Monday, September 29, 2008

அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் (3)

அம்பாளுக்கு ஆயிரம் நாமங்கள் மட்டும்தானா என்ன ! அவள்தானே நாமரூபா. எல்லா வார்த்தைகளும் அவளிடமிருந்துதான் உருவாகின.காளிதாசன் கூறும் போது வாகர்த்தாவி வசம் விருக்த்தவ் வாகர்த்த பிரபத்தியே, வார்த்தைகளும் அதிலிருந்து வரும் பொருளும் நீதான் என்கிறார்.இருந்தாலும் இந்த நவராத்ரி திருநாளில் எனக்குத் தெரிந்த வரை லலிதா ஸ்ஹஸ்ரநாமத்திலிருந்து சில நாமக்களை பற்றி எழுத எண்ணி அவளின் அருளோடு முயல்கிறேன் கொலுவும் உண்டு சுண்டலும் உண்டு. தினமும் வாருங்கள் வந்து அம்பிகையின் அருளுக்கு பாத்திரமாகுங்கள். முதல் நாமவாக உதயத்பானு ஸ்கஸ்ராபா என்ற நாமத்தை எடுத்துக்கொள்ளலாம்.அம்பிகையின் முகத்தைவர்ணிக்கும் எல்லோரும் இதை கையாண்டு இருக்கிறார்கள். அம்பாளுடைய முகாரவிந்தம் எப்படி இருக்கும் தெரியுமா? ஆயிரம் சூரியர்கள் விடிகாலையில் உதிக்கும் போது அதன் கிரணங்கள் எப்படி சிவப்பு வர்ணமாக இருக்குமோ அப்படி இருக்குமாம்.பின்னர், வேறு ஒரு இடத்தில் அவளது முகம் சரஸ்சந்திர நிபானனா சரத்காலத்தில் உதிக்கும் குளுமைபொருந்திய சந்திரனைப் போல் இருக்குமாம். இதென்ன எப்படி சூரியனைப் போலும் சந்திரனைப் போலும் இருக்குமா ஒருவரது முகம் முரன்பாடாக இருக்கிறதே என்கிறீர்களா? மகிஷாசுரன், மதுகைடபன், போன்ற அசுரர்களை வதைக்கும்போது உக்கிரமாக சிவந்து உத்யத்பானு ஸ்காஸ்ராபாவாக இருக்கும்.அபிராமி பட்டர்,போன்ற அடியார்களை காக்கும் போது ஸ்ரஸ்ச்ந்திர நிபானனாவாக இருக்கும்.ஒரு புலி காட்டில் தன் உணவுக்காக இரையை வேட்டையாடும்போது அதனுடைய முகத்தைப் பார்த்திருக்கிறீர்களா வெங்கண் சிவந்து வடிவால் முறுக்கி தன்கோரப்பற்களினால் கடித்து குதறி உக்கிரமாக உதயசூரியன்போல இருக்கும். அதுவே பிறந்து 2 நாட்களே ஆனா தன் குட்டிகளை காப்பதற்காக ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு தூக்கிக்கொண்டுபோகும்போது அதே பற்களைத்தான் உப்யோகித்து அதற்கு வலியில்லாமல் வாயில்கவ்விக் கொண்டு போகும். ஒரு சாதரண மிருகத்திற்கே வித்தியாசமான மறுபட்ட முகத்தோற்றம் கொண்டு வரும்போது அகிலாண்ட நாயகிக்கு இது ஒரு பெரிய விஷயமா?
இந்த உதயத்பானு ஸகஸ்ராபாவைத்தான் ஆதிசங்கரரும் மதுரை மீனாக்ஷியம்மனின் முகத்தை வர்ணிக்கும்போதும் உப்யோகப் படுத்துகிறார்.""உத்யத்பானு ஸஹ்ஸ்ர கோடி ஸதிர்ஸாம்"". மீனாக்ஷியம்மனின் முகம் எப்படி இருக்கிறதாம் ஆயிரம் உதயசூரியன் உதிக்கும் போது ஏற்படும் பிராகாசமாக இருக்குமோ அப்படி.
அபிராமபட்டரும் லேசுபாட்டவரா அம்பிகையின் மீது அந்ததாதி பாடுபோது முதல் படலிலேயே முதல் வரியே""உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகமுடையாய்"", அபிராமியின் முகத்தில் இருக்கும் திலகம் எப்படி இருக்கிறதாம் தெரியுமா? காலையில் உதிக்கின்ற கதிரவன் எப்படி சிவந்து சிவப்பாகாக இருக்குமோ அதுபோன்று அவளுடைய திலகம் ஒளிர்விடுகிறதாம் அப்படியென்றாள் அம்பாளின் முகம் எவ்வளவு பிரகாசமாக இருக்கும் என்று யூகித்துக்கொள்ளுங்கள்
நாளைக்குத்தான் நவராத்திரி அதலால் சுண்டல்(அம்பி)நாளைக்குத்தான்
.

6 comments:

கீதா சாம்பசிவம் said...

//ஆதிசங்கரரும் மதுரை மீனாக்ஷியம்மனின் முகத்தை வர்ணிக்கும்போதும் உப்யோகப் படுத்துகிறார்.""உத்யத்பானு ஸஹ்ஸ்ர கோடி ஸதிர்ஸாம்"". மீனாக்ஷியம்மனின் முகம் எப்படி இருக்கிறதாம் ஆயிரம் உதயசூரியன் உதிக்கும் போது ஏற்படும் பிராகாசமாக இருக்குமோ அப்படி.//

இந்த முறை மதுரை சென்றபோது அவள் முகத்தைப் பார்க்கமுடியலை என்ற குறை இன்னும் தீரவில்லை. நிலைமையும் அப்படியே இருப்பதாய்த் தான் மதுரையிலிருந்து வருபவர்களும் சொல்கின்றனர். உங்களைப் போல் எழுதாவிட்டாலும், நாங்களும் ஏதோ பதிவு போடறோமில்ல?? :((((((((

ambi said...

ஆதி சங்கரர், அபிராமி பட்டர் போன்றோர் அம்பிகையை நேரில் பாத்ததனால் ஒரே பொருள்படும்படியா செங்கதிர் என்ற உவமையை கையாண்டு இருக்காங்க போலிருக்கு.

புலி உதாரணம் மிக அருமை.

//உங்களைப் போல் எழுதாவிட்டாலும், நாங்களும் ஏதோ பதிவு போடறோமில்ல?? //

ஆமா ஆமா! புட்டு படத்தை இங்கிருந்து சுட்டு அங்க போட்டு, எவ்ளோ பண்றோம்? :p

புட்டுக்கு மண் சுமந்தான் ஈசன். பிரம்படி கூட பட்டதா கேள்வி. :))

மதுரையம்பதி said...

ஆஹா....நானும் இது போல 4-5 போஸ்ட் போட்டிருக்கேன்...ஆனா இவ்வளவு அருமையா, எளிமையாக எழுத வரல்ல.

"அருணாம் கருணாதரங்கிதாக்ஷிம்", "அருண கிரண ஜாலை" இதிலெல்லாமும் அன்னையின் அருட்பிரகாசத்தை உதய சூர்யனது செந்தூர வர்ணத்தைக் கொண்டே சொல்லியிருக்காங்க.

Sumathi. said...

ஹலோ சார்,

ஆஹா அருமையா இருக்கு அந்த கோலமும் கொலுவும்.
எனக்கு நாளைக்கு சுண்டல் ஒரு பார்சல் ப்ளீஸ்.

REVATHY said...

Hallo Romba Thanks for invitation and super song
engathu Kolu eppadi irundhadhu
Nalaiku than sundal vango
Revathy

குமரன் (Kumaran) said...

எனக்கு புரியற மாதிரி எழுதியிருக்கீங்க தி.ரா.ச. ஐயா. நன்றி. :-)