சொற்களும் அறியேன் சொற்களின் பொருளும் அறியேன். கவிதையும் அறியேன் உரை நடையும் அறியேன் ஆறுமுகங்களுடைய முருகன் ஒளிவெள்ளமாக என் இதயத்தில் புகுந்து நிலையாக அங்கேயே இருப்பதால் சொல்லும் பொருளும் அவனருளல் தானாகவே வெளிப்படுகிறது தானம்செய்தும் அறிகிலேன் தவங்கள்செய்தும் அறிகிலேன் ஆனவன்பரான பேர்க்கு அன்னமிட்டும் அறிகிலேன் தேனமர்துழாய்கொண்டு உன்னைச் சிந்தைசெய்தும் அறிகிலேன் நானறிந்ததொன்றுமில்லை ராமராமராமனே!
Monday, January 08, 2007
தியாகராஜயோக வைபவம்
இன்று சத்குரு ஸ்ரீ தியகராஜஸ்வாமிகளின் ஆரதனை தினம். மார்கழி மாதம் பௌர்ணமி தொடங்கி வரும் பஞ்சமி புஷ்ய நக்ஷ்த்திரத்தன்றுதான் அவர் ஸ்ரீ ராமனுடன் இரண்டறக் கலந்தார். அவர் மறைந்து 160 ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்று திருவையாற்றிலே சங்கீத வித்வான்கள் ஒன்றுகூடி அவருக்கு சங்கீதாஞ்சலி செய்வார்கள்.
அவரை எல்லோரும் ஒரு ஏழை அந்தணன் சொத்து சுகமே இல்லாதவர் என்று கூறுவார்கள். என் மனம் ஏனோ அதை ஒப்புக்கொண்டதே இல்லை.அவர் வீட்டில் எப்போதும் நிறையப்பேர்கள் இருந்தனர். ராமர், சீதா, லக்ஷ்மனர், பரதன், சத்ருக்கணன், ஆஞ்சனேயர். இவர்களுக்குகாலை ஆரம்பித்து இரவு வரை எல்லா உபசாரங்களும் ஒரு குறைவும் இல்லாமல் நடந்தது. மேலும் அவர் சரபோஜி மஹாராஜா போல சதாரண அரசர் இல்லை. ஒரு சக்கிரவர்த்தியாகத்தான் இருந்து வாழ்ந்தார். ராமபக்தி என்ற சாம்ராஜ்யத்தின் ஏகபோக சக்கிரவர்த்தியாக இருந்தார். இருந்தும் வருகிறார்.இதை நான் சொல்லவில்லை அவரே சொல்லுகிறார் தன்னுடைய கீர்த்தனையில். அந்தக் கீர்த்தனையை படித்தும்,அறிந்தும்,கேட்டும் அவருக்கு நாமும் அஞ்சலி செலுத்துவோம்.
ராகம்:- சுத்தபங்காள தாளம் :-ஆதி
பல்லவி
ராமபக்தி ஸாம்ராஜ்யம்
மேமாநவுல கப்பெனோ மனாஸா (ராம)
அனுபல்லவி
ஆமாநாவுல ஸந்தர்சன
மத்யந்த பிரும்மானந்தமே (ராம)
சரணம்
ஈலாகனி விவரிம்பலேனு
சாலா ஸ்வனுப வேத்யமே
லீலா ஸ்ருஷ்டி ஜகத்ரய மனே
கோலஹல தியகராஜனுதுடகு (ராம)
ஏ மனமே/மனிதா ராம பக்தி என்கிற சாம்ராஜ்யத்தின் சக்கிரவர்த்தி என்கிற பதவி எவனொருவனுக்கு கிடக்கிறதோ அப்பேர்ப்பட்ட மனிதனின் தரிசனம் மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்குகக்கூடியது
அந்த சந்தோஷத்தை எவராலும் வார்த்தைகளினால் வர்ணிக்க முடியாது. அவரவர்கள் தங்களது சொந்த அனுபவத்தால் மட்டுமே உணரமுடியும். இந்த உலகத்தில் மட்டுமல்லது கடவுளின் படைப்பால்உண்டாக்கப்பட்ட மூன்று உலகத்திலும்
எந்த மனிதனோ அல்லது தேவனோ இந்த சக்கிரவர்த்தி பதவியை அடைகிறானோ அவனுடைய தரிசனமும் சந்தோஷத்தைக் கொடுக்கக்கூடியது என்பதில் சந்தேகமே இல்லை .இந்தப் பதவியில்தான் தியகராஜன் மிகவும் சந்தோஷமா இருக்கிறான் என்கிறார் தியகராஜர்.
இனி ஓ.ஸ். அருண் பாடும் இந்தப் பாட்டைக் கேட்க இங்கே '><"கிளிக்">"> செய்யவும்
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
நிச்சயமாக!
ராம நீ சமானம் எவரு? என்று பாடி ராமன் மனதை நிறைத்தவருக்கு நம்
இதய அஞ்சலிகள்.
நல்ல நாளன்று நல்ல பாடல். நன்றி திரச.
ஆராதனையின் போது பதிவு தந்த திராச ஐயாவுக்கு நன்றி! நான் கொஞ்சம் யூகித்தேன்; எப்படியும் திராச ஐயா தியாகராஜர் பதிவினைத் தருவார் என்று!
நாமும் போடலாமா என்று யோசித்தேன்!
சரி அதனால் என்ன? அடியேனும் ஒரு பதிவு போடலாம்; ராமனுக்கு சீதையும் இலக்குவனும் தராத அருஞ்சுவைக் கனிகளா?
ஆனாலும் குகனும் தேனும் மீனும் கொடுத்தாற் போல ஏதோ நாமும் சும்மானாங்காட்டியும் ஏதாச்சும் தருவோம் என்று இட்டு விட்டேன்! :-)
//அவர் வீட்டில் எப்போதும் நிறையப்பேர்கள் இருந்தனர்.
ராமர், சீதா, லக்ஷ்மனர், பரதன், சத்ருக்கணன், ஆஞ்சனேயர்.
இவர்களுக்கு காலை ஆரம்பித்து இரவு வரை எல்லா உபசாரங்களும் ஒரு குறைவும் இல்லாமல் நடந்தது//
ஆகா, அருமையாச் சொல்லியிருக்கீங்க ஐயா! பணக்காரர் வீட்டில் கூட இப்படி பாத்து பாத்து உபசாரம் நடக்குமா? அபசாரம் வேண்டும் ஆனால் நடக்கலாம் :-)
ஆனால் தியாகராஜர் கையால் வாங்கிச் சாப்பிட ராமன் தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!
ராகத்தில் சமைத்து, தாளத்தில் சூடாக்கிச், சுரங்களில் வடித்து தந்த உணவு அல்லவா?
தலைப்பை பார்த்தவுடன் தீஷதர் கிருதி ஞயாபகம் வந்துவிட்டது.....
எந்தரோ மகானுபாவுலு, அந்தரிகி வந்தனமு....
@மௌலி கரெக்ட்டாகக் கண்டுபிடித்துவிட்டீர்கள்.அந்த பேகட ராகக் கிருதியை நினைத்துதான் தலைப்பை வைத்தேன்.. அது மாத்திரம் அல்ல தியாகராஜரின் வாழ்க்கையே ஒரு ராமயோகம் நமக்கெல்லாம் அது வைபவம்
@ வாங்க கே.ஸ்.ஆர். நீங்க சொன்னதுதான் கரெக்ட். அந்த குஹனின் சாப்பாட்டை சாப்பிட்டுத்தான் இராமன் இது "அமிழ்தினும் இனிது" "பவித்திரம்" என்றெல்லாம் சர்டிபிகேட் கொடுத்து இருக்கிறர். சபரிக்கும் மற்றவர்களுக்கும் அந்தப் பேறு கிடையாது.தங்களின் எந்தரோ மஹானுபவுலு பதிவு பிரமாதம்.
@ இலவசம் நீ வந்தால் அதுவே நல்ல நாள்தான்
@ ஜீவா ஆமாம் இந்த கீர்த்தனத்தை எல்லோரும் "ரமணி சமான எவரு" என்றுதான் பாடுவார்கள்.ஆனால் சரியான முறை " ராமா நீ சமானம் எவரு" என்பதுதான்.ஒரு முறை திரு. எம்.டி ராமனாதன் பாட்டு,லால்குடி ஜெயராமன்.உமையாள்புரம் சிவராமன் மிருதங்கம். இந்தப்பாட்டை பாடும்போது அவ்ர் ஜெயராமனையும் சிவராமனையும் பார்த்து ஜெயராமா சிவராமா நீ சமானம் எவறு என்று பாடியதும் அரங்கமே கைத்தட்டலால் அதிர்ந்தது.
எதிர்பார்த்த பதிவு. தந்ததுக்கு ரொம்ப நன்றி. மிகச் சுருக்கமாயும் அழகாயும் எழுதி இருக்கிறீர்கள்..
@கீதா மேடம்.எப்படி விட முடியும் இந்த தினத்தை.இனிமேல் பல பாடல்களுக்கு பொருளோடு பாட்டும் வரும்.தங்கள் ஆதரவு தேவை
Wonderful post. yest post kooda padichen, comment naalaiku podalam!nu irunthen. athukulla intha super post.
sema speed neenga! thanx :)
Post a Comment