Tuesday, July 04, 2006

விட்டு விடுதலையாகி நிற்பாய்

ஓய்வுபெற்று இரண்டு நாட்களாகிவிட்டது,என்ன பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டு இருந்தேன்.காலை மணி 10 இருக்கும். டக்,டக் என்று ஜன்னலில் யாரோ தட்டும் சத்தம் கேட்டது. நிமிர்ந்து கண்ணாடி வழியாகப் பார்த்தேன்.இரண்டு புதிய நண்பர்கள்.ஆனால் அவர்களோ என்னைப்புதியவன் போல் பார்த்தார்கள்.அந்த சமயத்துக்கு நான் வங்கியில்தான் இருப்பேன் பதவியில் இருந்தபோது.இந்த வீட்டிலேயே நான்கு வருடங்களாக இருந்தபோதிலும் பார்க்காத புதிய முகங்கள்.இருவரும் ஒரேமாதிரியாக தலையைச் சாய்த்து என்னை நீ யார் என்பதுபோல் பார்த்தார்கள். இரண்டுமே அழகான மைனாக் குருவிகள்.அதில் ஒன்று ஆண் மற்றது அதன் பேடை.இரண்டும் என்னைப் பார்த்து கண்களில் நட்புடன் நாம் நண்பர்கள் ஆகலாமா என்பது போல் பார்த்தது. நானும் சரி என்பதுபோல் உள்ளேசென்று சிறிது அரிசிமணிகளைஎடுத்து வந்து ஜன்னலின் வழியாக கை விட்டு அவைகளுக்கு உணவாக வைத்தேன். அதைத்தொடாமல் இரண்டும் ஒருமுறை என்னை ஏற இறங்கப்பார்த்துவிட்டு எங்கோ பறந்து சென்று விட்டன.என் கண்களில் ஏமாற்றம் வருத்தம்.

சிலநொடிக்குபின். இரண்டும் வேகமாக திரும்பிவந்தன. இந்த தடவை வரும்போது ஒரு விருந்தாளியையும் கூட்டிக்கொண்டு வந்தன.அதனுடைய குஞ்சு பறவைப்போலிருந்தது.சிறியாதாக இருந்தாலும் மிக அழகாய் இருந்தது கண்ணைச்சிமிட்டி என்னைப்பார்த்து எனக்கும் உண்டா என்பதைப்போல் பார்த்தது. கொஞ்சும் அழகு கொள்ளை அழகு.அந்தபெண்மைனா கிழே சிதறி இருந்த அரிசி மணிகளைத் தன் வாயால் கொத்தி தன் குஞ்சுக்கு வாயில் கொடுத்து பசியாறாச்செய்தது அது பசியாறியதும் இரண்டு மைனாக்களும் மீதி இருந்த அரிசியை கொத்தித் தின்றன.எனக்கு என் தாயின் முகம் நினைவில் வந்தது.இப்படித்தானே அவளும் தனக்கு வைத்துகொள்ளாமல் எனக்களித்துவிட்டு மீதமுள்ள சொல்ப உணவை அருந்திவிட்டோ அல்லது பட்டினியுடனோ படுத்துகொள்வாள்.தாய்ப்பாசம் என்பது ஆண்டவன் ராஜ்ஜியத்தில் ஒரே அளவுகோல்தான்.

சாப்பிட்டுமுடிந்தவுடன் என்னைபார்த்து கவலைப்படாதே நீயும் எங்களைப்போல் இனிமேலாவது சம்சாரபந்தத்திலிருந்து "விட்டு விடுதலையாகி" சுதந்திரமாக இருஎன்று சொல்லாமல் சொல்வது போல் இருந்தது.உடனே மூன்றும் பறந்து செல்லத் தயாராகி உனக்குதான் வேலை இல்லை எங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது நாங்கள் போகிறோம் என்று சொல்லிப்போவதுபோல் பறந்துச் சென்றது. அவைகள் போனபின்பு மனமும் இடமும் வெற்றிடமாயிற்று. ஆனால் மனம் மட்டும் இந்தப் பாரதியாரின் பாடலை அசைபோட்டது.
விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்
சிட்டுக் குருவியைப் போலே
சரணங்கள்
1. எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு. (விட்டு)
2. பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
பீடையிலாத தொர் கூடு கட்டிக்கொண்டு
முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு. (விட்டு)
3. முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று. (விட்டு)

35 comments:

மு.கார்த்திகேயன் said...

TRC sir, first time in your blog.. chumma unarvukaludan ungal ezhuthu nadai poduvathai padikka interest a irukku..

Mainakalai patrri pesikonda thayai anaththu konda ungal ennangal romba iyalbanavai..

கீதா சாம்பசிவம் said...

"சின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தைப் பேசுமாம்?"
பாரதி பாட்டுடன் உங்கள் தற்போதைய நிலையை ஒப்பிட்டு எழுதி இருப்பது அருமை.
"விட்டு விடுதலை ஆகி நிற்பாய்"
பொருத்தமான பாடல்.

ambi said...

//நீயும் எங்களைப்போல் இனிமேலாவது சம்சாரபந்தத்திலிருந்து "விட்டு விடுதலையாகி" சுதந்திரமாக இருஎன்று சொல்லாமல் சொல்வது போல் இருந்தது.//

யாருப்பா அங்கே? உமா மேடத்துக்கு போனை போடுங்க. (he hee, கலாய்த்து விட்டேன்!) இனி தவறாது வந்து கலாய்ப்பேன்.


//திரு.அம்மஞ்சி(சிரிக்கவைப்பதையே தொழிலாகக்கொண்டவர் எப்பொழுதும் அஸின்னுடன் கனவில் இருப்பவர் //

மிக்க நன்றி, சொல்ல வார்த்தைகளே இல்லை. பிடித்த பாடகர்களில் ஊத்துக்காடு வெங்கட சுப்பையரை விட்டு விட்டீர்களே..? :)

Viji said...

wow! Excellent post! :)
Don't worry... your life doesn't end with retirement!

manu said...

தி.ரா.ச,
உங்கள் பாங்கிற்கு முன்னமே தெரிந்து விட்டது. உங்கள் இந்டரஸ்ட்? ப்லாகிங் தான்னு.
விட்டதும் கவிதை வந்து விட்டதே.
உணர்வு நிறைந்த வார்த்தைகள்.

manu said...

அதையே வழிமொழியும் நாச்சியார்.

SK said...

உணர்ச்சிபூர்வமான, உணர்ச்சிகரமான பதிவு!
உள்ளத்தில் பீறிடும் அனுபவங்களை மிக மிக அழகாகவும், தொடும்படியும் சொல்லி உருக்கியிருக்கிறீர்கள்!
பொருத்தமான மகாகவியின் பாடல் மேலும் மெருகு ஏற்றுகிறது!

குமரன் (Kumaran) said...

மிக அருமையான பாரதியார் பாடல் தி.ரா.ச. இயல்பாக இருக்கிறது உங்கள் பதிவு. இப்படி இயல்பாக என் எண்ணங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ள எனக்குத் தெரியவில்லை என்ற குறை எனக்கு என்றும் உண்டு; உள்ளதைச் சொல்ல வரும்போது எப்படியோ எங்கிருந்தோ செயற்கைத் தனம் கொஞ்சம் வந்துவிடுகிறது. உங்களையும் உங்கள் எழுத்துகளையும் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எந்த செயற்கைத் தனமும் இல்லாமல் இருக்கின்றன எழுத்துகள்.

நான் பாரதியார் பாடல்கள் படிக்கத் தொடங்கிய காலத்தில் (பள்ளியில் படிக்கும் போது) இந்த 'விட்டுவிடுதலையாகி நிற்பாய்' பாடலை பல முறை பாடி மகிழ்வேன். அண்மையில் பாரதியார் பாடலைப் படிப்பதே குறைந்து போய்விட்டது.

நாகை சிவா said...

T.R.C.,
இந்த அம்பி, ஷாம் கோஷ்டி வழியா உங்களை பிடித்தேன். நல்லா இருக்கு.

என் தந்தையும் வங்கி ஊழியர் தான்.

தொடர்ந்து வருவேன்.

நாமக்கல் சிபி said...

நன்றாக இருக்கிறது. ஓய்வு பெற்றபின் ஆரம்ப கால எண்ணங்கள் இப்படித்தான் இருக்கும் என்று எனது தந்தையிடமும் பார்த்திருக்கிறேன்.
இப்போதும் பார்க்கிறேன்.

:))

பொன்ஸ்~~Poorna said...

தி.ரா.ச சார், எங்கம்மாவும் இந்தியன் வங்கி ரிடயர்டு தான்..

அதென்ன ஓய்வுக்கு அப்புறம் சி.ஏ. படிக்கிறீங்க?!! படிச்சு முடிச்சு எங்கு வேலைக்கு சேர உத்தேசம்? ;)

சி.ஏ படிச்சிகிட்டே 'விட்டு விடுதலையாகி நிற்க' உங்களால மட்டும் தான் முடியும். நமக்கு ஒரு எம்.பி.ஏவே பல காலமா எம்பிகிட்டு இருக்கேன் இன்னும் எட்டின பாடில்லை :)

நாமக்கல் சிபி said...

//நமக்கு ஒரு எம்.பி.ஏவே பல காலமா எம்பிகிட்டு இருக்கேன் இன்னும் எட்டின பாடில்லை //

நமக்கு எம்.பி.ஏ எண்ட்ரன்ஸே இப்படி!

ambi said...

Enna TRC sir, comments summa pichukittu poruthu polirukku!

4 clients (athaan viji, nagai siva, shyam, karthik) ellam pidichu kuduthruken, royalty (unga langla sonna Incentive) ethunaachum undaa? :)

(sorry, for the thanglish comment)

நன்மனம் said...

வணக்கம் தி.ரா.ச. சார்,

தங்கள் அனுபவமும் அதை பகிர்ந்த முறையும் அருமை.

பொன்ஸ்,

//அதென்ன ஓய்வுக்கு அப்புறம் சி.ஏ. படிக்கிறீங்க?!!//

Practising Chartered Accountant is not studying CA. I think you have missunderstood.

தி. ரா. ச.(T.R.C.) said...

நன்றி கார்த்தி. உள்ளத்தில் உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மனம் லேசாகிறது. வல்லைபூ நண்பர்களின் ஆதரவுக்கு தலை சாய்த்து வணங்கிறேன் தி ரா சா

தி. ரா. ச.(T.R.C.) said...

கீதா மேடம் பறவைகள் நிறையப் பேசும் எங்கள் வீட்டில் டெடி என்ற நாய் இருந்தது. அவைகள் பாஷை நமக்கு புரியவேண்டும் அவ்வளவுதான். அது பேசாத பேச்சு கிடையாது.இரவு நான்கு மணிக்கு நான் வந்தாலும் வாசலிலேயே நின்று கொண்டு இருக்கும். அது திடீரென்று ஒருநாள் மறைந்தபோது வாழ்க்கையில் பல இழப்புக்களை சகித்துக்கொண்ட நானும் என் குடும்பத்தாரும் கலங்கி அழுதோம்.மறுபடியும் நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) said...

நன்றி அம்பி. அடிக் கடி வாருங்கள் கலாயுங்கள். ஊத்துகாடு பாடகர் இல்லை. பாட்டு எழுதியவர். மறுபடியும் விஜிகிட்டே வாங்கி கட்டிக்கபோறிங்க.லிச்ட் ஏறிகிட்டே போகுது. எப்போ முடியும்.அருமையாக எழுதுகிறீர்கள் எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் பிடிக்கும் பதிவு உங்களுடையது. தி ரா ச

தி. ரா. ச.(T.R.C.) said...

வணக்கம் விஜி. எனக்கு ஒரு சந்தேகம் நீங்களும் என்னை மாதிரி சங்கீதம் சாப்பாடோ.சங்கீத சாகரத்தில் முழ்கியிருக்கிறீர்கள். அம்பிக்கு கொஞ்சம் சங்கீதம் பாடம் மெடுக்கவேண்டும்.ஏற்கனவே அடிவாங்க பயமாக இருக்கிறது. இப்பொழுது வாவ் என்று வேறு பயமுருத்துகிறீர்கள். உங்கள் பதிவயும் படிக்கிறேன். அந்த அளவுக்கு வர முயற்சி செய்கிறேன்.ஒரு குறிப்பிட்ட வங்கியிலிருந்துதான் ஓய்வு பெற்றேன். ஜுலை முதல் கண்ணக்காயரக ஸேவை புரிகிறேன். மூன்று வங்கிகளுக்கு ஆலோசகரக பணிபுரியப்போகிறேன்.மற்றுமொரு கம்பெனியில் இயக்குனராக பணிபுரிகிறேன். தி ரா ச

தி. ரா. ச.(T.R.C.) said...

வல்லி அம்மா என்னுடையது கவிதை அல்ல. கவிதை என்றால் ஸ்.கே தான் இன்றைக்கு(06/07/06} உள்ள குற்றல அருவிபோல் கொட்டுகிறது. படித்துப்பாருங்கள் மனம் லேசாகிவிடும். சரியாகச்சொன்னீர்கள் என் வங்கிக்கும் தெரியும் தமிழ் ஆர்வம். தி ரா ச

தி. ரா. ச.(T.R.C.) said...

நாச்சியார் அம்மா கூபிட்டகுரலுக்கு வந்து விட்டேன். நீங்களும் அடிக்கடி வாருங்கள். ஆமாம் அடுத்தவீட்டிப்பெண் என்ற படத்தில் திரு தங்கவேலு அவர்கள் தாத்தா, மகன் மற்றும் பேரன் வேடத்தில் வந்து கலக்குவார். அதுபோல நீங்களும் வல்லி,மனு, மற்றும் நாச்சியாரக கலக்குகிறீர்களே. எல்லப்பதிவும் நன்றாக இருக்கிறது. தி ரா ச

தி. ரா. ச.(T.R.C.) said...

திரு ஸ்.கே வணக்கம். இன்னும் திருப்புகழுக்கு வரவில்லை. உங்கள் பதிவுக்கு வர வேண்டுமென்றால் தயார் செய்துகொண்டு வரவேண்டும்.கோவில் கர்ப்பகிருகத்தில் செல்வதுபோலச் செல்லவேண்டும் பயபக்தியுடன்.அது என்ன முருகன் அருளால் வாக்கிலிருந்து குற்றலருவிபோல தமிழ் கொட்டுகிறதே திருத்தணி முருகன் படம் போடவேண்டும். சற்று உதவி புரிய முடியுமா? அடிக்கடி வாருங்கள். தி ரா ச

ambi said...

மிக்க நன்றி. தங்கள் குடும்பத்தின் அபிமானத்தை பெற்றதில் தன்யனானேன். ஆம், ஊத்துக்காடு வெங்கட கவி பாடல் புனைபவர். பாடல் எழுதினாலும், அவர் பாடி பாத்ருபாரே! ( he, hee, மீசையில் மண் ஒட்ட வில்லை)
விஜி சொல்லி தான் கேஸட் கூட வாங்கினேன்.
நீங்களும் இந்த நாரதர் வேலை நன்னா பாக்கரேள்! :)

ambi said...

ஷ்ரி பரமாச்சார்யாரை பற்றி ஒரு தொடராக எழுதங்கள் ப்ளிஸ்.

தெய்வத்தின் குரல் 4 வால்யூம் படித்தே சிலிர்த்து விட்டேன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

குறையொன்றும் இல்லை பாடிய குமரனா குறையைப்பற்றிப் பேசுவது. அழ்ந்த கருத்துக்களை கொண்டது உங்கள் பதிவு இயற்கையிலிருந்து எழுவதுதான் செயற்கை.கலப்பு இருந்தால்தான் பரிமளிக்கும்.தங்கத்தை யாரவது செம்பு கலக்காமல் அணிவார்களா.அணியத்தான் முடியுமா? உங்கள் பாணியிலேயே எழுதுங்கள் மாற்றவேண்டியதில்லை. மனதுக்கு தெம்பு தருவது பாரதியார் பாடல்கல் தான் எனக்கு. தி ரா ச

நாகை சிவா said...

//நமக்கு ஒரு எம்.பி.ஏவே பல காலமா எம்பிகிட்டு இருக்கேன் இன்னும் எட்டின பாடில்லை :) //

//நமக்கு எம்.பி.ஏ எண்ட்ரன்ஸே இப்படி! //

நமக்கு எம்.சி.ஏ..... :)))

ஆஹா, இது வல்லவா ஒற்றுமை. பாருங்க ஐயா, பாருங்க சங்கங்த்தில் யாருங்க அது ஒற்றுமை இல்லனு சொன்னது..... பிடிங்க அவன

தி. ரா. ச.(T.R.C.) said...

நாகை சிவாவின் வருகைக்கு வணக்கம்.தங்கள் தந்தையும் வங்கி ஊழியரா சந்தோஷம். இன்றைய காலகட்டத்தில் வங்கியில் பணிபுரிவது கஷ்டம்.எல்லாம் விஜிலென் ஸ் மயம். கூட்டம் எல்லாம் வேண்டாம் என்னை பிடிப்பதற்கு தனியாகவே வரலாம். நான் உங்கள் வலைக்குள் அகப்படுவேன். தொடர்ந்து வாருங்கள் தி ரா ச

தி. ரா. ச.(T.R.C.) said...

வணக்கம் என்னை உங்கள் தந்தையுடன் ஒப்பிட்டதற்கு நன்றி ஆனால் இது ஆரம்பகாலமா அல்லது வேறு காலமா என்று தெரியவில்லை. என் எண்ணங்கள் ஒரே மதிரித்தான் இருக்கின்றன. தொடர்ந்து வாருங்கள்.

தி. ரா. ச.(T.R.C.) said...

பொந்ஸ் வாங்க. நான் ச். ஏ முடித்து 35 வருடங்கள் ஆகிவிட்டன.இப்பொழுது பேப்பர் படிப்பதே கஷ்டம் சி.ஏவா.அவ்வளவுதான்.அம்மா எந்த கிளையில் இருந்தார்கள் .என்னைத்தெரியுமா என்று கேட்டுப்பாருங்கள்.தரத்தை பற்றி சொல்லவே இல்லையே.நன்மனத்தின் பதிலைப் பாருங்கள். நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) said...

நன் மனத்திற்கு என்மனம் கனிந்த வணக்கம்.நல்ல வார்த்தைகள் சொல்லுகிறீர்கள். பார்க்கலாம் தொடர்ந்து நிற்க முடியுமா என்று.சி ஏ சபோர்ட்டுக்கு நன்றி. தொடர்ந்து வருங்கள். தொழில் நண்பர்வேறு ஆகி விட்டீர்கள் இனி அடிக்கடி கருத்து பறிமாறிக்கொள்ளலாம் தி ரா ச

தி. ரா. ச.(T.R.C.) said...

அம்பி நாரதர் கலகம் நன்மையில்தான் முடியும். அசின் விஷயதில் என் சப்போர்ட் வேண்டுமா இல்லை கார்திக் பக்கம் போய் விடட்டுமா. என் மறுமகள்கூட உங்கள்பதிவை மிகவும் ரசித்தார்கள்(பாட்டுபோட்டி)பரமாச்சாரியாரைப் ப்ற்றி எழுதுகிறேன். அதைவிட வேறு என்ன வேலை. தி ரா ச

பொன்ஸ்~~Poorna said...

//அதென்ன ஓய்வுக்கு அப்புறம் சி.ஏ. படிக்கிறீங்க?!!//

Practising Chartered Accountant is not studying CA. I think you have missunderstood.//

நன்மனம், தி.ரா.ச.. ஹி ஹி ஹி... தேவையில்லாம தப்பா படிச்சு உண்மையெல்லாம் வேற உளறிட்டேன் போலிருக்கு.. ஹி ஹி ஹி...

வங்கி விவரம், சென்னை வந்ததும் கேட்டுச் சொல்கிறேன்..

இலவசக்கொத்தனார் said...

தமிழ்மணப் பட்டை கூட போடலை. அதுக்குள்ள 50 பின்னூட்டம். அதிலேயும் பாதி உங்களூது. நல்லாத்தான் கத்துக்கறீங்க சாமி.

இனிமே என் பதிவுக்கு ஒரு கியாரண்டி பின்னூட்டம் உண்டுல்லா?

G.Ragavan said...

ஒய்வுங்குறது அந்தக் குறிப்பிட்ட வேலைலதான். இனிமே தமிழ்ப் பணி நெறைய இருக்கேன். திருமுருகாற்றுப்படையை இதுவரைக்கும் இணையத்துல யாரும் தொடலை. நீங்க ஏன்............ஏன்..........தொடக்கூடாது?

Viji said...

TRC sir, nan inga ambi solli varala... ambi apdi dhan edhadhu olaruvar. neenga kandukka vendam. royalty um thara vendam. :)

btw, I'm from KMU. Venkata lodge pathi kelvi pattu irukken. :))

Viji said...

sangeedhath la romba onnum knowledge kedayadha... interest undu. kattradhu kai mannalavu! :)