ஒரு மெய்வடிவாகி விளங்குகின்ற தண்ணாளாகவும் "' திகழும் அபிராமியை போற்றி மாறாத பக்தியுடன் வணங்கியவர் சுப்பிரமணிய சர்மா.அவருக்கு காணும் பெண்கள் எல்லாரும் அபிராமிதான்.ஆனால் இவர்மீது பொறாமை கொண்ட சிலர் இவரைப்பற்றி அவதூறான செய்திகளை பரப்பினார்கள்.
தை அமாவாசையன்று காவிரிப்பூம்பட்டினத்தில் கடலாடி , திருக்கடவூருக்கு வருகிறார்.அப்போது தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர்,அபிராமியின் சந்நிதியில் அமர்ந்து அவளது சந்திர பிம்ப வதனத்தின் ஒளித்தியானத்தில் கட்டுண்டு கிடந்த சுபிரமணிய சர்மா மன்னன் வருகையை உணரவில்லை.மாங்காய் உண்டு மலைமேல் இருப்பவர்க்கு தேங்காய் பால் ஏதுக்கடி என்ற நிலயில் இருந்தார்.மன்னனை வணங்கவும் இல்லை. இதுதான் சமயம் என காத்திருந்த இவர்பால் பொறாமை கொண்டவர்கள் மன்னனிடம்""அரசே உங்களையும் மதிக்காது அமர்ந்திருக்குமிவரது திமிரைப் பாருங்கள். இவர் நடைமுறைச் சிந்தனை கூட இல்லாதவர். இவரிடம் இன்று என்ன திதி என்று கேட்டுப்பாருங்கள் அது கூட அவருக்கு நிச்சியமாகத் தெரியாது"" என்று கூற அரசனும் அவ்வாறே சுபிரமணிய சர்மாவைக் கேட்டார். அபிராமியின் நிறைமதி முகதரிசனம் கண்டு கொண்டிருந்த சர்மாவும்""இன்று பௌர்ணமி"" என்றுகூறிவிடுகிறார்.கோபமுற்ற அரசன் அமாவசையான இன்று பௌர்ணமியை சந்திரனைக் காட்ட வேண்டும் இல்லையேல் உன் தலை தரையில் உருளும் என்றார்
தன்னிலைக்கு வந்த சர்மாவும் விபரீதத்தின் தன்மையை உணர்ந்தார் .ஆனால் பயப்படவில்லை.கேட்டவனோ மன்னன் என்னை பதில் சொல்லச் சொல்லியதோ அபிராமி..என்னைக்காப்பது அவள் கடமை என்று கூறிவிட்டு அம்மையின்மீது பக்திச் சுவையும் தமிழ்ச் சுவையும் சொட்டும் அந்தாதி 100 பாடல்களைப் பாடத்தொடங்கினார். 79 ஆவது பாடலான
"விழிக்கே அருளுண்டு, அபிராமவல்லிக்கு, வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு, அவ்வழிகிடக்க,
பழிக்கே சுழன்று,வெம்பாவங்களே செய்து,பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு, என்ன கூட்டு இனியே""
என்ற பாடலைப் பாடியதும் அந்த அதிசயவல்லி தன் தாடங்கத்தைசுழற்றி வானில் வீசினாள்.ஈஸ்வரியின் இரு காதுகளில் இருக்கும் தாடங்கள்தான் சூர்யனும் சந்திரனும் என்று ஆதிசங்கரர் அம்பாளை வர்ணித்ததுபோல அந்தத் தாடங்கம் வானவீதியில் பௌர்ணமி சந்திரனாக ஒளிவீசியது.அமவாசையன்று முழுமதியைக் கண்ட குறைமதி மன்னனும் தன் தவற்றை உணர்ந்து சர்மாவிடம் மன்னிப்பு கேட்டு அவர் பெருமையை உலக அறியச் செய்கிறன். அபிராமி அந்தாதியை பாடி முடித்த சுபிரமணிய சர்மாவும் ""அபிராமி பட்டர்""ஆனார்.
-
அபிராமி அந்தாதியின் முதல் பாடல்
உதிக்கின்ற செங்கதிர் உச்சி திலகம்
என்ற அம்பாளின் நாமத்தை எப்படி பட்டரும்,சங்கரரும் லலிதா ஸகஸ்ரநாமத்திலும் அனுபவித்தார்கள் என்று நாளை பார்க்கலாமா
அபிராமி அந்தாதியின் முதல் பாடல்
உதிக்கின்ற செங்கதிர் உச்சி திலகம்
என்ற அம்பாளின் நாமத்தை எப்படி பட்டரும்,சங்கரரும் லலிதா ஸகஸ்ரநாமத்திலும் அனுபவித்தார்கள் என்று நாளை பார்க்கலாமா
4 comments:
பாடல்களுடன் பதிவிடுவது உங்கள் ஸ்பெஷாலிட்டி. 101வது பதிவுக்கு வாழ்த்துக்கள். நவராத்திரி ஸ்பெஷல் வேற இருக்கும்னு நினைக்கிறேன். :)
பதிவிடற நினைப்புல அக்டோபர் 31ம் தேதியும் நியாபகத்தில் இருக்கட்டும்!னு உமா மேடம் சொல்ல சொன்னாங்க. :))
எளிமையாக அதே நேரத்தில் சுவையாக தந்தீர்கள் அபிராமி பட்டர் கதையினை.
//அபிராமி அந்தாதியின் முதல் பாடல்
உதிக்கின்ற செங்கதிர் உச்சி திலகம்
என்ற அம்பாளின் நாமத்தை எப்படி பட்டரும்,சங்கரரும் லலிதா ஸகஸ்ரநாமத்திலும் அனுபவித்தார்கள் என்று நாளை பார்க்கலாமா//
படிக்க காத்திருக்கிறேன்
இந்த ஐம்புலக் கயவர் தன்னோடு என்ன கூட்டு இனியே?
சுப்பிரமணியரின் திருக்கதைக்கு நன்றிகள் தி.ரா.ச. ஐயா.
எத்தனை முறை படிச்சாலும் அலுக்காத அபிராமி பட்டரும், அபிராமி அந்தாதியும், நன்றி.
Post a Comment