Sunday, January 07, 2007

பரம கிருபாநிதி அல்லவோ

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
வள்ளுவர் துறவு அதிகாரத்தில் இந்தக் குறளை வைத்துள்ளார். இதனுடைய பொருள் எந்த எந்த பொருள்களினாலோ அல்லது அதன் மீது பற்றுவைப்பதாலோ நமக்கு துன்பம் வருமோ அந்த அந்த பொருள்களயோ அல்லது அதன் மீது உள்ள பற்றையோ நீக்கிவிட்டால் நமக்கு அந்தப் பொருள்களினால் வரும் துன்பம் வராது. புரியும்படிச் சொல்லவேண்டும் என்றால் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சர்க்கரையையோ அல்லது அதன் மீது உள்ள அதீதப் பற்றை விட்டுவிட்டால் அவர்களுக்கு அந்தவியதியால் வரும் துன்பம் வராமல் போகும். பற்று என்று கூறும்போது வாயில் உள்ள இரண்டு உதடுகளும் சேரும் இது இயற்கை. இதோ இந்தக் குறளை கூறிப் பாருங்கள்

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு


ஆண்டவனிடத்தில் பற்று வைக்கவேண்டும் என்று கூறும்போது அது நல்ல பற்று என்பதை உணர்த்து வண்ணம் பலமுறை உதடுகள் சேரும்படி பற்று என்ற வார்த்தையை அதிகமாக் கையண்டிருக்கிறார் வள்ளுவர். ஆனால் இந்த "யாதனின்" குறளைக் கூறிப் பாருங்கள் உதடுகள் ஒட்டவே ஒட்டாது. பற்றை முற்றிலும் விடவேண்டிய இடத்தில் அறவே விட்டுவிட்டார். சரி அப்படி பற்று வைக்காமல் வாழ இன்றைய உலகத்தில் ஒரு மனிதனால் வாழமுடியுமா? முடியும் என்பதற்கு ஆதர்ச புருஷராய் திகழ்ந்தவர் ஒருவர் உண்டு.
அவர்தான் இவர்



பெரியவா என்றும் பரமாசாரியார் என்றும் உலகத்தாரால் பெரிதும் வணங்கப்பெற்ற காஞ்சி காமகோடி மடத்தின் 68 வது பீடாதிபதியாகத் திகழ்ந்த ச்ரீ சந்திரசேகரேந்திரசரஸ்வதி ஸ்வாமிகள். இன்றோடு அவர் மஹாசமாதி ஆகி 13 வருடங்கள் ஓடி விட்டன. ஆனாலும் அவருடன் இருக்குபடியான சில சந்தர்ப்பங்களைக் கொடுத்த ஆண்டவனுக்கு என் நன்றி. என் வாழ்க்கையில் ஏதாவது ஒரு சாதனை என்று ஒன்று உண்டென்றால் அது அவர் இருந்த காலத்தில் நாமும் வழ்ந்தோம் என்பதே.

துறவையும் துறந்த மஹான் அவர். ஒரு துறவி எப்படி இருக்கவேண்டும் எனபதற்கு உதாரணமாய்த் திகழ்ந்தவர். அவருடைய வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை எனக்கு ஆஞ்சநேய உபாசகரும்,நங்கநல்லூர் மற்றும் பாண்டிச்சேரியிலுள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்களச் ஸ்தாபித்து வழிநடத்திவரும் திரு ரமணி அண்ணா கூறியதை இந்த நாளில் ஒரு பானை சோற்றுக்கு ஒரு அரிசி பதம் போல இங்கு பதிக்கிறேன் பெரியவாளின் திருவடிகள் வணங்கி..

பரமாச்சாரியார் ஒருமுறை வெளியூரில் முகாமிட்டிருந்தார். பூஜையை முடித்துக்கொண்டு மதியம் 3 மணியளவில்தான் அவர் உணவு அருந்தும் வேளை. அவருடைய உணவு மிகவும் எளிமையானது. கொஞ்சம் அரிசிசாதம், எதாவது ஒரு கீரைஅனேகமாக அது அகத்தீ கீரையாகத்தான் இருக்கும்,பழம் இவ்வளவுதான். வெகுகாலமாக அவருடன் கூடவேதங்கியிருந்து அவருக்கு கைங்கரியம் செய்துவரும் ஒருவர்தான் வழக்கமாக அவருக்கு உணவு படைப்பார். தங்கியிருந்த இடமோ ஒரு குக்கிராமம் வசதிகள் ஏதும் இல்லாத ஊர்.

முதல்நாள் உணவை அருந்தினார் பெரியவர் அதில் எதோ ஒரு கீரை பதார்த்தம் இருந்தது. மறுநாளும் அதே கீரையைச் செய்து இருந்தார்கள் பெரியவரும் அதைச் சாப்பிட்டார். இப்படி அதே கீரையுடன் இரண்டு நாட்கள் சென்றன. மூன்றாவது நாளும் பெரியவர் சாப்பிட உட்கார்ந்தார். அவருக்கு கைங்கரியம் செய்பவரும் அதே கீரையை இலையில் இட்டார். ஸ்வாமிகள் கேட்டார் "..... என்ன இன்னிக்கும் அதே கீரையா" என்றார். பரிமாறுபவர் சொன்னார் "இல்லே பெரியவாளுக்கு இந்தக்கீரை பிடித்திருக்கிறது போல. முதல் நாளே பெரியவா கேட்டு ரெண்டாம்தரம் போட்டேன். அதான் பெரியவாளுக்கு இந்த கீரை பிடிக்கின்றதுபோல என்ற எண்ணத்தில் அதையே செய்தேன்" என்றார். இதைகேட்டவுடன் பெரியவர் ஒன்றும் சொல்லாமல் பாதி சாப்பாட்டிலேயே எழுந்துவிட்டார். காஷ்ட மௌனத்திலும் (யாருடனும் பேசாத நிலை)சென்றுவிட்டார்.

பெரியவர் சாப்பிட்டபிறகுதான் மற்றவர்கள் சாப்பிடும் வழக்கம் இதைகேள்விப் பட்டதும் யாரும் மடத்தில் சாப்பிடவில்லை. பரிமாறியவரை அவர்தான் ஏதோ தவறு செய்துவிட்டார் என்று அவரைக் கோபித்துக்கொண்டார்கள். அவரும் அப்படியே நினைத்து இரு கண்களிலும் கண்ணீர் தாரை தாரையாக கொட்ட பெரியவாளிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். பெரியவர்களின் மௌனம் தொடர்ந்தது. ஆனால் காரணம் தெரியவில்லை.

மீதியை நாளைப் பார்ப்போமா

ஜய ஜய சங்கரா ஹர ஹர சங்கர




14 comments:

My days(Gops) said...

arumai'a eludhureeenga sir.. nalla thagavalgal....padichi therinchika nerai'a irruku....
btw, I wonder eppadi sir, idhu maadhiri eludhreeenga? idhelam yerkanavey therincha visaiyangala?

தி. ரா. ச.(T.R.C.) said...

@கோப்ஸ் அதெல்லாம் ஓன்னும் இல்லீங்க சோமநாத பகவதர் கிட்டே கத்துண்டு எனக்கு எழுதவே வர்ராது சொன்னதே கொஞ்சம் எடுத்து விட்டேன் அம்பிடுதேன்(திருவிளையாடல்)

VSK said...
This comment has been removed by a blog administrator.
VSK said...

ஐயா,
நானும் அந்த மஹானுடன் சில பொழுதுகள் கழிக்கும் பாக்கியம் பெற்றவன்.
இக்கதையையும் கேட்டிருக்கிறேன்.
உங்கள் எழுத்தில் படிக்கையில் இன்னும் இனிக்கிறது!

நாளையும் வருவேன்!

எந்தரோ மஹானுபாவுலு!
அந்தரிக்கி வந்தனமு!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பெரியவர் பரமாச்சாரியர்
ஆத்திகர் நாத்திகர், சமய, சாதி, மத வேறுபாடுகள் கடந்து எல்லாராலும் மதிக்கப்படுபவர்!

ஏன் அவருக்கு மட்டும் இத்தனை மதிப்பு! திராச ஐயாவின் கட்டுரை படித்தாலே தெரிந்து விடும்! துறவையும் துறக்கும் உண்மைத் துறவால் தான்!

மற்றவர்க்குச் சொல்லும் முன் தான் வாழ்ந்து காட்டிய மாதவச் செல்வர்! அவரின் நினைவு நாளில் மறக்காது நினைத்திருந்து, எங்களையும் நினைக்க வைத்த திராச ஐயாவுக்கு நன்றி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ரமணி அண்ணாவின் பரமாச்சார்யர் கட்டுரைகள், சக்தி விகடனில் தொடராகவும் வருகிறது, திராச ஐயா! ஒவ்வொரு தொடரும் நெகிழ்ச்சியாக உள்ளது!

RK said...

Arumai Sir. Wonderful post on Paramacharya. I still remember one Sivarathri day during mid 80's when suddenly Paramacharya turned up at 12 AM at Kamakshi temple to perform the pooja himself in that small room and the whole crowd of devotees including self and friends were delighted.
My late father who was an ardent devotee of Kanchi Mutt and who took up an assignment for 4 years at Kanchi as District Munsif just to spend more time at the Madam has also recounted many such real happenings. On one of the days Paramacharya had remarked to him' ennada courtla case pakkariya illaya eppavum enge irukkeye' was a prized comment which my father treasured for life

மெளலி (மதுரையம்பதி) said...

நான் இந்த நிகழ்ச்சி பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்....நன்றி சார்....தங்களுடைய அனுபவங்கள் தொடரட்டும்.....தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

Geetha Sambasivam said...

கீரையின் மேல் பற்று என்று தோன்றும் வண்ணம் நாம் நடந்து கொண்டு விட்டோமே என்ற எண்ணமோ பரமாச்சாரியார் அவர்களுக்கு. அவர் சொல்லி எங்களுக்குச் சாப்பாடு கிடைத்த அனுபவத்தை நேற்றுத் தான் பேசிக் கொண்டிருந்தோம். இன்று பார்த்தால் இந்தப் பதிவு.

தி. ரா. ச.(T.R.C.) said...

@ஸ்.கே அவரோடு இருந்தகாலம் நமது பொற்காலம்.மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.நாளையும் வாருங்கள்

தி. ரா. ச.(T.R.C.) said...

@மௌலி எல்லோருக்கும்தெரிந்த விஷயம்தான் இருந்தாலும் மறுபடியும் நினைத்துப் பார்ப்பதில் சந்தோஷமாக இருக்கிறது.

தி. ரா. ச.(T.R.C.) said...

@கீதா மேடம் மிகவும் சரியாக ஊகித்து விட்டீர்கள்.இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தது இந்த நிகழ்ச்சி அவரது எளிமையைக் காட்டும் நிகழ்ச்சி

தி. ரா. ச.(T.R.C.) said...

@கே.ஆர்.ஸ். வாங்க நீங்க வருவீங்கன்னு எதிர் பார்த்தேன். ஏன் அவருக்கு மட்டும் இத்தனை மதிப்பு. உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்து எல்லாம் உளன். திருவள்ளுவர் இவருக்காகவே எழுதினாறோ? சக்தி விகடனில் வரும் கட்டுரைகளை நானும் படிக்கிறேன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@ஆர்.கே. நேற்றுதான் உங்களப்பற்றி நங்கநல்லூரில் பேசிக்கொண்டு இருந்தோம் உங்களுடைய கச்சேரி ரோடு வாசத்தைப் பற்றி.பெரியாவாளுடன் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி அனுபவம் உண்டு.பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.