இன்று வணங்கப் போகும் வரிகள்
முகச்ந்த்ர களங்காப ம்ருகநாபி விசேஷிகா
வதனஸ்மர மாங்கல்ய க்ருஹ தோரண சில்லிகா
வக்த்ர லக்ஷிமி பரீவாஹ சலன் மீனப லோசனா
அடுத்தபடியாக அம்பாளின் முகத்தைப் பற்றிய வர்ணனை. அவள் முகம் எப்படி இருக்கிறதாம்.முகம் பூர்ண சந்திரன் போல இருக்கும் உன் முகத்தில், எப்படி சந்திரனில் ஒரு சிறு களங்கம் தென்படுமோ அதுபோல உன்நெற்றியில் கஸ்தூரி மானிடமிருந்து பெற்றகஸ்தூரியால் திலகமிட்டு அழகாக ஜ்வலிக்கும் உன் முகம்.இதுதான் முகச்ந்த்ர களங்காப ம்ருகநாபி விசேஷிகா
அங்கதன் மன்மதன் இருக்கிறானே அவ்னுக்கு உருவம் கிடையாது. மனதில் மட்டும்தான் இருக்கிறான்.அவன் மேல் உள்ள கருணையினால் அவனுக்கு ஒரு விலாஸம் அட்ரஸ் வேண்டுமே அதற்காக தன்னுடைய முகத்தையே அவனுக்கு வீடாக அளித்தாளாம்.வீடு என்றால் வாயில் இருக்க வேண்டும் தோரணம் இருக்க வேண்டும் அல்லவா? அம்பாளுடைய இரு புருவங்களும் தான் அந்த வீட்டின் வாயில் தோரணங்கள்.அம்பாளின் முகம் மன்மதனைப் போல அழுகு படைத்தது புருவங்கள் இரண்டும் வாயில் தோரணம் போன்று இருக்கிறதாம். இதுதான் வதனஸ்மர மாங்கல்ய க்ருஹ தோரண சில்லிகா
வக்த்ர லக்ஷிமி பரீவாஹ சலன் மீனப லோசனா
அடுத்தது கண்களைப் பற்றிய வர்ணனை
அவளுடைய முகத்திலிருந்து வரும் அழகு இருக்கிறதே அது அப்படியே பிரவாகமாகிய நதி போல அதுவும் ஒரு நதி அல்ல இரண்டு நதிகள் பெருக்கெடுத்து ஓடிவந்து இரு கண்களாக மாறி விடுகிறதாம். ஒரு நதியின் பெயர் தயா.நாம் எவ்வளவு தப்பு செய்தாலும் தாயினும் சாலப் பரிந்து நம்மை மன்னிக்கும் தயாநதி போன்ற கண்கள். மூககவி காமட்சி அம்மன் பேரில் 100 ஸ்லோகங்கள் தயா சதகம் என்ற பெயரில் பாடியுள்ளார். மற்றோரு நதி கருணா.பக்தர்கள் மீது எப்பொழுதும் கருணை கொண்டவள்.ஆக இரண்டு கண்களும் இரண்டு தடாகங்கள் என்றால் அதில் மீன்கள் இருக்க வேண்டாமா? லலிதா தேவியினுடைய கருவிழியில் உள்ள கரு மணிகள்தான் மீன்கள். அது இரண்டும் இந்த பக்கமும் அந்த பக்கமும் ஓடிக்கொண்டே இருக்குமாம். இதைத்தான் ஆதி சங்கரர் அப்படியே எடுத்து"" வதன சௌந்தர்ய லஹரி"" என்கிறார் சௌந்தர்ய லஹரியில்.காளிதாஸரும் ""லலிதா கடக்ஷவீக்ஷ் ஐஸ்வர்ய அவ்யாஹ்த"" லலிதாவின் கடைக்கண்னின் ஒரு ரேகை பட்டாலும் கூடசெல்வம் கொழிக்குமாம்.இதுதான் அர்த்தம் என்பதற்கு இந்த உவமைகள் எல்லாம் என் கற்பனையே ஏதாவது தவறு இருப்பின் சுட்டிக்காட்டுங்கள் திருத்திகொள்கிறேன்.

நாளை வேறு ஒரு நாமாவளியைப் பார்க்கலாமா
பல்லவி
ஸ்ரீ கமலாம்பாயா: பரம் நஹிரே ரே சிந்தஷித்யாதி ஸிவாந்த தத்வ ஸ்வரூபிண்யா...(ஸ்ரீ கமலாம்பயா...)
அனுபல்லவி
ஸ்ரீ கண்ட விஷ்ணு விரிஞ்சாதி ஜநயித்ர்யாஸிவாத்மக விஸ்வ கர்த்ர்யா: காரயித்ர்யா:
ஸ்ரீ கர பஹிர்-தஸார- சக்ர ஸ்தித்யா:
ஸேவித பைரவி பார்கவி பாரத்யா....(ஸ்ரீ கமலாம்பயா....)
சரணம்
நாதமய ஸூக்ஷரூப ஸர்வஸித்திப்ரதாதி தச -ஸக்த்யாராதித மூர்த்தே:
ஸ்ரோத்ராதி தஸ-கரணாத்மக குலகௌலி
காதி பஹூவிதோபாஸித கீர்தே:
அபேத நித்ய ஸுத்த புத்த முக்த ஸச்சிதா:
நந்தமய பராத்வைத ஸ்பூர்தே:
ஆதிமத்யாந்த ரஹித அப்ரமேய குருகுஹ
மோதித ஸர்வார்த்த ஸாதக பூர்த்தே:
மூலாதி நவ ஆதாரவ்யாவ்ருத்த தஸத்வநி
பேதஜ்ஞ யோகி ப்ருந்த ஸம்ரக்ஷண்யா:
அநாதி மாயா-வித்யா கார்ய காரண விநோத
கரண படுதர கடக்ஷ வீக்ஷண்யா:....(ஸ்ரீ கமலாம்பாயா...)
ஹே மனமே பூமிதத்வம் முதல் சிவதத்வம் வரையான தத்வங்களின் ஸ்வரூபமாக விளங்குபவளான ஸ்ரீ கமலாம்பிகைக் காட்டிலும் வேறு மேலான தெய்வம் இல்லை.நீலகண்டன், விஷ்ணு,ப்ரும்மா,முதலியவர்களை தோற்றுவித்தவள் ,
சிவாத்மகதத்துவாமாக உலகைப்படைத்தவள், ஐஸ்வர்யங்களை அள்ளித்தருபவள்,பத்து இதழ்கள் உள்ள பஹிர்தசார சக்ரத்தில் உறைபவள்,லக்ஷிமி, ஸ்ரஸ்வதி,பைரவி ஆகியோரால் பூஜிக்கப் படுபவள்,ஆகிய இப்பேற்பட்டவளான ஸ்ரீ கமலாம்பிகையைவிட மேலான தெய்வம் வேறு கிடையாது.
நாதமய சூக்க்ஷரூபமாக அணிமா மற்றும் அஷ்டமாசித்திகலை அருளுபவள், சர்வசித்திப்ராதா முதலான பத்து சக்த்தி தேவியர்களால் ஆராதனை செய்யப்படுகின்றமூர்த்தியாகயுள்ள அவளைக்காட்டிலும் வேறு மேலான தெய்வம் கிடையாது.கண் காது முதலாம் ஐந்து ஞனேந்திரியங்கள், வாக்கு முதலான ஐந்து கர்மேந்திரியங்கள் ஆக பத்து இந்திரியங்கள் சொரூபமானவள்,குலகௌலீனி சக்தி தேவியரால் பல்வகையான உபாசனை செய்யப்பெற்ற புகழை உடையவள்,பேதங்கற்ற,அழிவற்ற,மாசுகளற்ற,ஞானஸ்வரூபான, மாயையிலிருந்து விடுபட்ட,சச்சிதானந்தமான,மேலான அத்வைதத்தின் எழுச்சியாக இருக்கும் அவளைக்காட்டிலும் மேலான தெய்வம் வேறொன்றும் இல்லை.முதல் இடை கடை இல்லாத அளவிடற்கரியா குருகுஹனை ஈன்று மகிழ்ச்சியடைந்தவள்,அனைத்து புருஷார்த்தங்களையும் நிறைவேற்றுபவள்,முலாதாரம் முதல் தொடங்கி ஒன்பது ஆதாரங்களால் சுற்றப்பட்டவள்,பத்துவிதமான நாதங்களையும் அவற்றிற்குண்டான வேறுபாடுகளையும் அறிந்த யோகியர் கூட்டத்தை ரக்ஷிப்பவள்,என்று தோன்றியது என்றே சொல்லமுடியாத மாயையின் வடிவான அஞ்ஞானத்தின் காரிய காரணங்களை விலக்குவதற்கு மிகவும் திறமை வாய்ந்த கடைக்கண் பார்வை உள்ளவளான அந்த ஸ்ரீ கமலாம்பிகையைவிட மேலான வேறூ தெயவம் இல்லை இல்லை இல்லவே இல்லை

7 comments:
நீங்க தர விளக்கத்தை விடப் பொருத்தமான விளக்கம் ஏதும் இருக்குமா என்ன! நல்லாவே இருக்கு விளக்கம். நன்றி.
அதென்ன, நவராத்திரி -10 பதிவும் இப்போவே அப்டேட் லிஸ்ட்லே வருது! ஆனால் பதிவு தெரியலை. கொஞ்சம் என்னன்னு பாருங்க. இது வெளியிடறதுக்குனு எழுதலை.
#
நவராத்ரி நாயகி 6
posted by தி. ரா. ச.(T.R.C.) at கௌசிகம் - 3 hours ago
*இன்று வணங்கப் போகும் வரிகள் * *முகச்ந்த்ர களங்காப ம்ருகநாபி விசேஷிகா * *வதனஸ்மர மாங்கல்ய க்ருஹ தோரண சில்லிகா* *வக்த்ர லக்ஷிமி பரீவாஹ சலன் மீனப லோசனா* *அடுத்தபடியாக அம்பாளின் முகத்தைப் பற்றிய வர்ண...
#
நவராத்ரி நாயகி 10
posted by தி. ரா. ச.(T.R.C.) at கௌசிகம் - 4 hours ago
வாங்க.கீதா மேடம் தினமும் சரியா வந்து அம்பாளின் கிருபைக்கு பாத்திரமாவது பற்றி சந்தோஷம்.
அதென்ன, நவராத்திரி -10 பதிவும் இப்போவே அப்டேட் லிஸ்ட்லே வருது! ஆனால் பதிவு தெரியலை. கொஞ்சம் என்னன்னு பாருங்க. இது வெளியிடறதுக்குனு எழுதலை.
அது ஒன்னும் இல்லை. 10 நாட்களுக்கும் போட வேண்டிய பதிவுகளை நேரம் கிடைக்கும்போது எழுதி வைத்துவிட்டு கூகிளுக்கு என்றைக்கு எப்பொழுது போடவேண்டும் என்று கட்டளை கொடுத்துவிட்டால் அது தானாகவே அந்த நாட்களில் போட்டுவிடும்.
திருவாரூர் திகழ் சிறப்பே கமலாம்பிகையே!
உருவாய் உருவாய் உளமாய் இனிதாய் அருள்வாயே!
அன்னையின் சன்னிதிச் சுட்டியினை இங்கே சேர்த்து விடுகிறேன், நன்றிகள்!
மரபுமைந்தன் அவர்களில் கமலாம்பாள் கவிதையினையினையும் இங்கே சேர்த்து விடுகிறேன்!
நன்றிகள்!
வாங்க ஜீவா வருகைக்கும் மண்ணின் மைந்தன் கமலாம்பா கவிதைக்கும் நன்றி.
Post a Comment