Thursday, July 20, 2006

நினைத்ததெல்லாம்..... நடந்துவிட்டால் (2)....... நண்டுப்பிடியில்

காலை சீக்கிரமே விடிந்து விட்டது. "நீ காலேஜ்க்கு லீவ் போடாதே நான் டாக்டரிடம் போயிக்கிறேன்" இது அன்னையின் ஆணை.சரி என்று சொல்லிவிட்டு காலேஜ் போய்விட்டான் அந்தப் பையன்.கல்லூரி முடிந்ததும் உடனே வீடு திரும்பி விட்டான். வீடு பூட்டியிருந்தது.பக்கத்து வீட்டில் சாவி வாங்கி வீட்டிற்குள் போனால் சாப்பிடகூடப் பிடிக்கவில்லை.

இரவு எட்டு மணிக்கு எல்லோரும் திரும்பி வந்தார்கள் ஆனால் அம்மா வரவில்லை. மாமி அவனைத் தனியாக அழைத்துச் சென்று சொன்னார். "அம்மாவுக்கு கேன்சராம் அதற்க்காக அடயார் கேன்சர் ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறோம்" என்றார். அவனுக்கு பக் என்றது. நண்டுப்பிடியில் அகபட்டுவிட்டதை உணர்ந்தான்.பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பு மறைந்த தந்தையின் ஞாபகம் லேசாய் வந்தது.அண்ணன்கள் இருவரும் மற்றும் எல்லாரும்சொன்னர்கள்" கவலைப்படாதே ஒரு வாரத்தில் அம்மா வந்து விடுவாள் நீ நாளைக்கு போய்ப் பார்த்து விட்டு சாப்பாடு கொடுத்துவிட்டு வா" என்றார்கள் அந்த இரவும் சிவராத்திரிதான் அவனுக்கு.

காலையில் எழுந்து சரியாக ஒன்பது மணிக்கு சாப்பாட்டை எடுத்துக்கொண்டு கொண்டு சைக்களில் நேராக கேன்சர் ஆஸ்பத்திரிக்கு விரைந்தான்.சைக்கள் கூட அவ்வளவு விரைவாக போகும் என்று அன்று தான் அவன் தெரிந்து கொண்டான். அங்கு விசாரித்ததில் அவன் அம்மா பொதுப்பிரிவில் இருப்பதாகத் தகவல் சொன்னார்கள். பொதுவார்டில் அவனுக்காக மாமி காத்துக்கொண்டு இருந்தர்கள்.சாப்பாட்டை வாங்கிக்கொண்டு" கொஞ்சம் இரு அம்மாவிடம் சொல்லிவிட்டு உன்னை கூட்டிக்கொண்டு போகிறேன்" என்றார்கள்.
சிறிது நேரம் கழித்துத் திரும்பி வந்து "அம்மா உன்னை இப்போ பார்க்க விரும்பவில்லை உன்னை வீட்டுக்குப்போகச் சொன்னார் "என்றார்.தலைமேல் இடி வீழ்ந்தாற்போலிருந்தது அவனுக்கு. காரணம் தெரியவில்லை.ஆனால் காரணத்தை அவன் தெரிந்து கொண்டபோது மனம் இன்னும் சங்கடப்பட்டது. என்ன காரணம்..... நாளை பார்ப்போமா

10 comments:

ambi said...

Ohhh! very heart moving story...
no body can replace the mother position.

btw, saw your anectode at kumaran sir's comment. shri "Maha periyavaa" is always a living legend in ou times. (i always used to trust that he is still alive and showering his highness blessings, that's y i mentioned "living legend!")

நன்மனம் said...

படித்தேன்.

//என்ன காரணம்..... நாளை பார்ப்போமா//

காத்திருக்கிறேன்!

Chinnakutti said...

காரணம் - அவன் தாய் இறந்து விட்டாள்.
சரியா சார்.

Viji said...

seekiram adutha padhivu podungal!

Geetha Sambasivam said...

என்ன காரணம்? கண்டு பிடித்து விட்டேன். (அப்புறம், என் அம்மாவும் cancer-ல் தான் இறந்தார்.) நீங்கள் என்ன எழுதப் போகிறீர்கள் என்று பார்த்து விட்டுச் சரியாக இருக்கிறதா என்று எழுதுகிறேன்.

G.Ragavan said...

முருகா....உங்கள் வேதனை புரிகிறது. நினைக்கும் பொழுது உள்ளத்தில் அந்த பழைய சோகம் படக்கென்று எழுந்து உட்காருந்திருக்குமோ!

Butterflies said...

first time here..plaese storyla oru turning point vachu nalla badiyaaa mudinga~

தி. ரா. ச.(T.R.C.) said...

அம்பி,நன்மனம்,விஜி,பதினாறுவயதினிலே,சின்னகுட்டி எல்லோருக்கும் நன்றி. ஆனால் பொறுமை கடலினும் பெரிது.

தி. ரா. ச.(T.R.C.) said...

வாருங்கள் சுபா. வருகைக்கு நன்றி.எனக்கும் நல்லபடியாக முடிக்க ஆசைதான் ஆனால் கண்ணதாசனின் இந்த வரிகள் பொய்யாகுமா?"எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன், இதற்கு ஒரு மருத்துவம் கண்டேனா,
இருந்தால் அவளை தன் தனியெ எரியும் நெருப்பில் விடுவேனா

தி. ரா. ச.(T.R.C.) said...

இராகவன் அந்த நிகழ்ச்சி என் மனத்தில் பசுமரத்து ஆணிபோல் பதிந்துவிட்டது அதற்கு மம்மர் அறுக்கும் மருந்தும் இல்லை.