Monday, July 24, 2006

நினைத்ததெல்லாம்..... நடந்துவிட்டால் (3)

அம்மா இருந்தது மகளிர் பகுதி அங்கு ஆண்கள் அனுமதி கிடையாது.மேலும் அங்கே நோயாளிகளுக்கு குறிப்பிட்ட உடைதான் அணியவேண்டும் அந்த அம்மாபுடவை மட்டும்தான் கட்டி பழக்கம்.ஆனால் அங்கே சுடிதார் போன்ற உடைதான் அணியவேண்டும். அந்த உடையுடன் மகனைப்பார்பதற்கு வெட்கப்பட்டுத்தான் பார்க்க மாட்டேன் என்றாள்.நர்ஸுடன் அனுமதி பெற்று உள்ளே சென்று அம்மாவைப் பார்த்தான்.என்னடா இது இந்த கண்றாவி ட்ரஸ்ஸேல்லாம் போடச்சொல்லறா... "அதெல்லாம் ஒண்ணுமில்லை டீர்ட்மெண்ட்டுக்கு செளவுகரியமாக இருக்கும்" என்று சமாதானம் சொன்னான்


ஒரு வாரம் ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் அலைந்தாயிற்று.கடைசியில் பெரிய டாக்டர் சொன்னார். "உங்க அம்மாவுக்கு கர்பப்பையில் புற்று நோய் அதுவும் முற்றிய நிலையில் உள்ளது.அறுவை சிகித்சை நிலையையும் தாண்டி விட்டது.வீட்டுக்கு கூட்டிச் செல்லுங்கள். மருந்து மாத்திரை தருகிறோம்.ஆனால் இன்னும் மிக அதிகமாக ஆறு மாதம் தான் உயிருடன் இருப்பார்கள்"ஆனல் இதை அம்மாவிடம் சொல்லக்கூடாது என்றார்கள்.நெருப்பபை வாரி கொட்டியது போல இருந்தது.

வீட்டிற்கு அழைத்து வந்தாகி விட்டது.உறவினர்களும், நண்பர்களும் வந்து பார்த்து போய்க்கோண்டு இருந்தார்கள். சிலர் டாக்டர் கொடுத்த ஆறு மாதத்தையும் குறைத்துச்சொன்னார்கள். நாளுக்கு நாள் வியாதியின் உக்ரம் அதிகமாயிற்று.மிகவும் கஷ்டப்பட்டாள்.ஆனால் நடுவே கேட்டுக்கொண்டே இருந்தாள். என்னை ஏன் டக்டர் ஒரு மாதம் கழித்து டெஸ்ட்டுக்கு வரச்சொல்லவேயில்லை என்று.

டிஸம்பர் மாதமும் ஓடிவிட்டது ஆனால் இந்த ஐந்து மாதத்தில் அவள் செய்த நல்ல காரியம் தினமும் அவனை சமைக்கச் சொன்னது.சாதம் வடிக்க,சாம்பர்,ரசம்,கறி,கூட்டு ஏன் ஊறுகாய் போடக்கூட கற்றுக்கொடுத்துவிட்டாள். அவன் மாமிகூட கேட்டாள் " ஏன் அக்கா காலேஜ் போகும் ஆம்பிள்ளை பையனை இப்படி கஷ்ட்டப்படுத்திரே" அதற்கு அம்மா கூறிய பதிலை சில நட்களுக்கு பிறகுதான் மாமி இவனிடம் கூறினாள். "இவாள்ளம் ஏன் நீ கூட எனக்கு தெரியாதென்று நினைத்துக்கொண்டு இருக்கெ நான் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்கள்தான் உயிரோடு இருப்பேன் என்று.ஆஸ்பத்திரியில் கூட இருந்தவர்கள் சொல்லிவிட்டார்கள். மாதாந்திர டெஸ்ட்டுக்கு கூப்பிடவில்லையென்றல் அவ்வளவுதான் என்று. இவ்வளவுநாள் அவனைகஷ்டப்படுத்தியது ஏன் தெரியுமா நான் போனதற்குப்பிறகு அவன் சாப்பாட்டுக்கு கஷ்டப்படகூடாது.இப்போது பார் அவன் நன்றாக சமைக்கிறான் இனி பயமில்லை " ஆம் அவள் சொன்னது சரிதான் இன்றும் அவன் சமையலில் ஒரு எக்ஸ்பர்ட்.அன்று ஜனவரி நான்காம் தேதி இரவு மணி பத்து இருக்கும். வீட்டில் அவனும் அவ்ன் அத்தையும்,அண்ணியும் மட்டுமே இருந்தர்கள் அண்ணன்கள் இருவரும் நைட்ஷிப்ட் சென்றுவிட்டார்கள். நாளை பார்ப்போமா......

4 comments:

நாகை சிவா said...

நல்லா இருக்கு.
அந்த அம்மாவின் தைரியமும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

கதையை இன்னும் கொஞ்சம் நீளமாக எழுதலாமோ.?

ambi said...

முருகா!!!!! enna kodumai ithu!
but, i used to believe that our beloved ones live with us forever, by their ever green memories.
good writeup sir!

கீதா சாம்பசிவம் said...

முடிவு தெரிஞ்சதுதான். நாளை நீங்க எழுதும் போது பார்க்கறேன் மறுபடி. ம்ம்ம்ம், என்ன செய்யறது, யார் யாருக்கு என்ன என்ன கிடைக்குமோ அது தான் கிடைக்கும்.

இலவசக்கொத்தனார் said...

தி.ர.ச.

சங்கீத ஜாதி முல்லைன்னு சிரிக்க வெச்சுட்டு இப்படி கனமா அடுத்த பதிவு தறீங்களே......