Saturday, September 30, 2006

வாணி.... வாகதீஸ்வரி...வரம் அருள்வாய்...


வெள்ளைக் கமலத் திலே-அவள்
வீற்றிருப் பாள்,புக ழேற்றிருப் பாள்,கொள்ளைக் கனியிசை தான்-நன்கு
கொட்டுநல் யாழினைக் கொண்டிருப் பாள்,கள்ளைக் கடலமு தை-நிகர்
கண்டதொர் பூந்தமிழ்க் கவிசொல வேபிள்ளைப் பருவத் திலே-எனைப்
பேணவந் தாளருள் பூணவந்தாள்.


வேதத் திருவிழி யாள்,-அதில்
மிக்கபல் லுரையெனுங் கருமையிட் டாள்,சீதக் கதிர்மதி யே-நுதல்
சிந்தனையே குழ லென்றுடை யாள்,வாதத் தருக்க மெனுஞ்-செவி
வாய்ந்ததற் றுணிவெனுந் தோடணிந் தாள்,போதமென் நாசியி னாள்,-நலம்
பொங்கு பல்சாத்திர வாயுடை யாள்.


கற்பனைத் தேனித ழாள்-சுவைக்
காவிய மெனுமணிக் கொங்கையி னாள்,சிற்ப முதற்கலை கள்-பல
தேமலர்க் கரமெனத் திகழ்ந்திருப் பாள்,சொற்படு நயமறி வார்-இசை
தோய்ந்திடத் தொகுப்பதின் சுவையறி வார்விற்பனத் தமிழ்ப்புல வோர்-அந்த
மேலவர் நாவெனும் மலர்ப்பதத் தாள்.


வாணியைச் சரண்புகுந் தேன்;-அருள்
வாக்களிப் பாளெனத் திடமிகுந் தேன்;பேணிய பெருந்தவத் தாள்;-நிலம்
பெயரள வும்பெயர் பெயரா தாள்,பூணியல் மார்பகத் தாள்-ஐவர்
பூவை,திரௌபதி புகழ்க் கதையைமாணியல் தமிழ்ப்பாட்டால்-நான்
வகுத்திடக் கலைமகள் வாழ்த்துக வே!

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள் வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்; கொள்ளை யின்பம் குலவு கவிதை கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்! உள்ள தாம்பொருள் தேடியுணர்ந்தே ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்; கள்ள மற்ற முனிவர்கள் கூறும் கருணை வாசகத் துட்பொருளாவாள். (வெள்ளைத்)

மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள், மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்; கீதம் பாடும் குயிலின் குரலைக் கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள், கோத கன்ற தொழிலுடைத் தாகிக் குலவு சித்திரம் கோபுரம் கோயில் ஈதனைத்தின் எழிலுடை யுற்றாள் இன்ப மேவடி வாகிடப் பெற்றாள். (வெள்ளைத்)

வெள்ளைத் தாமரை பூவிலிருப்பாள் பாட்டைகேட்க செல்லவும் இங்கே

21 comments:

பொற்கொடி said...

suttila nan kekala.. ana nithyasree padradu inga odudu :)) iniya saraswathi pujai vaazthukkal to you and your family!!

rnateshan. said...

சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்!!மற்றும் தங்கள் இனிய பணிகள் செவ்வனே நடக்கட்டும்!!!

ambi said...

nice song, and meaning too.

//மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்//
*ahem*, so என் பேச்சு, பொற்கொடி பேச்சுல எல்லாம் சரஸ்வதி இருகிறாள்!னு சொல்றீங்க! very good! very good! :D

வேதா said...

//உள்ள தாம்பொருள் தேடியுணர்ந்தே ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்//
அருமையான வரிகள்:) அருமையான் பாடல்:)

நாகை சிவா said...

இது பாரதியார் பாடலா?, இது வரை கவனிக்காமல் விட்டு விட்டேனே.

கேட்க மிகவும் நன்றாக உள்ளது.

மிக அருமையான பாடலை கொடுத்தற்கு மிக்க நன்றி.

கீதா சாம்பசிவம் said...

ஆப்புக்கு இன்னுமா மழலை, சகிக்கலையே, அருமையான பாரதி பாடலை ரசிக்கத் தெரியலை. grrrrrrrr

கால்கரி சிவா said...

திரு தி.ரா.சா அவர்களே,

என்னை அழைத்து இந்த பதிவை காணவைத்ததற்கு நன்றி.

தன்யன் ஆனேன்.

அருமையான பாடல்கள்

நடக்கட்டும் உங்கள் பணி

உங்களிடமிருந்து பஞ்சரத்ன கிருதிகளின் அர்த்தங்களையும் எதிர்பார்க்கிறேன்

இலவசக்கொத்தனார் said...

ஐயா,

பாட்டு யாருடைய பாட்டு, என்ன ராகம், என்ன தாளம் - இந்த விபரங்கள் எல்லாம் தரலாமே. அடுத்த பாட்டு என்னவா இருக்கும் என ஆவலாய் இருக்கிறேன்.

Priya said...

ஆஹா ஆஹா அருமையான பாட்டு..

சிவமுருகன் said...

எங்க ஸ்கூல்ல இது தான் கடவுள் வாழ்த்து. ரொம்ப நாள் கழித்து பாரதியார் கவிதைகள் பகுதியில் படித்தேன், இப்போது தங்களது பதிவில்.

நன்றி.

G.Ragavan said...

நல்லதொரு பாரதியின் பாடல். மிகுந்த ரசனைக்குரியது. அருமை அருமை.

மு.கார்த்திகேயன் said...

enna TRC sir, romba Naalaa alaiyE kanala.. ungalukku menakettu minister post ellam koduththOm.. antha pakkamE varak kaanOm..

Miss panni iruppeengannu ninaikiren..intha postai paarungO..

http://mkarthik.blogspot.com/2006/10/blog-post_07.html

பொற்கொடி said...

மாமி எப்படி இருக்காங்க? உங்களுக்கு ஒரே வேலையோ ;) எல்லாம் நல்லபடியா பாத்து செய்யுங்க! மாமியை நான் கேட்டதாக சொல்லவும் :)

வேதா said...

தினமும் உங்க வலைப்பதிவுக்கு வந்து சரஸ்வதியை சேவிச்சுட்டு போறேன்:) சீக்கிரம் அடுத்த பதிவை போடுங்க:)
உங்க வீட்டுக்கு வந்திருக்கிற பேர குழந்தையோட ஒரே கொண்டாட்டமா?

indianangel said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள் g3(aama unga peru enna? :)) அப்புறமா வந்து comment போடறேன்!

indianangel said...

sorry sir avasarama ella bloglayum etti parthutu poren so confusion ayduchu! i think i wrongly posted a comment here! :) anyway deepavali wishes to you! have fun!

மு.கார்த்திகேயன் said...

எங்களோட மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள் சார்.. நல்லா கொண்டாடுங்க சார்

வேதா said...

தீபாவளி வாழ்த்துக்கள்:)

குமரன் (Kumaran) said...

தீபாவளி வாழ்த்துகள் தி.ரா.ச.

Priya said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Sandai-Kozhi said...

iniya Deepawali Vazhthukkal ungalukkum ungal kudubathinarkkum.
deepawali patri edhum pottrupeergalo ena ninaithu vandhen.Thanks for commenting in my blog.--SKM