
ஆண்டவனைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால்,
நம்முடையசித்தத்தைஅழுக்கில்லாமல்,ஆடாமல்,
அசையாமல்,நிலையாக வைத்துக்
கொள்ளவேண்டும்.

காஞ்சி பரமாசாரியார் வாக்கு

எல்லோருக்கும் எனது உளம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்.தலைதீபாவளி கொண்டாடும் அம்பிக்கும்,இன்னும் தலை தீபாவளியை தனியே கொண்டாடும் அருணுக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்.தீபாவளி என்றாலே புதுத்துணிகள்,பட்டாசுகள், வண்ணமலர் மத்தாப்புகள், இனிப்பு மற்றும் காரவகைகள், குழந்தைகளின் மகிழ்ச்சி ஆரவாரம்,பெரிசுகளின் கலகலப்பும் மிகுந்த நாள். நாங்கள் இந்தியாவில் இல்லையே பட்டாசு வெடிக்க முடியவில்லையே என்று வருத்தம் வேண்டாம் இதோ பட்டாசுடன் கொண்டாடுங்கள்


முந்தி முந்தி விநாயகனைத் தொழுது கும்பிடுங்கள்


என்ன சார் என்னை மாதிரி குழந்தைக்கு பட்சணம்கிடையாதா என்று கேட்கப்போகும் அம்பிக்கு இதோ


வாணவேடிக்கை போதாது என்பவர்களுக்கு மேலும் சிறப்பு கீழேபார்த்து ரசியுங்கள்.

17 comments:

வேதா said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள் :) இனிப்புக்கும், பட்டாசுக்கும் நன்றி :)

தி. ரா. ச.(T.R.C.) said...

நன்றி வேதா. எனதுநல்லாசிகள்.காசுஎங்கே பட்டாசுக்கும் இனிப்புக்கும்

பாரதிய நவீன இளவரசன் said...

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்!

தி. ரா. ச.(T.R.C.) said...

ஆஹாஇளவரசரே வந்துவிட்டார் வேறு என்னவேண்டும். நன்றி.வாழ்த்துக்கள்

கீதா சாம்பசிவம் said...

என்ன ஓரவஞ்சனை சார், பட்சணம் எல்லாமே அம்பிக்கா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்., நான் எடுத்துண்டாச்சு, ரொம்ப நன்றி வாழ்த்துக்களுக்கு! :))))))))))))))

தி. ரா. ச.(T.R.C.) said...

கீதாமேடம் இந்தியாவந்தவுடனேஞாபக சக்தி ஜாஸ்தி. ட்க்ன்னு போன்ல கண்டு பிடூச்சுட்டீன்ங்க..
அம்மிகிட்டே அம்பத்தூர் போலாம்ன்னா கிரமத்துக்கெல்லாம்வரமாட்டானாம்.
அதுசரி நீங்க வ்ந்து சுடாமப்போனது எப்போ?

REVATHY said...

Super Diwali pongo Pattasukum sweetukum swami arulukum oru super Thanks TRC sir

ஜீவா (Jeeva Venkataraman) said...

//நல்ல சீலங்கள், நல்ல குணங்கள் வரவேண்டுமென்றால் நல்ல ஆசாரங்கள் இருக்கவேண்டும். //
நல்ல ஆசானும் வேண்டும். குறைந்தது நல்ல ஆசானைப்பற்றிய பதிவுவாது படிக்க வேண்டும்...

ம்.ம்.ம்... எப்போதாவதுதான் இதுபோல அருளாசிகள் படிக்க கிடைக்கிறது. இந்தமுறை அவரே காகாட்டி அழைக்கிற மாதிரி படமும் இருக்கிறது!

தலைப்பில் 'ஜோதி' - பார்க்குமிடமெல்லாம் குறியீடுகள் நந்தலாலா!

ambi said...

இனிப்புக்கும், பட்டாசுக்கும் நன்றி :)

anyway, will try to come and collect the same in person. :)
(vasoola vida mattoom illa :p

தி. ரா. ச.(T.R.C.) said...

@அம்பி இந்தமுறை வரும்போது நீங்கள்தான் ஸ்வீட் தரவேண்டிய நேரம்
என்பதை அறிந்து வாங்கி வரவும்

தி. ரா. ச.(T.R.C.) said...

aaha london ponathum nalla improvement. Reva ganesh Blog arampichaasu.inmie avlavuthaan unkali pitikka mutiyathu.peran nalla velai vankaran pola irukku. maile kanoom ipoo.

தி. ரா. ச.(T.R.C.) said...

வாங்க ஜீவா.கடினமானவிஷாயத்தை எளிமையாக சொல்ல அவர்போன்ற
ஒருவர் இனி எப்போ வருவாரோ.
யானையுடன்ஒருவர்பேச
வேண்டுமானால் மாவுத்தன்
உதவி இல்லாமல்முடியாது.
அதுபோல்தான் கடவுளை அடைய குருவின் ஆசி இல்லாமல் முடியாது

REVATHY said...

Amam TRC sir London vandhadhuku urupadiya edavadhu learn panna vendama unga punniyam Blogla pugundhu purapada kathunden

மதுரையம்பதி said...

இன்றுதான் வர முடிந்தது.....ஆச்சார்யார் படம் தந்தமைக்கு நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) said...

வாங்க மௌளி சார்.ரொம்பபிசியோ.சரி20 ஆம் தேதி பார்க்கலாமா உங்களூரில் பங்களூரில்

செல்லி said...

பரவாயில்லியே!, முதல்ல முந்தி முந்தி விநாயகனைக் கும்பிட்டு பிறகு இனிப்புப் பலகாரம்.. பட்டாசு எல்லாங் கொளுத்தித்தான் தீபாவளி கொண்டாடியிருக்கீங்க.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//நல்ல ஆசானும் வேண்டும். குறைந்தது நல்ல ஆசானைப்பற்றிய பதிவுவாது படிக்க வேண்டும்...
//

பின்னிப்புட்டீங்க திராச!
ஆயிரத்தில் ஒரு சொல்!
நான் சஷ்டிப் பதிவு படிக்கலாம்னு ஓடியாந்தேன்!

முன்பு படித்த தீபாவளிப் பதிவே இருந்துச்சு! சரி அப்ப போடாத பின்னூட்டத்தை இப்ப போட்டாக்கா, திராச ஐயா, சஷ்டிப் பதிவு ஒன்னாச்சும் போடுவாரு-ன்னு ஒரு நப்பாசை! :-))

சஷ்டி முடிஞ்சி, திருமணம் ஆச்சே! அதைப் போடுங்க திராச!