சொற்களும் அறியேன் சொற்களின் பொருளும் அறியேன்.
கவிதையும் அறியேன் உரை நடையும் அறியேன்
ஆறுமுகங்களுடைய முருகன் ஒளிவெள்ளமாக
என் இதயத்தில் புகுந்து நிலையாக அங்கேயே இருப்பதால்
சொல்லும் பொருளும் அவனருளல் தானாகவே வெளிப்படுகிறது
தானம்செய்தும் அறிகிலேன் தவங்கள்செய்தும் அறிகிலேன்
ஆனவன்பரான பேர்க்கு அன்னமிட்டும் அறிகிலேன்
தேனமர்துழாய்கொண்டு உன்னைச் சிந்தைசெய்தும் அறிகிலேன்
நானறிந்ததொன்றுமில்லை ராமராமராமனே!
இன்று காலை அவசர அவசரமாக ஹைதராபத்திலிருந்து காலை பிளைட் பிடித்து வந்ததின் முக்கிய காரணமே நண்பர் சஞ்சை சுப்ரமணியத்தின் கச்சேரி கேட்கவேண்டும் என்பதற்காகத்தான்.உள்ளே நுழைந்ததுமே என் தங்கமணிஉமா இன்னிக்கி என் fரண்டுடோட பையன் பரத்சுந்தர் கச்சேரி இருக்கு நான் போகணும் என்று தீர்மானமாக சொல்லிவிட்டாள். நான் மத்திரம் என்ன லேஸ்பட்டவனா நானும் என் Fரண்டோட பொண்ணு சுஷ்மா சோமா பாடுகிறாள் அப்பறம் 4 மணிக்கு சஞ்சய் கச்சேரி அதுக்கும் போகனும்.நல்லவேளை எல்லாமே நாரதகான சபாவில்தான் அதனால் அதிசயமாக சமாதானமாக காரில் கிளம்பினோம்
முதல் கச்சேரி சுஷ்மாவினுடையது மதியம் 12.30 லிருந்து 2 .00 மணிவரை. நாங்கள் போகும்போதே கச்சேரி ஆரம்பித்து பாதி ஆகிவிட்டது.காம்போதி ராகத்தின் ஆலாபனை ஆரம்பமாகியது, சுஷ்மா சிங்கபூரில் பிறந்து வளர்ந்தாலும் ந்மது கலாசரத்தைவிடாமல் அனுசரிக்கும் சார்ட்டர்டு அக்கௌண்டன்ட் சோமசேகரனின் மகள். 1980 வருடத்திலிருந்து நான் சிங்கப்பூர் செல்லும்போதெல்லாம் தவறாமல் என்னை கவனித்துக்கொள்ளும் குடும்ப நண்பர்.
கதைக்கு வருவோம். சுஷ்மா முறையாக சங்கீத பையிலும் மாணவி இப்போது சங்கீத கற்றுக்கொள்ளுவதற்காக சென்னை வாசம்.
காம்போதி ராகத்தை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து ராக ஸ்வரூபம் கெடாமல் பாடிய ள்விதம் அபாரமாக இருந்தது. பெரிய வித்வான்கள் எடுத்து ஆளும் ராகத்தை மெருகு குலையாமல் ரசிகர்களுக்கு கொண்டு சேர்த்த விதம் ரம்யமாக இருந்தது. ஸ்வரபிரஸ்தாரங்களும் ரசிகர்கள்களின் ஏகோபித்த கரகோஷத்தை அள்ளிச்செண்றது. தனி ஆவர்த்தனம் வாசித்த ரிஷிகேஷ் சிறுவயதிலேயே தன் தனியை சிறப்பாக அளித்தார். சுஷ்மா பின்னர் சாருமதி ராகத்தில் ம்ன சாரமதி என்ற தஞசாவூர் சங்கர ஐய்யர் கீர்த்தனையை அளித்து தில்லானாவுடன் கச்சேரியை நிறவு செய்தார்.
அடடா சொல்ல மறந்து விட்டேனே! வயலின் வாசித்த பொடியன் ச்ரிராம் ச்ரிதர் அபார வாசிப்பு.பொடியனுக்கு 15 வயசுதானம் சுஷ்மா பாட்டுக்கு ஈடுகொடுத்து பிடிகளையும்,ஸ்வரங்களையும் அப்படியே திருப்பிக் கொடுத்த விதத்தைப் பார்த்தால் பிற்காலத்தில் வயலினில் வில்லாதி வில்லானக வர வாய்ப்புண்டு. முடிவில் அவனிடம் விசாரித்தபோது வெட்கத்துடன் சொன்னான் லால்குடி யுனிவெர்சிடியில் வயலின் பயில்கிறானாம். பின் கேப்பானேன் எப்படி இருக்கும் வாசிப்பு !கச்சேரியை கேட்டு அடுத்த கச்சேரிக்கு தயார் செய்துகொள்ளும் போது மனதில் ஒரு நிம்மதி கர்நாடக சங்கீதம் இன்றைய இளையசமுதாயத்தினரிடம்
வள்ளுவர் துறவு அதிகாரத்தில் இந்தக் குறளை வைத்துள்ளார். இதனுடைய பொருள் எந்த எந்த பொருள்களினாலோ அல்லது அதன் மீது பற்றுவைப்பதாலோ நமக்கு துன்பம் வருமோ அந்த அந்த பொருள்களயோ அல்லது அதன் மீது உள்ள பற்றையோ நீக்கிவிட்டால் நமக்கு அந்தப் பொருள்களினால் வரும் துன்பம் வராது. புரியும்படிச் சொல்லவேண்டும் என்றால் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சர்க்கரையையோ அல்லது அதன் மீது உள்ள அதீதப் பற்றை விட்டுவிட்டால் அவர்களுக்கு அந்தவியதியால் வரும் துன்பம் வராமல் போகும். பற்று என்று கூறும்போது வாயில் உள்ள இரண்டு உதடுகளும் சேரும் இது இயற்கை. இதோ இந்தக் குறளை கூறிப் பாருங்கள்
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
ஆண்டவனிடத்தில் பற்று வைக்கவேண்டும் என்று கூறும்போது அது நல்ல பற்று என்பதை உணர்த்து வண்ணம் பலமுறை உதடுகள் சேரும்படி பற்று என்ற வார்த்தையை அதிகமாக் கையண்டிருக்கிறார் வள்ளுவர். ஆனால் இந்த "யாதனின்" குறளைக் கூறிப் பாருங்கள் உதடுகள் ஒட்டவே ஒட்டாது. பற்றை முற்றிலும் விடவேண்டிய இடத்தில் அறவே விட்டுவிட்டார்.
சரி அப்படி பற்று வைக்காமல் வாழ இன்றைய உலகத்தில் ஒரு மனிதனால் வாழமுடியுமா? முடியும் என்பதற்கு ஆதர்ச புருஷராய் திகழ்ந்தவர் ஒருவர் உண்டு.
அவர்தான் இவர்
பெரியவா என்றும் பரமாசாரியார் என்றும் உலகத்தாரால் பெரிதும் வணங்கப்பெற்ற காஞ்சி காமகோடி மடத்தின் 68 வது பீடாதிபதியாகத் திகழ்ந்த ச்ரீ சந்திரசேகரேந்திரசரஸ்வதி ஸ்வாமிகள். இன்றோடு அவர் மஹாசமாதி ஆகி 17 வருடங்கள் ஓடி விட்டன. ஆனாலும் அவருடன் இருக்குபடியான சில சந்தர்ப்பங்களைக் கொடுத்த ஆண்டவனுக்கு என் நன்றி. என் வாழ்க்கையில் ஏதாவது ஒரு சாதனை என்று ஒன்று உண்டென்றால் அது அவர் இருந்த காலத்தில் நாமும் வழ்ந்தோம் என்பதே.
அது சரி இந்த மேலே உள்ள படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு மேலே நெற்றி நிறைய விபூதியுடன் அரைக்குடுமியுடன் முகத்தில் சந்தோஷம் பொங்க ஆசையோடு பெரியவாளைப் பார்க்கும் சிறுவன்யார்? இன்று கோட்டு சூட்டுப் போட்டுக்கொண்டு கௌசிகம் பதிவில் இருக்கும் இவந்தான் அது.
துறவையும் துறந்த மஹான் அவர். ஒரு துறவி எப்படி இருக்கவேண்டும் எனபதற்கு உதாரணமாய்த் திகழ்ந்தவர்
ஸ்ரீ குருப்யோ நமஹ:
தோடகாஷ்டகம்
1 விதிதாகில ஸாஸ்த்ர சுதா ஜலதே
மஹிதோபநிஷத் கதிதார்த்த நிதே 1
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவசங்கர தேசிக மே சரணம் 11
விதிக்கபட்ட எல்லா சாஸ்த்ரங்களையும் அதன் பொருளையும்
முற்றிலும் உணர்ந்த அமிர்த கடல் போன்றவரே,
மாபெரும் உபநிஷத் கருத்துக்களின் உட்பொருளை அறிந்த நவநிதியே,
இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த தங்களின் அப்பழுக்கற்ற திருவடிகளை
என்னுடைய ஹிருதயத்தில் வைத்து பூஜிக்கிறேன்
வள்ளுவர் துறவு அதிகாரத்தில் இந்தக் குறளை வைத்துள்ளார். இதனுடைய பொருள் எந்த எந்த பொருள்களினாலோ அல்லது அதன் மீது பற்றுவைப்பதாலோ நமக்கு துன்பம் வருமோ அந்த அந்த பொருள்களயோ அல்லது அதன் மீது உள்ள பற்றையோ நீக்கிவிட்டால் நமக்கு அந்தப் பொருள்களினால் வரும் துன்பம் வராது. புரியும்படிச் சொல்லவேண்டும் என்றால் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சர்க்கரையையோ அல்லது அதன் மீது உள்ள அதீதப் பற்றை விட்டுவிட்டால் அவர்களுக்கு அந்தவியதியால் வரும் துன்பம் வராமல் போகும். பற்று என்று கூறும்போது வாயில் உள்ள இரண்டு உதடுகளும் சேரும் இது இயற்கை. இதோ இந்தக் குறளை கூறிப் பாருங்கள்
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
ஆண்டவனிடத்தில் பற்று வைக்கவேண்டும் என்று கூறும்போது அது நல்ல பற்று என்பதை உணர்த்து வண்ணம் பலமுறை உதடுகள் சேரும்படி பற்று என்ற வார்த்தையை அதிகமாக் கையண்டிருக்கிறார் வள்ளுவர். ஆனால் இந்த "யாதனின்" குறளைக் கூறிப் பாருங்கள் உதடுகள் ஒட்டவே ஒட்டாது. பற்றை முற்றிலும் விடவேண்டிய இடத்தில் அறவே விட்டுவிட்டார். சரி அப்படி பற்று வைக்காமல் வாழ இன்றைய உலகத்தில் ஒரு மனிதனால் வாழமுடியுமா? முடியும் என்பதற்கு ஆதர்ச புருஷராய் திகழ்ந்தவர் ஒருவர் உண்டு.
அவர்தான் இவர்
பெரியவா என்றும் பரமாசாரியார் என்றும் உலகத்தாரால் பெரிதும் வணங்கப்பெற்ற காஞ்சி காமகோடி மடத்தின் 68 வது பீடாதிபதியாகத் திகழ்ந்த ச்ரீ சந்திரசேகரேந்திரசரஸ்வதி ஸ்வாமிகள். இன்றோடு அவர் மஹாசமாதி ஆகி 13 வருடங்கள் ஓடி விட்டன. ஆனாலும் அவருடன் இருக்குபடியான சில சந்தர்ப்பங்களைக் கொடுத்த ஆண்டவனுக்கு என் நன்றி. என் வாழ்க்கையில் ஏதாவது ஒரு சாதனை என்று ஒன்று உண்டென்றால் அது அவர் இருந்த காலத்தில் நாமும் வழ்ந்தோம் என்பதே.
துறவையும் துறந்த மஹான் அவர். ஒரு துறவி எப்படி இருக்கவேண்டும் எனபதற்கு உதாரணமாய்த் திகழ்ந்தவர். அவருடைய வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை எனக்கு ஆஞ்சநேய உபாசகரும்,நங்கநல்லூர் மற்றும் பாண்டிச்சேரியிலுள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்களச் ஸ்தாபித்து வழிநடத்திவரும் திரு ரமணி அண்ணா கூறியதை இந்த நாளில் ஒரு பானை சோற்றுக்கு ஒரு அரிசி பதம் போல இங்கு பதிக்கிறேன் பெரியவாளின் திருவடிகள் வணங்கி..
பரமாச்சாரியார் ஒருமுறை வெளியூரில் முகாமிட்டிருந்தார். பூஜையை முடித்துக்கொண்டு மதியம் 3 மணியளவில்தான் அவர் உணவு அருந்தும் வேளை. அவருடைய உணவு மிகவும் எளிமையானது. கொஞ்சம் அரிசிசாதம், எதாவது ஒரு கீரைஅனேகமாக அது அகத்தீ கீரையாகத்தான் இருக்கும்,பழம் இவ்வளவுதான். வெகுகாலமாக அவருடன் கூடவேதங்கியிருந்து அவருக்கு கைங்கரியம் செய்துவரும் ஒருவர்தான் வழக்கமாக அவருக்கு உணவு படைப்பார். தங்கியிருந்த இடமோ ஒரு குக்கிராமம் வசதிகள் ஏதும் இல்லாத ஊர்.
முதல்நாள் உணவை அருந்தினார் பெரியவர் அதில் எதோ ஒரு கீரை பதார்த்தம் இருந்தது. மறுநாளும் அதே கீரையைச் செய்து இருந்தார்கள் பெரியவரும் அதைச் சாப்பிட்டார். இப்படி அதே கீரையுடன் இரண்டு நாட்கள் சென்றன. மூன்றாவது நாளும் பெரியவர் சாப்பிட உட்கார்ந்தார். அவருக்கு கைங்கரியம் செய்பவரும் அதே கீரையை இலையில் இட்டார். ஸ்வாமிகள் கேட்டார் "..... என்ன இன்னிக்கும் அதே கீரையா" என்றார். பரிமாறுபவர் சொன்னார் "இல்லே பெரியவாளுக்கு இந்தக்கீரை பிடித்திருக்கிறது போல. முதல் நாளே பெரியவா கேட்டு ரெண்டாம்தரம் போட்டேன். அதான் பெரியவாளுக்கு இந்த கீரை பிடிக்கின்றதுபோல என்ற எண்ணத்தில் அதையே செய்தேன்" என்றார். இதைகேட்டவுடன் பெரியவர் ஒன்றும் சொல்லாமல் பாதி சாப்பாட்டிலேயே எழுந்துவிட்டார். காஷ்ட மௌனத்திலும் (யாருடனும் பேசாத நிலை)சென்றுவிட்டார்.
பெரியவர் சாப்பிட்டபிறகுதான் மற்றவர்கள் சாப்பிடும் வழக்கம் இதைகேள்விப் பட்டதும் யாரும் மடத்தில் சாப்பிடவில்லை. பரிமாறியவரை அவர்தான் ஏதோ தவறு செய்துவிட்டார் என்று அவரைக் கோபித்துக்கொண்டார்கள். அவரும் அப்படியே நினைத்து இரு கண்களிலும் கண்ணீர் தாரை தாரையாக கொட்ட பெரியவாளிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். பெரியவர்களின் மௌனம் தொடர்ந்தது. ஆனால் காரணம் தெரியவில்லை.
மீதியை நாளைப் பார்ப்போமா
ஜய ஜய சங்கரா ஹர ஹர சங்கர
இப்படி மௌனமாகவே ஒரு மாதம் கழிந்தது.கடைசியில் ஒரு மாதம் முடிந்தவுடன் பெரியவர் காலையில் அனுஷ்டானம் முடிந்தவுடன்" அவனைக்கூப்பிடு' என்றார்.
கேள்விப்பட்டவுடன் அவருக்கு பணிவிடை புரிந்து வரும் அந்த நபர் வந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து
"பெரியவாஎன்னை மன்னிக்கவேண்டும் எனக்கு ஏதாவது தண்டனை கொடுங்கோ" என்றார். மாகான் சொன்னார் "உனக்கு தண்டனை கொடுக்க நான் யாரு? தப்பு செய்தவாதான் தண்டனை அனுபவிக்கனும். நீ ஒரு தப்பும் செய்யலயே." உடனே "இல்லே அன்னிக்கி நடந்ததற்கு நான்தானே காரணம்" என்றர்.
"ஓ அதுவா" என்று புன்சிரிப்புடன் கூறினார் பெரியவர்கள்."நான் ஒரு சன்யாசி.சன்யாஸ தர்மத்தின்படி நாங்கள் எந்தப் பொருளின்மீதும் பற்று வைக்கக்கூடாது.பற்றுவைக்காமல் இருப்பதோடுமட்டுமல்லாமல் அப்படி நாங்கள் இருக்கிறோம் என்பதை உலகுக்கு தெரியப் படுத்தவேண்டும்.சந்யாச தர்மத்தின் படி நாங்கள் ஒரு வேளை சாத்விகமான உணவை உட்கொள்ளவேண்டும். அப்போதுகூட அதன் மீது பற்று இல்லாமல்அருந்தவேண்ண்டும்.அப்பொழுதுதான் நாங்கள் மற்றவர்களுக்கு ஆசையை விட்டொழிக்கவேண்டும் என்றெல்லலாம் உபதேசம் பண்ண ஒரு தகுதி வரும். அன்றும் அதற்கு முதல் நாளும் நீ பண்ண கீரையை நான் சாப்பிடும்போது எனக்கு அதன் மீது ஆசை கிடையாது.ஆனால் நான் சாப்பிட்டவிதமோ. அல்லது என்னுடைய சொல்லோ அல்லது செயலோ அதன் மீது எனக்கு பற்று இருப்பதுபோல ஒரு தோற்றத்தை உருவாக்கிவிட்டது என்று நினைக்கிறேன். அது சன்யாச தர்மத்துக்கு விரோதமான செயல். தப்பு செய்தது நான். அதற்காக நான் எனக்கு தண்டனன கொடுத்துகொண்டேன்" என்றார்.
நீதியைப் பற்றிச் சொல்லும்போது
"நீதியை நிலை நாட்டினால் மட்டும் போதாது நிலை நாட்டிவிட்டதாக எடுத்துக்காட்டவேண்டும்.( It is important to render justice;but it is more important to establish that justice is seems to have been done) இந்த வாசகத்துக்கு உதாரணபுருஷராக வாழ்ந்தவர்தான் ஸ்வாமிகள்
எப்பொழுதும் திருப்தி அடைந்து சந்தோஷமாக இருப்பவள். ஆன்மாக்களாகிய தன் பக்தர்களிடத்தில் குறைகள் இருந்தாலும் அதை மனதில் கொள்ளாது அவர் செய்யும் வழிபாடுகளால் சாஸ்வதமாக திருப்தி அடைபவள்.அவளுக்கென்று எந்த ஆசைகளும் இல்லாததால் மட்டும் நித்ய திருப்தாவாக இருப்பவள்.அது மட்டுமல்ல அவளது அடியார்களின் ஆசைகளையும் தீர்த்து வைத்து அவர்களையும் நித்யதிருப்தாவாகச் செய்பவள்.அவள் அதற்குமேலும் அடியயார்களுக்கு ஆசையே வரதாவண்ணம் அவர்களை வழிப்படுத்தி அவர்களையும் வசப்படுத்துபவள். ஆசையை தீர்த்து வைப்பதைவிட ஆசையே ஏற்படமல் செய்வது மிகவும் உத்தமம். திருமூலர் அதனால்தான் அடித்து கூறினார்" ஆசை அறுமின் ஆசை அறுமின் ஈசனோடுயாயினும் ஆசை அறுமின்" இன்றைய காலகட்டத்தில் அப்படி நித்யதிருப்தாவாக ஒரு மனிதன் இருக்க முடியுமா? ஆம் இருந்தார் ஒருவர் நம்முடைய காலகட்டத்திலேயே. அவர்தான் மஹாகவி பாரதியார்.நாம் இன்றைக்கு எந்த விஷயங்கள் எல்லாம் சந்தோஷம் என்று நினைத்து திருப்தி அடைவது போல் நினைக்கிறோமோ அவைகள் ஒன்றுமே இல்லாமல் இருந்தும் நித்யதிருப்தாவாக இருந்தார் . வீடு வாசல் கிடையாது, உனவுக்கு வசதி கிடையாது உடுக்க துணிவகைகள் கிடையாது ஆங்கிலேயன் தொல்லை தாங்காமல் பாண்டிச் சேரிக்கும் சென்னைக்கும் அலைந்துகொண்டிருந்தார் . . இருந்தாலும் அவர் என்ன சொன்னார் தெரியுமா" எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா" நாமாக இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்போம்.அம்பிகையை முழுவதும் நம்பிவிட்டாவர்களுக்குத்தான் இது சாத்தியம் பக்தநிதி
பக்தர்களுக்கு மிகப்பெரிய நிதியாக விளங்குபவள். அடியவர்கள் எதை கேட்டாலும் அதை அவர்களுக்கு அளித்து என்றும் குறையாத நிதியாக விளங்குபவள்.மற்ற நிதிகள் எல்லாம் ஒருகாலத்தில் அழிந்துவிடும் திருப்தியளிக்காமல் போனாலும் போகலாம் ஆனால் பக்தர்களுக்கு அவள் அளிக்கும் பக்தி என்ற நிதி இருக்கிறதே அது அள்ள அள்ள குறையாது திருப்தியளிக்காமலும் போகாது. நிகிலேஸ்வரி இந்த அண்ட சராசரத்துக்கும் ஈஸ்வரியாக இருப்பவள். அகிலமென்றால் உலகம். நிகிலம் என்றால் இந்த உலகத்தையும் சேர்த்து உள்ள ஈரேழு பதிநான்கு உலகத்திற்கும் ஈஸ்வரியாகவும் தலைவியாகவும் இருந்து காப்பவள்.மனித வர்கம்மட்டுமல்லாமல் புல், பூண்டு,புழு,மரம்,செடி, கொடி,பறவைகள்,பாம்பு,கல்,கணங்கள்,அசுரர்கள்,முனிவர்கள் மற்றும் ஒரு செல் உள்ள தாவரங்கள் ஆகிய எல்லாப் பதிநான்கு பிறப்புக்களுக்கும் அவள்தான் தாயாக இருந்து காக்கும் நிகிலேஸ்வரி. ஸிஞ்ஜான மணிமஞ்ஜீர மண்டித ஸ்ரீ பதம்புஜா !
மராளி மந்த கமனா மஹாலாவண்ய சேவதி:!!
அம்பாளுடைய பாதமும் அவளுடைய நடை அழகயையும் வர்ணிக்கும் வரிகள்.அவள் மிகவும் மெதுவாக அன்னப்பட்சியைப் போல் நடந்து செல்கிறாள். அப்படி நட்ந்து செல்லும்போது பாதங்களில் இருக்கும் கொலுசுகளில் இருக்கும் மணிகள் கிணி கிணி என்று ஓசை எழுப்புகிறது.அந்தப் பாதங்களை வணங்குவோம்.
ஸ்ரீ சக்ரராஜ நிலயா ஸ்ரீ மத் திருபுரசுந்தரி!!
அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் இருந்தாலும் கடைசியாக முடிவது அவள் யார் என்ற விளக்கத்துடன். அவள்தான் திருபுரசுந்தரி.இதையே"" அபிராமி பட்டரும் திரிபுரசுந்தரியாவது அறிந்தனமே" என்கிறார். எந்த திருபுர சுந்தரி பிரும்மத்தையும் இந்த ஜீவனையும் ஒன்றாக சேர்க்கக்கூடியவள். அவள் எங்கு இருப்பாள். ஸ்ரீ சக்ரத்தின் மத்தியில் இருப்பவள் அப்படிபட்ட லலிதாவை வணங்கி இப்பொழுது விடைபெறுவோம் பின்பு ஒரு சமயம் அம்பாளின் அருளோடு தொடருவோம்
ஸ்ரீ கமலாம்பா ஜெயிக்கட்டும் . அகில உலகத்துக்கும் அன்னையான ஸ்ரீ கமலாம்பிகா ஜெயிக்கட்டும் .சிருங்கார ரசத்தின் மலர்க்கொத்தாக விளங்கும்
என்னுடைய தாயான ஸ்ரீ கமலாம்பா ஜெயிக்கட்டும் .ஞான சொருபத்தின் பிரதிபிம்பமாக சவ்திரனுக்கு சமானமாக விளங்கும் ஸ்ரீகமலாம்பா ஜெயிக்கட்டும். ஸ்ரீ புரம் என்னும் ஸ்ரீ சக்ரத்தின் பிந்து ஸ்தானத்தின் மத்தியில் உள்maள சிந்தாமணி கிருஹத்தில் இருக்கும் சிவாகார மஞ்சத்தில் கோயில் கொண்டுள்ள சிவகாமேச்வரரின் அங்கமான அவரின் மடிமீது அமர்வது காட்சிதரும் ஸ்ரீ கமலாம்பா ஜெயிக்கட்டும். வராஹா முகம் கொண்ட திருமால் முதலியவர்களால் அர்ச்சிக்கப்பட்ட மஹாத்ரிபுரசுந்தரியை,
ராஜ ராஜேஸ்வரியை ஸ்ரீ சக்ரத்தின் சர்வாவந்தமைய சக்ரத்தில் உறையும் சுவாசின்யுமான ஸ்ரீ கமலாம்பாவை நான் த்யாநிக்கிறேன் . ஸூர்யன், சந்திரன் அக்னி போன்றோருக்கு பிரகாசம் அளிப்பவளால் ,பயத்தை கொடுக்கின்ற தாபத்ரயங்களால் உண்டாகும் இடர்ப்பாடுகளை நீக்குவதில் வல்லமை உள்ளவளால் , இந்திரன் முதலிய பிரமுகர்களால் பிரார்த்திக்கப்பட்ட மங்கள சொறுபம் கொண்டவாளால், தன்னை வெளிப்படுத்திக்கொண்ட பராபரியாக விளங்குபவளால், கருணை செய்பஅவளால், ஸ்ரீ கமலாம்பாவால் நான் காப்பாற்றபட்டிருக்கிறேன். ஸ்ரீ மாதாவிற்கு, ஞானசொருபிக்கு, லக்ஷ்மி, திருமால், ஈஸ்வரன், பிரும்மா, ஆகியோரால் நமஸ்காரம் செய்யப்படுபவளுக்கு என் நமஸ்காரங்கள் .ப்ரும்ம,விஷ்ணு ருத்ர திருமூர்த்திகளின் சக்திகளான வாமா,ஜ்யேஷ்டா , ரௌத்ரி, ஆகிய தேவதைகளால் பூஜிக்கும் பரதேவதேவதையிடமிருந்து அனைத்தும் தோன்றின. மன்மதன் முதலிய பன்னிருவரால் உபாசிக்கப்பட்ட ககாரத்தை ஆதியாகக் கொண்ட காதிவித்யை,ஹகாரத்தை ஆதியாகக்கொண்ட ஹாதி வித்யை,ஸகாரத்தை ஆதியாகக் கொண்ட ஸாதிவித்யை ஆகியவற்றின் மந்தர ஸ்வரூபமாக இருப்பவளுடைய அன்புக்கு பாத்ரமானவரும்சிவாம்ஸமானவருமான குருகுஹனின் அன்னையிடத்தில் பிரியத்தோடு கூடியஎன் மனம் லயிக்கட்டும் ப்ரம்மமயமாக பிரகாசிப்பவளே, பெயர்களையும் உருவங்களையும் கொண்டு அறியப்படுபவளே. ஸ்ரீ வித்யா ஸம்ப்ரதாயத்தில் காமகலை என்ற வழிபாட்டு முறையைக் காட்டியவளே.ஸமத்துவத்தை கடைபிடித்து காட்டுபவளே.என் மனது எப்போதும் உன்னிடத்திலேயே நிலைத்து நிற்கட்டும் ஸ்ரீகமலாம்பிகையே.
ல
கடைசி நவாவர்ண மங்களகிருதி ராகம்: ஸ்ரீ தாளம்: கண்டஏகம் பல்லவி ஸ்ரீ கமலாம்பிகே ஸிவே பாஹிமாம் லலிதே ஸ்ரீ பதிவிநுதே ஸிதாஸிதே ஸிவஸஹிதே... ஸ்ரீ கமலாம்பிகே) சரணம் ராக சந்த்ரமுகீ ரக்ஷித கோலமுகீ ரமா வாணீ ஸகீ ராஜயோகஸுகீ ஸாகம்பரி ஸாதோதரி சந்த்ரகலாதரி ஸங்கரி ஸங்கர குருகுஹ பக்த வசங்கரி ஏகாச்ஷரி புவனேச்வரி ஈஸப்ரியகரி ஸ்ரீகரி ஸுககரி ஸ்ரீ மஹாத்ரிபுரசுந்தரி....(ஸ்ரீ கமலாம்பிகே) ஸ்ரீ லக்ஷிமியின் பதியான விஷ்ணுவினால் துதிக்கப்பட்டவளே, வெண்மை, கருப்புநிறம் ஆகிய இரண்டு நிறங்களன துர்கை கௌரியாய் காட்சியளிப்பவளே, சிவனோடு இரண்டறக்கலந்தவளே.லலிதாதேவியாகக் காட்சியளிப்பவளே, ஸ்ரீ கமலாம்பிகையே மங்களத்தை அருளுபவளே என்னைக் காப்பாற்று. பௌர்ணமி நிலவைப்போன்ற முகத்தையுடையவளே, வராஹ முகமுடைய திருமாலை ரக்ஷித்தவளே, லக்ஷிமியையும் ஸரஸ்வதியையும் தோழியாகக் கொண்டவளே,ராஜயோக சுகத்தில் திளைப்பவளே,ஸாகம்பரீ எனப்பெயர்பெற்ற ஸ்ரீ தூர்கையே ,மெல்லிடையாளே,சந்திரனுடையகலையை ஆபரணாமாகக் கொண்ட ஸங்கரியே, சங்கரன் ,குருகுஹன் மற்றும் பக்தர்களுக்கு வசப்படுபவளே,ஹரீம் என்ற ஓரேழுத்து மந்திரத்தில் விளங்குபவளே,உலகிற்கு ஒரே தலைவியே சிவனுக்கு பிரியமானவற்றை செய்பவளே,ஐஸ்வர்யத்தையும் சுகத்தையும் அருளும் காரயங்களைச் செய்பவளே, ஸ்ரீ மஹாத்ரிபுரசுந்தரியே, ஸ்ரீ கமலாம்பிகையே என்னை ரக்ஷிப்பாயாக:
இங்கே பாடுபவர்களைப் பற்றி ஒரு வார்த்தை ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷதரின் கிருதிகள் எல்லாமே ஸ்ரீ வித்யா உபாசனை மந்திரங்கள்தான் . அவருடைய கிருதிகளை பாடம் செய்வது பாடுவதும் மிகக் கடினம். ஸ்ரீ ராகத்தில் அமைந்த இந்த நவாவர்ண கிருதிகளில் ஒன்பதாவது கிருதியான இது மிகவும் விசேஷம் வாய்ந்தது.நம்மவர்களையே ஒரு கை பார்த்துவிடும். கீழே காணும் இந்த அயல்நாட்டு கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் எவ்வளவு அருமையாகப் பாடியுள்ளனர்.எடுத்த எடுப்பில் இரண்டு நிமிட ராக ஆலாபனையில் ஸ்ரீ ராகத்தின் லக்ஷ்ணத்தை பிழிந்து கொடுத்து விடுகிறாள் அந்தப் அமெரிக்கப் பெண்.என்ன கம்பீரமான குரல், சுருதி சுத்தம். அதேபோல் எல்லோரும் சேர்ந்து பாடும்போது ஒரேகுரலில் ஒலிப்பது, தாளக்கட்டுப்பாடு, ..அக்ஷரசுத்தம். அட! இங்குள்ள சங்கீத வித்வான்கள் குறித்துக்கொண்டு கவனம் செய்யவேண்டும். நீங்களும் கேட்டு விட்டு என்னுடன் அனுசரித்துப் போவீர்கள்
இன்று எடுத்துக்கொள்ளும் நாமம் சதி. அம்பாளுக்கு சதி என்ற பெயர் உண்டு.இது அவளுடைய பதிவிரதா தன்மையை சிறப்பிக்கும் வண்ணம் அமைந்தது. தக்ஷனுக்கு மகளாக பிறந்தபோது அவளுக்கு அவன் சதி என்ற பெயரைத்தான் வைத்தான். பிறகுதான் தாக்ஷயணி என்ற பெயர் வந்தது.சதி என்றால் உடன்கட்டை என்ற வார்த்தையோடு இதை சேர்த்துக்கொள்ளகூடாது.தக்ஷன் இந்த பெயரை வைத்தபோது அவன் நினைக்கவில்லை அவனே பிற்காலத்தில் தன் மகளுக்கே பிரச்சனையை கொடுத்து சிவனையும் அவளையும் பிரித்து வைத்து சிவனை அவமானப்படுத்தி, தன்கணவனுக்கு ஏற்பட்ட அவமானத்தை தாங்கமுடியாத தாக்ஷயணி தந்தையான தக்ஷனை அழித்து அவளும் அக்னி குண்டத்தில் விழுந்து தான் சதி என்பதை நிரூபித்தாள்.சதிஎன்றால் சத்தோடு சேர்ந்தவள் அதாவது சிவப்பரம்பொருளோடு ஐக்கியமானவள்.அதனாலும் சதி என்ற பெயர் வந்தது
ஜனனி
ஜனனிஎன்றால் நாம் ஜனனம் எடுப்பதற்கு காரணமானவள். அப்படியென்றால் நாம் ஜனனம் எடுக்காமல் இருக்கவேண்டும் என்றாலும் அவள்தான் அருளவேண்டும். ஜனனி என்றால் நம்மையெல்லாம் காக்க வேண்டும் எண்ணத்தில் லலிதா பரமேஸ்வரியாக அவதாரம் செய்தவள்.
புதார்ச்சிதா
புதனால் அர்ச்சனை செய்யப்பட்டவள். நவகிரங்களும்தான் அவளை வணங்கி துதிக்கின்றனர். அப்படியென்ன புதனுக்கு மட்டும் சிறப்பு. புதன் தான் ஞானத்தைஅளிப்பவன்.ஆனால் புதனுக்கே ஞானத்தை அளித்தவள் லலிதா பரமேஸ்வரிதான். நாம்யெல்லோரும் ஞானம் வேண்டித்தான் அம்பாளிடம் துதி செய்கிறோம்.அதனால்தான் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகச்சிறந்த சக்தி உபாசகனான மகாகவி பாரதியார் " நன்றது செய்திடல் வேண்டும் அந்த ஞானம் வந்தால் போதும் வேறேது வேண்டும்" என்று பாடினான். அதன்னால்தான் புதன் அவளை வணங்குகிறான். அப்படி புதனுக்கே ஞானத்தை அளித்த அம்பாளை வணங்கினால் நமக்கும் அவள் ஞானத்தை அருளுவாள்.
இத்தோடு இன்றைய வர்ணனையை முடித்து நாளை மீண்டும் தொடரலாம்
படைத்தல் காத்தல் அழித்தல் என்கிற முன்றுவகையான தொழில்களைச் செய்யும் பிரும்மா விஷ்ணூ, சிவன் ஆகிய மூவர்க்கும் மூத்தவள். சரி இவர்களே மிகவும் வயதானவர்கள் அவர்களுக்கும் மூத்தவள் என்றாள் மிகவும் வயதானவளா அம்மா நீ என்றால் அதற்கு அபிராமி பட்டர் சொல்வதைக் கேட்கவேண்டும்.
"மூத்தவளே மூவாமுதல்வர்க்கும் மூத்தவளே பின் கரந்தவளே இளையவளே" அம்மா நீ எல்லோருக்கும் மூத்தவளாக இருந்தாலும் இளயவளாகத்தான் எங்களுக்குக் காட்சியளிக்கிறாய் அதனால்தான் உன்னை பாலா என்றும் குமரிஎன்றும் சின்னஞ் சிறு பெண்ணாவாள் சிற்றாடை உடை உடுத்தி சிவகங்கை நகரினிலே ஸ்ரீதுர்கை சிரித்திடுவாள் என்றெல்லாம் துதிக்கிறார்கள்
கமலாம்பிகை அடியவர்களுக்கு கற்பகச்சோலை போன்று கேட்டவரங்களை கொடுப்பவாள் கோபத்தினால் சிவந்து உக்ரமுடைய சண்டிகை எனப்பெயர் பெற்றவள்,ஜகன்மாதாவாக விளங்குபவளான கமலாம்பிகையை நான் பக்தி செய்து வணங்குகிறேன்.முழுமதியை நிகர்த்த முகமுடைய,தாமரைக்கண்ணியை,பாகன் என்ற அசுரனனின் எதிரியான இந்திரன் வந்து வணங்கும்சரணங்களைஉடையவள், ஆகாயம் முதலான பஞ்ச பூதங்களை தன்னுடைய பிரகாசத்தால் ஒளிரவைப்பவள்,ஹிரீம் என்ற மந்திர காட்டில் மான் உருவம்கொண்டு இருப்பவளும்,ஹிரீம் என்ற பீஜாக்ஷரத்தை தன்னுடைய மங்களகரமான சரீரமாக கொண்டவளும்,ஹிரீம் என்ற பீஜாக்ஷரமாகிய மரத்தில் பூத்த மலர்போல் விளங்குபவள்,ஹிரீம் என்ற பீஜாக்ஷரத்திற்கே ஈஸ்வரியானவளும்.பொன்நிறமான வடிவுடன் கௌரிஎன்று அழைக்கப்படுபவளுமான ஸ்ரீ கமலாம்பிகையின் மீது நான் பக்தி செய்து வணங்கிறேன்.
ஸ்தூலம்-ஸூஷ்மம்-காரணம் எனப்படும் மூன்று வகையான உருவங்களை கடந்த ஆனந்தமயமான தன்னுடைய ஸ்வரூபத்தில் பிரும்மா,விஷ்ணு,மஹேஸ்வரன்,ஆகியோருக்கு ரஹஸ்யயோகினியானவள்,பரா-பஸ்யந்தி-மத்யமா-வைகரீ ஆகிய நிலைகளின் வாக்தேவியரின் சுரூபமான வசிநீ முதலான எட்டு சக்திகளாக பகுத்துக்கொண்டுவள்,அசையும் பொருள்களை பீடிக்கும் அனைத்து வியாதிகளையும் போக்கவல்ல ஆரோக்கிய ராஜயோகினியாக விளங்குபவள்,கைகளில் வீணையை ஏந்தி இசைப்பவளும்,கமலாநகரம் என்ற திருவாரூரில் பேரானந்தத்தில் திகழ்பவளும்,தேவர்,மனிதர், முனிவர்களை மகிழ்ச்செய்பவளும்,குருகுஹனுக்கு வரங்கள் வழங்குபளான ஸ்ரீ கமலாம்பிகையை நான் எப்போதும் பக்தி செய்து வணங்குகிறேன்
கண்ணை விவரித்து விட்டு மூக்கை விட முடியுமா? நாஸாதண்டம் என்பது மூக்கினுடைய நடு தண்டு பாகமும் மூக்கும் சேர்ந்தது. அது எப்படி இருக்கிறது என்றால் அப்பொழுதுதான் பாதி மலர்ந்தும் பாதி மலராத செண்கப்பூப் போல இருக்கிறதாம்.அதுவும் இளம் சிவப்பு நிறம்தான். அப்படிப் பட்ட மூக்கில் அம்பாள் மூக்குத்தி அணிந்திருக்கிறாள். அதை வர்ணிக்க என்னால் முடியாது. இருந்தாலும் முயன்று பார்க்கிறேன்.வானத்தில் இருக்கும் எல்லா நக்ஷ்த்திரங்களின் ஒளியையும் அப்படியே திரட்டிஒரு சிறு மூக்குத்தியாக அணிந்திருக்கிறாளாம்.மூக்குத்தியின் மகிமை தெரியவேண்டுமானால் கன்யா குமாரிக்குப் போய் அவளுடைய மூக்குத்தி எவ்வாறு ஜ்வளிக்கிறது என்று பார்த்தால் புரியும்.கலங்கரை விளக்கம் போன்று ஒரு காலத்தில் கப்பல்களை ஆகர்ஷிக்குமாம்.முத்துமூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும் மோகன தங்கத்தினால் முடிந்திட்ட தாலியழகும் அடியானாற் சொல்ல திறமோ அழகான காஞ்சியில் புகழாக விளக்க விளங்கிடும் அம்மை காமாக்ஷி உமையே ஞாபகம்தான் வருகிறது. மறுமுறை படியுங்கள் நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா! தராகாந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுரா !! தேவியின் முகம் தெரியும் சுண்டல் ஆறிக்கொண்டு இருக்கிறது சாபிடுங்கள் நாளை மற்றுமொரு நாமாவளியைப் பார்க்கலாம்
இன்றைய பாடல் ஆறாவது ஆவர்ணம்
ராகம்: புன்னாகவராளி தாளம்;திஸ்ரம்
பல்லவி
கமலாம்பிகாயாஸ்த்வ பக்ததோஹம் ஸ்ரீ ஸங் கார்யா: ஸ்ரீகார்யா: சங்கீத ரஸிகாயா...(கமலாம்பிகாயா,,,)
அடுத்தபடியாக அம்பாளின் முகத்தைப் பற்றிய வர்ணனை. அவள் முகம் எப்படி இருக்கிறதாம்.முகம் பூர்ண சந்திரன் போல இருக்கும் உன் முகத்தில், எப்படி சந்திரனில் ஒரு சிறு களங்கம் தென்படுமோ அதுபோல உன்நெற்றியில் கஸ்தூரி மானிடமிருந்து பெற்றகஸ்தூரியால் திலகமிட்டு அழகாக ஜ்வலிக்கும் உன் முகம்.இதுதான் முகச்ந்த்ர களங்காப ம்ருகநாபி விசேஷிகா
அங்கதன் மன்மதன் இருக்கிறானே அவ்னுக்கு உருவம் கிடையாது. மனதில் மட்டும்தான் இருக்கிறான்.அவன் மேல் உள்ள கருணையினால் அவனுக்கு ஒரு விலாஸம் அட்ரஸ் வேண்டுமே அதற்காக தன்னுடைய முகத்தையே அவனுக்கு வீடாக அளித்தாளாம்.வீடு என்றால் வாயில் இருக்க வேண்டும் தோரணம் இருக்க வேண்டும் அல்லவா? அம்பாளுடைய இரு புருவங்களும் தான் அந்த வீட்டின் வாயில் தோரணங்கள்.அம்பாளின் முகம் மன்மதனைப் போல அழுகு படைத்தது புருவங்கள் இரண்டும் வாயில் தோரணம் போன்று இருக்கிறதாம். இதுதான் வதனஸ்மர மாங்கல்ய க்ருஹ தோரண சில்லிகா
வக்த்ர லக்ஷிமி பரீவாஹ சலன் மீனப லோசனா
அடுத்தது கண்களைப் பற்றிய வர்ணனை அவளுடைய முகத்திலிருந்து வரும் அழகு இருக்கிறதே அது அப்படியே பிரவாகமாகிய நதி போல அதுவும் ஒரு நதி அல்ல இரண்டு நதிகள் பெருக்கெடுத்து ஓடிவந்து இரு கண்களாக மாறி விடுகிறதாம். ஒரு நதியின் பெயர் தயா.நாம் எவ்வளவு தப்பு செய்தாலும் தாயினும் சாலப் பரிந்து நம்மை மன்னிக்கும் தயாநதி போன்ற கண்கள். மூககவி காமட்சி அம்மன் பேரில் 100 ஸ்லோகங்கள் தயா சதகம் என்ற பெயரில் பாடியுள்ளார். மற்றோரு நதி கருணா.பக்தர்கள் மீது எப்பொழுதும் கருணை கொண்டவள்.ஆக இரண்டு கண்களும் இரண்டு தடாகங்கள் என்றால் அதில் மீன்கள் இருக்க வேண்டாமா? லலிதா தேவியினுடைய கருவிழியில் உள்ள கரு மணிகள்தான் மீன்கள். அது இரண்டும் இந்த பக்கமும் அந்த பக்கமும் ஓடிக்கொண்டே இருக்குமாம். இதைத்தான் ஆதி சங்கரர் அப்படியே எடுத்து"" வதன சௌந்தர்ய லஹரி"" என்கிறார் சௌந்தர்ய லஹரியில்.காளிதாஸரும் ""லலிதா கடக்ஷவீக்ஷ் ஐஸ்வர்ய அவ்யாஹ்த"" லலிதாவின் கடைக்கண்னின் ஒரு ரேகை பட்டாலும் கூடசெல்வம் கொழிக்குமாம்.இதுதான் அர்த்தம் என்பதற்கு இந்த உவமைகள் எல்லாம் என் கற்பனையே ஏதாவது தவறு இருப்பின் சுட்டிக்காட்டுங்கள் திருத்திகொள்கிறேன்.
வக்த்ர லக்ஷிமி பரீவாஹ சலன் மீனப லோசனா
நாளை வேறு ஒரு நாமாவளியைப் பார்க்கலாமா
ராகம்: பைரவி தாளம்: ஜம்ப
பல்லவி
ஸ்ரீ கமலாம்பாயா: பரம் நஹிரே ரே சிந்த ஷித்யாதி ஸிவாந்த தத்வ ஸ்வரூபிண்யா...(ஸ்ரீ கமலாம்பயா...)
அனுபல்லவி
ஸ்ரீ கண்ட விஷ்ணு விரிஞ்சாதி ஜநயித்ர்யா ஸிவாத்மக விஸ்வ கர்த்ர்யா: காரயித்ர்யா: ஸ்ரீ கர பஹிர்-தஸார- சக்ர ஸ்தித்யா: ஸேவித பைரவி பார்கவி பாரத்யா....(ஸ்ரீ கமலாம்பயா....)
ஹே மனமே பூமிதத்வம் முதல் சிவதத்வம் வரையான தத்வங்களின் ஸ்வரூபமாக விளங்குபவளான ஸ்ரீ கமலாம்பிகைக் காட்டிலும் வேறு மேலான தெய்வம் இல்லை.நீலகண்டன், விஷ்ணு,ப்ரும்மா,முதலியவர்களை தோற்றுவித்தவள் , சிவாத்மகதத்துவாமாக உலகைப்படைத்தவள், ஐஸ்வர்யங்களை அள்ளித்தருபவள்,பத்து இதழ்கள் உள்ள பஹிர்தசார சக்ரத்தில் உறைபவள்,லக்ஷிமி, ஸ்ரஸ்வதி,பைரவி ஆகியோரால் பூஜிக்கப் படுபவள்,ஆகிய இப்பேற்பட்டவளான ஸ்ரீ கமலாம்பிகையைவிட மேலான தெய்வம் வேறு கிடையாது. நாதமய சூக்க்ஷரூபமாக அணிமா மற்றும் அஷ்டமாசித்திகலை அருளுபவள், சர்வசித்திப்ராதா முதலான பத்து சக்த்தி தேவியர்களால் ஆராதனை செய்யப்படுகின்றமூர்த்தியாகயுள்ள அவளைக்காட்டிலும் வேறு மேலான தெய்வம் கிடையாது.கண் காது முதலாம் ஐந்து ஞனேந்திரியங்கள், வாக்கு முதலான ஐந்து கர்மேந்திரியங்கள் ஆக பத்து இந்திரியங்கள் சொரூபமானவள்,குலகௌலீனி சக்தி தேவியரால் பல்வகையான உபாசனை செய்யப்பெற்ற புகழை உடையவள்,பேதங்கற்ற,அழிவற்ற,மாசுகளற்ற,ஞானஸ்வரூபான, மாயையிலிருந்து விடுபட்ட,சச்சிதானந்தமான,மேலான அத்வைதத்தின் எழுச்சியாக இருக்கும் அவளைக்காட்டிலும் மேலான தெய்வம் வேறொன்றும் இல்லை.முதல் இடை கடை இல்லாத அளவிடற்கரியா குருகுஹனை ஈன்று மகிழ்ச்சியடைந்தவள்,அனைத்து புருஷார்த்தங்களையும் நிறைவேற்றுபவள்,முலாதாரம் முதல் தொடங்கி ஒன்பது ஆதாரங்களால் சுற்றப்பட்டவள்,பத்துவிதமான நாதங்களையும் அவற்றிற்குண்டான வேறுபாடுகளையும் அறிந்த யோகியர் கூட்டத்தை ரக்ஷிப்பவள்,என்று தோன்றியது என்றே சொல்லமுடியாத மாயையின் வடிவான அஞ்ஞானத்தின் காரிய காரணங்களை விலக்குவதற்கு மிகவும் திறமை வாய்ந்த கடைக்கண் பார்வை உள்ளவளான அந்த ஸ்ரீ கமலாம்பிகையைவிட மேலான வேறூ தெயவம் இல்லை இல்லை இல்லவே இல்லை
4 வது வரியிலிருந்து 20ஆவது வரி வரைக்கும் லலிதா ஸகஸ்ரநாமத்தில் அம்பாளின் அழகான கேசாதி பாத வர்ணனைதான். அதிலிருந்து ஒரு வரியைப் பார்க்கலாமா !
அஷ்டமீ சந்த்ர விப்ராஜ அளிகஸ்தல சோபிதா
அம்பாளின் நெற்றியை வர்ணிக்கும் பகுதி.அளகம் என்பது நெற்றியின் இரு பக்கங்களின் இருக்கும் பகுதி.அங்குதான் அம்பாளுடைய சுருண்ட கூந்தல் காற்றில் அழகாக முன்னுச்சியில் இரு புறமும் ஆடிக்கொண்டு இருக்கும். சரி அம்பாளுடைய நெற்றி எப்படி இருக்கிறது.அதுதான் அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா மாதிரி இருக்கிறது. என்ன சரியாகப் புரிய வில்லையா? கொஞ்சம் விளக்கமாகப் பார்க்கலாமா. அவளுடைய நெற்றி எட்டாநாள் சந்திரன் போல் இருக்கிறது.எல்லோரும் நெற்றியை பிறைச் சந்திரனுக்குத்தான் ஒப்பிடுவார்கள் ஆனால் இங்கு வேறுமாதிரி.ஆதி சங்கரர் செளந்தர்ய லகிரியில் அம்மா உன் தலையில் ஒரு பாதி அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா சந்திரன்மாதிரி இருக்கிறது. நெற்றியில்மறு பாதி சந்திரன் இருக்கிறது. இரண்டையும் அப்படியே சேர்த்து வைத்துப் பார்த்தால் முழுநிலவாகி விடும். அப்படி பௌர்ணமி பூர்ண சந்திரன் போல இருப்பதுதான் உன்முகம் என்கிறார்.இப்போது புரிகிறதா ஏன் அபிராமி பட்டர் அமாவாசையன்று பௌர்ணமி என்று கூறினார்.அவர் அம்பாளின் முகதரிசனம் செய்து கொண்டு இருந்தபோது கேட்ட கேள்விக்கு வந்த பதில்.பிறைச் சந்திரன் என்று சொன்னால் அது நெற்றியோடு பொருந்தாது. இரண்டு பக்கமும் தூக்கிக்கொண்டு இருக்கும் அழகாக இருக்காது.ஆனால் பாதி பிறை எட்டம்நாள் சந்திரன் சமமாக இருக்கும். அதை அப்படியே அம்பாளின் நெற்றியாக பாவனை செய்து இருபுறமும் சுருண்ட கூந்தல் காற்றில் அலைபாயும்படி கற்பனை செய்து பார்த்தால் அஷ்டமீ சந்த்ர விப்ராஜ அளிகஸ்தல சோபிதா என்ற வரிக்கு அர்த்தம் புரியும் நாளை வாருங்கள் மற்றொரு விளக்கம் பார்க்கலாம்
ஸ்ரீ மாதா ஸ்ரீ மஹாராஜ்ஞீ ஸ்ரீ மத்ஸிம்ஹாஸனேச்வரீ 1 "
சிதக்னி குண்ட ஸ்ம்பூதா தேவகார்ய சமுத்யதா !'
அம்மா! மகாராணி! உயர்ந்த ஸிம்ஹாசனத்தில் அமர்ந்திருப்பவளே !சித்தமான அக்னிகுண்டத்திலிருந்து தோன்றியவளே! தேவர்களின் கார்யசித்திக்காக எழுந்து அருளியவளே. உனக்கு நமஸ்காரம். இதில் ஒரு விசேஷம் பார்த்தீர்களா ! உலகத்தின் ஐந்தறிவு அல்லது ஆறறிவு பெற்ற எந்த உயிராக இருந்தாலும் எந்த மொழியில் பேசினாலும் அதனுடைய முதல் வார்த்தை""அம்மா"தான். ஆங்கிலத்தில்வரும் மதர் என்ற வார்த்தையே வடமொழியில் உள்ள மாதா என்ற வார்த்தையிலிருந்து வந்ததாக கூறுவர்.லலிதா ஸ்கசரநாமத்தில் வரும் முதல் வார்த்தையே மாதா தான்.நம் எல்லோருக்கும் ஆதி மாதா அவள், நாம் எல்லோரும் அவள் குழந்தைகள். அம்மாவுக்கும் குழந்தைக்கும் எப்போதும் ஒரு பிரிக்க முடியாத பிணப்பு உண்டு.பிறந்த சிறு குழந்தை 6 மாதம் வரையில் தனக்கு எல்லாமே அம்மாதான் என்று நினைத்துக்கொள்ளும் மற்ற உறவுகள் தந்தை உள்பட பின்னால்தான்.இன்னும் சொல்லப்போனால் அம்மாவின் குரலை கர்ப்பகாலத்திலேயே கேட்க ஆரம்பித்துவிடுமாம். அதனால்தான் ஸ்ரீமாதா என்ற முதல் வார்த்தையோடு ஆரம்பிக்கிறது ஸ்ரீ மஹாராஜ்ஞீ ஸ்ரீ மத்ஸிம்ஹாஸனேச்வரீ
எனக்கு தாயாராக இருந்தாலும் அவள் மஹாராணி, அதுமட்டுமல்ல அவள் இருப்பதோ சிம்ஹாசனத்தில். இந்த எளியவனுக்கு தாயாராக இருப்பதால் அவளை எளியவளாக எண்ணி விடாதீர்கள்.அவள் அகில உலகுக்கும் மஹாராணி.முத்து ஸ்வாமி தீக்க்ஷதர் ஸ்ரீ மாதா ஷிவவாமாங்கே என்ற பேகட கீர்த்தனையில் இவ்வாறு பாடுகிறார். " ஸ்ரீ மாதா சிவவாம மாங்கே ஸ்ரீ சக்ரரூப தாடங்கே மாமவ1ஸ்ரீ மஹாராஜ்ஞீ வதநஸ்-ஸசாங்கே சித்ப்ரதி பிம்பே மாமவ"என்று லலிதாஸ்ஹஸ்ரநாமத்தின் முதல் அடியை
வைத்தே திருச்சி அகிலாண்டேஸ்வரியைப் பாடினார்.
சிதக்கினி குண்ட ஸ்ம்பூதா சித் என்பது உள் மனதுக்குள் இருப்பது யோகிகளின் கடைசி நிலை சித் என்ற அந்த நிலை வந்து விட்டால் நாம் வேறு கடவுள் வேறு என்ற நிலை போய்விடும்.கடவுளை நம் சித்தத்திலேயே பார்க்கலாம். "சித்தத்துனுள்ளே சிவலிங்கம் காட்டி"என்ற நிலை. மனசு, புத்தி, அஹங்காரம்,அந்தகரணம் அடுத்தநிலை சித்தம்.இவையெல்லாம் சித்தத்தில் ஒடுங்கும். இதைத்தான் பாரதி "அந்த கரணமெல்லாம் சிந்தையிலே ஒடுங்கி"என்கிறார் அப்பேற்பட்ட சித்தமாகிய அக்னி குண்டத்திலிருந்து தோன்றியவள்தான் ஸ்ரீ மாதா. தேவ கார்ய சமுத்பவா தேவர்களின் கார்யமான அசுரர்களை வதம் செய்யவேண்டும் என்பதற்காக சித் அக்னி குண்டத்திலிருந்து வேகமாக மிகுந்த ஆற்றலுடன் தோன்றினாள்
ச்ரி கமலாம்பிகையால் கடாக்ஷிக்கபட்ட நான் சத்ஸித் ஆனந்த பரிபூரண பிரும்மாக இருக்கிறேன்.இந்திரன் முதலான எல்லா தேவர்களால் பூஜிக்கப்பட்டவளால், ஸ்ருஷ்டி,ஸ்திதி,ஸம்ஹாரம், திரோதனம்,அநுக்ரஹம் ஆகிய ஐந்து வகை தொழில்களை செய்பவளால்,பிரும்மா, விஷணு, ருத்ரன், மஹேஸ்வரன்,சதாசிவன் ஆகிய பஞ்ச ப்ரும்மாக்களால்கௌரவிக்கப்பட்டவளால்,துன்பங்களை அறவே நீக்கும் சக்தியுள்ள திருவடிகளை உடையவளால், மூககவி போன்றவர்களுக்கு உன்மேல் கவிமழைபாடும் பேச்சுத்திறன் அளித்தவளால்,செந்தாமரையை வெல்லும் பாதாரவிந்தங்களை தாங்கியவளால்,தந்தையின் தோள்மீதமர்ந்து தகப்பனான சிவனனுக்கே அஹம் ப்ரும்மாஸ்மி என்ற பதங்களின் ஸொரூபியாக இருப்பவளால்,அப்படிப்பட்ட கமலாம்பிகையின் கருணைக்கு ஆட்க்கொள்ளப்பட்டேன்.
அநங்ககுசுமா முதல் அநங்கமாலினி வரையான எட்டி சக்திகளின் அம்ஸமாக இருப்பவளால்,சிந்துர வர்ணமான இளம் சிகப்பு நிற சம்ஷோபண மூன்றாவது ஆவரண சக்ரத்தில் உரைபவளால்,(இது வான வெளியில் கிழக்கு முகமாகச் செல்லும்),கணக்கிலடாங்கா அண்டங்களின் தலைவனாக விளங்கும் சங்கரனின் நாயகியாகவிளங்குபவளால்,க ச ட த ப ய ஸ ள ஆகிய எட்டு வர்கம் எனப்படும் எண்வகை வாக்குகளில் மறைவாக பொதிந்து வரங்களை அருளுபவளால்,மன்மதாதியர் என அழைக்கபடும் மனு, சந்திரன், குபேரன்,லோபாமுத்ரா, மன்மதன்,அகஸ்த்யர் ,அக்னி, சூர்யன்,இந்திரன்,சுப்ரஹ்மண்யன், பரமசிவன், தூர்வாஸர் ஆகிய பன்னிருவரால் உபாசிக்கபபட்டவளால், எட்டு தளமுடைய ஸம்ஷோபண சக்ரத்தில் வஸிப்பவளால்,வில்,அம்பு போன்ற ஆயிதங்களை கையில் தரிப்பவளால்,கருணாசமுத்ரம் போன்றாவளான கமலாம்பிகையால் நான் கடாக்ஷிக்கப்பட்டேன்.
இந்த நாமம் லலிதா சஹஸ்ரநாமம் தியானஸ்லோகத்தில் வருகிறது.சிகப்பான ஒளிபொருந்திய உருவம் கொண்டவள் என்ற அர்த்தம்.இந்த உலகம் சூரியனின் ஒரு பகுதியாக வெடித்துச் சிதறியாதால் உண்டானது. அதனால் உலகம் தோன்றியபோது முதலில் உண்டான நிறம் சூரியனின் கிரணமான சிகப்பு நிறம்தான்.அபொழுதே அமபாள் செம்மைத்திருமேனி உடைய உருவமாகத் தோன்றினாள்.ஏன் உருவத்தோடு தோன்றினாள்.அகிலமெங்கும் வியாபித்திருக்கும் அம்பிகைக்கு உருவம் என்ன என்றால் சொல்லுவது அரிதாகும்.அம்பிகை என்ற சொன்னவுடனே அவள் ஒரு பெண்ணாகத்தான் இருக்கக்கூடும் என்று நினைப்பது இயல்பு.ஆனால் முப்பெரும் தெய்வத்தையும் உள்ளடக்கிய அந்த பெரிய தெய்வத்துக்கு எந்த வர்ணம் எந்த உருவும் தர முடியும் ? அவள் எப்படியிருப்பாள் ? ""தாம் அக்னி வர்ணாம் தபஸா ஜ்வலந்தீம் "" என்கிறது துர்கா ஸூக்தம்.அக்னி சிகப்பாகத்தான் இருக்கும்.
அவள்தான் பெரிய தெய்வம் என்று எப்படிச் சொல்லமுடியும். மீசைகவி சொல்லுகிறான் ஒரு இடத்தில்"பெண் விடுதலை வேண்டும் பெரிய தெய்வம் காக்க வேண்டும்"அவனுக்கு பராசக்திதானே பெரிய தெய்வம் நல்ல சிகப்பு இல்லாமல் சிந்துர வண்ணம் போல உள்ள இளம் சிகப்பு நிறத்தில் தோன்றினாள்.அபிராமி பட்டரும் '" சிந்தூர வர்ணத்தினாள்
என்று கூறுகிறார். லலிதா ஸ்கஸ்ர நாமம் முழுவதிலும் அவளச் சிகப்பு வர்ணத்தில் வர்ணிக்கப்படுகிறாள்."ரக்தவர்ணா,சிதக்னிகுண்டத்திலிருந்து உருவானவள்"" தோற்றதிற்கான நிறம் கொண்டாள்.ஆதி சங்கரரும் சௌந்தர்யலகிரியில்"" ஜகத்தாத்ரிம் கருணாசித் அருணா".இந்த உலகத்தின் மீது கொண்ட கருணையினால் சிகப்புவடிவம்கொண்டாள். அபிராமபட்டர் நீலி என்று கூறி விட்டு கடைசியில் சிந்தூர வர்ணத்தினாள் என்று முடிக்கிறார். இதன் அர்த்தம் என்ன. நிறங்களை வரிசைப் படுத்தும் போது ஊதாவில் V(நீலீ) ஆரம்பித்து சிகப்பில் R முடிக்கிறோம் பட்டரும் எல்லா நிறங்களும் முடிவது சிகப்பில்தான் அதுதான் நீ என்கிற சிந்து அருண விக்ரஹம்
இன்றைய பாடல் இரண்டாவது ஆவரணமாகிய "கமலாம்பம் பஜரே" என்ற கல்யாணி ராகப் பாடல். அனேகமாக எல்லாருக்கும் தெரிந்து இருக்கும் பாடல்.மதுரை மணி அவர்கள் மிகவும் சிறப்பாக பாடியுள்ளார்.இனி பாடல்
ராகம்: கல்யாணீ தாளம்: ஆதி
பல்லவி
கமலாம்பாம் பஜரே ரே மாநஸ
கல்பித மாயாகார்யம் த்யஜரே ..... (கமலாம்பாம்)
இந்தப்பாடலில் விசேஷம் என்ன வென்றால் கல்யாணீ ராகத்துக்கே உரித்தான ஜீவ ஸ்வரமான நீ என்ற ஸ்வரத்தை கிருதி முழுவதும் பின்னி இழைந்தோடச் செய்துள்ளார் நாதயோகி தீக்ஷதர் அவர்கள்.
ஹே மனமே திருவாரூரி குடிகொண்டிருக்கும் கமலாம்பிகையை துதி செய். இந்த மாயமான கற்பனை உலகத்தில் உன்னை துர்விஷயங்களுக்கு அழைத்துச் செல்லும் காரியங்களை விட்டு விடவேண்டுமனால் அலைமகளும் கலைமகளும் இருபக்கங்களிலும் நின்று சேவித்த வண்ணம் இருப்பவளும், வெண்சங்கை வெல்லும் கழுத்தை உடையவளும்,தேவர்களால் பூஜிக்கப்படுபவளும்,கமலாபுரத்தில்கோயில் கொண்டுள்ளவளும், மிகவும் மெதுவாகவும் இனிமையாகவும் பேசும் தன்மையுடையவளும், மாதுளைமுத்துக்கள் போன்ற அழகியபற்களை உடையவளும், அன்றலர்ந்த தாமரையின் மலருக்கு நிகரான முகமுடையவளுமான கமலாம்பாளை துதி செய்.
வித்யா உபசனையின் அங்கமான ஸர்வாசாபரிபூரகசக்ரத்தின் ஈஸ்வரியும்,பரமசிவனின் மனதுக்குகந்தவளும்,தூர்வாஸ மகரிஷியினால் பூஜிக்கப்பட்ட குப்த(மறந்து)யோகினியாக இருப்பவளும், துக்கங்களை அடியோடு நாசம் செய்பவளும்,அஜபபா என்ற மந்த்ர ஸ்வரூபியாக இருப்பவளும்,கைவல்யம் என்னும் உண்மையானதும் மேலானதுமான முக்திநிலயை அளிப்பவளும்,எப்பொழுதும் மங்களமாக இருப்பவளும்,காத்யாயினியாக அவதாரம் செய்தவளும்,சர்வேஸ்வரனின் பட்ட மஹ்ஷியாக இருப்பவளும்,கருவண்டுகளின் கர்மையை மிஞ்சச்செய்யும் கருங்கூந்தலைஉடையவளும், ஞானபண்டிதனான குருகுஹனை ஈன்றவளும், ஆசாபாசங்களுக்கு அப்பாற்ப்பட்டவளும், கர்வம் பிடித்த பண்டாஸுரனை வதம் செய்தவளும்,காமகர்ஷணி போன்ற தேவதைகளுக்கு சந்தோஷம் அளிப்பவளும்,விகல்பங்களற்ற சைதன்யாரூபியாக இருப்பவளும், பூ தத்வம் முதலான தத்வங்களின் இருப்பிடமாக இருப்பவளுமான கமலாம்பாவை த்யானம் செய் மனமே.