இப்படி மௌனமாகவே ஒரு மாதம் கழிந்தது.கடைசியில் ஒரு மாதம் முடிந்தவுடன் பெரியவர் காலையில் அனுஷ்டானம் முடிந்தவுடன்" அவனைக்கூப்பிடு' என்றார்.
கேள்விப்பட்டவுடன் அவருக்கு பணிவிடை புரிந்து வரும் அந்த நபர் வந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து
"பெரியவாஎன்னை மன்னிக்கவேண்டும் எனக்கு ஏதாவது தண்டனை கொடுங்கோ" என்றார். மாகான் சொன்னார் "உனக்கு தண்டனை கொடுக்க நான் யாரு? தப்பு செய்தவாதான் தண்டனை அனுபவிக்கனும். நீ ஒரு தப்பும் செய்யலயே." உடனே "இல்லே அன்னிக்கி நடந்ததற்கு நான்தானே காரணம்" என்றர்.
"ஓ அதுவா" என்று புன்சிரிப்புடன் கூறினார் பெரியவர்கள்."நான் ஒரு சன்யாசி.சன்யாஸ தர்மத்தின்படி நாங்கள் எந்தப் பொருளின்மீதும் பற்று வைக்கக்கூடாது.பற்றுவைக்காமல் இருப்பதோடுமட்டுமல்லாமல் அப்படி நாங்கள் இருக்கிறோம் என்பதை உலகுக்கு தெரியப் படுத்தவேண்டும்.சந்யாச தர்மத்தின் படி நாங்கள் ஒரு வேளை சாத்விகமான உணவை உட்கொள்ளவேண்டும். அப்போதுகூட அதன் மீது பற்று இல்லாமல்அருந்தவேண்ண்டும்.அப்பொழுதுதான் நாங்கள் மற்றவர்களுக்கு ஆசையை விட்டொழிக்கவேண்டும் என்றெல்லலாம் உபதேசம் பண்ண ஒரு தகுதி வரும். அன்றும் அதற்கு முதல் நாளும் நீ பண்ண கீரையை நான் சாப்பிடும்போது எனக்கு அதன் மீது ஆசை கிடையாது.ஆனால் நான் சாப்பிட்டவிதமோ. அல்லது என்னுடைய சொல்லோ அல்லது செயலோ அதன் மீது எனக்கு பற்று இருப்பதுபோல ஒரு தோற்றத்தை உருவாக்கிவிட்டது என்று நினைக்கிறேன். அது சன்யாச தர்மத்துக்கு விரோதமான செயல். தப்பு செய்தது நான். அதற்காக நான் எனக்கு தண்டனன கொடுத்துகொண்டேன்" என்றார்.
நீதியைப் பற்றிச் சொல்லும்போது
"நீதியை நிலை நாட்டினால் மட்டும் போதாது நிலை நாட்டிவிட்டதாக எடுத்துக்காட்டவேண்டும்.( It is important to render justice;but it is more important to establish that justice seems to have been done) இந்த வாசகத்துக்கு உதாரணபுருஷராக வாழ்ந்தவர்தான் ஸ்வாமிகள்
சரி திருமதி.எம்.ஸ்.சுப்பலக்ஷிமி மகானின் மீது பாடிய பாடலைக் கேட்க இங்கே'><"கிளிக்செய்யவும்">
8 comments:
Iam so late this time to read all your 3posts.But I have read and heard the song. Thank you so much for putting so much valuable posts.
--SKM
நன்றி.தி.ரா.ச.
ஆசார்யனின் கிருபையே கிருபை.
ராமகிருஷ்ணர் அதிகமாக தித்திப்பு சாப்பிட்ட பையனுக்கு அறிவுரை சொன்ன கதைதான் ஞாபகத்துக்கு வருது!
//It is important to render justice;but it is more important to establish that justice seems to have been done//
Excellant. ஆசார்யனின் கிருபையே கிருபை.
nice write up. pls do post such nice moral anectodes for small kids like us! :)
நன்றி தி.ரா.ச அவர்களே.....
நானும் எனது அனுபவங்களை இந்த பதிவுகளில் பின்னூட்டமாக பகிர்ந்து கொள்கிறேன்.
எனக்கு சந்திர மெளலி என்று பெயரிட்டவரே அவர்தான்....
வணக்கம்
//ஒரு வேளை சாத்விகமான உணவை உட்கொள்ளவேண்டும். //
இது அனைவருக்கும் பொருந்தும் என நான் நினைக்கிறேன்.
பதிவு நல்லாயிருக்ககு.
பாட்டு இன்னும் கேட்கலை. பதிவு நல்லா இருக்கு. இம்மாதிரிப் பல அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
நெகிழ்வாக இருக்கிறது தி. ரா. ச. இப்பேர்ப்பட்ட மகான்களும் இருந்துவிட்டு போயிருக்கிறார்கள். நான் பார்க்க மட்டுமே செய்திருக்கிறேன்.
முற்றுமறிந்த இவர் தேர்ந்தெடுத்த சீடரான புதுப்பெரியவரைப் பற்றி பலரும் நாக்கில் நரம்பில்லாமல் பேசுவதற்குக்கூட அவர் பெரியவா இவ்விஷயங்களில் நிலையாய் இருந்ததைப் போல புதுப்பெரியவர் இல்லை என்ற தோற்றம் மக்களிடம் இருப்பதால் தானோ?
சம்பந்தமில்லாததைப் பேசுகிறேனோ?
Post a Comment