சொற்களும் அறியேன் சொற்களின் பொருளும் அறியேன். கவிதையும் அறியேன் உரை நடையும் அறியேன் ஆறுமுகங்களுடைய முருகன் ஒளிவெள்ளமாக என் இதயத்தில் புகுந்து நிலையாக அங்கேயே இருப்பதால் சொல்லும் பொருளும் அவனருளல் தானாகவே வெளிப்படுகிறது தானம்செய்தும் அறிகிலேன் தவங்கள்செய்தும் அறிகிலேன் ஆனவன்பரான பேர்க்கு அன்னமிட்டும் அறிகிலேன் தேனமர்துழாய்கொண்டு உன்னைச் சிந்தைசெய்தும் அறிகிலேன் நானறிந்ததொன்றுமில்லை ராமராமராமனே!
Thursday, December 09, 2010
நினைவெல்லாம் ரகுராமன்
1980 இந்த வருடம்தான் முதன்முதலாக ரகு என்கிற ரகுராமனை சந்தித்த வருடம் என் மனைவியின் தங்கையை .பெண்பார்க்க வந்தார் அப்பாஅம்மாவுடன் . என்பீல்ட் மோட்டார் சைக்கிளில் வந்ததைப் பார்த்தவுடனேயே எனக்கு பிடித்துவிட்டது.என் வண்டியும் என்பில்ட் தான்.கண்களுக்கு சற்று கருத்த நிறம்தான் முதலில் தெரிந்தது ஆனால் உள்ளே இருக்கும் வெளுத்தமணம் தெரிவதற்கு பல வருடங்கள் ஆயிற்று.எந்தவித பந்தாவும் இல்லாமல் சரி என்று சொல்லிவிட்டார்.
கடைசியாகப் பார்த்தது இல்லை இல்லை புருஷனாகப் போனவரை வெள்ளைப் பொட்டலத்தில் கருப்பு பெட்டியில் கண்டது 20 ஆம் தேதி நவம்பரில்.முப்பது வருஷ பிணைப்பு தங்கமணியின் தங்கையின் கணவராக மட்டும் அல்ல தங்கமான மனிதராக.எதையும் சாதரணமாக எடுத்துக்கொள்ளும் குணமே அவரையும் எடுத்துக்கொண்டது கடைசியாக. நான் இப்போது சொல்லப்போகும் மனிதர் ரகுராமன் என்றும் ரகு என்று செல்லமாக அழைக்கப்பட்டு 1951 ஜுன் 1ஆம் தேதி பிறந்து ,2010 நவம்பர் 19 ஆம் தேதி மறைந்தவர் திரைப்பட இயக்குனர் திரு . சுசிகணேசனுடன் இருப்பவர்தான் மஞ்சள் சட்டை அணிந்த ரகுராமன்
நினைவுகள் தொடரும்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
:((((((((((((((ரொம்ப நாளைக்கப்புறம் போட்ட பதிவிலே அழ வைச்சுட்டீங்க!
சுசிகணேசனையே தெரியாது. ஒரு மாதிரி ஊகம் பண்ணிக்கிறேன். :(
இந்தப் பேரிழப்பில் இருந்து மீண்டு வெளியே வர உங்கள் குடும்பத்தினருக்கு எல்லாம் வல்ல ஆண்டவன் துணை இருப்பான். ஆண்டவனைப் பிரார்த்திக்கிறோம்.
enna uncle idhu arambame sogama :((((
அடப்பாவமே! நாராயணா!
விஷயம் கேள்விப் பட்டு எனக்கும் ரொம்ப அதிர்ச்சியாவும் வருத்தமாவும் இருந்தது...:((
so sad... we pray God to give strength to you and your family at this time. Please take care.
Post a Comment