Friday, July 07, 2006

சங்கீத...ஜாதி...முல்லை

சங்கீதம்--இங்கீதம் ..... ஒரு மிகப்பெரிய மஹா...... சங்கீத வித்வானிடம் தன் பையனை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளச்செய்ய ஒரு தந்தை தன் பையனுடன் சென்றிருந்தார். வித்வான் அப்போது பூஜையிலிருந்தார். வந்தவர்கள் இருவரும் ஹாலில் சோபாவில் உட்கார்ந்து இருந்தார்கள்.பையன் சோபவில் கால்மேல்கால் போட்டுக்கொண்டு ஸ்டைலாக உட்கார்ந்து இருந்தான். பூஜையைமுடித்துக்கொண்டு பாகவதர் வெளியேவந்தார். அப்பா மரியாதையுடன் எழுந்து நின்று வணக்கம் சொல்லி தான் வந்த விஷயத்தைச் சொன்னார். பையன் அப்படியே உட்கார்ந்து இருந்தவாறே வணக்கம் மாமா என்றான். பாகவதர் தந்தையிடம் சொன்னார் "நான் உங்க பையனுக்கு சங்கீதம் கற்றுத்தருகிறேன் அதற்கு முன்னால் நீங்கள் அவனுக்கு கொஞ்சம் இங்கீதம் கற்றுக்கொடுங்கள்" என்றாரே பார்க்கலாம்
சங்கீத ஞானமு...
வருடாவருடம் அந்த மஹா... வித்வான் அந்த ஊருக்கு ராமநவமியன்று அந்த ஊர் பெரியமனிதரின் அழைப்பை ஏற்று கச்சேரி செய்துவந்தார்.அந்த வருடமும் அந்த ஊருக்குவந்து கச்சேரி செய்தார். பெரியமனிதரும் முதல் வரிசையில் உட்கார்ந்து ரசித்துக்கொண்டு இருந்தார். இரண்டு கீர்த்தனை முடிந்து கொஞ்சம் இடைவெளியில் பெரியமனிதர் போனவருடம் வித்வான் மிகவும் நன்றாகப் பாடிய தோடி ராகத்தை இந்த தடவையும் மறுபடிப் பாடச்சொன்னார்.வித்துவானும் தோடி ராகத்தை விஸ்தாரமாகப் பாடினார்.பாடி முடிந்ததும் பெரிய மனிதர் வித்துவானிடம் சொன்னார்"இந்த தடவை தோடி ராகத்தை மிகமிக ந்ன்றாக பாடினீர்கள்"என்றார்.வித்துவான் சிரித்துக்கொண்டே சொன்னார்"நான் வருடாமும் அப்படியேத்தான் பாடிக்கொண்டு இருக்கிறேன் அவ்விடதிலேதான் ஞானம் கொஞ்சம் இந்தவருடம் ஜாஸ்தியா வளர்ந்திருக்கிறது" என்றாரே பார்க்கலாம். தொடரும் ஆதரவு இருந்தால்

15 comments:

நன்மனம் said...

//"நான் வருடாமும் அப்படியேத்தான் பாடிக்கொண்டு இருக்கிறேன் அவ்விடதிலேதான் ஞானம் கொஞ்சம் இந்தவருடம் ஜாஸ்தியா வளர்ந்திருக்கிறது"//

இதுக்கு பேரு தான் தேடி போய் வாங்கி கட்டி கொள்வதோ :-))

ambi said...

பாட தெரியாவிட்டலும் ரசிப்பதற்க்கு நல்ல ரசனை வேண்டும்.
சங்கீதமும், சமயலும் ஒண்ணு!னு எங்க பெரியப்பா சொல்வார். ரெண்டுக்கும் ரிஸல்ட் உடனே தெரிந்து விடும். "உம்மாச்சி காப்பாத்து!" என்ற போஸ்ட்டில் விவரித்து இருக்கிறேன்.

Geetha Sambasivam said...

@அம்பி,
இன்னுமா உம்மாச்சி? கேவலம்! என்னை மாதிரிச் சின்னப் பொண்ணு இருக்கறப்போ உங்களை மாதிரிப் பெரியவங்க இப்படியா சொல்றது?

Geetha Sambasivam said...

எனக்குப் பாட்டே தெரியாது, நல்ல வேளை, தப்பிச்சேன். சுப்புடு மாதிரி எழுதுங்க, ரசிக்கலாம்.ம்ம்ம்ம்ம், இது
எல்லாம் ?

நாகை சிவா said...

////"நான் வருடாமும் அப்படியேத்தான் பாடிக்கொண்டு இருக்கிறேன் அவ்விடதிலேதான் ஞானம் கொஞ்சம் இந்தவருடம் ஜாஸ்தியா வளர்ந்திருக்கிறது"//

இதுக்கு பேரு தான் தேடி போய் வாங்கி கட்டி கொள்வதோ :-)) //
இத தான் டைமிங்க்னு சொல்லுறது.

அந்த பெரிய மனுசன் தாங்கள் தானோ?

ILA (a) இளா said...

நம்ம ஆதரவு என்றும் உண்டு. சொல்லாம கலக்குறீங்க, புலிக்குட்டிய பெற்றெடுத்தது புலிதான்.

தி. ரா. ச.(T.R.C.) said...

நன்மனம், சிவா நல்லாச்சொன்னீங்க. தேடி போனது யார். பாகவதரா அல்லது பெரிய மனிதரா? சிவா பெரிய மனிதன் நம்ப அம்பிதான் விஜி நிச்சயம் ஒத்துகொள்வார்.
அம்பி உங்கள் பெரியப்பா சொன்னது உங்களுக்கா, எல்லோருக்குமா? உம்மாச்சி காப்பாத்தை ஏற்கனவே படித்து விட்டேன். நன்றாக இருந்தது. ஆனால் அதே சமயத்தில் கீதா மேடமும் அதே ஊர்களுக்கு போய் வந்து ஒரு பதிவு போட்டிருந்தார். நன்றி.

இளா வந்ததற்கு நன்றி. அந்த பக்கம் நல்ல மழைன்னு கேள்விப் பட்டேன் வயல் வரப்பு பக்கம் தீவீரமாக இருப்பீர்கள் என்று நினைத்தேன். உடல் நலமா? புலிகுட்டி அகில உலக சாம்பியன். நான் லோகல்தானுங்கொ அவர்கிட்டேயே நெருங்கமுடியாது புலி கிலின்னு பயமுருத்தாதேங்கோ பொனஸ், இலவசம், சிபி எல்லாம் வந்து தாக்கிடுவாங்க புலிகேசி படத்தை சொல்லறீங்கன்னு

இலவசக்கொத்தனார் said...

ஒரு கவுஜ, ஒரு போட்டோ, இப்போ ஜோக்கு. நல்லாத்தான் கலக்கறீங்கோ.

சூப்பர் சாமி!

Geetha Sambasivam said...

இன்னும் புதுசா ஒண்ணும் எழுதலையா? உமா மேடம் வீட்டிலே இல்லையோ? அதான் எழுதலையா?

G.Ragavan said...

ஆகா! இது சங்கீதச் சிரிப்பு..ஹஹஹஹ ஹஹஹான்னு கலைவாணர் மாதிரிச் சிரிக்க முடியலையே...அதாவது எனக்குத் திறமையில்லைன்னு சொன்னேன்.

தோடி...என்றதும் நினைவுக்கு வருவது "இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ" என்ற வரிகள்தான். அந்த வரி தோடி ராகம்தானே?

Dubukku said...

நல்லா எழுதியிருக்கீங்க...நானும் இந்த மாதிரி நிறைய (அம்பி சொன்ன பெரியப்பா வழியாக)கேள்விப்பட்டிருக்கிறேன்.

மேடையில் ஒரு அம்மா கர்ண் கொடூரமாக பாடிக்கொண்டிருந்தாளாம். கீழே ஒருத்தர் பக்கத்திலிருந்தவரிடம் சொன்னாராம்.."பாட்டா இது சகிக்கல..." என்று. பக்கத்திலிருந்தவர் சொன்னாராம்.."பாடறது என் மனைவிங்க...".
இவரும் அசடு வழிந்து கொண்டே..."நான் உங்க மனைவி பாடறதப் பத்தி சொல்லலைங்க...பாட்டச் சொன்னேன்...இதெல்லாம் ஒரு பாட்டா இப்படியா எழுதுவார்கள்" என்று சமாளித்தாராம். அதுக்கு இவர் " அந்தப் பாட்ட எழுதினதே நான் தான்" என்றாராம் :))

நன்மனம் said...

டுபுக்கு.... தேடி போய் வாங்கி கட்டிக்கிரவங்க நிறைய பேர் இருக்காங்க போல....:-)

VSK said...

//இதுக்கு பேரு தான் தேடி போய் வாங்கி கட்டி கொள்வதோ :-))//


இங்கே எங்க வலையூர்ல அதை சொ.செ.சூ.வை.ன்னு சொல்றது வயக்கமுங்கோ!

Viji said...

TRC Sir, yaar andha mahaa vidhwan... mandai kodayardhu, sollungolen! :)

தி. ரா. ச.(T.R.C.) said...

viji, please send u r e'mail to my id i will send the name other mahaa.....