இன்றைய பெயர்கள்
நித்யதிருப்தா
ஆம் இருந்தார் ஒருவர் நம்முடைய காலகட்டத்திலேயே. அவர்தான் மஹாகவி பாரதியார்.நாம் இன்றைக்கு எந்த விஷயங்கள் எல்லாம் சந்தோஷம் என்று நினைத்து திருப்தி அடைவது போல் நினைக்கிறோமோ அவைகள் ஒன்றுமே இல்லாமல் இருந்தும் நித்யதிருப்தாவாக இருந்தார் . வீடு வாசல் கிடையாது, உனவுக்கு வசதி கிடையாது உடுக்க துணிவகைகள் கிடையாது ஆங்கிலேயன் தொல்லை தாங்காமல் பாண்டிச் சேரிக்கும் சென்னைக்கும் அலைந்துகொண்டிருந்தார் . . இருந்தாலும் அவர் என்ன சொன்னார் தெரியுமா" எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா" நாமாக இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்போம்.அம்பிகையை முழுவதும் நம்பிவிட்டாவர்களுக்குத்தான் இது சாத்தியம்
பக்தநிதி
பக்தர்களுக்கு மிகப்பெரிய நிதியாக விளங்குபவள். அடியவர்கள் எதை கேட்டாலும் அதை அவர்களுக்கு அளித்து என்றும் குறையாத நிதியாக விளங்குபவள்.மற்ற நிதிகள் எல்லாம் ஒருகாலத்தில் அழிந்துவிடும் திருப்தியளிக்காமல் போனாலும் போகலாம் ஆனால் பக்தர்களுக்கு அவள் அளிக்கும் பக்தி என்ற நிதி இருக்கிறதே அது அள்ள அள்ள குறையாது திருப்தியளிக்காமலும் போகாது.
நிகிலேஸ்வரி
இந்த அண்ட சராசரத்துக்கும் ஈஸ்வரியாக இருப்பவள். அகிலமென்றால் உலகம். நிகிலம் என்றால் இந்த உலகத்தையும் சேர்த்து உள்ள ஈரேழு பதிநான்கு உலகத்திற்கும் ஈஸ்வரியாகவும் தலைவியாகவும் இருந்து காப்பவள்.மனித வர்கம்மட்டுமல்லாமல் புல், பூண்டு,புழு,மரம்,செடி, கொடி,பறவைகள்,பாம்பு,கல்,கணங்கள்,அசுரர்கள்,முனிவர்கள் மற்றும் ஒரு செல் உள்ள தாவரங்கள் ஆகிய எல்லாப் பதிநான்கு பிறப்புக்களுக்கும் அவள்தான் தாயாக இருந்து காக்கும் நிகிலேஸ்வரி.
ஸிஞ்ஜான மணிமஞ்ஜீர மண்டித ஸ்ரீ பதம்புஜா !
மராளி மந்த கமனா மஹாலாவண்ய சேவதி:!!
அம்பாளுடைய பாதமும் அவளுடைய நடை அழகயையும் வர்ணிக்கும் வரிகள்.அவள் மிகவும் மெதுவாக அன்னப்பட்சியைப் போல் நடந்து செல்கிறாள். அப்படி நட்ந்து செல்லும்போது பாதங்களில் இருக்கும் கொலுசுகளில் இருக்கும் மணிகள் கிணி கிணி என்று ஓசை எழுப்புகிறது.அந்தப் பாதங்களை வணங்குவோம்.
ஸ்ரீ சக்ரராஜ நிலயா ஸ்ரீ மத் திருபுரசுந்தரி!!
அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள் இருந்தாலும் கடைசியாக முடிவது அவள் யார் என்ற விளக்கத்துடன். அவள்தான் திருபுரசுந்தரி.இதையே"" அபிராமி பட்டரும் திரிபுரசுந்தரியாவது அறிந்தனமே" என்கிறார். எந்த திருபுர சுந்தரி பிரும்மத்தையும் இந்த ஜீவனையும் ஒன்றாக சேர்க்கக்கூடியவள். அவள் எங்கு இருப்பாள். ஸ்ரீ சக்ரத்தின் மத்தியில் இருப்பவள் அப்படிபட்ட லலிதாவை வணங்கி இப்பொழுது விடைபெறுவோம் பின்பு ஒரு சமயம் அம்பாளின் அருளோடு தொடருவோம்
இன்றைய ஆவர்ணம் ஒன்பதாவது கடைசி பாடல்.
ராகம்: ஆஹிரி தாளம்: ரூபகம்
பல்லவி
ஸ்ரீ கமலாம்பா ஜயதி அம்ப
ஸ்ரீ கமலாம்பா ஜயதி ஜகதம்பா
ஸ்ரீ கமலாமந்திரஸ்த
ம்பா ஜயதி
ஸ்ருங்காரரஸ கதம்பா மதம்பா
ஸ்ரீ கமலாம்பா ஜயதி சித்பிம்பா
பிரதி பிம்பேந்து பிம்பா
ஸ்ரீ கமலாம்பா ஜயதி
ஸ்ரீ புர பிந்து மத்ய்ஸ்த சிந்தாமணி மந்திரஸ்த
ஸிவாகார மஞ்சஸ்தித ஸிவாகாமேஸாங்கஸ்த...(ஸ்ரீ கமலாம்பா....)
அனுபல்லவி
ஸூகராநநாத்-யர்சித மஹாத்ரிபுரசுந்தரீம்
ராஜராஜேஸ்வரீம்
ஸ்ரீு புர சர்வநந்தாமய-சக்ர- வாஸினீம்
ஸுவாஸினீம் சிந்தயேஹம்...(ஸ்ரீ கமலாம்பா.....௦
திவாகர ஸீதகிரண பாவகாதி விகாஸகரயா
பீகர தாபத்ரயாதி பேதந துரீணதரயா
பாகரிபு ப்ரமுகாதி ப்ரார்தித ஸுகளேபரயா
ப்ராகட்ய பராபரயா பாலிதோ தயாகரயா... (ஸ்ரீ கமலாம்பா)
சரணம்
ஸ்ரீ மாத்ரே நமஸ்தே சிந்மாத்ரே ஸேவித
ரமா-ஹரீஸ விதாத்ரே
வாமாதி சக்தி பூஜித
பரதேவதாயக: ஸ்கலம் ஜாதம்
கமாதி த்வாதஸபிரூபாசித காதி ஹாதி
ஸாதி மந்த்ர ரூபிண்யா:
ப்ரேமாஸ்பத ஸிவ குருகுஹ ஜநந்யாம்
பிரீதியுக்தமச்சித்தம் விலயது
ப்ரஹ்மமய ப்ரகாஸிநி நாமரூப விமர்ஸிநி
காமகலா ப்ரதர்யாதி ஸாமரஸ்ய நிதர்ஸிநி,......(ஸ்ரீ கமலாம்பா..0
ஸ்ரீ கமலாம்பா ஜெயிக்கட்டும் . அகில உலகத்துக்கும் அன்னையான ஸ்ரீ கமலாம்பிகா ஜெயிக்கட்டும் .சிருங்கார ரசத்தின் மலர்க்கொத்தாக விளங்கும்
என்னுடைய தாயான ஸ்ரீ கமலாம்பா ஜெயிக்கட்டும் .ஞான சொருபத்தின் பிரதிபிம்பமாக சவ்திரனுக்கு சமானமாக விளங்கும் ஸ்ரீகமலாம்பா ஜெயிக்கட்டும். ஸ்ரீ புரம் என்னும் ஸ்ரீ சக்ரத்தின் பிந்து ஸ்தானத்தின் மத்தியில் உள்maள சிந்தாமணி கிருஹத்தில் இருக்கும் சிவாகார மஞ்சத்தில் கோயில் கொண்டுள்ள சிவகாமேச்வரரின் அங்கமான அவரின் மடிமீது அமர்வது காட்சிதரும் ஸ்ரீ கமலாம்பா ஜெயிக்கட்டும். வராஹா முகம் கொண்ட திருமால் முதலியவர்களால் அர்ச்சிக்கப்பட்ட மஹாத்ரிபுரசுந்தரியை,
ராஜ ராஜேஸ்வரியை ஸ்ரீ சக்ரத்தின் சர்வாவந்தமைய சக்ரத்தில் உறையும் சுவாசின்யுமான ஸ்ரீ கமலாம்பாவை நான் த்யாநிக்கிறேன் . ஸூர்யன், சந்திரன் அக்னி போன்றோருக்கு பிரகாசம் அளிப்பவளால் ,பயத்தை கொடுக்கின்ற தாபத்ரயங்களால் உண்டாகும் இடர்ப்பாடுகளை நீக்குவதில் வல்லமை உள்ளவளால் , இந்திரன் முதலிய பிரமுகர்களால் பிரார்த்திக்கப்பட்ட மங்கள சொறுபம் கொண்டவாளால், தன்னை வெளிப்படுத்திக்கொண்ட பராபரியாக விளங்குபவளால், கருணை செய்பஅவளால், ஸ்ரீ கமலாம்பாவால் நான் காப்பாற்றபட்டிருக்கிறேன். ஸ்ரீ மாதாவிற்கு, ஞானசொருபிக்கு, லக்ஷ்மி, திருமால், ஈஸ்வரன், பிரும்மா, ஆகியோரால் நமஸ்காரம் செய்யப்படுபவளுக்கு என் நமஸ்காரங்கள் .ப்ரும்ம,விஷ்ணு ருத்ர திருமூர்த்திகளின் சக்திகளான வாமா,ஜ்யேஷ்டா , ரௌத்ரி, ஆகிய தேவதைகளால் பூஜிக்கும் பரதேவதேவதையிடமிருந்து அனைத்தும் தோன்றின. மன்மதன் முதலிய பன்னிருவரால் உபாசிக்கப்பட்ட ககாரத்தை ஆதியாகக் கொண்ட காதிவித்யை,ஹகாரத்தை ஆதியாகக்கொண்ட ஹாதி வித்யை,ஸகாரத்தை ஆதியாகக் கொண்ட ஸாதிவித்யை ஆகியவற்றின் மந்தர ஸ்வரூபமாக இருப்பவளுடைய அன்புக்கு பாத்ரமானவரும்சிவாம்ஸமானவருமான குருகுஹனின் அன்னையிடத்தில் பிரியத்தோடு கூடியஎன் மனம் லயிக்கட்டும் ப்ரம்மமயமாக பிரகாசிப்பவளே, பெயர்களையும் உருவங்களையும் கொண்டு அறியப்படுபவளே. ஸ்ரீ வித்யா ஸம்ப்ரதாயத்தில் காமகலை என்ற வழிபாட்டு முறையைக் காட்டியவளே.ஸமத்துவத்தை கடைபிடித்து காட்டுபவளே.என் மனது எப்போதும் உன்னிடத்திலேயே நிலைத்து நிற்கட்டும் ஸ்ரீகமலாம்பிகையே.
ல
ராகம்: ஸ்ரீ தாளம்: கண்டஏகம்
பல்லவி
ஸ்ரீ கமலாம்பிகே ஸிவே பாஹிமாம் லலிதே
ஸ்ரீ பதிவிநுதே ஸிதாஸிதே ஸிவஸஹிதே... ஸ்ரீ கமலாம்பிகே)
சரணம்
ராக சந்த்ரமுகீ ரக்ஷித கோலமுகீ
ரமா வாணீ ஸகீ ராஜயோகஸுகீ
ஸாகம்பரி ஸாதோதரி சந்த்ரகலாதரி
ஸங்கரி ஸங்கர குருகுஹ பக்த வசங்கரி
ஏகாச்ஷரி புவனேச்வரி ஈஸப்ரியகரி
ஸ்ரீகரி ஸுககரி ஸ்ரீ மஹாத்ரிபுரசுந்தரி....(ஸ்ரீ கமலாம்பிகே)
ஸ்ரீ லக்ஷிமியின் பதியான விஷ்ணுவினால் துதிக்கப்பட்டவளே,
வெண்மை, கருப்புநிறம் ஆகிய இரண்டு நிறங்களன துர்கை கௌரியாய் காட்சியளிப்பவளே, சிவனோடு இரண்டறக்கலந்தவளே.லலிதாதேவியாகக் காட்சியளிப்பவளே, ஸ்ரீ கமலாம்பிகையே மங்களத்தை அருளுபவளே என்னைக் காப்பாற்று.
பௌர்ணமி நிலவைப்போன்ற முகத்தையுடையவளே, வராஹ முகமுடைய திருமாலை ரக்ஷித்தவளே, லக்ஷிமியையும் ஸரஸ்வதியையும் தோழியாகக் கொண்டவளே,ராஜயோக சுகத்தில் திளைப்பவளே,ஸாகம்பரீ எனப்பெயர்பெற்ற ஸ்ரீ தூர்கையே ,மெல்லிடையாளே,சந்திரனுடையகலையை ஆபரணாமாகக் கொண்ட ஸங்கரியே, சங்கரன் ,குருகுஹன் மற்றும் பக்தர்களுக்கு வசப்படுபவளே,ஹரீம் என்ற ஓரேழுத்து மந்திரத்தில் விளங்குபவளே,உலகிற்கு ஒரே தலைவியே சிவனுக்கு பிரியமானவற்றை செய்பவளே,ஐஸ்வர்யத்தையும் சுகத்தையும் அருளும் காரயங்களைச் செய்பவளே, ஸ்ரீ மஹாத்ரிபுரசுந்தரியே, ஸ்ரீ கமலாம்பிகையே என்னை ரக்ஷிப்பாயாக:
இங்கே பாடுபவர்களைப் பற்றி ஒரு வார்த்தை
ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷதரின் கிருதிகள் எல்லாமே ஸ்ரீ வித்யா உபாசனை மந்திரங்கள்தான் . அவருடைய கிருதிகளை பாடம் செய்வது பாடுவதும் மிகக் கடினம். ஸ்ரீ ராகத்தில் அமைந்த இந்த நவாவர்ண கிருதிகளில் ஒன்பதாவது கிருதியான இது மிகவும் விசேஷம் வாய்ந்தது.நம்மவர்களையே ஒரு கை பார்த்துவிடும். கீழே காணும் இந்த அயல்நாட்டு கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் எவ்வளவு அருமையாகப் பாடியுள்ளனர்.எடுத்த எடுப்பில் இரண்டு நிமிட ராக ஆலாபனையில் ஸ்ரீ ராகத்தின் லக்ஷ்ணத்தை பிழிந்து கொடுத்து விடுகிறாள் அந்தப் அமெரிக்கப் பெண்.என்ன கம்பீரமான குரல், சுருதி சுத்தம். அதேபோல் எல்லோரும் சேர்ந்து பாடும்போது ஒரேகுரலில் ஒலிப்பது, தாளக்கட்டுப்பாடு, ..அக்ஷரசுத்தம். அட! இங்குள்ள சங்கீத வித்வான்கள் குறித்துக்கொண்டு கவனம் செய்யவேண்டும். நீங்களும் கேட்டு விட்டு என்னுடன் அனுசரித்துப் போவீர்கள்
மங்களம்