Friday, September 30, 2011

நவராத்ரி நாயகி 4

Y



லலிதா ஸ்ஹஸ்ரநாமத்தின் முதல் அடி

ஸ்ரீ மாதா ஸ்ரீ மஹாராஜ்ஞீ ஸ்ரீ மத்ஸிம்ஹாஸனேச்வரீ 1 "

சிதக்னி குண்ட ஸ்ம்பூதா தேவகார்ய சமுத்யதா !'

அம்மா! மகாராணி! உயர்ந்த ஸிம்ஹாசனத்தில் அமர்ந்திருப்பவளே !சித்தமான அக்னிகுண்டத்திலிருந்து தோன்றியவளே! தேவர்களின் கார்யசித்திக்காக எழுந்து அருளியவளே. உனக்கு நமஸ்காரம். இதில் ஒரு விசேஷம் பார்த்தீர்களா ! உலகத்தின் ஐந்தறிவு அல்லது ஆறறிவு பெற்ற எந்த உயிராக இருந்தாலும் எந்த மொழியில் பேசினாலும் அதனுடைய முதல் வார்த்தை""அம்மா"தான். ஆங்கிலத்தில்வரும் மதர் என்ற வார்த்தையே வடமொழியில் உள்ள மாதா என்ற வார்த்தையிலிருந்து வந்ததாக கூறுவர்.லலிதா ஸ்கசரநாமத்தில் வரும் முதல் வார்த்தையே மாதா தான்.நம் எல்லோருக்கும் ஆதி மாதா அவள், நாம் எல்லோரும் அவள் குழந்தைகள். அம்மாவுக்கும் குழந்தைக்கும் எப்போதும் ஒரு பிரிக்க முடியாத பிணப்பு உண்டு.பிறந்த சிறு குழந்தை 6 மாதம் வரையில் தனக்கு எல்லாமே அம்மாதான் என்று நினைத்துக்கொள்ளும் மற்ற உறவுகள் தந்தை உள்பட பின்னால்தான்.இன்னும் சொல்லப்போனால் அம்மாவின் குரலை கர்ப்பகாலத்திலேயே கேட்க ஆரம்பித்துவிடுமாம். அதனால்தான் ஸ்ரீமாதா என்ற முதல் வார்த்தையோடு ஆரம்பிக்கிறது
ஸ்ரீ மஹாராஜ்ஞீ ஸ்ரீ மத்ஸிம்ஹாஸனேச்வரீ

எனக்கு தாயாராக இருந்தாலும் அவள் மஹாராணி, அதுமட்டுமல்ல அவள் இருப்பதோ சிம்ஹாசனத்தில். இந்த எளியவனுக்கு தாயாராக இருப்பதால் அவளை எளியவளாக எண்ணி விடாதீர்கள்.அவள் அகில உலகுக்கும் மஹாராணி.முத்து ஸ்வாமி தீக்க்ஷதர் ஸ்ரீ மாதா ஷிவவாமாங்கே என்ற பேகட கீர்த்தனையில் இவ்வாறு பாடுகிறார். " ஸ்ரீ மாதா சிவவாம மாங்கே ஸ்ரீ சக்ரரூப தாடங்கே மாமவ1ஸ்ரீ மஹாராஜ்ஞீ வதநஸ்-ஸசாங்கே சித்ப்ரதி பிம்பே மாமவ"என்று லலிதாஸ்ஹஸ்ரநாமத்தின் முதல் அடியை
 வைத்தே திருச்சி அகிலாண்டேஸ்வரியைப் பாடினார்.
சிதக்கினி குண்ட ஸ்ம்பூதா
சித் என்பது உள் மனதுக்குள் இருப்பது யோகிகளின் கடைசி நிலை சித் என்ற அந்த நிலை வந்து விட்டால் நாம் வேறு கடவுள் வேறு என்ற நிலை போய்விடும்.கடவுளை நம் சித்தத்திலேயே பார்க்கலாம். "சித்தத்துனுள்ளே சிவலிங்கம் காட்டி"என்ற நிலை. மனசு, புத்தி, அஹங்காரம்,அந்தகரணம் அடுத்தநிலை சித்தம்.இவையெல்லாம் சித்தத்தில் ஒடுங்கும். இதைத்தான் பாரதி "அந்த கரணமெல்லாம் சிந்தையிலே ஒடுங்கி"என்கிறார் அப்பேற்பட்ட சித்தமாகிய அக்னி குண்டத்திலிருந்து தோன்றியவள்தான் ஸ்ரீ மாதா.
தேவ கார்ய சமுத்பவா
தேவர்களின் கார்யமான அசுரர்களை வதம் செய்யவேண்டும் என்பதற்காக சித் அக்னி குண்டத்திலிருந்து வேகமாக மிகுந்த ஆற்றலுடன் தோன்றினாள்
தோன்றியவள்.

 இன்றைய தினப் பாடல் 3 வது ஆவரணம்

ராகம்: சங்கராபரணம்             தாளம்: ரூபகம்
பல்லவி


ச்ரி  கமலாம்பிகயா கடக்ஷிதோஹம்
ஸச்சிதாநந்த பரிபூர்ண ப்ரஹமாஸ்மி11.....(ச்ரி கமலாம்பிகயா)


அனுபல்லவி
பாகஸாநாதி ஸ்கல் தேவதா ஸேவிதய
பங்கஜாஸநாதி பஞ்ச க்ருத்யாக்ருத்-பாவிதயா
ஸோக-ஹர சதுர பதயா முக-முக்ய-வாக்-ப்ரதயா
கோகநத விஜய-[அதயா குருகுஹ-த்ரைபதயா......(ச்ரி கமலாம்பிகயா...)
சரணம்
அநங்க-குஸுமாத்-யஷ்ட ஸக்த்யாகாரயா
அருண-வர்ண ஸம்சோக்ஷாபண் சக்ராகாரயா
அநந்த-கோட்யண்டநாயக ஸங்கர -நாயிகயா
அஷ்ட-வர்காத்மக குப்த்-தரயா வரயா
அநங்காத் யுபாஸிதயா அஷ்டதளாப்ஜ-ஸ்திதயா
தநுர் பாணதர கரயா தயா-ஸுதா-ஸகரயா....(ச்ரி கமலம்பிகயா

ச்ரி கமலாம்பிகையால் கடாக்ஷிக்கபட்ட நான் சத்ஸித் ஆனந்த பரிபூரண பிரும்மாக இருக்கிறேன்.இந்திரன் முதலான  எல்லா தேவர்களால் பூஜிக்கப்பட்டவளால், ஸ்ருஷ்டி,ஸ்திதி,ஸம்ஹாரம், திரோதனம்,அநுக்ரஹம் ஆகிய ஐந்து வகை தொழில்களை செய்பவளால்,பிரும்மா, விஷணு, ருத்ரன், மஹேஸ்வரன்,சதாசிவன் ஆகிய பஞ்ச ப்ரும்மாக்களால்கௌரவிக்கப்பட்டவளால்,துன்பங்களை அறவே நீக்கும் சக்தியுள்ள திருவடிகளை உடையவளால், மூககவி போன்றவர்களுக்கு உன்மேல்  கவிமழைபாடும் பேச்சுத்திறன் அளித்தவளால்,செந்தாமரையை வெல்லும் பாதாரவிந்தங்களை தாங்கியவளால்,தந்தையின் தோள்மீதமர்ந்து தகப்பனான சிவனனுக்கே அஹம் ப்ரும்மாஸ்மி என்ற பதங்களின் ஸொரூபியாக இருப்பவளால்,அப்படிப்பட்ட கமலாம்பிகையின் கருணைக்கு ஆட்க்கொள்ளப்பட்டேன்.
அநங்ககுசுமா முதல் அநங்கமாலினி வரையான எட்டி சக்திகளின் அம்ஸமாக இருப்பவளால்,சிந்துர வர்ணமான இளம் சிகப்பு நிற சம்ஷோபண மூன்றாவது ஆவரண சக்ரத்தில் உரைபவளால்,(இது வான வெளியில் கிழக்கு முகமாகச் செல்லும்),கணக்கிலடாங்கா அண்டங்களின் தலைவனாக விளங்கும் சங்கரனின் நாயகியாகவிளங்குபவளால்,க ச ட த ப ய ஸ ள ஆகிய எட்டு வர்கம் எனப்படும் எண்வகை வாக்குகளில் மறைவாக பொதிந்து வரங்களை அருளுபவளால்,மன்மதாதியர் என அழைக்கபடும் மனு, சந்திரன், குபேரன்,லோபாமுத்ரா, மன்மதன்,அகஸ்த்யர் ,அக்னி, சூர்யன்,இந்திரன்,சுப்ரஹ்மண்யன், பரமசிவன், தூர்வாஸர் ஆகிய பன்னிருவரால் உபாசிக்கபபட்டவளால், எட்டு தளமுடைய ஸம்ஷோபண சக்ரத்தில் வஸிப்பவளால்,வில்,அம்பு போன்ற ஆயிதங்களை கையில் தரிப்பவளால்,கருணாசமுத்ரம் போன்றாவளான கமலாம்பிகையால் நான் கடாக்ஷிக்கப்பட்டேன்.


1 comment:

Geetha Sambasivam said...

லலிதா சஹஸ்ரநாமத்தையும்,பாடலையும் இணைத்திருக்கும் விதம் அருமையாக உள்ளது. விளக்கத்திற்கு நன்றி.