Tuesday, October 04, 2011

நவராத்ரி நாயகி 8





திரிபுரா
படைத்தல் காத்தல் அழித்தல் என்கிற முன்றுவகையான தொழில்களைச் செய்யும் பிரும்மா விஷ்ணூ, சிவன் ஆகிய மூவர்க்கும் மூத்தவள். சரி இவர்களே மிகவும் வயதானவர்கள் அவர்களுக்கும் மூத்தவள் என்றாள் மிகவும் வயதானவளா அம்மா நீ என்றால்  அதற்கு அபிராமி பட்டர் சொல்வதைக் கேட்கவேண்டும்.
"மூத்தவளே மூவாமுதல்வர்க்கும் மூத்தவளே பின் கரந்தவளே இளையவளே"
அம்மா நீ எல்லோருக்கும் மூத்தவளாக இருந்தாலும் இளயவளாகத்தான் எங்களுக்குக் காட்சியளிக்கிறாய் அதனால்தான் உன்னை பாலா என்றும் குமரிஎன்றும் சின்னஞ் சிறு பெண்ணாவாள் சிற்றாடை உடை உடுத்தி சிவகங்கை நகரினிலே ஸ்ரீதுர்கை  சிரித்திடுவாள் என்றெல்லாம் துதிக்கிறார்கள்

நாளை இன்னுமொரு பதத்தைப்பார்ப்போமா

இன்றைய பாடல்  ஏழாவது  ஆவரணம்
ராகம்: சஹானா                                        தாளம்:திரிபுட

பல்லவி

ஸ்ரீ கமலாம்பிகயாம் பக்திம் கரோமி
சிரித கல்ப வாடிகாயாம்....
சண்டிகாயாம் ஜகதாம்பிகாயாம்.........(ஸ்ரீ கமலாம்பிகாயாம்)

அனுபல்லவி

ராகாசந்திரவதநாயாம் ராஜிவா நயனாயாம்
பாகாரி நுத சரணாயாம ஆகாசாதி கிரநாயாம்
ஹிரீம்கார விபிந ஹரிண்யாம்
ஹிரீம்கார ஸூசரீரிண்யாம்
ஹிரீம்கார தருமஞ்ஜசர்யாம்
ஹிரீம்காரேஸ்வர்யாம் கௌர்யாம்......(ஸ்ரீ  கமலாம்பிகாயாம்)
ஸரணம்
ஸரீர த்ரய விலக்ஷ்ண
ஸுகதர ஸ்வாத்மாநு போகிண்யாம்
விரிஞ்சீ ஹரீஸாந ஹரிஹய
வேதித ரஹஸ்ய யோகிண்யாம்
பராதி வாக்தேவதா ரூப வஸந்யாதி விபாகிந்யாம்
சராத்மக ஸ்ர்வரோக ஹர
நிராமய ராஜயோகிண்யாம்
கரதிருத வீணாவாதிந்யாம்
கமலாந்கர விநோதிண்யாம்
ஸுர நர முநிஜன மோதிண்யாம்
குருகுஹ வரப்ராசாதிந்யாம்...     (ஸ்ரீ கமலாம்பிகையாம்)

 

கமலாம்பிகை  அடியவர்களுக்கு கற்பகச்சோலை போன்று கேட்டவரங்களை கொடுப்பவாள் கோபத்தினால் சிவந்து உக்ரமுடைய சண்டிகை எனப்பெயர் பெற்றவள்,ஜகன்மாதாவாக விளங்குபவளான  கமலாம்பிகையை நான் பக்தி செய்து வணங்குகிறேன்.முழுமதியை நிகர்த்த முகமுடைய,தாமரைக்கண்ணியை,பாகன் என்ற அசுரனனின் எதிரியான இந்திரன் வந்து வணங்கும்சரணங்களைஉடையவள், ஆகாயம் முதலான பஞ்ச பூதங்களை தன்னுடைய பிரகாசத்தால் ஒளிரவைப்பவள்,ஹிரீம் என்ற மந்திர காட்டில் மான் உருவம்கொண்டு இருப்பவளும்,ஹிரீம் என்ற பீஜாக்ஷரத்தை தன்னுடைய மங்களகரமான சரீரமாக கொண்டவளும்,ஹிரீம் என்ற பீஜாக்ஷரமாகிய மரத்தில் பூத்த மலர்போல் விளங்குபவள்,ஹிரீம் என்ற பீஜாக்ஷரத்திற்கே ஈஸ்வரியானவளும்.பொன்நிறமான வடிவுடன் கௌரிஎன்று அழைக்கப்படுபவளுமான ஸ்ரீ கமலாம்பிகையின் மீது நான் பக்தி செய்து வணங்கிறேன்.
ஸ்தூலம்-ஸூஷ்மம்-காரணம் எனப்படும் மூன்று வகையான உருவங்களை கடந்த ஆனந்தமயமான தன்னுடைய ஸ்வரூபத்தில் பிரும்மா,விஷ்ணு,மஹேஸ்வரன்,ஆகியோருக்கு ரஹஸ்யயோகினியானவள்,பரா-பஸ்யந்தி-மத்யமா-வைகரீ ஆகிய நிலைகளின் வாக்தேவியரின் சுரூபமான வசிநீ முதலான எட்டு சக்திகளாக பகுத்துக்கொண்டுவள்,அசையும் பொருள்களை பீடிக்கும் அனைத்து வியாதிகளையும் போக்கவல்ல ஆரோக்கிய ராஜயோகினியாக விளங்குபவள்,கைகளில் வீணையை ஏந்தி இசைப்பவளும்,கமலாநகரம் என்ற திருவாரூரில் பேரானந்தத்தில் திகழ்பவளும்,தேவர்,மனிதர், முனிவர்களை மகிழ்ச்செய்பவளும்,குருகுஹனுக்கு வரங்கள் வழங்குபளான ஸ்ரீ கமலாம்பிகையை நான் எப்போதும் பக்தி செய்து வணங்குகிறேன் 


2 comments:

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஒரே இடத்தில் இன்றைய நாள் பற்றிய பாட்டு, பொருள், படங்கள், பட்சணம் எல்லாமும் காண கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. அழகான கொலு அலங்காரம்

Geetha Sambasivam said...

அருமையான விளக்கம். நல்ல பதிவுகள். பாடல்களைப்பொருள் தெரிந்து கேட்பதில் தனி சுகம் தான்.

அது சரி, சுண்டலுக்கு வெங்காயமா போட்டிருக்கீங்க? வெங்காயம் சாப்பிட மாட்டேனே! தனியாக் கொஞ்சம் அனுப்பிடுங்க.