Wednesday, October 05, 2011

நவராத்ரி நாயகி 9

                                                                       சதி

இன்று எடுத்துக்கொள்ளும் நாமம் சதி. அம்பாளுக்கு சதி என்ற பெயர் உண்டு.இது அவளுடைய பதிவிரதா தன்மையை சிறப்பிக்கும் வண்ணம் அமைந்தது. தக்ஷனுக்கு மகளாக பிறந்தபோது அவளுக்கு அவன் சதி என்ற பெயரைத்தான் வைத்தான். பிறகுதான் தாக்ஷயணி என்ற பெயர் வந்தது.சதி என்றால் உடன்கட்டை என்ற வார்த்தையோடு இதை சேர்த்துக்கொள்ளகூடாது.தக்ஷன் இந்த பெயரை வைத்தபோது அவன் நினைக்கவில்லை அவனே பிற்காலத்தில் தன் மகளுக்கே பிரச்சனையை கொடுத்து சிவனையும் அவளையும் பிரித்து வைத்து சிவனை அவமானப்படுத்தி, தன்கணவனுக்கு ஏற்பட்ட அவமானத்தை தாங்கமுடியாத தாக்ஷயணி தந்தையான தக்ஷனை அழித்து அவளும் அக்னி குண்டத்தில் விழுந்து தான் சதி என்பதை நிரூபித்தாள்.சதிஎன்றால் சத்தோடு சேர்ந்தவள் அதாவது சிவப்பரம்பொருளோடு ஐக்கியமானவள்.அதனாலும் சதி என்ற பெயர் வந்தது
ஜனனி
ஜனனிஎன்றால் நாம் ஜனனம் எடுப்பதற்கு காரணமானவள். அப்படியென்றால் நாம் ஜனனம் எடுக்காமல் இருக்கவேண்டும் என்றாலும் அவள்தான் அருளவேண்டும். ஜனனி என்றால் நம்மையெல்லாம் காக்க வேண்டும் எண்ணத்தில் லலிதா பரமேஸ்வரியாக அவதாரம் செய்தவள்.
புதார்ச்சிதா
புதனால் அர்ச்சனை செய்யப்பட்டவள். நவகிரங்களும்தான் அவளை வணங்கி துதிக்கின்றனர். அப்படியென்ன புதனுக்கு மட்டும் சிறப்பு. புதன் தான் ஞானத்தைஅளிப்பவன்.ஆனால் புதனுக்கே ஞானத்தை அளித்தவள் லலிதா பரமேஸ்வரிதான். நாம்யெல்லோரும் ஞானம் வேண்டித்தான் அம்பாளிடம் துதி செய்கிறோம்.அதனால்தான் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகச்சிறந்த சக்தி உபாசகனான மகாகவி பாரதியார் " நன்றது செய்திடல் வேண்டும் அந்த ஞானம் வந்தால் போதும் வேறேது வேண்டும்" என்று பாடினான். அதன்னால்தான் புதன் அவளை வணங்குகிறான். அப்படி புதனுக்கே ஞானத்தை அளித்த அம்பாளை வணங்கினால் நமக்கும் அவள் ஞானத்தை அருளுவாள்.

இத்தோடு இன்றைய வர்ணனையை முடித்து நாளை மீண்டும் தொடரலாம்

இன்றைய பாடல் எட்டாவது ஆவர்ணம்

ராகம்: கண்டா    தாளம்: ஆதி
பல்லவி
ஸ்ரீ கமலாம்பிகே அவாவ 
சிவே   கர த்ருத ஸுகஸாரிகே.......( ஸ்ரீ கமலாம்பிகே)
அநுபல்லவி
லோகபாலிநி கபாலிநி ஸூலிநி
லோகஜனநீ பகமாலிநி ஸக்ருதா
லோகயமாம் ஸர்வஸித்திப்ரதாயிகே
த்ரிபுராம்பிகே பாலாம்பிகே.....(ஸ்ரீ கமலாம்பிகே)

சரணம்
ஸந்தப்த ஹேம ஸந்நிப தேஹே
ஸதாக்கண்டைக ரஸ ப்ராவாஹே
ஸந்தாப- ஹர த்ரிகோண -கேஹ
ஸ-காமேஸ்வரி ஸக்தி ஸமூஹே
ஸந்ததம் முக்டி கண்டாமணி
கோஷயமான கவாட்த்வாரே
அநந்த குருகுஹ விதிதே கராங்குலி
நகோதய விஷ்ணு தஸாவதாரே
அந்த:கரேணக்ஷு கார்முக ஸப்தாதி
பஞ்ச தந்மாத்ர விஸிகா
அத்யந்தராக பாஸ த்வேஷாங்குஸதரகரே
அதிரஹஸ்ய யோகிநீபரே...ஸ்ரீ கமலாம்பிகே)
மங்கள உருவான் சிவசக்தியே,எட்டு விதமான ஸ்யமளா பேதங்களில் ஒன்றானவளே,கையினில் கிளியோடு இருப்பவளே,ச்ரி கமலாம்பிகையே என்னைக் காப்பாற்று.உலகை காப்பவளே,கபலத்தைக் கையினில் தாங்கியவளே,சூலத்தைக் கையினிலேந்தி சூலினி  துர்கையாக காட்சியளிப்பவளே, உலகனைத்தையும் தோற்றுவித்தவளே,பதினைந்து நித்ய தேவியரில் பதினாங்கவதான பகமாலினியாக விளங்குபவளே,ஸர்வஸித்திப்ரதாயக சக்ரேஸ்வரியாக உள்ள த்ரிபுராம்பிகையே கமலாம்பிகயே ஒருமுறையாவது என் மேல் கருணை வைத்து பார்.தங்க மேனியைக் கொண்ட பங்காரு காமாட்சியாகக் காட்சிதருபவளே,எப்போதும் அகண்ட ரஸ ப்ரவாகமாக பிரும்மானந்தத்தைப் பெருக்குபவளே, தாபத்ரயத்தைப் போக்கியருளும் மஹாகமேஸ்வரி, மஹாவஜ்ரேஸ்வரி, மஹாபகமாலினீ,ஆகிய மூன்று ஆவரண தேவதைகளாக ஸ்ரீ சக்ரத்தின் எட்டாவது முக்கோணத்தில் உளுறைபவளே,காமேஸ்வரியோடு கூடிய ஸக்தி ஸமூகங்களைக் கொண்டவளே,எப்போதும் ப்ரணவநாதமான கண்டா மணி ஓசையை எழுப்பியவண்ணம் முக்திதரும்  சிந்தாமணிக்கு  அழைத்துச்செல்லும் வாயிற்கதவுகளாக இருப்பவளே,ஆதிசேஷேன் குருகுஹன் ஆகியோரால் நன்கு அறியப்பட்டவளே,கை விரல் நகங்களிலிருந்து விஷ்ணுவின் தஸாவதாரங்களைத் தோற்றுவித்தவளே,அந்தகரணமென்னும் கரும்புவில்லில் சப்தம்,-ரூபம்-ரஸம்-கந்தம்-ஸ்பர்ஸம் எஅனப்படும் ஐந்து தன்மாத்ரைகளை அம்புகளாக்கி அங்கு ஏற்படும் மிக அதிகமான பற்றையும், பாசத்தையும்,க்ரோதத்தையும்,நீக்குவதற்காக கையினில் அங்குசம் தரித்திருக்கும் கரங்கள் உடையவளே,அதிரஹஸ்ய யோகினியாகைருப்பவளே கமலாம்பிகையே என்னை ஒருமுறையாவது கடைக்கண்ணால் பார்த்தருள்வாயே4 comments:

கீதா சாம்பசிவம் said...

புதனுக்கு அருளிய வரலாற்றை இன்னும் கொஞ்சம் விவரித்திருக்கலாமோ? அம்மன் படங்கள் கொள்ளை அழகு. முதல் படம் கண்களிலேயே நிற்கிறது. நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) said...

இதுவே முடியலை. ஆபீஸ் இட மாற்றம் வீட்டுக்கொலுக்கு மாமிக்கு ஸ்கார்ட் அதைத் தனிப்பதிவா போடலாம் வருகைக்கு நன்றி

ராம்ஜி_யாஹூ said...

nice post

RAMVI said...

அம்பாளின் நாமங்கள் பற்றிய விளக்கம் அருமை.