Wednesday, August 16, 2006

மால் மருகா ஷண்முகா வினை தீர்க்க வா வா

மாலோன் மருகன் மன்றாடி மைந்தன் என்றபடி மாமனுக்கும் மருகனுக்கும் உகந்த நாள் இது.மாலுக்கு சிறப்பான கோகுலாஷ்டமியும்,மருகனுக்கு உகந்த கிருத்திகையும் சேர்ந்த நாள் இது.அருணகிரிநாதர்முதல் தொடங்கி தமிழ்த்தியாகய்யா பாபனசம் சிவன் வரை இருவரையும் சேர்த்து பாடாதவரே கிடையது.மாலும் மருகனும் ஒருவர்தான் என்று நமக்கு உணர்த்துவது இந்த நாள்தான்.பாரதியார் கண்ணோட்டத்தில் குழந்தைக்கண்ணன்.
தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன் தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. ... (தீராத)
1. தின்னப் பழங்கொண்டு தருவான்; - பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்; என்னப்பன் என்னையன் என்றால் - அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். ... (தீராத)
2. தேனொத்த பண்டங்கள் கொண்டு - என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்; மானொத்த பெண்ணடி என்பான் - சற்று
மனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவான்; ... (தீராத)
3. அழகுள்ள மலர்கொண்டு வந்தே - என்னை
அழஅழச் செய்துபின், ''கண்ணை மூடிக்கொள்; குழலிலே சூட்டுவேன்'' - என்பான் - என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான். ... (தீராத)
4. பின்னலைப் பின்னின் றிழுப்பான்; - தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்; வன்னப் புதுச்சேலை தனிலே - புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். ... (தீராத)
5, புல்லாங் குழல்கொண்டு வருவான்; - அமுது
பொங்கித் ததும்புநற் பீதம் படிப்பான்; கள்ளால் மயங்குவது போலே - அதைக்
கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம். ... (தீராத)
6. அங்காந் திருக்கும்வாய் தனிலே - கண்ணன்
ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்; எங்காகிலும் பார்த்த துண்டோ ? - கண்ணன்
எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்றோ? ... (தீராத)
7. விளையாட வாவென் றழைப்பான்; - வீட்டில்
வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்; இளையாரொ டாடிக் குதிப்பான்; - எம்மை
இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான். ... (தீராத)
8. அம்மைக்கு நல்லவன் கண்டீர்! - மூளி
அத்தைக்கு நல்லவன், தந்தைக்கு மஃதே, எம்மைத் துயர்செய்யும் பெரியோர் - வீட்டில்
யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். ... (தீராத)
9. கோளுக்கு மிகவும் சமர்த்தன்; - பொய்ம்மை
குத்திரம் பழிசொலக் கூசாச் சழக்கன்; ஆளுக் கிசைந்தபடி பேசித் - தெருவில்
அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். ... (தீராத

இனி பாபனசம் சிவன் எளிய தமிழில் எப்படி முருகனை அனுபவித்து அழைக்கிறார் என்று பார்க்கலாம்:-

தணிகை வளர் சரவணபவா நின் தாள் சரணம்தருணமிது கருணை புரிவாய் தண் சோலை....(தணிகை)
அணியும் நவமணி அணிகள் தகதெகஎன நிறைமதி நேர்அறுமுகமும் இளநகை வெண்ணிலவுமிழ உலகு புகழ்...(தணிகை)
துள்ளி விளையாடிவரும் தோகை மயில் மேலே
வள்ளியுடன் பெய்வானை தெய்வயாணை இருபாலே
அள்ளீயிருகண் பருகும் அன்பர் புகழ்வேளே
வெள்ளிமலை நாதன் தருவேல்கொள் பெருமாளே.....(தணிகை)

.பாரதியார் கண்ணோட்டத்தில் குழந்தைக்கண்ணன்.

இந்த இரு பாடல்களும் இனிய எளிய தமிழில் இருப்பதால் விளக்கத்தைத் தவிர்கிறேன் கண்ணன் தாள் சரணம்.வழித்துணை வரும் திருத்தணி முருகன் தாள் சரணம்

24 comments:

சிவமுருகன் said...

பரதியின் திவ்ய வரிகள், பாபனாசம் சிவன் அவர்களின் தெய்வீக வரிகள். அருமை. இட்டமைக்கு நன்றிகள் பல. கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்.

Geetha Sambasivam said...

பள்ளி நாட்களுக்குப் போய் விட்டேன். பள்ளியில் இந்தப் பாடலுக்கு ஆடியது எல்லாம் நினைவு வந்தது. பாரதி எப்படி வேண்டுமானாலும் கனவு காண்கிறான். அவனுடைய கவிதைக்கு மாற்று ஏதும் இல்லை.
தற்காலத்தில் ஊத்துக்காடு எழுதிய "ஆடாது அசங்காது வா" பாட்டும் கண்ணனின் குழந்தை வடிவை நினைவூட்டும். அதிலும் "பின்னிய சடை சற்றே வகை கலைந்திருக்க"கற்பனை பண்ணினாலே மனம் மகிழ்ச்சி அடைகிறது.

வல்லிசிம்ஹன் said...

டி.ஆர்.சி,
நல்ல பாடல்களைக் கண்கள் பார்க்கக் கொடுத்தீர்கள்.

கண்ணனையும், கந்தனையும்
அனுபவிக்க நேரம் வந்தது,.
நன்றி.

ambi said...

அருமையான பாடல்கள். பாப நாசம் சிவனின் தமிழ் பாடல்கள் மிகவும் எளிமை, அருமை.
முருகனுக்கும் இந்த நாள் சிறப்பு!னு இப்ப தான் தெரிஞ்சது!
என்ன சார்! இந்த பதிவு கீதா மேடமுக்கு போட்டி தவில் மாதிரி இருக்கே! (நாரயாண! நாராயண!) :)

rnatesan said...

வணக்கம்!!
இந் நந்நாளில் தங்கள் பதிவிலே தீராத விளையாட்டு பிள்ளையை கண்டு களித்தேன்!!
குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்டவன் அல்லவா!!
என் பதிவிற்கு தாங்கள் வந்தது என் பாக்கியம்!!
தங்களை நான் அறிவேன்!!
வாழ்த்துக்கள்!!

VSK said...

மயிற்பீலி அணிந்தவனையும்,
மயில் மேல் அமர்ந்தவனையும்

ஒருசேர இணைத்து ஒரு பதிவில் காட்டி
உளம்மகிழச் செய்தமைக்கு மிக்க நன்றி!

இவனுக்கு பாமா ருக்மிணி!
அவனுக்கு வள்ளி தேவஸேனா!

இவனுக்குக் குழல் கைகளில்!
அவனுக்கோ கூரிய வேல் கையில்!

இவனுக்குப் பிடித்தது வெண்ணையும், தயிரும்!
அவனுக்குப் பிடித்தது தேனும், தினைமாவும்!

இவன் மொழிந்தது கீதை எனும் பாதை!
அவன் அழிப்பது நம் வாது எனும் சூதை!

இவனும் ஓரிடம் பிறந்து ஆயரிடம் வளர்ந்தான்!
அவனும் கயிலையில் பிறந்து பொய்கையில் வளர்ந்தான்!

இருவர் புகழும் இன்புறப் பாடி
இறுகும் சுமைகளைத் தளர்த்திடலாமே!

தி. ரா. ச.(T.R.C.) said...

அலைமேல் இருந்தது போறும் என்று மாலும் திருப்பதி மலை மேல் அமர்ந்தான்
மலைமேல் இருந்தது போறும் என்று மருகனும் திருச்சீர் (திருச்செந்தூர்)அலைவாய் அமர்ந்தான்

திரு ஸ்.கே. அவர்களே உங்கள் கவிதையைப்பார்த்து தானும் அதுவாக பாவித்து என் பொல்லாச்சிறகை விரித்து ஆடியதால் எழுந்த எழுச்சியின் வடிவம் இது. உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாக முடியுமா. ஒதிய மரங்கள் பருத்து இருந்தாலும் உத்திரமாகது.இருந்தலும் பதிவுக்கு வந்ததற்கும் ,எழுச்சிக்கும் நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) said...

திரு.சிவமுருகன்,அம்பி, நடேசன் திருமதி.வல்லியம்மா வருகைக்கு நன்றி

VSK said...

அன்பு, தி.ரா.ச. அவர்களே,
ஊர்க்குருவி, பருந்து என்றெல்லாம் சொல்லி என்னைக் கொடியவனாக்காதீர்கள்!!
:))

அலை, மலை மாற்றம் நல்ல கற்பனை!

உங்கள் பதிவுகள் ஏன் தமிழ்மணத்தில் தெரிவதில்லை?
இல்லை, நான் தான் தவறவிடுகிறேனா?

தி. ரா. ச.(T.R.C.) said...

கீதா மேடம் உன்களுக்கு ஒன்று தெரியுமா. பாரதி வாழ்க்கையில்தான் ஏழ்மை.ஆனால் கவிதையில் கோடீஸ்வரன்.காணினிலம் வேண்டும் பாட்டைக் கேளுங்கள் புரியும்.காணி நிலம்,பத்து பன்னிரெண்டு தென்னை மரம்,நல்வைரம் பதித்த பட்டு புடவை இப்படி நீண்டு கொண்டே போகும்.

ஆமாம் இப்போதானே +1 படிக்கிறேங்கே அதுக்குள்ளே என்ன ஸ்கூல் ஞாபகம். என்னவொ ஒரு 55 வயது ஆன மாதிரி.16வயதுலேயே கடந்தகால நினைவுகளா?

அது சரி நாம் என்ன இங்கே வஞ்சிகோட்டை வாலிபன் படத்தில் வரா மாதிரி பத்மினி,வைஜயந்தி மாதிரி நாட்டியமா ஆடரோம்.இதில் அம்பி நடுவில் வந்து வில்லன் வீரப்பா மாதிரி "சபாஷ் சரியன போட்டி" அப்படிங்கிறார்.நம்ப எவ்வளவு இலக்கியரீதியா பேசிக்கிட்டு இருக்கோம். நீங்க கொடுத்த ஆப்பு சரியாக இல்லை.

ambi said...

Ahaaa! double gameeaaaa?
yaaraithaan nambuvathooo pethai nenchaam! :)

ILA (a) இளா said...

உங்கள் பதிவுகள் ஏன் தமிழ்மணத்தில் தெரிவதில்லை?

நன்மனம் said...

தி.ரா.ச சார், அருமையான இரு பாடல்கள் மற்றும் அழகிய பின்னூட்டங்கள்.

Geetha Sambasivam said...

@அம்பி, நல்லா வேணும், இன்னும் நல்லா வாங்கிக் கட்டிக்கப் போறீங்க, பாருங்க! :D
தி.ரா.ச. சார், ரொம்ப நன்றி.

Maayaa said...

nalla paadalgalai ninaivu koorthatharkku nanri thi raasa avargalee!!

தி. ரா. ச.(T.R.C.) said...

இளா,நன்மனம்,பிரியவின்,வருகைக்கு நன்றி. தமிழ்மணத்தில் பதிவு செய்துள்ளேன்.
அம்பி நீ பேதை நெஞ்சமா போதை நெஞ்சமா பங்களுர் "பப்பை'பற்றி எழுதியவன்
அதான் கொஞ்சம் சந்தேகமா இருக்கு.
இருக்கட்டும் தலைவியோட பங்களுர் "ரிப்போர்ட்"வந்தா தெரிந்துடும்.
கீதாமேடம்/பொன்னு/ஆன்டி/---- சீக்கரம் ரிப்போர்ட்டை ரிலீஸ் பன்னுங்க. நாங்க காத்துகிட்டே......... இருக்கோம்
ப்ரியா " அவர்களேவை" இனி எடுத்து விடுங்கள்.மரியாதை மனசிலே இருந்தால் பொதும். இது நான் என்னுடைய மாட்டுபெண்ணிடம் கற்றுக்கொண்டது.

நாகை சிவா said...

ரொம்ப நல்ல பாடல்களை நினைவுபடுத்தி உள்ளீர்கள். நன்று
எஸ்.கே.வின் வரிகளும் அருமை. அதை தொடர்ந்து உங்கள் வரிகளும் அருமை.

தி. ரா. ச.(T.R.C.) said...

நன்றி நாகை சிவா.கண்ணனும் கந்தனும் நம் மனதை கவர்ந்தவர்கள்.அதன் எதிரொலிப்புதான் இது.

இலவசக்கொத்தனார் said...

good songs. sorry for the english, no ekalappai access...

நாமக்கல் சிபி said...

தீராத விளையாட்டுப் பிள்ளை - அருமையான பாடல்.

குமரன் (Kumaran) said...

மிக்க நல்ல பாடல்கள் தி.ரா.ச.

எப்போதோ படித்துவிட்டேன். தாமதமாக வந்து பின்னூட்டம் இடுவதற்கு மன்னித்துக்கொள்ளுங்கள்.

G.Ragavan said...

கண்ணனும் கந்தனும் என்று வாரியார் சுவாமிகள் சொற்பொழிவும் புத்தகமும் இருக்கிறது.

நீங்கள் நினைவு கூர்ந்திருக்கும் இரண்டு பாடல்களும் எளிய அழகு தமிழில் அருமையாகவும் இனியதாகவும் உள்ளன.

அருணகிரி எப்படித் தொடங்குகிறார் பாருன்ங்கள்...

மாலோன் மருகனை...(அப்புறந்தான்) மன்றாடி மைந்தனை
வானவர்க்கு மேலான தேவனை மெய்ஞான தெய்வத்தை
மேதினியிற் சேலார் வயற் பொழில் திருச்செங்கோடனைச் சென்று கண்டு தொழ
நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே!

ஒற்றுமை பெருகப் பாடிய பெருமகனார் அவர்.

Viji said...

தீராத விளையாட்டுப் பிள்ளை, enakku rombavum pudicha paadal... esp when sung by Bombay sisters. :)

பாரதிய நவீன இளவரசன் said...

அருமையான பாடல்கள். பள்ளிகால நினைவுகள்.நல்ல பதிவுக்கு நன்றி.