Saturday, October 01, 2011

நவராத்ரி நாயகி 5

4 வது வரியிலிருந்து 20ஆவது வரி வரைக்கும் லலிதா ஸகஸ்ரநாமத்தில் அம்பாளின் அழகான கேசாதி பாத வர்ணனைதான். அதிலிருந்து ஒரு வரியைப் பார்க்கலாமா !

அஷ்டமீ சந்த்ர விப்ராஜ அளிகஸ்தல சோபிதா

அம்பாளின் நெற்றியை வர்ணிக்கும் பகுதி.அளகம் என்பது நெற்றியின் இரு பக்கங்களின் இருக்கும் பகுதி.அங்குதான் அம்பாளுடைய சுருண்ட கூந்தல் காற்றில் அழகாக முன்னுச்சியில் இரு புறமும் ஆடிக்கொண்டு இருக்கும். சரி அம்பாளுடைய நெற்றி எப்படி இருக்கிறது.அதுதான் அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா மாதிரி இருக்கிறது. என்ன சரியாகப் புரிய வில்லையா? கொஞ்சம் விளக்கமாகப் பார்க்கலாமா. அவளுடைய நெற்றி எட்டாநாள் சந்திரன் போல் இருக்கிறது.எல்லோரும் நெற்றியை பிறைச் சந்திரனுக்குத்தான் ஒப்பிடுவார்கள் ஆனால் இங்கு வேறுமாதிரி.ஆதி சங்கரர் செளந்தர்ய லகிரியில் அம்மா உன் தலையில் ஒரு பாதி அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா சந்திரன்மாதிரி இருக்கிறது. நெற்றியில்மறு பாதி சந்திரன் இருக்கிறது. இரண்டையும் அப்படியே சேர்த்து வைத்துப் பார்த்தால் முழுநிலவாகி விடும். அப்படி பௌர்ணமி பூர்ண சந்திரன் போல இருப்பதுதான் உன்முகம் என்கிறார்.இப்போது புரிகிறதா ஏன் அபிராமி பட்டர் அமாவாசையன்று பௌர்ணமி என்று கூறினார்.அவர் அம்பாளின் முகதரிசனம் செய்து கொண்டு இருந்தபோது கேட்ட கேள்விக்கு வந்த பதில்.பிறைச் சந்திரன் என்று சொன்னால் அது நெற்றியோடு பொருந்தாது. இரண்டு பக்கமும் தூக்கிக்கொண்டு இருக்கும் அழகாக இருக்காது.ஆனால் பாதி பிறை எட்டம்நாள் சந்திரன் சமமாக இருக்கும். அதை அப்படியே அம்பாளின் நெற்றியாக பாவனை செய்து இருபுறமும் சுருண்ட கூந்தல் காற்றில் அலைபாயும்படி கற்பனை செய்து பார்த்தால் அஷ்டமீ சந்த்ர விப்ராஜ அளிகஸ்தல சோபிதா என்ற வரிக்கு அர்த்தம் புரியும்

 நாளை வாருங்கள் மற்றொரு விளக்கம் பார்க்கலாம்
இன்றைய பாடல் 4 வது ஆவர்ணம்

ராகம்:         காம்போதி         தாளம்: அட

பல்லவி

கமலாம்பிகாயை கனகாம்ஸுகாயை
கர்பூரவீடிகாயை நமஸ்தே நமஸ்தே.....(கமலாம்பிகாயை)


அனுபல்லவி

கமலாகாந்தாநுஜாயை காமேஸ்வர்யை அஜாயை
ஹிமகிரி தநுஜாயை ஹ்ரீம்கார பூஜ்யாயை
கமலாநகரவிஹாரிண்யை
கல-ஸமுஹ சம்ஹாரிண்யா
கமநீய ரத்ன ஹாரிண்யை
கலிகல்மஷ பரிஹாரிண்யை......(கமலாம்பிகாயை)


சரணம்

ஸகல ஸௌபாக்ய தயா காம்போஜ சரணாயை
சம்ஷோபிண்யாதி ஸக்தியுத சதுர்தாவரணாயை
ப்ரகடசதுர்தஸ புவந பரணாயை
ப்ரபல குருகுஹ ஸம்ப்ரதாயாந்த:கரணாயை
அகளங்க ரூப வர்ணாயை
அபர்ணாயை ஸுபர்ணாயை
ஸூ-கர த்ருத  சாப பாணாயை
ஸோபநகர மநுகோணாயை
ஸகுங்குமாதி லேபநாயை
சராசராதி கல்பநாயை
சிகுர விஜித நீலகநாயை
சிதாநந்த பூர்ணகநாயை.....(கமலாம்பிகாயை0


தங்கத்தால் இழைத்த மேலாடையை அணிந்தவளும்  பச்சைகற்பூரவாசனைமிக்க தாம்பூலமணிந்து சிவந்த அதரங்களையுடைவளுமான கமாலாம்பிகாயைக்கு மீண்டும் மீண்டும் என் நமஸ்காரம்.லக்ஷ்மிகாந்தனின் சகோதரியும், காமேஸ்வரிஎன்ற பெயர் பெற்றவளும்,பிறப்பிலாதவளும்.ஹிமவானின் புதல்வியும்,ஹ்ரீம் என்ற பீஜாக்ஷரத்தில் பூஜிக்கப்படுபவளும்,கமலாநகரம் எனப்படும் திருவாரூரில் திகழ்பவளும்,துஷடர்களின் கூட்டத்தை அறவே துவம்சம் செய்பவளும்,அழகான ரத்னமாலைகளை அணிந்து ஒளிவீசுபவளும்,கல்ல்காலத்தில் உண்டாகும் தோஷங்களுக்கு பரிஹாரமாக விளங்குபவளுமான கமலாம்பிகாயை நமஸ்கரிக்கிறேன்.
ஸகல சௌபாக்கியங்களை தரவல்ல சரணாரவிந்தங்களை உடையவளும்,நாலாவது ஆவரணத்தில் ஸம்ஷோபிணீ முதலிய சக்திகளோடு நான்குவிதமான ஆவரணங்களை கொண்டவளும்,பதிநான்கு லோகங்களையும் தன்னுளடக்கியவளும்,புகழ் மிக்க குருகுஹனின் ஸம்பிரதாயங்களுக்கு ஆதாரமாக உள்ளவளும்,களங்கமில்லாதமேனியழகையுடையவளும்,சிவனை குறித்து தவம் செய்யும்போது காய்ந்த இலைகளைக்கூட உண்ணாமல் விரதம் காத்து அதனால் அபர்ணா என்று பெயர் பெற்றவளூம் ஸுபர்ணாஎன்ற தேவதையாக இருப்பவளும்,அழகிய கைகளில் வில்லும் அம்பும் கொண்டவளும்,சோபை மேலிடும் வகையாக மனுகோணம் போன்ற பதிநான்கு கோனங்களுள்ள  சிரீ வித்யா பிரஸ்தாரங்களைக் கொண்டவளும்,குங்கும பூச்சோடு சிவந்து இருப்பவளும்,அசையும் அசையாப் பொருள்களை படைத்தவளும்,கருநீலமேகங்களுடன் போட்டி போடும் கூந்தலை உடையவளும்,சிதாநந்த பரிபூரண ஸமூஹமாக விளங்குபவளுமானா கமலாம்பிகைக்கு நமஸ்காரம் நமஸ்காரம்.







http://www.hummaa.com/music/song/kamalambikayai-fourth-avaranam/127806#

2 comments:

Geetha Sambasivam said...

அதை அப்படியே அம்பாளின் நெற்றியாக பாவனை செய்து இருபுறமும் சுருண்ட கூந்தல் காற்றில் அலைபாயும்படி கற்பனை செய்து பார்த்தால் அஷ்டமீ சந்த்ர விப்ராஜ அளிகஸ்தல சோபிதா என்ற வரிக்கு அர்த்தம் புரியும்//

நல்ல ரசனை.

அபர்ணாவும், சுபர்ணாவும் மனதைக் கவர்ந்தனர். நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) said...

வாங்க கீதா மேடம். ஆமாம் அபர்ணா என்ற பேர் நிறைய கேள்வி பட்டிருக்கிறேன் சுபர்ணா என்ற பேர் இந்தோனிஷியாவில்தான் வைக்கிறார்கள்.சுபர்ணா சுகர்ணா சு-ஹார்த்தோ இதெல்லாம் அங்கே சகஜம்.