Saturday, September 08, 2007

லக்ஷ்மி வாந்தாள் நம் இல்லத்துக்கு(4)


மஹாலக்ஷ்மியின் அருள் இருந்தால் போதுமே வேறு என்ன வேண்டும் நமக்கு.திரு. சிவன் அவர்கள் தனது சங்கராபரண ராகத்தில் அமைந்த "மஹாலக்ஷிமி ஜகன்மாதா" என்ற பாடலில் உள்ளம் உருகி அழைக்கிறார். பாடலைப் பார்ப்போமா

ராகம்:-சங்கராபரணம் தாளம்:- மிஸ்ர சாபு

பல்லவி

மஹாலக்ஷ்மி ஜகன்மாதா
மனமிரங்கி வரமருள்...............(மஹாலக்ஷ்மி)அனுபல்லவி


மஹாவிஷ்ணுவின் மார்பெனும்
மணிபீடமதனில் அமர்ந்திடும்
மன்மதனை ஈன்றருளும் தாயே
தயாநிதியே மஹா மாயே........(மஹாலக்ஷ்மி)சரணம்


பாற்கடல் தரும் கிருபாகரி
பரிந்துவந்தென்னை ஆதரி
பங்கஜ மலர் வளர் அன்னையே-- கடைக்கண்
பார் ராமதாஸன் பணியும்......(மஹாலக்ஷ்மி)


இந்தப் பாடலை மிக இளம் வயிதேலேயே இசை உலகை தன் குரலினால் கவர்ந்த அதே மாதிரி இளம் வயதிலேயே மறைந்த திருமதி.வஸந்தகோகிலத்தின் குரலில் <"இங்கே கேட்கவும்">">

சங்கராபரணம் ராகம் சிங்கார வேலன் படத்தில் "புதுச்சேரி கச்சேரி உன்னு பிடிச்சேன்" பாட்டில் வெளுத்துக்கட்டியிருக்கிறார் திரு.SPB

சரி நாங்கள் மஹாலக்ஷ்மியின் நாலுபதிவுக்கும் வந்து கண்டும் ,கேட்டும் படித்தும் போனோமே எங்களுக்கு என்ன கிடைக்கும் அப்படின்னு அம்பி கேட்பான் இதோ கீழே பாருங்கள் உங்களுக்காக மஹால்க்ஷ்மி தன் இருகைகளாலும் தங்கக் காசுகளை தாரளமாக அள்ளித்தருகிறாள் அள்ளிக்கொண்டுபோங்கள்.

13 comments:

ஜீவா (Jeeva Venkataraman) said...

நான்கு பதிவுகளும், பாடல்களும் அருமை!

நேற்று எங்கள் வீட்டில் வரலஷ்மியை வீட்டுக்கு அழைத்தாயிற்று...அவள் அருள் வேண்டி!

ஜீவா (Jeeva Venkataraman) said...

பாடல் வரிகளில சின்ன திருத்தம் ://மணிபீடமதனில் அமர்ந்திடும்//

மணிபீடமதனில் அமர்ந்தருள் என்றல்லவா கேட்கிறது!

கீதா சாம்பசிவம் said...

super pattu, My mother used to sing it. But I am not that much singer.:))))))." N.C. Vasanthagokilam was very famous before MS Amma came to the limelight." It is also my mother used to say. May be or may not be. I do not know. But a good choice and was very nice one also. Thank Your for sharing.

கீதா சாம்பசிவம் said...

me firstu? pillaiyar kozukattai, sundal, vadai, athirasam anuppavum. :P

ambi said...

அருமையான பாடல். ராகமும் சொல்லி இருப்பது சிறப்பு. :)

//எங்களுக்கு என்ன கிடைக்கும் அப்படின்னு அம்பி கேட்பான் //

அந்த தங்க காசுகளை TRC சாரிடமே வாங்கி கொள்!னு நேத்திக்கு கனவுல வந்தது. நான் தீவாளிக்கு வரும் போது எடுத்து வைக்கவும். :)

கீதா சாம்பசிவம் said...

என்ன சார் இது, நேத்திக்கே வந்து காசை அள்ளிட்டுப் போனேன், இன்னுமா தெரியாது? :P

Ms.Congeniality said...

azhagaana pics..
neriya god pics la avlo kalaiyaa irukaadhu mugam, idhula romba kalaiyaa iruku :)

தி. ரா. ச.(T.R.C.) said...

ஜீவா மறுபடியும் சிவன் கீர்த்தனையைச்ச் சரிபார்த்தேன் அமர்ந்திடும்தான் சரி. பாடியவர் (ஏ))மாற்றிவிட்ட்டார்.வருகைக்கும் விளக்கத்திற்கும் நன்றி

தி. ரா. ச.(T.R.C.) said...

@கீதாமேடம் 2நாளா கேரளா பாயணம்.அதான் பதில் போடமுடியவில்லை.எல்லாக்காசும் உங்களுக்குத்தான்..
கொழுக்கட்டையா... இங்கே ரவுத்தரே ராப்பட்டினியாம் இதிலே குதிரைக்கு கோதுமை அல்வா கொடுக்கணுமா.

தி. ரா. ச.(T.R.C.) said...

அம்பி நீசொல்வது சரிதான் ஆனால் நேத்திக்கனவிலேயே உன்னிடம் கொடுத்துவிட்டேனே

தி. ரா. ச.(T.R.C.) said...

கீதாமேடம் நீங்க கவலை இல்லாமல் பாடுங்கள் அம்பி வந்து கலந்துப்பான்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@ C ஆஹா என்ன பாக்கியம் ஆப்பு அம்பியின் தடா மீறி நம்ப பதிவுக்கு வருகையா.படங்கள் எல்லாம் கூகிள் உபயம்

தி. ரா. ச.(T.R.C.) said...

கீதா மேடம் நீங்கள் சோல்லுவது சரிதான். வஸந்த கோகிலம் மிகவும் ஆற்றல் படைத்த விதுஷிதான். ஆனால் நிலைத்து நிற்க நல்ல பழக்கங்கள் தேவையே