Thursday, February 18, 2010

ஸ்ரீ சனீஸ்வரர் 3




இராவணன் தன் பராக்கிரமத்தால் நவ கிரகங்களைப் பிடித்துத் தன் சிம்மாசனத்துப் படிகளாகப் போட்டுவிட்டான். அவர்கள் முதுகில் கால் வைத்து அரியணை ஏறுவது அவன் வழக்கம். அதை ஒரு நாள் நாரதர் கண்டு, ""சனி பகவானே! எல்லாரையும் நீர் பிடிப்பீர். இப்பொழுது இராவணன் உம்மைப் பிடித்து விட்டானே?'' என்று பரிகசித்ததும் சனீஸ்வரன், ""என்ன செய்வது? என்னைக் குப்பு றப் போட்டு விட்டான். அதனால் அவனைப் பார்த்துப் பிடிக்க முடியவில்லை'' என்றார். அவ்வளவுதான். நாரதர் நேராக இராவணனிடம் சென்று, ""இராவணா! உன்னுடைய கீர்த்திக்கு சனியைக் குப்புறப் போட்டு முதுகிலா மிதிப் பது? மார்பின் மீதல்லவா அடிவைக்க வேண்டும்?'' எனக் கூற, உடனே இராவணன் அப்படியே மாற்றி விட்டான். அவன் படிகளில் ஏறும்பொழுது சனி திருஷ்டி ஏற்பட்டு விட்டது. பலன் யாவர்க்கும் தெரியும்.ராவணனுக்கு அழிவு அந்த நாள் முதல் ஆரம்பம்.

சரி திவாகர தனுஜம் பாட்டை இப்பொழுது பார்த்து கேட்டு ரசிக்கலாம்







தொடரும்

15 comments:

Geetha Sambasivam said...

நல்லா இருக்கு, செளம்யாவின் பாட்டும், பதிவும்,

@அம்பி, சுயபுராணம் பாடிண்டு இருக்கீங்க?? சாரைப் பாருங்க, சனி புராணம் சொல்லிண்டு இருக்கார், நீங்களும் எழுதறேன்னு சொல்லிக்கிறீங்க! :P:P:P:P:P:P:P

Porkodi (பொற்கொடி) said...

arumai uncle! :)

ambi said...

பாட்டு என்ன ராகம்?
1)சனி பகவானுக்கு ப்ரியமான ராகம்னு ஏதேனும் இருக்கா?

2) எப்படி தீக்ஷதர் அம்பாள் மீது நவார்ண க்ருதிகள் இயற்றி இருக்கிறாரோ அதே மாதிரி யாரேனும் சனி பகவான் மீது ஸ்பெஷல் க்ருதிகள் இயற்றி இருக்கிறார்களா?

3) முருகனுக்கு ஷண்முக ப்ரியா, அம்பாளுக்கு கெளரி மனோகரி(சரியா?), இதே மாதிரி ஒவ்வொரு கிரகத்துக்கும் தனிப்பட்ட ராகங்கள் இருக்கா?

ரொம்ப நாளா இந்த சந்தேகம் இருக்கிறது. முடிந்தால் இதற்கான பதில்களை தனிப் பதிவாக போடவும்.

ambi said...

கீதா பாட்டி, நாங்க டெக்னிக்கலா பேசிக்கறோம்,

கரகரப்ரியாவை ஆதி தாளத்துல பிடிச்சு, ஷண்முக ப்ரியாவை சரணத்துல வெச்சு, ஸ்ரீரஞ்சனியை மத்திமத்துல முடிச்சா வருவது என்ன ராகம்? இதுக்கு பதில் சொல்லுங்க பாப்போம். :))

Geetha Sambasivam said...

//கீதா பாட்டி,//

@அம்பி, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்



//நாங்க டெக்னிக்கலா பேசிக்கறோம், //

நம்பிட்டோம்ல! :P:P:P:P:P:P

தக்குடு said...

//ரொம்ப நாளா இந்த சந்தேகம் இருக்கிறது. முடிந்தால் இதற்கான பதில்களை தனிப் பதிவாக போடவும்.//

டேய் அண்ணா, எப்படிடா உன்னால மட்டும் இப்படியெல்லம் படம் காட்ட முடியுது?? TRC மாமா, இவன் 'கண்டசாப்பு' தாளம் இல்லை ராகம்தான்னு ஒத்தக்கால்ல நின்ன ஆளு! ஒங்க பதிவுல வந்து எதோ பெரீய சங்கீத கலாநிதி மாதிரி சந்தேகம் எல்லாம் கேட்டுண்டு இருக்கான்.

மெளலி (மதுரையம்பதி) said...

ரொம்ப நாளாச்சு இந்தப் பாடலைக் கேட்டு, நன்றி ஐயா! :)

தி. ரா. ச.(T.R.C.) said...

வணக்கம் கீதா மேடம்.இந்த நக்கல்தனே வேண்டாம்கிறது. அம்பி சுயபுராணம் பாடரான் நான் சுய புரணத்துக்குப் பதிலா சனி புராணம் எழுதறேன்.இதைத் தானே சொல்ல வந்தீங்க.

தி. ரா. ச.(T.R.C.) said...

பொற்கொடி மிகவும் நன்றி. ரங்கமணி சொன்னதையெல்லாம் படிச்சி முடிச்சி இப்போ ப்ரீ ஆயாச்சா?

தி. ரா. ச.(T.R.C.) said...

தம்பி அண்ணா பெரிய சங்கீத கலாநிதியோ இல்லையோ ஆனா என்னை என்னமோ சிறிய கலாநிதின்னு கேட்டானே கேள்வி எனக்கும் ஒன்னும் தெரியாதுன்னு உனக்கு மட்டும்தான் தெரியும்

தி. ரா. ச.(T.R.C.) said...

மௌலி சார் நேன்க வந்தும் ரொம்ப நாள் ஆச்சு. மௌலியுடன் ஒரு நாள்ன்னு ஒரு பதிவு போடனும்.ஆனா அம்பத்தூர் பக்கம் ஒரே புகையா இருக்குமேன்னு பயம்தான்

தி. ரா. ச.(T.R.C.) said...

பாட்டு என்ன ராகம்?
ராகம் யதுகுல காம்போதி

1)சனி பகவானுக்கு ப்ரியமான ராகம்னு ஏதேனும் இருக்கா?
நவகிருகங்களுக்குஎன்று பிரியமான அல்லது ராகமோ கிடையாது. பிரியமான தெய்வம்தான் உண்டு. சனீ-ஸ்வரனுக்கு பிரியமான தெய்வம் விஷ்ணு.

2) எப்படி தீக்ஷதர் அம்பாள் மீது நவார்ண க்ருதிகள் இயற்றி இருக்கிறாரோ அதே மாதிரி யாரேனும் சனி பகவான் மீது ஸ்பெஷல் க்ருதிகள் இயற்றி இருக்கிறார்களா?
சனி பகவான் பேரில் தீக்ஷதர் மட்டும்தான் கீத்தனை செய்து இருக்கிறார். எல்ல நவகிருகங்களின் பேரில் பாடியவைதான் நவக் கிருக கீர்த்தனைகள்

3) முருகனுக்கு ஷண்முக ப்ரியா, அம்பாளுக்கு கெளரி மனோகரி(சரியா?), இதே மாதிரி ஒவ்வொரு கிரகத்துக்கும் தனிப்பட்ட ராகங்கள் இருக்கா?
தெய்வங்களுக்கு என்று தனி ராகம் கிடையாது. சில ராகங்களின் பெயரில் தெய்வங்களின் பெயர்கள் இருக்கலாம் அவ்வளவுதான்.கிருகங்களுக்கும் தனியாக ராகம் எதுவும் கிடையாது
போதுமா. மனசிலே எண்ணமோ சம்பூர்ண ராமயணம் சினிமாவில் மண்டோதரி ராவணனை சங்கீதத்தில் கேள்வி கேட்டா மாதிரி நினைப்பு.

Geetha Sambasivam said...

திராச சார், இப்படியெல்லாம் கேட்டு பில்ட் அப் கொடுத்தால் தானே எல்லாரும் அட, அம்பிக்குத் தெரியாத விஷயமே இல்லைனு பேசிப்பாங்க, இந்த டெக்னிக் எல்லாம் உங்களுக்குத் தெரியலை, பாவம் சார் நீங்க! :P:P:P:P:P

Geetha Sambasivam said...

போர்க்கொடி, சமையல் வேலைதான் இல்லை, ரங்க்ஸ் பண்ணிடறார், படிக்கிற வேலையாவது ஒழுங்கா முடிச்சாச்சா இல்லையா?? :P:P:P:P

ambi said...

//மனசிலே எண்ணமோ சம்பூர்ண ராமயணம் சினிமாவில் மண்டோதரி ராவணனை சங்கீதத்தில் கேள்வி கேட்டா மாதிரி நினைப்பு//

ஹிஹி, TRC sir, நீங்க தளும்பாத குடம், அதனால் அடிக்கடி இப்படி உங்களை ஆட்டி ஆட்டி தான் விஷயத்தை வாங்க வேண்டி இருக்கு. சிலர் முத்துலெட்சுமி மாதிரி அதான் எனக்கு தெரியுமே! அதான் எனக்கு தெரியுமே!னு டெம்ளேட் பின்னூட்டம் போடறாங்க. :))


@கீதா பாட்டி, இந்த சமாளிக்கற வேலையே வேண்டாம். கேட்ட கேள்விக்கு பதில், பதில் மட்டும். இல்லாட்டி தெரியாதுனு சொல்லிட்டு போயிட்டே இருங்க. தஞ்சாவூரை சேர்ந்த சாம்பு மாமாவுக்கு இப்படி ஒரு சோதனையா..? :))