அன்று மலேஷியாவில் இருக்கும் தெரிந்தவர் அம்மாவைப் பார்க்க வந்திருந்தார்.அவர் சென்றபின் அம்மா கேட்டார் "நீயும் காலேஜ் படித்து அயல்நாடு செல்வாயா?"என்றார்.அதற்கு என் அத்தை சொன்னார்."கவலைப்படாதே நிச்சயம் நடக்கும், உன்னையும் கூட்டிச் செல்வான்". அதற்கு அம்மா சொன்னாள் "இந்த உடம்புடன் போக முடியுமா/'. மறுமொழியாக அத்தை சொன்னார் "முடியவிட்டால் உன்னை கட்டியாவது தூக்கிக்கொண்டு போய்விடுவார்கள் பயப்படதே" என்றார் அது வேறு விதமாக காலையில் பலிக்கும் என்று தெரியாமல்.
இரவு மணி 11.00 இருக்கும். அம்மா அவனை எழுப்பி பாத்ரூமுக்கு போகவேண்டும் என்றார்.சரி என்று அவன் பிடித்துக்கொள்வதற்குள் கட்டிலில் இருந்து இறங்கி நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். பிடித்து தூக்கினால் தொடை கால் எல்லாம் ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது. கான்சரால் முழுவதும் பழுதடைந்த ரத்தகுழாய் உடைந்துவிட்டது.அம்மா அந்த நிலையிலும் தெளிவாக சொன்னார் "டேய்,என்னை உன் மடியில் வைத்துக்கொண்டு, அந்த கங்கைச் சொம்பை உடைத்து ஜலத்தை என் வாயில் விட்டுக்கொண்டே என் காதில் நாராயணா என்று சொல்".என்றார்.சொன்னதைச் செய்து பாதி ஜலம் உள்ளே போய்க்கொண்டிருக்குக்போதே க்ள்க்... க்ள்க்.. ஜலம் வெளியே வந்து தலை தொங்கி விட்டது.கதை முடிந்தது.அத்தை சொன்னது மாதிரியே மறுநாள் அவளை கட்டித் தூக்கிக்கொண்டு சென்றார்கள்.
அந்த மரணம் அவன் மனத்தில் ஒரு மாறாத ரணம்தான்.இந்தக்கதை முடிந்து விட்டது ஆனால் இன்று ஒரு புதுக்கதை ஆரம்பித்து விட்டதே.இதைத்தான் இப்படிச் சொன்னார்களோ
The beginning is the end, the end is the beginning,you are in the middle
6 comments:
//உன்னை கட்டியாவது தூக்கிக்கொண்டு போய்விடுவார்கள் பயப்படதே//
i'm speechless.. remembering the Aadhi shankarar mother's last moments.
punaravi jananam!
punaravi maranam!!
ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது. காலம் மனப்புண்களை ஆற்றட்டும். கடவுள் துணை செய்வார்.
//The beginning is the end, the end is the beginning,you are in the middle//
Always
:(
நன்றி, எதற்கு என்று புரிகிறது தானே
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
தி.ரா.ச. நான் பத்தாவது படிக்கும் போது என் அன்னையார் காலமானார்கள். அந்த காலத்தை நினைவூட்டியது இந்தத் தொடர்.
Post a Comment