Thursday, September 29, 2011

நவராத்ரி நாயகி 3




சிந்தூ அருண விக்ரஹாம்
இந்த நாமம் லலிதா சஹஸ்ரநாமம் தியானஸ்லோகத்தில் வருகிறது.சிகப்பான ஒளிபொருந்திய உருவம் கொண்டவள் என்ற அர்த்தம்.இந்த உலகம் சூரியனின் ஒரு பகுதியாக வெடித்துச் சிதறியாதால் உண்டானது. அதனால் உலகம் தோன்றியபோது முதலில் உண்டான நிறம் சூரியனின் கிரணமான சிகப்பு நிறம்தான்.அபொழுதே அமபாள் செம்மைத்திருமேனி உடைய உருவமாகத் தோன்றினாள்.ஏன் உருவத்தோடு தோன்றினாள்.அகிலமெங்கும் வியாபித்திருக்கும் அம்பிகைக்கு உருவம் என்ன என்றால் சொல்லுவது அரிதாகும்.அம்பிகை என்ற சொன்னவுடனே அவள் ஒரு பெண்ணாகத்தான் இருக்கக்கூடும் என்று நினைப்பது இயல்பு.ஆனால் முப்பெரும் தெய்வத்தையும் உள்ளடக்கிய அந்த பெரிய தெய்வத்துக்கு எந்த வர்ணம் எந்த உருவும் தர முடியும் ? அவள் எப்படியிருப்பாள் ? ""தாம் அக்னி வர்ணாம் தபஸா ஜ்வலந்தீம் "" என்கிறது துர்கா ஸூக்தம்.அக்னி சிகப்பாகத்தான் இருக்கும்.

அவள்தான் பெரிய தெய்வம் என்று எப்படிச் சொல்லமுடியும். மீசைகவி சொல்லுகிறான் ஒரு இடத்தில்"பெண் விடுதலை வேண்டும் பெரிய தெய்வம் காக்க வேண்டும்"அவனுக்கு பராசக்திதானே பெரிய தெய்வம் நல்ல சிகப்பு இல்லாமல் சிந்துர வண்ணம் போல உள்ள இளம் சிகப்பு நிறத்தில் தோன்றினாள்.அபிராமி பட்டரும் '" சிந்தூர வர்ணத்தினாள்

என்று கூறுகிறார். லலிதா ஸ்கஸ்ர நாமம் முழுவதிலும் அவளச் சிகப்பு வர்ணத்தில் வர்ணிக்கப்படுகிறாள்."ரக்தவர்ணா,சிதக்னிகுண்டத்திலிருந்து உருவானவள்"" தோற்றதிற்கான நிறம் கொண்டாள்.ஆதி சங்கரரும் சௌந்தர்யலகிரியில்"" ஜகத்தாத்ரிம் கருணாசித் அருணா".இந்த உலகத்தின் மீது கொண்ட கருணையினால் சிகப்புவடிவம்கொண்டாள். அபிராமபட்டர் நீலி என்று கூறி விட்டு கடைசியில் சிந்தூர வர்ணத்தினாள் என்று முடிக்கிறார். இதன் அர்த்தம் என்ன. நிறங்களை வரிசைப் படுத்தும் போது ஊதாவில் V(நீலீ) ஆரம்பித்து சிகப்பில் R முடிக்கிறோம் பட்டரும் எல்லா நிறங்களும் முடிவது சிகப்பில்தான் அதுதான் நீ என்கிற சிந்து அருண விக்ரஹம்
இன்றைய பாடல் இரண்டாவது ஆவரணமாகிய "கமலாம்பம் பஜரே" என்ற கல்யாணி ராகப் பாடல். அனேகமாக எல்லாருக்கும் தெரிந்து இருக்கும் பாடல்.மதுரை மணி அவர்கள் மிகவும் சிறப்பாக பாடியுள்ளார்.இனி பாடல்

ராகம்: கல்யாணீ             தாளம்: ஆதி

பல்லவி

கமலாம்பாம் பஜரே ரே மாநஸ
கல்பித மாயாகார்யம் த்யஜரே ..... (கமலாம்பாம்)


அனுபல்லவி

கமலா வாணீ ஸேவ்த பார்ஸ்வாம்
கம்பு ஜயக்ரீவாம் நத-தேவாம்
கமலாபுர ஸதநாம் மிருது-கதநாம்
கமநீய- ரதநாம் கமல-வதநாம் .....(கமலாம்பாம்)


சரணம்

ஸர்வாஸாபரிபூரக- சக்ர
ஸ்வாமிநீம் பரமஸிவகாமிநீம்
தூர்வாஸார்ச்சித குப்த- யோகிநீம்
துக்க த்வமஸிநீம் ஹம்சிநீம்
நிர்வாண நிஜஸுக ப்ரதாயிநீம்
நித்யகல்யாணீம் காத்யாயநீம்
ஸர்வாணீம் மதுபவிஜய வேணீம்
ஸத்குருகுஹ ஜநநீம் நிரஞநீம்
கர்வித பண்டாஸுர பஞ்ஜநீம்
காமகர்ஷிண்யாதி ரஞ்ஜநீம்
நிர்விசேஷ சைதந்ய ரூபிணீம்
ஊர்வி தத்வாதி ஸ்வரூபிணீம்.......(கமலாம்பாம்)


இந்தப்பாடலில் விசேஷம் என்ன வென்றால் கல்யாணீ ராகத்துக்கே உரித்தான ஜீவ ஸ்வரமான நீ என்ற ஸ்வரத்தை கிருதி முழுவதும் பின்னி இழைந்தோடச் செய்துள்ளார் நாதயோகி தீக்ஷதர் அவர்கள்.

ஹே மனமே திருவாரூரி குடிகொண்டிருக்கும் கமலாம்பிகையை துதி செய். இந்த மாயமான கற்பனை உலகத்தில் உன்னை துர்விஷயங்களுக்கு அழைத்துச் செல்லும் காரியங்களை விட்டு விடவேண்டுமனால் அலைமகளும் கலைமகளும் இருபக்கங்களிலும் நின்று சேவித்த வண்ணம் இருப்பவளும், வெண்சங்கை வெல்லும்  கழுத்தை உடையவளும்,தேவர்களால் பூஜிக்கப்படுபவளும்,கமலாபுரத்தில்கோயில் கொண்டுள்ளவளும், மிகவும் மெதுவாகவும் இனிமையாகவும் பேசும் தன்மையுடையவளும், மாதுளைமுத்துக்கள் போன்ற  அழகியபற்களை உடையவளும், அன்றலர்ந்த தாமரையின் மலருக்கு நிகரான முகமுடையவளுமான கமலாம்பாளை துதி செய்.
வித்யா உபசனையின் அங்கமான ஸர்வாசாபரிபூரகசக்ரத்தின் ஈஸ்வரியும்,பரமசிவனின் மனதுக்குகந்தவளும்,தூர்வாஸ மகரிஷியினால் பூஜிக்கப்பட்ட குப்த(மறந்து)யோகினியாக இருப்பவளும், துக்கங்களை அடியோடு நாசம் செய்பவளும்,அஜபபா என்ற மந்த்ர ஸ்வரூபியாக இருப்பவளும்,கைவல்யம் என்னும் உண்மையானதும் மேலானதுமான முக்திநிலயை அளிப்பவளும்,எப்பொழுதும் மங்களமாக இருப்பவளும்,காத்யாயினியாக அவதாரம் செய்தவளும்,சர்வேஸ்வரனின் பட்ட மஹ்ஷியாக இருப்பவளும்,கருவண்டுகளின் கர்மையை மிஞ்சச்செய்யும் கருங்கூந்தலைஉடையவளும், ஞானபண்டிதனான குருகுஹனை ஈன்றவளும், ஆசாபாசங்களுக்கு அப்பாற்ப்பட்டவளும், கர்வம் பிடித்த பண்டாஸுரனை வதம் செய்தவளும்,காமகர்ஷணி போன்ற தேவதைகளுக்கு சந்தோஷம் அளிப்பவளும்,விகல்பங்களற்ற சைதன்யாரூபியாக இருப்பவளும், பூ தத்வம் முதலான தத்வங்களின் இருப்பிடமாக இருப்பவளுமான கமலாம்பாவை த்யானம் செய் மனமே.

 

3 comments:

Geetha Sambasivam said...

நன்றி.

மதுரையம்பதி said...

மிக அருமை....பகிர்தலுக்கு நன்றிகள் சார்.

RAMA RAVI (RAMVI) said...

கல்யாணி ராகத்தில் தீக்ஷதர் கிருதி,விளக்கம் மிக அழகு.

டி.கே ஜெயராமன்& பார்ட்டி பாடல் அருமை.

முதல் வீடியோவில் கீதா ராஜசேகர் பாடுவதும் அருமையாக இருக்கு.