Friday, January 12, 2007

கோலங்கள்மக்கள் மறந்ததால் மறைந்துவரும் கலை இது. பல குழந்தைகளுக்கு ஏன் சில பெரியவர்களுக்குக் கூட கோலங்கள் என்றால் டக்கென்று ஞாபகத்துக்கு வருவது இரவு சன் டீ.வியில் வரும் கோலங்கள் சீறீயல்தான்.ஆனால் இது அது அல்ல. கோலக்கலையைப் பற்றியது.மார்கழி மாதம் வந்துவிட்டாலே மகளிர் அனைவரும் வயது வித்தியாசம் பார்க்காமல் காலையிலேயே எழுந்து அவரவர் வீட்டின் முன்பு அழகிய கலர்ப் பொடிகளுடன் கோலப் போட்டியில் அசத்திவிடுவார்கள். இதில் சில சமயம் ஆண்களும் கலந்து கொள்வார்கள். எங்களது வங்கியில் நவராத்திரியின் போது கோலப்போட்டிவைத்து பரிசுகள் தருவோம். அப்பொழுது மறக்காமல் ஸ்ர்குலரில் ஆண்கள் கலந்து கொள்ளாக்கூடாது என்று குறிப்பிடுவோம்.
கோலம்போடுவதற்கு கலர்ப் பொடிகளைவிட பொறுமை,கல்பனாசக்தி,கணக்கில் திறமை,சுறுசுறுப்பு
போன்றவைகள் மிக அத்தியாவசியமானது. இது பெரும்பாலும் பெண்களிடம்தான் மிகுதியாகக் காணப்படுகிறது. அதனால்தான் இந்தக்கலையில் அவர்கள் சிறந்து விளங்குகிறார்கள்.

இபொழுது இந்தக்கலை மறைந்துவரும் நிலையில் உள்ளது.அடுக்குமாடி கட்டிடங்கள் மிகுந்துவரும் இந்நாட்களில் கோலம் போடும் பெண்களும் இடமும் தட்டுப்பாடாகிவிட்டன.இருந்தாலும் சமீபத்தில் நடைபெற்ற நம்ப மயிலாப்பூர் விழாவில் வடக்கு மாடவீதியில் ஒரு பெரிய கோலாஹலமான கோல வீதியே படைத்து விட்டார்கள். நம்மவர்களும் அயல்நாட்டினரும் கண்டு களித்தனர்.
இந்தக்கலை அழிந்துவிடாமல் ஆதரிக்கவேண்டியது இன்றைய சமூகத்தினரின் கடமை. பெரியவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இந்தக்கலையை நன்கு கற்பித்து போஷித்தால் பிற்காலத்தில் சிட்னி,ஹுஸ்டன்,டொரான்டோ போன்ற இடங்களிலாவது நம் மக்கள் கோலம் போடுவார்கள்.

17 comments:

Mathuraiampathi said...

நல்ல பதிவு சார், நன்றி...

//தங்கள் குழந்தைகளுக்கு இந்தக்கலையை நன்கு கற்பித்து போஷித்தால் பிற்காலத்தில் சிட்னி,ஹுஸ்டன்,டொரான்டோ போன்ற இடங்களிலாவது நம் மக்கள் கோலம் போடுவார்கள்.//

....ரிப்பிட்டே..

ambi said...

Super post! photo ellam pottu asathareenga.

*ahem* namba veetula epdi kolam ellam madam thaana? illa.. :p

தி. ரா. ச.(T.R.C.) said...

@மௌலி இது கற்பனை அல்ல இபொழுது நமது கலைகள் எல்லாம் வெளிநாட்டில்தான் பிரகாசிக்கின்றன.அந்த ஆதங்கத்தில் எழுந்த எண்ணம்தான் இது.அங்கேயாவது எப்படியாவது நம்கலைகள் மிளிரட்டுமே என்ற எண்ணம்தான்

தி. ரா. ச.(T.R.C.) said...

அம்பி இங்கே கோலம் போடுவது என்ன எல்லாமே மேடம்தான். அங்கே எப்படி.அதான் பாத்தோமே 10 ஆம் தேதியன்று அந்த வண்ணக்கோலங்களை. எடுத்து விடவா?

G.Ragavan said...

இந்தக் கோலங்கள் இப்பொழுது ஸ்டிக்கர் வடிவத்திற்கு மாறிக்கொண்டிருக்கின்றன. அழிந்து வரும் கலைகளில் ஒன்றாகிப் போயிற்று கோலம். வண்ணக்கோலம், சாந்துக் கோலம், மாக்கோலம், நீர்கோலம், மலர்க்கோலம், பழக்கோலம் என்று பலவகை உண்டு. இன்று ஏதாவது பிழைக்க வேண்டுமே என்று விரும்புகிறேன்.

பொற்கொடி said...

naan konja naala la poda poren! indiala irundapo podala inga vandu ennanu keka kudadu, ninga kalai azhiyudhu nu varutha pattadhal, nan inda muyarchi seiyaren :)

இலவசக்கொத்தனார் said...

//அப்பொழுது மறக்காமல் ஸ்ர்குலரில் ஆண்கள் கலந்து கொள்ளாக்கூடாது என்று குறிப்பிடுவோம்.//

நான் மட்டும் அங்க இருந்தேன், ஒரு Discrimination Case போட்டு இருக்க மாட்டேன். நல்ல வேளை இப்போ நீங்களும் இல்லை, தப்பிச்சீங்க.

//மயிலாப்பூர் விழாவில் வடக்கு மாடவீதியில் ஒரு பெரிய கோலாஹலமான கோல வீதியே படைத்து விட்டார்கள்.//

அப்படின்னா அகலமான கோலங்களாப் போட்டா வர உணர்ச்சியா? :)))

வல்லிசிம்ஹன் said...

தி.ரா.ச
கோலங்களுக்குப் பெயர்களும் உண்டு.
நீங்கள் இங்ஏ கொடுத்து இருக்கும் கோலத்திற்கு
ஆமை ஓடு'
என்ற பெயர்.(என்று நினைக்கிறேன்.)

தேர்க்கோலம்,தொட்டில் கோலம் இன்னும் எத்தனையோ வகைகள்.
பெரியோர்களிடம் கற்றுக் கொண்டபோது அனாவசியமாகத் தெரிந்தது.
இப்போது அதுவே பொக்கிஷமாக வைத்திருக்கிறேன்.
நன்றி.

செல்லி said...

//பெரியவர்களுக்குக் கூட கோலங்கள் என்றால் டக்கென்று ஞாபகத்துக்கு வருவது இரவு சன் டீ.வியில் வரும் கோலங்கள் சீறீயல்தான்.//

ஆனால் இது அது அல்ல. கோலக்கலை உண்மையிலேயே அருமையான கலை. நல்ல பதிவு.

தி. ரா. ச.(T.R.C.) said...

@செல்லி வணக்கம் பொங்கல் வாழ்த்துக்கள். உங்களுக்கு கோலம் போடத்தெரியுமா?

தி. ரா. ச.(T.R.C.) said...

@வல்லி அம்மா வருக. பொங்கல் வாழ்த்துக்கள். இந்த கோலத்தின் பெயர் வில்வ தள கோலம்

தி. ரா. ச.(T.R.C.) said...

வாருங்கள் ஜி.ரா. அது எந்தக்கோலமாக இருந்தாலும் அது அழியாதகோலமாக இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்

தி. ரா. ச.(T.R.C.) said...

2பொற்கொடி வாங்க ரங்கமணி சௌக்கியமா? தலப் பொங்கல் வாழ்த்துக்கள். கோலம் போடப் போறீங்களா/ எப்படி இருந்த நீங்க இப்படி ஆயீட்டீங்க.

தி. ரா. ச.(T.R.C.) said...

@கொத்ஸ் மைலாப்பூரே அன்றைகு எவ்வளவு மகிழ்ச்சியா கொண்டாடினாங்கத் தெரியுமா?அதைதத்தான் கோலஹலம்னு சொன்னேன். நீங்க எதை எதிர் பார்த்தீங்க?

Sandai-Kozhi said...

என்னங்கன்னா இது? குடும்பத்தோடு ஜாலியா இருப்பீங்க,Blogல பதிவே போட்டு இருக்க மாட்டீங்கன்னு வந்தா அடுக்கடுக்கா பதிவுகள்.சங்கீதம் பற்றி சொல்ல நமக்கு ஒன்றும் தெரியாது. கோலம் சிறு வயசில் நிறையப் போட்டுருக்கோம்.அப்புறம் flat வாழ்க்கை.போயே போச்சு பழக்கம். சாமி முன் போடுவதுதான் கோலம் என் ஆகி விட்டது.இப்போ 2 வருடமா இருக்கும் வீட்டில் விஷேஷ நாட்களில் சாக்பீஸ் கோலம் போட முடிகிறது.அதுவே பெரிய சந்தோஷம்.Belated happy Pongal.--SKM

தி. ரா. ச.(T.R.C.) said...

வாங்க ஸ்.கே.எம் சிஸ்டர். பொங்கல் கொண்டாடியாச்சா.காக்காபிடியெல்லாம் வெச்சிங்களா என்பெயரையும்சொல்லி.சகோதரன்பணம்.வெச்சிருக்கேன்.ஈ'மெயில்ல அனுப்பட்டமா?பையனும் மாட்டுப்பெண்ணும் சிங்கப்பூரிலிருந்த வந்து இருக்காங்க வீட்டில் ஒரு கல்யாணம்.எனக்கும் சங்கீதத்தைப் பற்றி தெரியாது பாருங்க பதிவின் ஆரம்பத்திலேயே டிஸ்கி போட்டு இருக்கேன்.கோலப் பதிவுக்கு நல்ல வரவேற்பு/சண்டை. எங்கள் பிளட்டே ரோஷ்த்தோடு கோலம் போட்டாங்கன்னாப் பாருங்களேன். படம் அப்பறம் போடுகிறேன்.

ராஜி said...

Aamaam nga ..Velaikku serundhathukku apuram kolam poduradha vittaachu...School padikkura varaikkum school vittu vandhavudanae, uniform kooda maathama, vaasal peruki, thani thelichu, kolam pottutu thaan maththa velai yellam paarpaen..Aana ipo?
Cha adhu oru azhgiya nila kaalam..Andha kaalathai unga post en kan munnadi oru nimisham kondu vandhu niruthuchunga Sir...