Saturday, September 27, 2008

அம்பிகையின் ஆயிரம் நாமங்கள்

இது நூறாவது பதிவு கௌசிகத்தில்

திருகடவூரில் காலசம்ஹாரமூர்த்தியின் சக்தியாகத் திகழ்பவள்பாலம்பிகை. அமுதகடேஸ்வரரின் ஷக்தியாக்த் திகழ்பவள் அபிராமி.திருக்கடவூர் என்பதுஅஷ்ட விரட்டத் தலங்களுள் ஒன்று. சிவன் வீரச்செயல் புரிந்த இடங்கள் எட்டு. அவற்றுள் காலனை காலால் உதைத்து அவனுடைய மமதையை ஸ்ம்ஹரித்துக் காலஸம்ஹார மூர்த்தியாக வடிவெடுத்த தலம் திருக்கடவூர். பாற்கடலைக் கடைந்து எடுத்து அமிர்தத்தைப் பகிர்ந்துகொள்வதற்காகத் தேவர்களும் அசுரர்களும் மாஹேஸ்வரனிடம் விண்ணப்பிக்க மஹாதேவனும் அமிர்தகடத்தை மானும் புலியும் பகையின்றி நட்புறவோடு நீர் உண்ணும் நிலையில் வைத்துப் பின்ண்ணக் கட்டளையிட , அவர்களும் அவ்வாறே பிஞ்சிசிலவனம் எனும் தலத்தில் அதனை வைத்துவிட்டு அனுஷ்டானத்திற்காகச் சென்றனர். திரும்ப வந்து பார்த்தபோது அமிர்தகடமானது சிவலிங்கமாக உருவெடுத்துப் பிஞ்சில வனத்திலேயே அமிர்தகடசே மூர்த்தியாகப் பிரதிஷ்டையானது
அமுதம் தேவர்களும் அசுரர்களுக்கும் மட்டுமின்றி பக்தியுடன்வந்து தொழும் அடியவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்பதே அவன்நோக்கம்.பிஞ்சிலம் என்றால் ஜாதிப் பூ என்று பொருள். இதுவே அமிர்தகடம் ஸ்தாபனம் ஆனதால் திருகடவூர் என்று ஆனது.
மிருகண்டு முனிவருக்கு பல காலம் மகப்பேறு இல்லாமல் இருக்க அவர் சிவனிடம் வேண்டியபோது 16 ஆண்டுகளே வாழக்கூடிய மார்க்கண்டேயரைப் மகனாகப் பெற்றார். அமுதகடேஸ்வரரிடம் அகலாத பக்திகொண்ட மார்கண்டேயரைப் பதினாறு வயதான பின்பு இழுத்துச்செல்ல காலதேவன் வந்தபோது மார்கண்டேயர் அமிர்தகடேஸ்வரரை கட்டிக்கொண்டார்.பாலகன் மீது காலன் பாசக்கயிற்றை வீச அது அமிர்தகடேஸ்வரரையிம் சேர்த்து பிணத்தது.அதனால் வெகுண்டெழுந்த சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் தமது இடது காலால் காலனை உதைத்து ஸ்ம்ஹாரம் புரிந்து மார்க்கண்டேயரைக் காத்தார். மார்க்கண்டேயருக்கு "என்றும் பதினாறு" என்ற சிரஞ்சீவி வரன் அளித்த தலம் திருக்கடவூராகும்.
காலன் தனக்கிட்ட கட்டளையைத்தான் செய்தான் பின்பு அவனுக்கேன் இந்த முடிவு.அவன்செய்த தவறு பாசக்கயிற்றை மார்கண்டேயன் மட்டுமல்லாது சிவனின் மீதும் பினைத்ததால் வந்த துன்பம் அது.அதிகார துஷ்பிரயோகத்தால் வந்த வினை.சுப்ரமணிய சர்மாவின் கதையை அடுத்த பதிவில் பார்ப்போம்.

13 comments:

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

நூறாம் கெளசிகப் பதிவுக்கு வாழ்த்துக்கள் திராச ஐயா!

அடியேனுக்கு இந்நேரம் ஏற்ற திருக்கடையூர் பதிவு! நன்றி! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

என்னது இது தான் நூறாவது பதிவா?
ஒரு சைபர் கம்மியா கவுன்ட் பண்ணிட்டீங்களோ? :)
நீங்க காலம் காலமா எழுதுவது போல ஒரு உணர்வு!

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல பதிவு நூறாயிரம் கண்டு மகிழ வாழ்த்துகிறேன், வணங்குகிறேன்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இன்னிக்கி காலையில் தான் வந்தேன்...
இதோ சில மணியில் திருமலைப் பயணம்!

வந்து மாட்லாடுகிறேன் திராச :)

கீதா சாம்பசிவம் said...

நூறு வாழ்த்துகள், நூறாவது பதிவுக்கு, மீ த ப்ர்ஷ்டு??
தெரியலை, அடுத்த பதிவுக்கு ஆவலுடன் வெயிட்டிங்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அவன்செய்த தவறு பாசக்கயிற்றை மார்கண்டேயன் மட்டுமல்லாது சிவனின் மீதும் பிணத்ததால் வந்த துன்பம் அது.அதிகார துஷ்பிரயோகத்தால் வந்த வினை//

கர்ம வினை ஆற்றும் போதும் கடமையைச் செய்யும் போதும் தனக்குரிய கர்ம எல்லையை மீறக் கூடாது.

கர்மத்தின் மேலுள்ள பிடிப்பால், தர்மத்தின் மீது பாசம் வீசலாமா என்பதை சிவபெருமான் உலகுக்கு எடுத்துக் காட்டிய அருள் விளையாடலில் தான் எத்தனை சூட்சுமம்!

//திரும்ப வந்து பார்த்தபோது அமிர்தகடமானது சிவலிங்கமாக உருவெடுத்துப் //

அமிர்த கடம் லிங்கமாக ஆகிய பின் அமிர்தம் வழங்கல் எப்படி நடைபெற்றது?
இல்லை அமிர்தம் கொண்டுள்ள கடம் மட்டும் சிவலிங்கம் ஆனதா திராச?

மதுரையம்பதி said...

முதலில் நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

மார்கண்டேயர் - மார்கண்டேய புராணம் தொடர்பு?...இவர்தான் அவரா?

செல்லி said...

ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை................முக்கண்ணியை துழுவார்க்கு ஏது தீங்கு?
மார்க்கண்டேயர் கதை நல்லாருக்கு.

உங்க 100வது பதிவுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்

வல்லிசிம்ஹன் said...

வாழ்த்துகள் தி.ரா.ச சார்.
அம்பிகை தரிசனம்
மஹாலயத்தோடு கிடைத்தது.
நன்றி நன்றி.

சிலசமயம் மெயிலைத் தவறா விட்டுவிடுவேன். இன்னிக்குச் சிக் கெனப் பிடித்துவிட்டேன்.
வெகு எளிமையாக இனிமையாக வளை மாதிரியே உங்க பதிவும் இருக்கு. நவராத்திரி வாழ்த்துகள்.

ஜீவா (Jeeva Venkataraman) said...

நவராத்ரி நேரத்தில் நூறுக்கு வாழ்த்துக்கள் ஐயா.

இலவசக்கொத்தனார் said...

100 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்!

கபீரன்பன் said...

தி.ரா.ச சார்,

நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள் நூறு. போன வருஷம் நவராத்திரிக்கு தினம் ஒரு பதிவாய்( சுண்டலுமாய்) கொடுத்ததை மறக்கவில்லை.
இந்த வருஷமும் உண்டா?

அம்மையப்பன் அருள் மேலும் பலநூறு பதிவுகளுக்கு வழிசெய்யட்டும்.
நன்றி

குமரன் (Kumaran) said...

நூறாவது இடுகைக்கு வாழ்த்துகள் தி.ரா.ச. ஐயா. மிக்க மகிழ்ச்சி.

அடியேன் கோத்திரம் மார்கண்டேய கோத்திரம். அதனால் இந்த ஊர் சுவாமியிடமும் ஒப்பிலியப்பம் கோவில் சுவாமியிடமும் எனக்குத் தனிப்பட்ட உரிமை இருக்கிறது என்கிறேன். சரியா? :-)

Kailashi said...

நூறாவது பதிவிற்க்கு நல்வாழ்த்துக்கள்.

அன்னையின் ஆயிரம் திருநாமங்கள் விளக்கம் ஆரம்பித்தற்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்.