Monday, October 03, 2011

நவராத்ரி நாயகி 7நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா!
தராகாந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுரா !!
கண்ணை விவரித்து விட்டு மூக்கை விட முடியுமா? நாஸாதண்டம் என்பது மூக்கினுடைய நடு தண்டு பாகமும் மூக்கும் சேர்ந்தது. அது எப்படி இருக்கிறது என்றால் அப்பொழுதுதான் பாதி மலர்ந்தும் பாதி மலராத செண்கப்பூப் போல இருக்கிறதாம்.அதுவும் இளம் சிவப்பு நிறம்தான். அப்படிப் பட்ட மூக்கில் அம்பாள் மூக்குத்தி அணிந்திருக்கிறாள். அதை வர்ணிக்க என்னால் முடியாது. இருந்தாலும் முயன்று பார்க்கிறேன்.வானத்தில் இருக்கும் எல்லா நக்ஷ்த்திரங்களின் ஒளியையும் அப்படியே திரட்டிஒரு சிறு மூக்குத்தியாக அணிந்திருக்கிறாளாம்.மூக்குத்தியின் மகிமை தெரியவேண்டுமானால் கன்யா குமாரிக்குப் போய் அவளுடைய மூக்குத்தி எவ்வாறு ஜ்வளிக்கிறது என்று பார்த்தால் புரியும்.கலங்கரை விளக்கம் போன்று ஒரு காலத்தில் கப்பல்களை ஆகர்ஷிக்குமாம்.முத்துமூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும் மோகன தங்கத்தினால் முடிந்திட்ட தாலியழகும் அடியானாற் சொல்ல திறமோ அழகான காஞ்சியில் புகழாக விளக்க விளங்கிடும் அம்மை காமாக்ஷி உமையே ஞாபகம்தான் வருகிறது. மறுமுறை படியுங்கள் நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா!
தராகாந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுரா !!
தேவியின் முகம் தெரியும்
சுண்டல் ஆறிக்கொண்டு இருக்கிறது சாபிடுங்கள் நாளை மற்றுமொரு நாமாவளியைப் பார்க்கலாம்

இன்றைய பாடல் ஆறாவது ஆவர்ணம்

ராகம்: புன்னாகவராளி  தாளம்;திஸ்ரம்பல்லவி

கமலாம்பிகாயாஸ்த்வ பக்ததோஹம் ஸ்ரீ  ஸங்
கார்யா: ஸ்ரீகார்யா: சங்கீத ரஸிகாயா...(கமலாம்பிகாயா,,,)

அனுபல்லவி

ஸுமஸர இக்ஷுகோதண்ட
பாஸாங்குஸ பாண்யா:
அதிமதுரதர வாண்யா:ஸர்வாண்யா: கல்யாண்யா:
ரமணீய புன்னாகவராளீ விஜித வேண்யா: ஸ்ரீ...(கமலாம்பிகாயா..)

சரணம்

தசகலாத்மக வஹ்நி ஸ்வரூப பிரகாஸாந்தர்த்
தஸார ஸர்வரக்ஷாகர சக்ரேஸ்வர்யா: திரி
தஸாதிநுத க ச வர்கத்வயமய ஸர்வஜ்ஞாதி
தஸ சக்தி ஸமேத மாலினி சக்ரேஸ்வர்யா; திரி
தஸ விம்ஸத்வர்ண கர்பிணீ குண்டலிந்யா;
தசமுத்ரா ஸமாராதித கௌளிந்யா;
தஸரதாதி நுத குருகுஹ-ஜநக ஸிவபோதிந்யா:
தஸகரண வ்ருத்தி மரீசி நிகர்ப யோகிந்யா: ஸ்ரீ ...(கமலாம்பிகாயா0

பக்தர்களுக்கு நலன்களை அளிப்பவளும்,செல்வங்களை அள்ளி வழங்கும்,சங்கீத ரஸிகையான கமலாம்பிகையே நான் உனது பக்தன்.
மலரம்பு, கரும்பு,வில், பாசக்கயிறு,அங்குசம் இவற்றை கையிலேந்தியவளும்,மிகவும் இனிமையான் குரல் உள்ளவளும்,பரமசிவனின் பத்னியும்,மங்களரூபியும், அழகான புன்னாக மரத்திலிருக்கும் கருவண்டுகளை பழிக்கும் கூந்தல் உடையவளும்,புன்னாகவராளி ராகத்திற்கும் ஆடும் ஸர்பத்தைபோல ஆடும் கூந்தல் அளாகாபாரம் உடையவளுமான ஸ்ரீ கமலாம்பிகையின் பக்தன் நான்.
பத்து கலைகளையிடைய அக்னியின் வடிவான பிராகசத்தின் மத்தியில்,பத்து தாளமுடைய ஸர்வரக்ஷாகர ஸக்ரேஸ்வரியாக இருப்பவளும்,  தேவர்களால் துதிசெய்யப்பட்ட க மற்றும் ச என்ற எழுத்துக்களான ஸர்வஜ்ஞாதி சக்திகளான பதின்மரோடு கூடிய மாலினீ ஸக்ரேஸ்வரியாக இருப்பவளும்  முப்பது மற்றும் இருபது அக்ஷரங்களை உள்ளடக்கிய குண்டலிநீ சக்தி ஸ்வரூபிணியாக இருப்பவளும், தசமுத்ரா தேவியரால் துதிக்கப்புடும் கௌலீனீயாக இருப்பவளும்,தசரதன் முதலோரால் துதிக்கப்படுபவளும்,குருகுஹனை உலகுக்கு அளித்தவளும்,சிவபெருமானின் சிவஞானபோதம் என்கிற ஞானத்தை அளிப்பவளும்,இந்திரியங்களின் செயல்பாடுகளின் கிரணங்கள் வடிவான நிகர்பயோகினிகளாக இருப்பவளுமான ஸ்ரீ கமலாம்பிகைக்கு நான் பக்தன்

2 comments:

கீதா சாம்பசிவம் said...

நேத்துத் தான் மெளலி எழுதிய மூக்குத்தி தீபாராதனை குறித்துப்படிக்க நேர்ந்தது. இன்று இங்கேயும் மூக்குத்தியின் வர்ணனையும்,மூக்கின் வர்ணனையும். அழகான விவரிப்புக்கு நன்றி. சுண்டல் அதே சுண்டல் தான் போலிருக்கே.

தி. ரா. ச.(T.R.C.) said...

இல்லையே இதுவேறே சுண்டல் வெள்ளை கொத்துக்கடலை சுண்டல்.
வருகைக்கு நன்றி