Sunday, April 01, 2007

குருவே சரணம்






எனக்கு ஒரு சிறிய அளவிற்கு சங்கீதத்தைப் பற்றியும், அதைப் பற்றி எழுத்தில் வடிப்பதற்கும் அறிவை ஊட்டியவரும், பல பெரிய சங்கீத வித்வான்களிடமும் அறிமுகமும் செய்வித்தவரும் எனது குருநாதருமான திரு. பி.வி.சுப்ரமணியம் என்கிற அனைவருக்கும் தெரிந்த "சுப்புடு" அவர்கள் 29/03/2007 டெல்லியில்தனது 91ஆம்வயதில் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த மன வருத்தைத் தருகிறது. அவரது பெருமையைப் பற்றி நான் ஒன்றும் பெரிதாகச் சொல்லவேணடாம் மேதகு இந்தியாவின் ஜனாதிபதி திரு. அப்துல்கலாம் அவர்களே நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பல வித்வான்கள் தவறாகப் பாடும் போது குட்டி சுட்டிக் காட்டிய அவரின் பேனா பல இளம் கலைஞ்ர்களை ஊக்குவித்து உலகிற்கு சுட்டிக் காட்டியதற்கும் உதவியது.கீழே 1970 களில் அவருக்கு நான் உதவியாளனாக இருந்தபோது எடுத்தப் படம் அவருக்குப் பின்னால் அமர்ந்திருக்கும் பாக்கியம் கிடைத்தது.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைக.



30 comments:

தி. ரா. ச.(T.R.C.) said...

முதலில் சுப்புடு மாமாவையும் இசையையும் பிரிக்கமுடியாமல்தான் இசைப்பாடலோடு உள்ள பதிவில் அவரின் இரங்கல் செய்தியைப் போட்டேன்.துளசி டீச்சர் சொன்னதற்கு பிறகுதான் தனிப் பதிவே போடவேண்டும் என்று தோன்றி போட்டுவிட்டேன். நன்றி டீச்சர்.

Cogito said...

Sad to hear the news. May his soul RIP.

By the time, I got interested in carnatic music , Subbudu had almost stopped writing. I remember reading for a couple of years his reviews in Dinamani and Indian Express ( Btw, did he write in english as well or did someone translate ?).

The incident I remember well is when he used to share the stage with Swami Haridas giri. Haridas giri swami used to pull subbudu's leg about some raaga identification and subbudu would smile saying unga paatu adukku ellam apparpattadhu.

தி. ரா. ச.(T.R.C.) said...

yes @cogito u r correct he stoped writing long back.His writings both in english and in tamil were super.Infact his english was better in sharpness as comparaed to his Tamil

Ranjhith said...

First time here! I seriously think that ur blog URL needs a change! >:O)

http://thrattle.wordpress.com

Subbiah Veerappan said...

ஆகா! நீங்கள் சுப்புடு அவர்களின் சீடரா! பாக்கியம் செய்தவர் நீங்கள்!

அவரைபோல ஒரு விமரிசகர் இனிப் பிறப்பதரிது!

முன்பு தினமணி நாளிதழில் தொடர்ந்து விமரிசனங்கள் எழுதுவார்.
அற்புதமாக இருக்கும். அவருக்கென்று ஒரு பெரிய வாசகர் வட்டம் இருந்தது!

அவர் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக் கின்றேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

திராச ஐயா

பெரியவர் சுப்புடு அவர்களுடன் தாங்கள் பணியாற்றிய போது, நிகழ்ந்த சுவையான நிகழ்ச்சிகளை ஒரு தொடராக எழுதினால், அன்னாரின் குணங்களும், sense of humour, மற்றும் இளைஞர்களுக்கு அவர் அளித்த ஊக்கம் இவை எல்லாம், பதிவுலகிலும் எழுத்தாய் நிலைக்கும்!

சுப்புடு அவர்கள் இறை அமைதி பெற, இசையரசன் அந்த ஆடல் வல்லானை இறைஞ்சுவோம்!

Raji said...

Subbutu pathi naanum neraya kaelvi patuurukkaen..
Romba varuthathukkuriya seidhi ...

Raji said...

Sir
Neenga avaroda junioraa...
Great to hear this thing and
Romba pearumaya irukku ungala therinjadhukku....

Thanks to blog world...

தி. ரா. ச.(T.R.C.) said...

@ரஞ்ஜித். முதல் வரவுக்கு நன்றி. உங்களது யோஜனை பரிசீலிக்கப்படும்

தி. ரா. ச.(T.R.C.) said...

@வி.ஆர் சுப்பைய்யா அவருடன் இருந்த அந்த நாட்கள் பசுமையாண நினைவுகள்.என் பின்னால் என் மோட்டர்சைகிளில் உட்கார்ந்து கொண்டு பல் இடங்களுக்கு சென்றபோது எனக்கு தெரியாது ஒர் மாமேதையுடன் செல்லுகிறோம் என்பது.

தி. ரா. ச.(T.R.C.) said...

@கேஆர்ஸ் . அவர் மிகவும் எளிமையானவ்ர்.என்னுடைய சங்கீத ஜாதி முல்லையில் எழுதியது எல்லாமே அவ்ருடைய நகைச்சுவைதான்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@ராஜி. முதல்லே இந்த சார் மோர் இதெல்லாம் எடுத்துவிடு. திராசன்னே கூப்பிடு.கச்சேரி கேட்டு விட்டு இரவு 10 மனிக்குமேல் விமரிசனம் எழுதி காலை 9 மணிக்கு இதய்ம் பேசுகிறது மணியன் வீட்டில் கொண்டுபோய் கொடுத்துவிட்டு வருவேன்.வயலின் விதுவான்சேதுராமைய்யா என்று ஒருவர்7 தந்தியுள்ள வயிலினைத்தான் உபயோகிப்பார். அதைப்பற்றி விமரிசனம் எழுதுபோது மாமா சொன்னார் போஸ்ட்மேன் அவ்ருடைய வயலின் பக்கதிலேயே எப்போதும் இருப்பார் என்று எழுதச்சொன்னார்.அதிகப்ப்ரசங்கித்தனமாக நான் சொன்னேன் மாமா இந்தியாவில் உள்ள தந்தி ஆபீஸ் எல்லாம் அவ்ருடைய வயலின் உள்ளே இருக்கிறது என்று போடலாமா என்றேன்.என் முதுகில் பாளார் என்று ஒரு அறை கொடுத்து சாபாஷ் அப்படிப் போடு வாதாபி என்று சொன்னார். என்னை அவர் வதாபி என்றுதான் கூப்பிடுவார்.நன்றி ராஜி வருகைக்கு.

My days(Gops) said...

//கீழே 1970 களில் அவருக்கு நான் உதவியாளனாக இருந்தபோது எடுத்தப் படம் அவருக்குப் பின்னால் அமர்ந்திருக்கும் பாக்கியம் கிடைத்தது.
//

naanum ivara pathi kelvi pattu irruken.. but andha alavukku sangeeedha nyanam illadha'naal...onnum avalava theriala....

btw sir, neenga ivaru junior'a ketkavey nalla irruku.....

தி. ரா. ச.(T.R.C.) said...

@கோப்ஸ் அவருடை எழுத்து நடை எல்லாதரப்பு மக்களையும் கவரும் தன்மை உடையது.இன்னும்வருத்தம்என்னவென்றால்இன்றுகாலை திரு. யஞ்யராமன் கிருஷ்ணகான சபா செகரெட்டரி காலமானார் என்ற செய்தி.

Porkodi (பொற்கொடி) said...

oh! subbudu thathavai naan haridoss giri guruji bhajansla paathurken! endha vidha bandhavum illama he will participate!

yagnaraman avargalai pathiyum niraiya kelvi pattu irukkiren! ellarkum mudivu undu thaane :(

Raji said...

TRC,

Inimae Sir sollalai sir..Sari sari konjam konjama viduraen...

Inimayana anbavam TRC...

தி. ரா. ச.(T.R.C.) said...

2பொற்கொடி.நீ சுவாமி ஹரிதாஸ்கிரி குருஜி பஜனை எல்லாம் கேட்டு இருக்கியா? அதான் கல்யாணத்திலே எல்லோரும் V முதிரை காமிச்சாங்களா.சுப்புடு மாமவும் நானும் முதல் தடவையா மாண்டலின் ஸ்ரீநிவாச் கச்சேரி சங்கரதாஸ் அரங்கில் 1974 ஆம் ஆண்டு போயிருந்தோம். மாமா நடுக்கச்சேரியில் எழுந்து நின்று கைதட்டி வாதாபி னொடெ பண்ணிக்கோ இன்னும்2 வருடத்தில் இந்த இளம் பைஇயன் சங்கீத உலகை ஆட்டுவிக்கப்போகிறான் தன் இசையால் என்று கூவினார். அது அப்படியே பலித்தது. அதுசரி நீ பாயிண்யர்ஸ் படிச்சு ர்ங்கமணி கிட்டே பாஸ் மார்க் வாங்கிட்டயா

Porkodi (பொற்கொடி) said...

ஹிஹி கல்யாணத்திலே எல்லாரும் எதுக்கு காமிச்சாங்களோ, தெரியாது! ஆனா எங்க குடும்பத்திலே ராதே கிருஷ்ணா உண்டு!! :)

1992ல் அவர் பஜனைக்கு போக ஆரம்பிச்சோம், கூட்டம்னா அதான் கூட்டம்! எங்க கெட்ட நேரம், அவர் அதுக்கு அப்புறம் 2 வருஷம் தான் பூவுலகில் இருந்தார் :( ஆனா, எங்க குருவாக தென்னாங்கூரிலும் அவர் பாடல்கள் மூலமாவும் இன்னும் எங்க கூட தான் இருக்கார்! :) எனக்கு ரொம்ப சின்ன வயசு அப்போ, ஆனா இன்னும் எல்லாம் ஞாபகம் இருக்கு. இது பத்தி பதிவு போடணும் :)

ரங்குவே விட்டா கூட நீங்க மறக்க மாட்டீங்க போலிருக்கே, ஃப்ரீயா விடணும் அங்கிள்! இதையெல்லாம் கண்டுக்கலாமா?? :)

Porkodi (பொற்கொடி) said...

ஆனா எனக்கு புரியாத வயசிலே அவர் விமர்சிக்கறதை பாத்தப்போ, ஏன் இந்த தாத்தா எல்லாரையும் இப்படி திட்டறாருனு கோபம் கோபமா வரும்! நல்ல வேளை அவர் குருஜியை ஒண்ணும் சொல்லல விளையாட்டா கூட! சொல்லிருந்தா என் நிரந்தர எதிரி ஆகிருப்பாரு! (ஆமா நீயெல்லாம் என்ன அவர் முன்னாடினு கேக்க கூடாது!) வளர்ந்த பிறகு தான் அவரை பற்றி விஷயங்கள் தெரிந்தது.

இவரை (ஒரளவு) பிரதிபலிக்கற மாதிரி தான் ஜோடி படத்துல விஜய்குமார் வருவார். ஹும்ம்ம்.. நல்ல வாழ்வு வாழ்ந்து இருக்கிறார்! அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள்!

Porkodi (பொற்கொடி) said...

அவரை நெருக்கமா தெரியும்னா இன்னும் அவரை பற்றி சுவாரசியமான தகவல்கள் ஏதாவது சொல்லலாமே?? :)

தி. ரா. ச.(T.R.C.) said...

@நன்றி போர்கொடி

சுப்புடுவைப் பற்றி ஒருதனிப் பதிவு போடுகிறேன்.

குருஜியுடன் 2 நாட்கள் தென்னாகூரில் தங்கியிருக்கிறேன். அவரே என்னை அழைத்துக்கொண்டு எல்லா இடங்களையும் சுற்றிக்காண்பித்து அவருடைய கனவுகளை விளக்கிச் சொன்னது கனவு போல் இருக்கிறது. மற்றுமொன்றும் சொன்னார் அடுத்த வருஷம் கும்பாபிஷேகம் நடக்கும் நான் இருப்பேனோ மாட்டேனோ ஆனால் நான் நினைச்ச மாதிரியே நடக்கும் என்று சொன்னார். அதுவும் நடந்து விட்டது.அவருடைய டிரஸ்டுக்கு இன்வெஸ்மெண்ட் அட்வைசராக இருந்தது என் பாக்கியம்

Porkodi (பொற்கொடி) said...

அடடா! இவ்ளோ கிட்டயா நீங்க?? இது மாநாட்டுலயே தெரிஞ்சு இருந்தா 2 பஜன் பாடிட்டு கிளம்பி இருக்கலாமே?? :-)

ஆமாம் எனக்கும் அவர் நினைவுகள் கனவு போலவே இருக்கு. தென்னாங்கூர் அரசுடைமை ஆகிட கூடாதேங்கறது ஒரு கவலை. :-( கல்யாணத்துக்கு முன்னாடி கூட கோவிலுக்கு போயிட்டு வந்தேன், இனிமே என்னிக்கு கிடைக்குமோ வாய்ப்பு...

Adiya said...

ya i red his demise in the indian-express. quite sad. i red few of his review about Dr.Balamurali krishan, Kedharathu oru seythaaram comment towards A.R.Rs ennavale song, IR Vs A.R.R review comments..

his honesty towards his profession made him good person.

neeinga avaroda jr innu kaykarthu romba nalla information.


lets pray his soul rest in post.

Expecting your experiance with subbu post.

மெளலி (மதுரையம்பதி) said...

நமக்கெல்லாம் அவருடைய மறைவு ஓப்பற்ற இழப்புதான் . அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Adiya said...

konjam typos.. :(

lets pray his soul rest in peace :(

sorry about that.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அண்ணா!
நீங்கள் "சுப்புடு" அவர்களின் மாணவரா? கொடுத்து வைத்தவர். அவர் விமர்சனம்; கட்டுரைகள் நான் ஈழத்தில் இருந்தபோதே விரும்பிப்படிப்பேன்.
தங்களையும் விமர்சிக்க மாட்டாரா? என வித்துவான்களை ஏங்கவைக்குமளவிற்கு அவர் பெருமைபெற்றவர்.
நம் இசை வயலில் களைகட்டாதிருக்க அவர் செய்த பணி மகத்தானது.
சங்கீத் தாத்தா செம்மங்குடிக்கே கிடுக்குப் பிடி போட்டவர்.
விமர்சனக்கலை இப்படித்தான் இருக்க வேண்டுமென்பதற்கு ,இவர் விமர்சனங்கள் ஒரு பாடம்.
இவர் கனடா சென்ற போது ஈழத்தவர்களின் முருகன் கோவிலுக்குச் சென்ற போது; அங்குள்ள
ஆறுமுகசாமிக்கு ஆறு அந்தணர்கள் ஆறு பஞ்சாலாத்தி வைத்து சுற்றிச் சுற்றிக் காட்டியதை (ஈழத்து நல்லூர் கந்தசாமி கோவிலில் நடப்பது போல்) வெகுவாக ;அதன் அழகைப் புகழ்ந்து எழுதியவர்;
அத்துடன் பூசணி கல்யாணராமன் எனும் ஈழப்பெண்ணின் இசைப்புலமையையும்; விதந்து உரைத்து
அழகும்;திறமையும் எந்த நாட்டில் யாராலானாலும் போற்றுதல் எனும் சிறந்த;திறந்த மனநினையுடையவர்.
அவர் சேவை மகத்தானது 90 வருட , பழுத்த நல்வாழ்வு...
ஆண்டவன் அடியில் அவர் ஆறுதலடைவார்.ஐயமில்லை

தி. ரா. ச.(T.R.C.) said...

@யோகன் நன்றி வருகைக்கு. திரு சுப்புடு அவர்களுக்கு மாணவனாக பணிபுரிந்தது என் பாக்கியம்.அவ்ர் பர்மாவில் போஸ்ட் ஆபிஸில் வேலை பார்த்து வந்தார்.ஜப்பான் படையெடுப்பின்போது கால்நடையாகவே அஸ்ஸாம் வரை பல இன்னல்களுக்கு இடையில் வந்துசேர்ந்தார். கலைச்சேவைக்காகவே ஆண்டவன் அவரை காப்பாற்றி இந்தியாவுக்கு கூட்டிவந்தார்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@ஆதித்யா@ மதுரையம்பதி.
நன்றி.உங்களுடைய வருத்தம் ஒரு நல்ல மனிதருக்காகவூம் அவருடைய கலைப்பணிக்கும்

SKM said...

நிதானமாக வந்து படிக்கிறேன்.இப்போதைக்கு ஒரு "உள்ளேன் Iyya" தான்.Forgive me please.

தி. ரா. ச.(T.R.C.) said...

@ஸ்கேஎம்
"ஜாதி, மதம், நட்பு அனைத்திற்கும் அப்பாற்பட்டு மனதில் பட்டதைப் பளிச்சென்று சொல்வதில் அவர் ஒரு கண்ணதாசன்! நான் ஒரு சுப்புடு!"
இப்படிச்சொன்னவர் யார்தெரியுமா
ஒருமுறை சுப்புடு மாமாவுடன் கண்ணதாசனைத் சந்தித்தபோது மாமாவைப்பற்றி கண்ணதாசன் சொன்னது.