Friday, March 14, 2008

காண கண் கோடி வேண்டும்

ttiகயிலைக்கு சமானமான மயிலையில் பங்குனித் திருவிழா ஆரம்பித்து இன்று அதிகார நந்தி சேவை.காலையில் ஆறு மணிக்கு சரியாக கபலீஸ்வரர் கோபுரவாசலில் தரிசனம் அருளுவார்.அதைக் காண்பதற்கு கண் கோடி வேண்டும். வாருங்கள் நாமும் தரிசனம் செய்யலாம்.இதோ காலை மணி 5.50 ஆகிவிட்டது. இந்த சிறிது குளிர்ந்த காலை வேளையிலும் பக்தர்கூட்டம் சந்நிதி தெருவெல்லாம் நிரம்பி வழிகிறதுஇதோ மெதுவாக ஆடி அசைந்து கொண்டு முதலில் வருவது யார் தெரியுமா. வேறுயார் வானவருக்கும் நம்மவருக்கும் முன்னவரான முந்தி முந்தி வினாயகர்தான் மூஷிகவாகனத்தில் வருகிறார்.


அவருக்கு பின்னால் கபலீஸ்வரரை தூக்கிக்கொண்டு கம்பீரத்துடனும் அதிகாரத்துடனும் எழுந்தருளுவார் நந்திகேஸ்வரர் . பிறகு முருகப்பெருமான் கந்தர்வ பெண் வீணைமீட்டிக்கொண்டு இருக்கும் வாகன உருவத்தில் உலாவருவார். அதன் பின்னால் கற்பகநாயகி அதே மாதிரி வாகனத்தில் திருவீதி உலாவுக்கு வந்தருளுவாள்.கடைசியாக சண்டிகேஸ்வரரும் இவர்களைத் தொடர்ந்து உலா வருவார். மலர் அலங்காரமும்,மற்றும் மாணிக்கம்,வைரம் முதல் நவரத்தின அல்ங்காரமும் வார்த்தைகளால் வர்ணிப்பதைவிட நேரில் பார்த்தால்தான் அனுபவிக்கமுடியும்.

இதை ஏன் அதிகார நந்தி என்கிறார்கள் அவர் எல்லோரையும் அதிகாரம் செய்வாரா? இல்லை சிவபெருமானின் சிறந்த பக்தரான அவர் ஏன் அதிகாரம் செய்யப்போகிறார்.இங்கு அதிகாரம் என்பது பரமேஸ்வரனை துக்குவதற்கு அவர்மட்டும்தான் அதிகாரம் பெற்றவர் என்பதைக் குறிக்கிறது.
அதையாருக்கும் விட்டுக்கொடுக்கமாட்டார். அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்கப் படும் ஒரு அதிகாரம் போல.அவர் முகத்தைப் பாருங்கள் என்ன ஒருபெருமிதம்.வலதுகாலை மடித்துஇடது காலை ஊன்றிஇருகைகளாலும் புவனங்களை ஆட்டிப்படைக்கும் காலசம்ஹாரமுர்த்தியை துக்கிக் கொண்டு ஒரு கர்வம் அவர் முகத்தில் காணலாம்.அந்த செந்நிற நாக்கைச் சுழற்றி பற்கள் வெளியே தெரிய, கண்களில் கோபக்கனல் பொங்க, இருகைகளிலும் மானும், மழுவும், கதையும் ஏந்தி இடுப்பில் அதிகாரபட்டைச் சிகப்புத் துணியுடன் போருக்குச் செல்லும் வீரன்போல்காட்சியளிக்கிறார்.
அவரே ஈஸ்வரன்போல்தான் இருக்கிறார்.அவர் பெயரும் நந்திகேஸ்வரன்தானே. கபாலீஸ்வரரைப் பாருங்கள் அவரும் கையில் அம்பு வைத்துக்கொண்டு இருக்கிறார்.இடது கையை இடது துடை மேல் வைத்து கம்பீரமாக காட்சித்தருவதைக் காண கண் கோடி வேண்டும்
இந்தக்காட்சியை மயிலையில் வாழ்ந்த பாபநாசம் சிவன் எப்படி அனுபவித்தார் என்று பார்க்கலாமா
ராகம்:- காம்போதி தாளம்:- ஆதி.
பல்லவி
காணக் கண் கோடி வேண்டும்--கபாலியின் பவனி
காணக் கண் கோடி வேண்டும்........(காணக்கண்)
அனுபல்லவி
மாணிக்கம் வைரம் முதல் நவரத்னாபரணமும்
மணமார் பற்பல மலர்மாலைகளும் முகமும்
மதியோடு தாராகணம் நிறையும் அந்தி
வானமோ கமலவனமோ என மன்ம்
மயங்க அகளங்க அங்கம் யாவும் இலங்க
அபாங்க அருள்மழை பொழி பவனி .......(காணக் கண் கோடி..)
சரணம்
மாலோடு ஐயன் பணியும் மண்ணும் விண்ணும் பரவும்
மறை ஆகமன் துதிக்கும் இறைவன் அருள் பெறவே
நமது காலம் செல்லுமுன் கனதனமும் தந்தார்க்கு நன்றி
கருதி கண்ணாரக்கண்டு உள்ளுருகிப் பணியப் பலர்
காண அறுமுகனும் கணபதியும் சண்டேச்வரனும்
சிவகணமும் தொடர கலைவாணி
திருவும் பணி கற்பகநாயகி வாமன்
அதிகார நந்தி சேவைதனைக் (காணக் கண் கோடி வேணும்)
இந்தப் பாடல் அதிகாரநந்தி சேவையன்று திரு பாபநாசம் சிவனால் பாடப்பெற்ற சிறப்புப் பாடல்.
திருமதி.லக்ஷ்மி ரங்கராஜன் பாடியுள்ள இந்தப் பாடலைக் கேட்க
'><"இங்கே" கிளிக்"> செய்யவும்

15 comments:

இலவசக்கொத்தனார் said...

பிரமாதமான வர்ணனை,சூப்பர் பாட்டு!!

தி. ரா. ச.(T.R.C.) said...

வாங்க கொத்ஸ். இப்போதுதான் அதிகார நந்தி சேவையைக் கண்டு வீடு திரும்பினேன். இறைவன் அருளால் 5 வருடங்களாக தொடர்ந்து அதிகார நந்தி சேவையைக் காணும் பேறு பெற்றேன்.இந்தப்பாடல் மதுரை மணி அவர்களால் சிறப்பித்து பாடும் பாடல்.

jeevagv said...

ஆகா, இதுவரை இந்தப் பாடலை மட்டுமே கேட்டு வந்திருக்கிறேன். இப்போது உங்கள் விளக்கமும், சேவையின் நேரடி வர்ணணையும் படிக்கக் கிடைத்தது - அருமை.
கோடி அருள் மழை பொழிபவனைக் - காண
க் கண்
கோடி வேண்டும்தான்.

பணியும், மண்ணும், விண்ணும், பரவும் : காம்போதியின் இனிமைக்காவே சொற்கள் எப்படி வந்து விழுத்திருக்கின்றன பாருங்கள்!


பி.கு:அடுத்த வாரம் காஞ்சியில் ஏகாம்பரநாதருக்கு அதிகார நந்தி சேவை எனக் கேள்விப்பட்டேன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

வாங்க ஜீவா.சிவனுக்கு வார்த்தைக்கா பஞ்சம்

மதியோடு தாராகணம் நிறையும் அந்தி


வானமோ கமலவனமோ என மன்ம்


மயங்க அகளங்க அங்கம் யாவும் இலங்க

என்ன வளமான கற்பனை
அபாங்க
ம்.

குமரன் (Kumaran) said...

நாங்களும் அதிகார நந்தி வாகனத்தில் கபாலீஸ்வரரைத் தரிசிக்கும் படி செய்தமைக்கு மிக்க நன்றி தி.ரா.ச.

மதுரையில் முதலில் விநாயகர், பின்னர் முருகன், பின்னர் பிரியாவிடை அம்மனுடன் சுவாமி, பின்னர் மீனாட்சி, பின்னர் சண்டிகேஸ்வரர் என்று தானே பஞ்சமூர்த்திகளின் உலா இருக்கும். நீங்கள் விவரித்ததைப் பார்த்தால் சோமாஸ்கந்தரை நினைவுபடுத்துவதைப் போல் கபாலீஸ்வரருக்குப் பின்னர் முருகப்பெருமான் அவருக்குப் பின் கற்பகவல்லி என்று வருவது போல் தோன்றுகிறது. அப்படித் தானா?

பேருந்தில் அலுவலகம் செல்லும் போது இந்த இடுகையைப் படித்தேன். அதனால் பாடலைக் கேட்க இன்னொரு முறை வரவேண்டும். :-)

Geetha Sambasivam said...

ரொம்பவே நன்றி சார், கிட்டே இருந்து பார்க்க முடியாட்டாலும், இணையத்திலாவது பார்க்க முடிஞ்சதே! இன்னிக்குத் தினசரியிலும் வந்திருக்கு,

தி. ரா. ச.(T.R.C.) said...

@ குமரன் . வாங்க. முதலில் விநாயகர்தான் வருகிறார். பின்னர் கபாலி நாயகியுடன் சேர்ந்து நந்தியின் மேல் வருகிறார். சரியாக காலை6.00 மணிக்கு கோபுரவாசலின் கீழே தரிசனம். அங்குதான் கற்பூர ஆராத்தி அதைக் காணத்தான் கூட்டமும். விநாயகர் படத்தை பெரிதாக்கி பாருங்கள் கபாலியின் கோபுர தரிசனத்தைக் காணலாம்.
வீடு சேர்ந்தபின் மெதுவாக பாட்டைக் கேளுங்கள்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@வாங்க மேடம். எல்லாம் மக்கள் கண்டு களிக்கத்தான் பாட்டும் படமும்.ஆனா ஆத்திகத்தில் உங்களை மிஞ்ச முடியுமா?

sury siva said...

சென்னையில் அன்று இல்லாததால் திரு உலாவினைக் காண முடியவில்லயே என நினைத்த என் குறை தீர்த்து வைத்துவிட்டீர்கள். மிகவும் நன்றி.

அதிகார நந்தி படம் எனது கணினியில் வரவில்லை. நந்தியாருக்கு மனமில்லை போலும். சற்றே கிருபை செய்யுமய்யா..என்னுடைய கணினிக்கு வாருமைய்யா.. (இது ஏதேனும் காபி ரைட் படமோ ? )
ஒரு காபி சூடாக குடித்துவிட்டு மறுபடியும் download பார்க்கவேண்டும்.

திருமதி லக்ஷ்மி ரங்கராஜன் அற்புதமாக பாடுகிறார்கள். காம்போதி ராகத்திற்கே உரிய‌
கம்பீரம் அவரது குரலில் அனாயாசமாக ஒலிக்கிறது. குரல் வளம் ஆண்டவனின் வரம்.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://arthamullavalaipathivugal.blogspot.com

வல்லிசிம்ஹன் said...

அருமையாகத் தரிசனம் ஆச்சு. தி.ரா.ச பாட்டை அனுபவித்துப் பாடியிருக்கிறார் லக்ஷ்மி ரங்கராஜன்.

நீங்கள் சொல்வது போல நந்தி அதிகாரமாகத்தான் காட்சி அளிக்கிறார்.
நன்றிம்மா.

மெளலி (மதுரையம்பதி) said...

//திரு உலாவினைக் காண முடியவில்லயே என நினைத்த என் குறை தீர்த்து வைத்துவிட்டீர்கள். மிகவும் நன்றி.//

ரீப்பீட்டே...

அரிய பாட்டினை அறியத்தந்தமைக்கு நன்றி. :)

மெளலி (மதுரையம்பதி) said...

//திரு உலாவினைக் காண முடியவில்லயே என நினைத்த என் குறை தீர்த்து வைத்துவிட்டீர்கள். மிகவும் நன்றி.//

ரீப்பீட்டே...

அரிய பாட்டினை அறியத்தந்தமைக்கு நன்றி. :)

தி. ரா. ச.(T.R.C.) said...

@வாங்க சூரி ஐய்யா. பட்ம் தினமலரிலிருந்து எடுத்தது. படம் வருதே. பாட்டு பாடியது நமக்குத் தெரிந்தவர்தான்.ஸிண்டிகேட் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்து விட்டி இப்போது முழுநேர பணியாக சங்கீதத்தில் கவனம் செலுத்துகிறார்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@வல்லியம்மா. நீங்கள் கொடுத்து வைத்தவர் மயிலையிலேயே இருப்பவர். உற்சவங்கங்களை ந்னறாக பார்க்கலாம்

தி. ரா. ச.(T.R.C.) said...

@வாங்க மௌளி சார். மேல்கோட்டை நரசிம்மர் என்ன சொல்லுகிறார். பிளாக் மீட்டிங் பலமா?